Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சரிநிகர் ஆசிரியர் பீடம் எல்லாவித போலி முற்போக்கும் விடைகொடுத்து விட்டனர்

  • PDF

சரிநிகர் 73ல் “உலர்ந்த நம்பிக்கை”  எனத் தலையிட்டு ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதி, தனது போலி முற்போக்குக்கு ஒரேயாடியாக விடைகொடுத்து விட்டனர்.

இவ் ஆசிரியர் தலையங்கத்தில் “உலர்ந்து போன நம்பிக்கை” என ஒப்பாரி வைக்க முற்பட்டவர்கள், அது ஏற்பட்டது ஏதோ இலங்கையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே எனக் கனவு கண்டவர்களாக கம்யூனிசக் கருத்துக்கள் மீது ஏறிப் பாய்ந்துள்ளனர் சரிநிகர் ஆசிரியர்களுக்கு “உலர்ந்து போன நம்பிக்கையின்“ விளக்கத்தில் கூறும் வார்த்தைகளைப் பார்ப்போம்.

 

“யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது தான் என்பது மாஒ முதல் , பாரிஸ் நகரத்துச் சோபோர்ன் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவத்துவம் பெற்ற பொல்பொட் வரை ஒரு தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கின்றது. ஜனாதிபதி சந்திரிக்கா சுற்றி வளைத்து அந்த முடிவுக்கத் தான் வந்திருக்கிறார். … எவ்வகையான குரூரமான யுத்தமும் கூடப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தான் முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வரலாற்று யதார்த்தம் மறுக்கப்பட்டு யுத்தமே சாத்தியம்….”

 

எனச் சரிநிகர் ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. ஈழப்பேராட்ட வரலாற்றில் தத்துவார்த்த ரீதியில் தங்களை முற்போக்கு என அழைக்கும் போலிகளில் , இது மிகவும் மோசமான ஒரு மக்கள் விரோதக் கருத்தே ஆகும். இதில் சரிநிகர் ஆசிரியர் குழு பொய்யர்களாக , திரிபுவாதிகளாக , குத்துக்கரணம் அடிப்பவர்களாக , இன்றைய உலக ஒழுங்கின் சிறந்த பிரதிநிதிகளாக உள்ளனர். இதை பாரிஸ் பல்கலைக்கழகத்துடன் முடிச்சுப் போட்டு. நையாண்டி ஊடாக கேலி செய்தும் தமது போலித்தனத்தைத் தோலுரித்துள்ளதுள்ளனர். இக்கருத்துரையின் நோக்கங்களைப் பார்ப்போம்.

 

1. சிங்கள பெரும் தேசிய இனவெறியை பாதுகாத்தல்


2. 1935 ல் அமெரிக்காவில் பிரௌடர் 1950 களில் குருசேவ் முன்னயதை “ சமாதான வாழ்வு” என்று மீண்டும் சரிநிகர் திணிக்க முயற்சிக்கின்றனர்.

 
3. பொல்பொட்டை நக்கலடித்து கேலி செய்து கூட்டி வருவதன் மூலம் பொல்பொட் விட்ட சில தவறுகளை சாதகமாகப் பயன்படுத்தி மாஓ, பொல் பொட்டுக்கும் சேறடிக்க முயல்வதாகும்.


4. 1950 களுக்குப் பிந்திய உலகில் மாஓவின் சீனாவும் அதன் புரட்சிகர அரசியலையும் சேரடிக்க முயல்வதாகும்.


5. டெங் திரிபு அரங்கு ஏறிய பின்பு உலகில் மா ஓவின் வழியே புரட்சிகர வழியாக உள்ளதால் இதைக் கொச்சைப்படுத்துதல்.


6. இன்றைய உலக ஒழுங்கை அதாவது அமெரிக்காவின் தலைமையை அங்கீகரிக்கக் கோருதல்.


7. மக்கள் எல்லாவித உரிமைகளையும் போராடியே பெற முடியும் என்ற கூற்றை மறுதலித்தல்.

