Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மிக நல்ல அரசியல் ஜோக்கும், அரசியல் சேறடிப்பும்

  • PDF

"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் (என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள்."

அசோக் அவர்களே, ரயாகரன் 1980 களிலேயே தனது அரசியல் வாழ்வினை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் இணைந்து வேலை செய்து கொண்டதன் மூலம் உங்களிற்கு 3 வருடங்கள் முன்னமே அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.


"உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்"

 

இது மிக நல்ல அரசியல் ஜோக். 

 

"1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஐpதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்பக்கு மத்தியில் நாவலனின் முயற்ச்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்."

 

விஜிதரன் போராட்டம் தனிய நாவலனின் வழிகாட்டலில் நடைபெற்ற போராட்டமன்று. அது அன்றைய அரசியல் தேவை கருதி பல மாணவர்களினதும் மற்றும்  பல்கலைக்கழகத்திற்கு வெளியே பல்வேறுபட்ட இயக்கங்களிற்குள் இருந்த மக்களை நேசித்த போராளிகளினதும் வழிகாட்டலிலேயே நடந்தது. இந்த போராட்டத்திலே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களான விமலேஸ்வரன், சோதிலிங்கம், சுந்தரமூர்த்தி, தவராஜா, பரந்தாமன், ராஜன், நாகேந்திரம், அவ்வை, ஸ்டெல்லா, நாவலன், இரயாகரன், குலசிங்கம், குகதாசன், செல்வநாயகம், பிரசாத், புதுசு ரவி,…. போன்றோர்கள் முன்னணியில் நின்று போராடினார்கள். அந்த வகையில் நாவலன் அன்று மாணவர்களின் முன்னணி போராளியாக இருந்தது உண்மையே. ஆனால் மாணவர்களினால் தெரிவு செய்யப்பட்ட போராட்ட அமைப்பில் முதலில் இடம் பெறாத நாவலனின் வழிநடத்தலில் போராட்டம் நடைபெற்றது என்பது, போராட்ட அமைப்பினையும் ஏனையோர்களையும் அவமதிக்கும் செயலாகும்.

 

"இந்தநேரத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை என்னால் எழுப்பமுடியும். தோழர் விசுவானந்த தேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?. தோழர் விசுவானந்தனின் இறப்போடு இதனையும் சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை."

 

தமிழீழ விடுதலை போராட்டத்திலே பல இயக்கங்கள் வங்கிக் கொள்ளையிலே ஈடுபட்டுள்ளனர். அசோக்கினது PLOTE இயக்கமும் (நிகரவெட்டியா வங்கி, கிளிநொச்சி வங்கி.. தனியாரைக் கடத்தி கப்பம் வரை) கொள்ளை அடித்துள்ளது. இப்படி இருக்கும் போது ஏன் ஏனையோரை விடுத்து NLFT மற்றும் இரயாவை மட்டுமே திரும்ப திரும்ப கேட்கின்றீர்கள். நாவலன் இதே கேள்வியினை ஏறத்தாழ 2 வருடங்களிற்கு முன் தேசம் நெற்றுடன் வேலை செய்த போது பின்னூட்டங்களில் இதையே ஒரு பெரும் வேலையாக செய்து கொண்டிருந்தார். இப்போது அசோக் மூலமாக மறுபடியும் தொடக்கியுள்ளார் (15 வருடங்களாக அரசியலில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கி ஏதோ ஏதோ தொழிலில் இருந்த நாவலன், திடீரென தேசம்நெற்றில் தோன்றினார். பின்னர் சிவலிங்கம் ராகவன் போன்றோருடன் மேடைகளில் தோன்றினார். இப்போது இனியொருவில் புரட்சிக்காரனாக தோற்றம் பெற்றுள்ளார். இதற்கெல்லாம் சுயவிமர்சனம் விமர்சனம் என்று எதுவும் கிடையாதோ!

 

நான் முன்னாள் NLFT உறுப்பினர் மற்றும் பிரதேசக் கமிட்டியிலும் இறுதிக் காலத்தில் தள வேலைக் கமிட்டியிலும்; அங்கம் வகித்தவன் என்கின்ற ரீதியில், கற்றன் வங்கி  தொடர்பாக எனக்கு தெரிந்தவற்றினை கூறவேண்டிய தேவையுள்ளது. இது நீங்கள் இரயா மீதும் ஏனைய முன்னாள் NLFT தோழர்கள் மீதும் வைக்கும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டினை மறுதலிக்கும் தேவையிலிருந்து கட்டாயமாக ஆற்றவேண்டியுள்ளது.

