Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசியல் கோமாளிகள், இயல்பில் அலுகோசுகளாகவும் பவனிவருவர். அண்மையில் சுவிஸ் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், கோமாளி சுகன் தான் ஒரு அலுக்கோசு என்பதை இங்கு மீண்டும் வெளிப்படுத்தினான்.

இனவொடுக்குமுறையால் இன்று தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் மிகச் சிறுபான்மை இனமாக மாறி வருவதை சுனந்த தேசப்பிரிய சுட்டிக் காட்டினார். இதன் போது, சுகன் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆர்ப்பரித்தான். தமிழ் மக்களை கொன்றும், அவர்களை நாட்டை விட்ட துரத்தியும் அழித்த அந்த அரசியலுக்காகத்தான், இந்த மகிழ்ச்சி. அலுக்கோசுகள் மட்டும் தான், கோமாளித்தனத்துடன் தங்களை இப்படி வெளிப்படுத்த முடியும். 

 

தமிழ் மக்களின் அவலத்தில், சுகனுக்கு இப்படி மட்டற்ற மகிழ்ச்சி. இக் கைங்கரியங்களை செய்தவர்களை போற்றியும் பாராட்டியும் நிற்கும் கோமாளி அரசியல். இந்த கோமாளி அரசியல் என்பது, தன்னை எல்லோரும் கதைக்க வேண்டும் என்ற, சுயநலத்தின் வக்கிரமாகும்.

 

தமிழ்மக்களை இன்று மிகச்சிறுபான்மை இனமாக மாற்றிய அரசியல்

 

1. பேரினவாதமும் அதன் ஒடுக்குமுறையும்

 

2. குறுந்தேசியமும், அது மறுத்த ஜனநாயகமும்

 

3. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்று, கையேந்தி வாழ வைக்கும் இலங்கை அரசின் பொருளாதாரக் கொள்கை

    

இவை தமிழினத்தை குதறியது. இதில் மகிழ்ச்சி கொண்டாடும் "தலித்" வக்கிரம்.   பேரினவாத ஒடுக்குமுறையால் 2.5 இலட்சம் தமிழ் மக்கள் நேரடி மற்றும் மறைமுகக் காரணங்களால் கொல்லப்பட்டனர். இதில் இருபது சதவீதம், குறுந்தேசிய புலிகளால் கொல்லப்பட்டனர். 

 

இந்தப் பொதுச் சூழலால் 20 இலட்சம் தமிழ்மக்கள் நாட்டுக்கு வெளியில் இன்று வாழ்கின்றனர். அரச பாசிசம் கட்விழ்த்துவிட்ட பயங்கரவாதமும், புலியின் குறுந்தேசிய பாசிசமும், தமிழ்மக்களை அங்கு ஜனநாயகபூர்வமாக வாழ்வதை அனுமதிக்கவில்லை. அத்துடன் அரசின் மக்கள் விரோத ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை, தமிழ் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

 

இன்று 40 இலட்சம் இலங்கையர் (80 வீதமானவர்கள் பெண்கள்)  தென்னாசியா மற்றும் அரபு நாடுகளில் தொழில் புரியும் நிலை. இலங்கை அரசின் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கையே இதற்கு காரணமாக உள்ளது. இந்த வகையில் தமிழ் மக்கள் மேற்கு நோக்கிச் செல்ல, அரசியல் சூழல் ஊக்குவித்தது. 

 

இப்படி இனத்தை அழித்த சமூக பொருளாதார ஒடுக்குமுறையை வரவேற்றுத் தான், அலுக்கோசு சுகன் தன் ஜனநாயக உரிமையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தினான். இவர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை, மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதையே தங்கள் கொள்கையாக கொண்டவர்கள்.    

 

இப்படி தங்கள் சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்காக, இவர்கள் பேசாத தத்துவங்கள் கிடையாது. நடிக்காத நாடகங்கள் கிடையாது. இன்று தலித்தியம் வரை, பேரினவாத நலனுக்காகவே குத்திமுனங்கி பேசுகின்றனர். இப்படி அரச சார்பு தலித்தியம் பேசும் புலத்து புலியெதிர்ப்பினர் பின்னால் ஓட்டிக்கொண்டு, மகிந்தாவின் அடிவருடியாக இருப்பதற்காக அங்குமிங்குமாக மனிதத்தையும் ஜனநாயகத்தையும் குதறுகின்றனர்.

 

வேடிக்கை என்னவென்றால் மகிந்த தலித்தியம் பேசுவோர்களிடையில், சுகன் ஒரு தலித் இல்லை என்பது தான்.  இதனால் தலித்தியல் வாதியாக, அவர்கள் ஏற்றுக்கொள்வது கிடையாது. அ.மார்க்ஸ் - ரவிக்குமார் தலித்தியம் போன்று, அங்குமிங்குமாக ஓட்டிக்கொண்டு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஆடு புலி ஆட்டம் ஆடவே,  இருதரப்பும் முனைகின்றது.

 

மக்களின் அவலத்தை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்தக் கூட்டம், மகிந்தாவின் சிந்தனையை தங்கள் தலித்தியமாக வரிந்து கொண்டு, தலித் மக்களின் முதன்மை விரோதியாக இன்று மாறி நிற்கின்றனர்.  

      

மக்களின் அவலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தங்களை சுயநலத்தை பிழைப்புவாதமாக மாற்றி நிற்கின்றனர். இவர்களையும், இவர்களின் ஜனநாயக உரிமையையும் இனம் காண்பது இன்று அவசியமானது.

 

பி.இரயாகரன்
23.10.2009