Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை சமூகத்தில் ஒழிக்கத் தேவையில்லை என்கின்றது, புலிகள் தாம் கடைப்பிடித்தால் சரி என்கின்றது : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 4

யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை சமூகத்தில் ஒழிக்கத் தேவையில்லை என்கின்றது, புலிகள் தாம் கடைப்பிடித்தால் சரி என்கின்றது : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 4

  • PDF

இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.  

 

இப்படி சமூகத்துக்கு வெளியில் தனிமனிதனையும், குழுவையும் முதன்மைப்படுத்தி, தம் வசதிக்கு ஏற்ப அதை சமூகத்துக்கு பொருத்தி விடுகின்றனர். இதற்கு யமுனா புலிகள் ஊடாக அவர் தனக்கேற்ப எடுத்துக்கொண்ட கருதுகோள் 1. கரையார் அதிகாரம். 2. புலிகள் தங்கள் திருமணங்களில் சாதியம் பார்ப்பதில்லை.

 

இப்படி இதைக் கொண்டு 30 வருட புலிப்பாசிச சாதிய வரலாற்றையே திரித்துக் காட்டிவிட  முனைகின்றார். இப்படி வேடிக்கையானதும் லூசுத்தனமானதுமான வாதங்கள் மூலம், புலியை நியாயப்படுத்தும் தர்க்கங்களோ அபத்தமானவை.

 

புலிகள் தங்கள் திருமணங்களில் சாதி பார்ப்பதில்லை என்ற இந்த உண்மை என்பது, சாதிய சமூகத்துக்கு சார்பானது. அதாவது சமூகத்தில் இருந்து அன்னியமான குழுவின், நடத்தை நெறிகள் இவை. சமூகத்தின் பொது நடத்தை நெறிகள் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமூகத்தில் இருந்து அன்னியமான ஒரு அராஜகவாத குழுவின் நடத்தைகளை முன்னிறுத்தி, சமூகத்தின் பொது சாதிய நடத்தையை மறுப்பதன் மூலம், இதை தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சுத்தமான சுத்துமாத்தாகும்.  

 

இப்படி சாதி கடந்து திருமணம் செய்பவன் தன்சொந்த சமூகத்தில் (உற்றார், உறவினர் மத்தியில்) வாழ்ந்து அதை முகம் கொடுப்பதில்லை. அதாவது நடைமுறையில் சாதி அமைப்பில் இதை எதிர் கொள்ளவதில்லை. இதுபோல் தான் தங்களை "மார்க்சியவாதிகள்" என்று கூறிக்கொள்ளும் சிலர், எதார்த்த சமூகம் மீது நடைமுறையில் எதிர்வினையாற்றுவதில்லை. இப்படிப்பட்டவர்கள தான்;, சமூகத்தை காயடித்து காட்ட முனைகின்றனர்.  

 

புலிகள் மக்கள் இயக்கமல்ல. மக்கள் இயக்கமில்லை என்றால் சாராம்சத்தில் சாதிய இயக்கம். இப்படி சமூகத்தில் இருந்து அன்னியமான, அராஜகவாத லும்பன்களை அடிப்படையாக கொண்டது. இதன் சித்தாந்தம் வலது பாசிசமாகி, சமூக அரசியலற்ற மாபியாக் கும்பல். இப்படி சமூகத்தில் இருந்து அன்னியமான, இந்த உதிரிகள் மத்தியில் தான், சாதியம் கடந்த திருமணங்கள், விதவைத் திருமணங்கள் இயல்பானவையாக இருக்கின்றது. புலிகள் மத்தியில் மட்டுமல்ல, எல்லா லும்பன் தனமான வாழ்விலும் இதை நாம் காணமுடியும். அராஜகவாதம் எங்கும், இது நிறைந்தது. இது புலிக்குள் மட்டும் இருப்பதில்லை. அராஜகவாதத்தின் அடிப்படையான கோட்பாடுமாகும். இவர்கள் சமூகத்தில் இருந்தும் விலகி வாழ்பவர்கள் என்பதால், சமூகத்தின் வாழ்வியல் முறைகள் இங்கு இருப்பதில்லை. இப்படிப்பட்டது தான் புலிகள் இயக்கம். இந்த லும்பன்தனமான அராஜக வாழ்வுமுறையை எடுத்து, அதை மொத்த சமூகத்தினதும் தேசியமாக காட்டி, சமூகத்தை புணர நினைக்கும் யமுனாவின் அரசியல் கேடுகெட்ட பிழைப்புவாதிகளின் ஈனச்செயலாகும்.    