 

இது போன்ற அநேக விடயத்தை இக் கூற்று பிரதிபலிக்கின்றது. இதைச் செய்ய முதல் யுத்தத்தின் நோக்கம் யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்தத்திற்கு நோக்கம் யுத்தத்தை ஒழிப்பது என்ற கூற்றை திரித்துள்ளனர். உண்மையில் இதன் சர்வவியலான உண்மை புரட்சிகர யுத்தத்தை மட்டுமே உள்ளடக்கியது. அதாவது யுத்தத்திற்குக் காரணங்கள் எல்லாம் வர்க்க முரண்பாட்டில் தான் உருவாகின்றன. வர்க்கம் இல்லாத போது யுத்தம் இல்லாமற் போய் விடும். இது தான் புரட்சிகர யுத்தத்தின் நோக்கம் , யுத்தத்தை இல்லாமல் ஒழிப்பதாகும்.

 

இத்துடன் இக் கூற்றை மா ஓவின் பெயரால் இனம் காட்டியதில் மாபெரும் மோசடி, இக்கூற்றை மார்க்ஸ், எங்கல்ஸ் மிகச் சிறந்த முறையில் ஆய்வு செய்து முன்வைத்தனர். இதை லெனின், ஸ்டாலின் வளர்தெடுத்தனர். பின் மாஓ தொடர்ந்தார். இன்று புரட்சிகர கட்சிகள் அதனை வளர்த்தெடுக்கின்றனர். இக் கூற்று மார்க்சிய விஞ்ஞானமாக உருவான அன்றே உருவானது. இதைச் சரிநிகர் ஆசிரியர் பீடம் மறுப்பின் நாம் ஆதாரமாக வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்;கு சுயவிமர்சனம் செய்யும் பழக்கமில்லை. மாற்றுக் கருத்தைப் பிரசுரிக்கும் பண்பும் கிடையாது.

 

எல்லா யுத்தமும் பேச்சுவார்த்தை ஊடாகத் தான் முடிந்தது என்று இன்னுமொரு மோடி. 1917 சோவியத் புரட்சி நடந்த போதும், 1945 ல் கிட்லரை சோவியத் தோற்கடித்த போதும் இவை வெல்லப்பட்டன. இது சாதாரண முறையில் பல ஆதாரங்களை எம்மால் முன்வைக்க முடியும். சரிநிகர் ஆசிரியர் குழுவின் நோக்கம் என்ன என்பதை விபரிக்கும் போது சில உதாரணத்தைப் பார்ப்போம்.


1. ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் போராடக் கூடாது என்கின்றனர்.


2. ஒரு பெண்ணை ஆணாதிக்க வெறியன் கற்பழிக்கும் போது கூட பெண் அந்த ஆணிடம் இருந்து பேசி தீர்க்க வேண்டுமாம். அதாவது எதிர்த்துப் போராடக் கூடாது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அசிரியர் குழு பெண் போட்டு வந்த சட்டை பிழை , தலை நிமிர்ந்து நடந்தது பிழை, பொட்டு வைக்காதது பிழை , தனியாக வந்ததும் பிழை… இது போன்று விளக்குவார்களா?


3. ஒரு தொழிலாளி முதலாளிக்கு எதிராக போராடக் கூடாது. இது யுத்தத்தை வழிநடத்தும் என்பர்.


4. இன்று தமிழ்த் தேசிய இனத்தின் மீது பெரும் தேசிய இனவெறியர்கள் எல்லாத் துறையிலும் துவசம் செய்யும் போது தமிழ்த்தேசிய இனம் பேசித் தீர்க்க வேண்டுமாம். அதாவது பழையபடி அமீர் வழியில் , 1950 முதல் 1980 வரையான காலத்துக்கள் வெல்ல வேண்டுமா? அதாவது இன்றைய துரோகக் குழுக்களின் நிலைக்குச் செல்ல வேண்டுமாம்!

 

இவ்வளவும் போதும் போதும் என நினைக்கின்றோம். சரிநிகர் ஆசிரியர் குழுவுக்கு நேர்மை ஏதாவது இருப்பின் விவாதியுங்கள். மௌனம் பெரும் தேசிய இனத்துக்கு காலடியெழுப்புவதாகும்.