Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “தில்லை கோவில் மக்கள் சொத்து! தீட்சிதர் சொத்தல்ல!!” தீட்சிதர்-சு.சுவாமி கும்பலைக் கலங்கடித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

“தில்லை கோவில் மக்கள் சொத்து! தீட்சிதர் சொத்தல்ல!!” தீட்சிதர்-சு.சுவாமி கும்பலைக் கலங்கடித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

  • PDF

கடந்த பிப்ரவரி 2þ 2009 அன்று தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்துப் பார்ப்பனத் தீட்சிதர் கும்பல் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டு, கடந்த 16.9.09 அன்று "தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தல்ல; மக்கள் சொத்து'' என்று சென்னை உயர்நீதி மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தில்லை தீட்சிதரை வென்றாரில்லை என்ற பார்ப்பன இறுமாப்பையும் ஆதிக்கத்தையும் இந்த இறுதித் தீர்ப்பு தகர்த்தெறிந்துவிட்டது. தீட்சிதப் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகத் தமிழக மக்கள் அடைந்துள்ள இந்த வெற்றி, எளிதாகக் கிடைத்துவிடவில்லை. சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிலைப்படுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள்; ம.க.இ.க.þ
வி.வி.மு.þ பு.மா.இ.மு.þ பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்திய போராட்டங்கள், அடக்குமுறை, கைதுகள், பொய்வழக்குகளைக் கண்டு அஞ்சாமல் இவ்வமைப்புகள் காட்டிய போராட்ட உறுதி, தமிழின உணர்வாளர்களும் பார்ப்பன எதிர்ப்பு  உ ணர்வு கொண்ட பக்தர்களும் கொடுத்த பேராதரவு ஆகியவற்றினால்தான் இம்மகத்தான வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது.

 

16.9.09 அன்று மாலை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியானதும்þ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகரஅமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிþ இந்த வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடின. விழுப்புரம் மாவட்டம்þ திருவெண்ணெய் நல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்கள் அரசூர் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்து, பார்ப்பனியத்துக்கு எதிராக முழக்கமிட்டு தெருமுனைக் கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியைக் கொண்டாடினர். சென்னைசேத்துப்பட்டில் ம.க.இ.க. தோழர்கள் 17.9.09 அன்று காலைþ பறைகள் அதிர பார்ப்பனியத்துக்கு எதிராக முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று, அம்பேத்கர் திடலில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துþ தெருமுனைக் கூட்டம் நடத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கிþ இந்த வெற்றியைக் கொண்டாடினர். இம்முதற்கட்ட வெற்றியோடு நில்லாமல், ""கொலை கொள்ளை முதலான கிரிமினல் குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும்; நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிய வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் தொடர தமிழக மக்களை அறைகூவினர்.

 

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பார்ப்பனக்கும்பல் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறதாம். புரட்சிகர அமைப்புகளின் உறுதியான தொடர் போராட்டங்களால்þ அங்கேயும் தில்லை நடராசர் இப்பார்ப்பனக் கும்பலை இடது காலால் எட்டி உதைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
·

— பு.ஜ.செய்தியாளர்கள்.