Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்

விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்

  • PDF

புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத  பொறுக்கி அரசியலை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானதையொட்டிþ ஆத்திரமடைந்த சென்னை  குரோம்பேட்டையை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பிற தோழர்கள் மீது கடந்த 7.9.09 அன்று நள்ளிரவில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

நாகல்கேணியில் குடியிருக்கும் இராமு என்ற பு.ஜ.தொ.மு. உறுப்பினர் வீட்டில்þ இப்பகுதியின் முன்னணியாளர்கள் பேசிக்கொண்டிருந்த போதுþ அதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "புரட்சி' சேகர், ஷியாம், பிரபா, சசி, இளையராஜா, இளங்கோ ஆகியோர் அடங்கிய கும்பல் கையில் உருட்டுக் கட்டை இரும்புத் தடிகளுடன் அவ்வீட்டை முற்றுகையிட்டது. "எங்க தலைவனைப் பத்தியாடா எழுதுறீங்க? உங்கள உயிரோடு விட மாட்டோம்டா!'' என்று வெறிக் கூச்சலிட்டபடியே வீடு புகுந்து தாக்கத் தொடங்கியது.

 

தொழிற்சங்கப் பணிகளையொட்டி, குரோம்பேட்டை வந்திருந்த பு.ஜ.தொ.மு.மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தார். "எதற்காக எங்கள் தோழர்களைத் தாக்குகிறீர்கள்? புதியஜனநாயகம் பத்திரிகையில்
வந்துள்ள கட்டுரையில் தவறுஇருந்தால், உங்கள் மறுப்பை பத்திரிகையிடம் தெரிவியுங்கள்'' என்று அந்தக் கும்பலிடம் விளக்கிக் கொண்டிருந்தபோதுþ "நீ தான் தலைவனாடா?'' என்று வெறிக் கூச்சலிட்டபடியே அவரது பின்மண்டையில் இரும்புத் தடியால் இக்கும்பல் கொலை வெறியோடு தாக்கியது. தோழர் முகுந்தன் மயங்கிக் கீழே சரிந்தார். ""ஐயோ! எங்கள் தலைவரைக் கொல்றாங்க!'' என்று தோழர்கள் கூச்சலிட்டதும்þ தோழர்களையும் இக்கும்பல் சுற்றி வளைத்துத் தாக்கியது. இதைக் கண்டு இப்பகுதிவாழ் மக்கள் திரளத் தொடங்கியதும், இக்கும்பல் தப்பியோடிவிட்டது.

 

பிடரியில் அடிபட்ட தோழர் முகுந்தனும் பிற தோழர்களும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். உடனடியாகþ சங்கர் நகர் போலீசு நிலையத்தில் இந்த ரவுடிக் கும்பல் மீது புகார் கொடுக்கப்பட்டது. தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு.வும் அதன் தோழமை அமைப்புகளும் இக்கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

 

தோழர் முகுந்தனையும் பு.ஜ.தொ.மு. தோழர்களையும் தாக்கியதோ 6 பேர் கொண்ட போதையேறிய கும்பல். தாக்கப்பட்டவர்களோ 9 தோழர்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும்,  இத்தோழர்கள் திருப்பித் தாக்கவில்லை. அத்தகைய நோக்கமும் தோழர்களுக்குக் கிடையாது. இருப்பினும், தம்மை பு.ஜ.தொ.மு.வினர் தாக்கியதாக போலீசு நிலையத்தில் இக்கும்பல் எதிர்புகார் கொடுத்தது. அதன்பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் போலீசு நிலையத்தில் நிர்பந்தம் கொடுத்துப் பார்த்தனர்.

 

