Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் காலச்சுவடு கட்டுரை தொடர்பான எதிர்வினை மீது

காலச்சுவடு கட்டுரை தொடர்பான எதிர்வினை மீது

  • PDF

காலச்சுவடு கட்டுரை எழுதியவர் தொடர்பாக, பெட்டையின் பின்னோட்டம் மற்றும்  ஒரு பொதுவான உள்சுற்றில் ஒருவிவாதம் தொடர்கின்றமையால் மேலும் சில விளக்கங்கள் அவசியமாகின்றது.

 

 

 

கட்டுரை பொதுவான மூன்று பகுதியைக் கொண்டது.

1.காலச்சுவட்டின்  வியாபாரம் தொடர்பானது.

2.சிவத்தம்பி, சேரனின் பிழைப்புவாதம் தொடர்பானது.

3.கட்டுரை எழுதியவர் இலங்கையர் அல்ல என்பது தொடர்பானது.

1. காலச்சுவடு இலக்கிய வியாபாரிகள். எந்த அரசியல் நேர்மையுமற்றவர்கள். எதையும் எப்படியும் தங்கள் இலக்கிய வியாபாரத்துக்காக செய்யக் கூடியவர்கள். அந்தவகையில் இந்தக் கட்டுரை, இயல்பாகவே அவர்களின் வியாபார நடத்தைகளுடன் பொருந்திப் போனது.

2. சிவத்தம்பி, சேரன் பாசிசத்தின் பின் நின்றவர்கள். அவர்கள் தம்மைப் பற்றி, தம் நடத்தையையும் திரித்து புரட்டி இக்கட்டுரையூடாக தம்மைப்பற்றி ஏதோ ஒரு வகையில் புனைவதும் கூட பொருந்திப் போனது.

இந்த இரு விடையத்திலும், இலங்கை முகாமில் உள்ளவர் தான் எழுதியவர் என்று எம்முடன் முரண்படுபவர்கள், இந்த அரசியல் சாரத்தில் பொதுவாக முரண்படவில்லை. கட்டுரையின் முதல்பகுதியுடன் பொதுவாக முரண்படுகின்றனர்.

முரண்பாடு இதை எழுதியவர் முகாமில் இருந்து தான், என்று கூறுகின்றனர். "நீங்கள் இதை எழுதியவரது இருப்பையே இல்லாமலாக்கிறீங்க" என்று ஆணித்தரமாக கூறுவது ஆச்சரியமானது தான். இங்கு கூறுபவர்கள் தனிப்பட்ட ரீதியில் இன்னார் எழுதியதாக தெரிந்து கொண்டு, இப்படி எழுதி முரண்படுகின்றனர். யார் என்று தெரியாத சுத்த மோசமான, காலத்துக்கு உதவாத ஒரு கட்டுரையின் சாரம், இதன் அரசியல் இருப்பை இயல்பாகவே அங்கீகரிக்காது. நாம் யார் என்று தெரியாமல், இதன் மொழி ஊடாக இல்லாமலாக்கியிருக்கலாம்.


தனிப்பட இவர்தான் எழுதியது என்று தெரிந்து கொள்ளாத எம்மால், இதை அனுமானிக்கவும் ஊகிக்கவும் முடியாது. பெட்டை குறிப்பிட்டது போல் இவர் அவரல்ல என்று "ஊக, குத்துமதிப்பு" சார்ந்து எழுதியதல்ல. இங்கு நாம் எதையும் ஊகமாக, குத்துமதிப்பாக வெளியிடவில்லை. அத்துடன் நீங்கள் சொல்வது  போல் "உங்களுக்கு இதை "உண்மையாய்' ஒருவர் 'முகாமில்' இருந்து எழுதியிருக்கலாம் என்கிற யோசனையே இல்லை என்பதுதான் (அந்தப் புள்ளியை யோசிக்கவே இல்லை என்பதும்) மிகவும் ஏமாற்றமளிக்கிறது..." என்ற உங்கள் பார்வை கூட தவறானது. இதை விட நாங்கள் அதை விரிவாகப் பார்க்கின்றோம்.

வன்னியில் இருந்த மக்கள் அனைவரும், அவர்களுடன் தாராளமாக உரையாடிய ஒவ்வொருவரும் இதன் சாரத்தை எழுத முடியும். எழுத்தாற்றல் உள்ள ஒவ்வொருவருக்கும் இது சாத்தியம். நடந்த அனைத்தும் அந்த மக்களுக்கு மேலானது. உண்மை அங்கு தான் இருந்தது, இருக்கின்றது. நாங்கள் கூட இந்த உண்மையை அங்கிருந்து தான் பெற்றோம்;. கட்டுரையின் பொது சாரத்தை, அந்த மக்கள் அனைவரும் சொல்லவும், எழுதவும் முடியும்;. அதை மக்கள் சொல்லுகின்றனர், துண்டு துண்டாக தம் உறவுகளின் கடிதங்களில் எழுதியும் வருகின்றனர்.