   

இப்படிப்பட்ட அராஜகவாத லும்பன்கள், சமூகத்துடன் சேர்ந்து சமூகத்துடன் போராடி சாதி மறுப்பு கொள்கையுடன் சமூகத்தில் வாழ்வதில்லை. மாறாக தமக்குள் தாம் வாழ்கின்றனர். எப்படி இவர்களுக்கு உழைப்பு அன்னியமானதோ, அப்படித்தான் சாதியமும். சமூகத்துக்கு வெளியில் அராஜகத்தை வாழ்வியல் அடிப்படையாக கொண்ட ஆண் மற்றும் பெண், தங்கள் பாலியல் தேவையின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதற்கு இவர்களுக்கு சாதியம் தடையாக இருப்பதில்லை. சமூகம் ஒடுக்கப்பட்டு இருக்கும் போது, இதை இவர்களே முன்னின்று செய்யும் போது, இங்கு எந்த சமூக தடையும் இவர்களுக்கு கிடையாது.

 

ஆனால் இவர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழான சமூகத்தில், சமூக ரீதியாக மீறப்படுவதை மறுப்பதுடன் அதை முன்னின்று ஒடுக்கினர். உதிரித்தனமான மீறல்கள் மேல், தமது சார்பு தன்மையில் நின்றே அதைக் கையாண்டனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக மீறலை ஒடுக்கியும், உதிரித்தனமான மீறலையும் தமது குறுகிய சொந்த நலனுக்கு ஏற்பவும் குறுகிய தளத்தில் கையாண்டனர். உதாரணமான புலிக்கு பணத்தை கொடுத்தவன் உயர் சாதியாக இருந்து, அவரின் மகள் அல்லது மகன் தாழ்ந்த சாதியில் காதலித்தால் அதை புலியைக் கொண்டு தடுத்து நிறுத்தினர். தாழ்ந்த சாதியாக இருந்து, உயர் சாதியில் காதலித்தால், அதைப் புலியைக்கொண்டு திருமணத்தையும் நடத்தினர்.

 

உதிரித்தனமானதை தங்கள் தேவைக்கு ஏற்ப கையாண்டனர். சாதிய சமூக மீறலை முற்றாக மறுத்தனர். இப்படி உயர் சாதிய சமூகத்தின் சமூக ஒழுங்கை தக்கவைப்பதன் மூலமே, புலிகள் சமூகத்தின் மேலான தங்கள் அதிகாரத்தை நிறுவினர். இப்படி சமூகம் சாதி சமூகமாக இருந்தது. இதை மீறுவதை மறுத்தவர்கள் தான், தமது அராஜகத்துக்கு அமைவாக இதை தமக்கு அவசியமற்றதாக்கினர்.

 

புலிகள் தமக்குள், சாதிக்கு எதிரான ஒரு அரசியல் பிரச்சாரத்தைக் கூட முன்னெடுக்கவில்லை. சமூகத்தில் இருந்து அன்னியமானவர்களின் பாலியல் தேவை இதை இணைத்தது. இங்கு சாதி மற்றும் விதவைத்தனத்தைக் கூட பிரித்து பார்க்கும் நிலையில், அவர்களின் தேவை சமூகத்துடன் உறவாடி இருக்கவில்லை. அடுத்து புலிகள் இயக்கம் உயிர் வாழ்வை விட, மரணத்தையே தன் உறுப்பினருக்கு வாழ்வாக வழிகாட்டியது. இதனால் எதிர்கால வாழ்வு மீதான நம்பிக்கையற்றவர்கள், தங்கள் தேவைகள் மீது சமூகத்தின் கட்டுக்கோப்பை ஒட்டிய வாழ்வை இயல்பாக அவசியமற்றதாக்கியது. அவர்களின்  மரணமும், தேவையும், சமூகத்தில் இருந்து அன்னியமான அராஜகத்தின் எல்லையில் நின்று வழிகாட்டியது. 