 

தோழர் தவத்துடன் இந்தியக் கடலில் கணிசமானளவு பணம் நகை மாண்டு போயின. தோழர் தவம் தன் உயிரைப் பணயம் வைத்து இறுதி வரை இயக்கத்தின் சொத்தினைக் காப்பாற்ற போராடினார். இதில் ஒருவர் நீந்தித் தப்பினார். இறுதியில் கடல் அவனையும் அவன் கொண்டு சென்றவற்றினையும் தன்னுள் இழுத்துக் கொண்டது.

 

இன்னும் ஒரு கணிசமான தொகையினை அசோக்கின் கூட்டாளிகளிடமிருந்து தீப்பொறி அமைப்பினரையும் மற்றும் புலிகளில் இருந்து முதன் முதலில் பெரிய குழுவாக வெளியேறி வந்த மிக முக்கிய நபர்களைப் பாதுகாக்கவும், ”தீப்பொறி” பத்திரிகை மற்றும் ”புதியதோர் உலகம”; நாவல் வெளியீட்டுக்கான உதவி, சந்ததியார் படுகொலைக்கு எதிரான போஸ்டர், நேரு படுகொலைக்கு எதிரான துண்டுப்பிரசுரம், ”இலக்கு” சஞ்சிகை, ”முன்னணிச் செய்தி” பத்திரிகை, பல தொடர் துண்டுப்பிரசுங்கள், வள்ளமும் எஞ்சின்களும் வாங்கியது, ஆயுதங்கள் வாங்கியது என்று பலவற்றுக்கு செலவழித்தோம். 1987 ம் ஆண்டு இரயா புலிகளின் சிறையில் இருந்து தப்பிய பின், புலிகள் மேடையில் தோன்றி பேசியபோது ஆயுதம் வாங்கியது தொடர்பில் ஒரு தொகை பணத்தைக் கைப்பற்றிய விபரம் குறிப்பிடப்படுகின்றது. அது NLFT பணம். இப்படி பல.

 

இன்னும் ஒரு தொகை பணம் ஆயுதம் வாங்க என ஒரு முன்னாள் போராளி மூலமாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பப்பட்டது. சில நாட்களின் பின் அந்த நபர், தன்னை ஆயுத வியாபாரிகள் ஏமாற்றிவிட்டு பணத்தினையும் கொண்டு சென்றுவிட்டனர் என தகவல் அனுப்பி இருந்தார். இந்தியாவில் பொலிசாரினால் வழிச் சோதனை ஒன்றில் ஒரு தொகை கைப்பற்றப்பட்டது.


 
இவ்வளவும் இருக்க NLFT,  PLFT என பிரிந்த போது, சொத்துக்களும் கணக்கு பார்த்து அங்கத்தவர் வீதத்துக்கு அது பிரிக்கப்பட்டது.

 

ரயாகரன் 1988 இல் இயக்கத்தில் இருந்து வெளியேறிய போது தன்னிடமிருந்த இயக்கத்தின் அனைத்து உடைமைகளையும் அன்று இருந்த NLFT ன் நிர்வாகத்திடம் கையளித்தார். கையளிக்கப்பட்ட பொருட்களின் எந்த விபரமும் எனக்கு தெரியாது. பொறுப்பேற்ற நபர்களை அதே தினம் மாலை நான் சந்தித்து இருந்தேன். அவர்கள் எனக்கு தாங்கள் ரயாவிடமிருந்து அனைத்தினையும் பொறுப்பேற்றுவிட்டதாக கூறியிருந்தனர்.

 

இதே காலப் பகுதியில் நானும் NLFT யின் இயக்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தேன். ஆனால் தொடர்ந்தும் தோழன் ரமணியுடன் அன்றைய காலகட்ட அரசியல் பற்றிய நிலையைக் கதைத்து கொண்டிருந்தேன்.

 

எனது வன்னி இயக்க புனைபெயரில், இக் குறிப்பை எழுதுகின்றேன். இயக்க உறுப்பினர்கள் என்னை அடையாளம் காணமுடியும்.

 

வரதன்
 

Last Updated on Wednesday, 09 December 2009 07:26