இங்கு அங்கிருந்து எழுத முடியாது என்பதல்ல. அந்த மக்களால் இப்படி ஒரு அன்னிய மொழியில் எழுதமுடியாது என்பதுதான், எமது உண்மையின் சாரமாகும்.

1. இல்லாத பொருளை இருப்பதாக கூறி எழுதுவது

2. எம் மொழியில் பயன்படு;த்தாத சொல்லை (இவை அனைத்தும் இந்திய மொழி வழக்கில் உள்ளது) வைத்து எழுதியது.

3. வன்னியில் நடந்த சம்பவத்தை, வன்னி மக்களுக்கு தெரிந்த சம்பவத்தை திரித்துப் புரட்டி  (உண்மை ஒன்றாக இருக்க பொய்யை) எழுதியது.

4. சிவத்தம்பி, சேரன் சொன்னதாக, தமிழ் மக்கள் அறியாத ஒன்றை திடீரென முதன்மைப்படுத்தி அவர்கள் பெயரால் சொன்னது

இப்படி இன்னும். இப்படி இவை பொருளாக இருக்க, இவைகளை நாம் "ஊக, குத்துமதிப்பு" வைத்து எழுதவில்லை. மொழி என்ற பொருளை ஆதாரமாக அடிப்படையாக வைத்து, பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதுகின்றோம். இந்த மொழியில், இப்படி அவர் எழுதியிருந்தால், அதை எம்மால் கற்பனையிலும் ஊகிக்க முடியாது. பொருளுக்கு வெளியில், ஆளைத் தெரிந்து கொண்டு நாம் பதிலளிக்க முடியாது. கட்டுரையும், அந்த மொழியும் தான் எம்முன் இருந்தது. உங்களுக்கு இன்னார் என்று ஊகமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிந்து கொண்டு இதை பேசுகின்றீர்கள். எங்கள் முன் கட்டுரை, தமிழ் மக்களுக்கு அன்னியமான மொழியான இந்திய மொழியில் உள்ளது. இது வெளிவந்த தளம், படு பிற்போக்காளர்களை முதன்மைப்படுத்தி சொன்ன விதம் என்று,  இதை நாம் விமர்ச்சித்த எல்லையில் விமர்சிக்க போதுமான காரணமும் அடிப்படையும் இருந்தது.

இதை தாண்டி எழுதியவர் வன்னியில் இருந்துதான் என்கின்ற போது, எழுதிய மொழி (உள்ளடக்கமல்ல) எப்படி என்ற கேள்வி இன்று எம்முன் எழுகின்றது. இரண்டாவது உண்மையில் நடந்த சிலவற்றை, மீளத் திரித்தது ஏன் என்ற கேள்வி இன்று எம்முன் எழுகின்றது. மூன்றாவது சிவத்தம்பி, சேரன் பெயரில் ஒரு பொய்யான இல்லாத விம்பத்தை கட்டமைத்தது ஏன் என்ற கேள்வி, இன்று எம்முன் எழுகின்றது. இப்படிப் பல

"சகல ஒவ்வாமைகளையும் விமர்சனங்களையும் விடவும் முக்கியமானது அல்லவா ஒரு குரல் எங்கிருந்து வருகிறது என்பது?" என்று பெட்டை கூறுவது போல் நாம் கருதவில்லை. எம்முன் இது முக்கியமானதல்ல. ஏனெனின், அதை அவர்கள் இன்று சொல்வது அபத்தமானது. ஏன் சொன்ன விதமும் பிற்போக்கானது. படுமோசமானது. இதைவிட மக்கள் தெளிவாகவே, தங்கள் எதிரிகளை இனம்கண்டு, இனம் காட்டிக் கூறுகின்றனர். "எங்கிருந்து வருகிறது என்பது?" அல்ல, என்ன சொல்ல வருகின்றனர் என்பதுதான் முக்கியமானது. மக்கள் இதைவிட தெளிவாக கூறுகின்றனர். காலச்சுவடும், சிவத்தம்பி, சேரன், மற்றும் இவர்களின் எடுபிடிகள் மக்களுக்கு சொல்ல என எதுவும் கிடையாது.

வன்னியில் மக்களோ அதை அனுபவித்தவர்கள். அங்கு வாழ் மக்கள் இதை நன்கு தெரிந்து கொண்டுள்ளனர். புலத்தில் இதைச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தங்கள் உறவுகளின் மூலமும், புலத்தில் முன் கூட்டியே இவை சொல்லப்பட்டுவிட்டது.

இதற்கு வெளியில் அங்கும், புலத்திலும் சொல்ல விடையங்கள் உண்டு. அதை காலச்சுவடும், சிவத்தம்பி, சேரன், மற்றும் இவர்களின் எடுபிடிகளின் அரசியல் பாணியில், புதிதாக ஒன்றும் சொல்லமுடியாது.

பி.இரயாகரன்

21.08.2009

Last Updated on Saturday, 25 February 2012 07:29