 

இதில் இருந்து மரணம் தமக்கல்ல என்ற நிலை,  புலித்தலைமைக்கு உருவாகியது. இவர்கள் தாங்கள் குடும்பமாகி, குடும்ப உறவுகளை பேணத்தொடங்கிய போது, சாதியம் மீளவும் இவர்கள் முன் மையமான விடையமாகியது. சாதியத்தை தம் குடும்ப உறவில் பாதுகாப்பதில், குறிப்பாக முனைப்பாக இருந்தனர்.

 

இதற்கு வெளியில் புலிகளைச் சுற்றி புலிகளின் தூணாக நின்று பிழைத்த கூட்டமோ, சாதியக் கட்டமைபின் பின் நின்று அதை மிக வக்கிரமாக கடைப்பிடித்த கும்பலாகும்;. அவர்களின் சாதிய சமூக தேவைகளை, புலிகள் நிபந்தனையின்றி பூர்த்திசெய்தனர். அவர்கள் கொண்டிருந்த சாதி சமூக கட்டமைப்பை ஒட்டிய, அவர்களின் சாதிய வாழ்வை பாதுகாத்தனர். 

 

யமுனா கூறுகின்றார் "அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை" என்கின்றார் யமுனா. ஒரு மூடன் தன் பிழைப்புக்கு ஏற்பத்தான், இப்படிக் கூறமுடியும்.

 

சரி எதன் மீது சர்வாதிகாரத்தை நிறுவினர்? எதன் மீது வன்முறையைக் கையாண்டனர்? சமூகத்தில் நிலவும் வர்க்க ரீதியான சமூக ஒழுங்கையும், அதனடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையையும், மாற்றமின்றி தக்கவைப்பதற்கே அதன் மேல் சர்வாதிகாரத்தை நிறுவினர். தமிழ் தேசியம் கோரிய மாற்றத்தை மறுத்து, அதை மாற்றமற்றதாக தக்கவைக்கவே சர்வாதிகாரம் புலிக்கு அவசியமாகியது. அதையும் பாசிச சர்வாதிகாரமாகத்தான் அவர்களால் நிறுவமுடிந்தது. சமூகத்தின் மாற்றத்தை மறுத்துதான், புலியின் சர்வாதிகாரம் உருவானது.

 

இங்கு வர்க்க மற்றும் சமூக ஒடுக்குமுறை ஒழுங்கை மீறி, சர்வாதிகாரம் செயல்படவில்லை. நிலவிய சமூக அமைப்போ சாதி அமைப்புதான். இதைப்; பாதுகாக்கவே, புலிகளின் சர்வாதிகாரம் உருவானது.

 

புலிகளின் "மதியுரைஞர்" பாலசிங்கம் கூறுவதை இங்கு பார்ப்போம். "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன். பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று, அபாண்டமானது" என்றார். இதையேதான் இங்கு ஜமுனாவும் வைக்கின்றார். இங்கு யமுனாவா, பாலசிங்கமா புலியின் "மதியுரைஞர்" என்ற கேள்வி எம்முன் எழும். 

 

புலிகள் தங்கள் பாசிச சர்வாதிகாரம் மூலம், சமூக முரண்பாடுகளை அடக்கியொடுக்கி, அதை பேணி வாழும்படி மக்களைக் கோரினர். தம் சர்வாதிகாரம் மூலம், சமூக முரண்பாடுகளை உறையவைத்தனர். இதற்காகத்தான் சர்வாதிகாரம் அவர்களுக்கு தேவைப்பட்டது.

 

இதில் உள்ள முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும். சமூகத்தில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் முதல் புலிகள் வரை போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை பாதுகாப்பதை தன் கொள்கையாக கொண்டதேயாகும். இதுதான் எதார்த்த உண்மை. தனிப்பட்ட பிரபாகரன் அல்லது புலிகள் என்ன நினைக்கின்றார் என்பதல்ல. பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட" போராட்டம் என்பது, இவற்றைக் களையாது இதன் மேல் புலித் "தேசியம்" கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. இது மக்களுக்கு எதிரானது. அதாவது இது தேசியமேயல்ல. இதுதான் காலம்காலமாக யாழ் மையவாதத்தால் கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது வெறும் பிரபாகரன் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகள் இருந்து உள்ளனர்.

 

பி.இரயாகரன்
15.08.2009

 

Last Updated on Sunday, 16 August 2009 06:50