Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அமெரிக்கா: ரஸ்யாவில் இருந்து கடத்திச் செல்லும் செல்வங்கள்

அமெரிக்கா: ரஸ்யாவில் இருந்து கடத்திச் செல்லும் செல்வங்கள்

  • PDF

1983 வான்சுவர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி பிள் கிளிங்டன் ரஸ்யாவுக்கு அளித்த 160 கோடி டொலர் உதவியை எல்லா முதலாளித்துவ பத்திகைகளும் ‘ஆஹா’ வெனப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

அதே போல அமெரிக்கா 1994 மேலும் 360 கோடி டொலரைக் கொடுக்கப் போவதாகவும் ஏழு பெரும் ஏகாதிபத்திய (G7) நாடுகளும் தங்கள் பங்குக்கு உதவலாம் என்றும் . ரஸ்யாவை வளமாக்குவது தான் மேற்குலக நாடுகளின் குறிக்கோள் என்பது போலவும் பூரிப்படைந்து எழுதுகின்றன. ஆனால் உண்மையில் மேற்குலக நாடுகளில் இருந்து ரஸ்யாவுக்குள் செய்யப்படும் முதலீடுகளை விட, ரஸ்யாவுக்கள் செய்யப்படும் முதலீடுகளை விட, ரஸ்யாவிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு கடத்தி செல்லப்படும் மூலதனம் தான் பலமடங்கு அதிகமாகவுள்ளது. யெல்சிங்கும் அவர்களது பொருளாதார வல்லுனர்களும் தான் இக் குற்றத்தைப் புரிந்தவர்கள் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். முன்னாள் ரசியத் துணை ஜனாதிபதி ரூட்ஜ்கோய், உலக வங்கியும் இக் கடத்தலை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டுள்ளது.