Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

போலிகள்.

  • PDF

கவிஞனே !

கோவணமும்,எழுதுகோலுமாய்- நீ

தேடிய செல்வத்தைக்,

கறையான் புற்றிற்குள்.......

 
தொலைத்தாயிற்று.


இன்று,

மிச்சமிருக்கிற வெள்ளைத்தாள்களைத் தேடி,

கறையான் புற்றைக் கிளறிக் கொண்டிருக்கிறேன்...

மரித்த மானிட மறைவிடம் மூட............




எதுகை,மோனை,யாப்பு,மரபு,சொற்றிறன்

போட்டுக் குழைத்து........

பாலியல் வன்மையை இனவாதம்,மதவாதம்

பூசாமல்........

மயிற்ப்பீலி கொண்டு மெல்லத்தடவி......

வார்த்தைகள் தேடி,வடித்தெடுத்த - உந்தன்

சமாதான வெள்ளைக் கவிதைககளத்,

தேடிக்கொண்டிருக்கிறேன்! -திக்கெட்டும்

சிதறிய பிணங்களின் மறைவிடம் மூட.......





அடா... தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ்....

துண்டுத் துணியும் மேலில் இல்லாமல்,

துடைத்து வழித்துத் துவம்சம் பண்ணி,

யோனி விரியலில் கந்தக முடிச்சை -இறுகச் செருகி

வெடிக்க வைத்த வெறியனை,

விரல் நீட்டிக் குற்றம் என்பதை,

இனவாதம் என்னும் இனிய கவிஞனே!

வாழ்க நீ ! வாழ்த்துக்கள் உனக்கு !




நீ, வட்டமாய் அமர்ந்து...

வசனம் பேசலாம்!

விமர்சனமென விளக்கமும் சொல்லலாம்!

விழுந்த பாட்டிற்கு,குறியும் சுடலாம்!

மூளைச்சலவை என்பதாய் இன்னமும்,

இயங்கியல் பேசி இறுமாப்புறலாம்!

ஒட்டுத்துணியில்லாதவனுக்குத் தானடா-ஒரு

கோவணத்தின் அருமை புரிந்து கொள்ளப் போகிறது।




கவிதை மீட்கும் தேசபக்தனே !

காலி வயிற்றுடன்,

கால்நடையாக.....

முறிகண்டி,மல்லாவி

முள்ளிவாய்க்கால் என

மாறி,மாறி உயிரை ஒளிக்க ஓடிய

மனித ஜடத்திற்கு - எதனை விடவும்

மூச்சுத் தங்கிடும் நிமிடமே.....

முக்கியம் என்பேன் !




என்னடா? இது.....

கண்முன்னாலேயே, கதறக் கதறச்....

செத்தொழிந்த அந்த எலும்புக் கூடுகளுக்காய்

இன்னமும் கூட - உன் இதயம்

கொதிக்காதிருந்தால்.......




போ... போய்.....

மிச்சமாய் இருக்கிற

யோனி விரியலில் - நீயும் அவனைப்போல்

வெடி வைத்து மகிழ் !!!!

போ... இனிய கவிஞனே!

http://akathiyin.blogspot.com/2009/10/blog-post_21.html

Last Updated on Thursday, 22 October 2009 06:16