ஆனால், தோள்பட்டை மற்றும் பிடரியில் அடிபட்ட தோழர் முகுந்தன், படுகாயமடைந்த மற்ற 3 தோழர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாலும்þ இந்த ரவுடிக் கும்பல் தோழர்களைத் தாக்கியதற்கு வலுவான சாட்சியங்கள் இருந்ததாலும், இக்கொலைவெறித் தாக்குதலை எதிர்த்து பு.ஜ.தொ.மு.வும் புரட்சிகர அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆயத்தமானதாலும், போலீசார் இக்கும்பலின் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவர்களில் மூவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிழைப்புவாத அரசியலை விமர்சித்து பு.ஜ.வில் கட்டுரை வெளியானதும், கடலூர் பு.ஜ. முகவரை தொலைபேசியில் கீழ்த்தரமாக வசைபாடிய தோடு,  உன்னைக் கொல்லப் போகிறோம் என்று அக்கட்சியின் ரவுடிகள் எச்சரித்தனர். தங்களது தலைவரை யாரும் விமர்சிக்கக் கூடாது; துதிபாடத்தான் வேண்டும். இல்லையேல்þ இந்தக் கதிதான் ஏற்படும் என்று எச்சரிப்பதாகவே தோழர் முகுந்தன் மீதும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் திருமாவின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலை விமர்சித்து பு.ஜ.வில் எழுதப்பட்டபேதும் இதே பாணியில்தான் இக்கட்சியின் குண்டர்கள் எதிர்ப்பைக் காட்டினர். இவையனைத்தும் அக்கட்சியானது பிழைப்புவாத  குண்டர்படைக் கட்சியாகச் சீரழிந்து போயுள்ளதை நிரூபித்துக் காட்டுகின்றன.

 

பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பிற தோழர்கள் மீதான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவுடிகள் நடத்திய இக்கொலைவெறித் தாக்குத
லைக் கண்டித்து தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு.வும் புரட்சிகர அமைப்புகளும் சுவöராட்டிப் பிரச்சாரம் செய்தன. இதனால் மேலும் அம்பலப்பட்டுப்போன வி.சி. கட்சியின் பிழைப்புவாதிகள்þ ""ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. பொறுக்கிகளே! தலித்துகளோடு மோதுவதுதான் புரட்சியா?'' என்று நாகல்கேணி பகுதியில் எதிர்ப்பிரச்சார சுவöராட்டிகளை ஒட்டினர். சேத்துப்பட்டு பகுதியில் ""வன்முறையைத் தூண்டும் ம.க.இ.க. ரவுடிகளைத் தடை செய்!'' என்று சுவரெõட்டிகளை ஒட்டினர்.

 

பாவம்! மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை இப்பிழைப்புவாதரவுடிக் கும்பலுக்குத் தெரியவில்லை. நாகல்கேணியில், வி.சி. கட்சியின் ரவுடிகள் கைதானதும், "இந்த ரவுடிப் பசங்களுக்கு இது வேணும்; அப்பதான் அடங்குவானுங்க'' என்று இப்பகுதிவாழ் மக்களே வாழ்த்தி வரவேற்றனர். சேத்துப்பட்டு பகுதியில் இக்கும்பல் ஒட்டிய சுவரொட்டியைப் பார்த்து அப்பகுதி மக்களே அவர்களைக் கேள்வி கேட்கத்தொடங்கினர். சிலர், "டேய்,  யாரைப் பார்த்து ரவுடின்னு எழுதுற. இந்த ஊருல ரவுடியிசத்த ஒழிச்சவங்களே அவங்கதான். உங்கள மாதிரி மாமூல் வாங்கி, கட்டப் பஞ்சாயத்து பண்ணி பொறுக்கித்திங்கறாங்களாடா? ஒழுங்கா இரு! இல்லன்னா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க!'' என்று முச்சந்தியில் நிறுத்தி அவர்களை எச்சரித்ததும்þ இக்கும்பல் பம்மிப் பதுங்கிவிட்டது.

 

பு.ஜ.கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கவோ, தலித் என்ற மூடுதிரையின் பின்னே இத்தகைய பொறுக்கி அரசியலை நியாயப்படுத்தவோ திண்ணைப்பேச்சு புரட்சியாளர்கள்கூட இப்போது வி.சி. கட்சியினருக்குத் துணை நிற்பதில்லை. திருமா உள்ளிட்டு எந்தவொரு கிரிமினல்  பிழைப்புவாத  பொறுக்கி அரசியல் சக்திகளையும் அம்பலப்படுத்த பு.ஜ. என்றைக்குமே தயங்கியதில்லை.பு.ஜ.தொ.மு. உள்ளிட்டு புரட்சிகரஅமைப்புகள் இப்பிழைப்புவாத ரவுடிக் கும்பலின் கோழைத்தனமான தாக்குத லுக்கு அஞ்சி அடிபணிந்ததாக வரலாறுமில்லை. தலித் என்பதாலேயே இத்தகைய ரவுடிக் கும்பல்களின் அட்டகாசத்தை உழைக்கும் மக்கள் அங்கீகரிப்பதுமில்லை.


— ஆசிரியர் குழு.