Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சமாதானம்! ஆம் , ஜனநாயகத்துடன் …. என்ற மகஜர் மக்களை மந்தைகளாக மாற்றுவதே!

  • PDF

அண்மையில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 35 அமைப்புக்களின் சார்பில் மனோரஞ்சன் ஒரு கருத்தரங்கை நடாத்தியிருந்தார். இவர் இலங்கையிலிருந்து வந்து இக்கருத்தரங்கை நிகழ்த்தியதுடன், ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள பருவம் (முரண்பாடுகளுடன்) இதில் பங்கு கொண்டனர். மனோ ரஞ்சன் முன்னாள் Nடுவுகு உறுப்பினரும் பின் Pடுகுவு மத்திய குழு உறுப்பினரும் ஆவர்.

சந்திரிகா அரசு பதவி ஏற்றதன் பின்பு இவ் 35 அமைப்புக்களின் சார்பாக அமைப்புக்குழு ஒரு சில நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மட்டும் இன்றி, இவர்களின் தூதுக்குழுவானது யாழ் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்தும் வந்தது.


நாம் இச் செயற்பாடுகள் மீதான ஒரு விமர்சனத்தைச் செய்ய முன்பு எமது தெளிவான சில கருத்துக்களை இவ்விடயத்தில் முன் வைக்கவேண்டியது அவசியமானதாகக் கருதுகின்றோம்.


இன்று இலங்கையிலும் சரி , புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி ஜனநாயகத்தைப் பெற்றுக் கொள்ள எடுக்கப்படும் நேர்மையான அனைத்து முயற்சிக்கும் சமர் தன்னால் முடிந்தளவு பங்களிப்பை நல்கும். அதன் வரலாற்றைத் தேவையை , அதன் இன்றைய முக்கியத்தவத்தை சமரானது ஏற்றுக் கொண்டதுடன் , அதற்காக நேர்மையாக உழைக்கும்.

 

ஜனநாயகத்தை மீள அமைக்கும் முயற்சி என்பது எப்போதும் ஒரே போக்கின் ஊடாக மட்டுமே சாத்தியமானது. அது சொந்த மக்களை , அதன் அணிகளைச் சாந்தமாக மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு ஆதாரவாக உலக மக்களின் புரட்சிகர பிரிவின் ஆதரவையும் பெற முடியும். இதை விடுத்து அந்நிய ஏகாதிபத்தியங்கள் , பிற நாட்டு அரசுகள் , குறிப்பாக இந்திய அரசு, மற்றும் இலங்கை அரசு, மற்றும் துரோகக் குழுக்கள், கூலிப்படைகள் என்ற இதில் ஏதாவது ஒரு வகையினருக்கு உதவுவதன் மூலம் ஜனநாயகத்தை மீள அமைத்தல் என்ற போர்வையில் ஜனநாயகத்தை மீறும் எக்கோரிக்கையையும் சமர் மிகக் கடுமையாக எதிர்த்து நிற்கும். இதை அணுகும் அனைத்து மறைமுக செயல்களையும் சமர் எதிர்த்துப் போராடும்.

 

குறிப்பாக ‘புலி எதிர்ப்பு’ என்ற கோசத்தின் பின்னுள்ள எதிர் புரட்சியை சமர் கடுமையாக எதிர்க்கும். புலிகளின் ஜனநாயக விரோத செயல்களை விமர்சிக்க மற்றும் அதை எதிர்த்து செயற்படக் கோரும் சமர் புலி எதிர்ப்பினூடாக தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும், அதை நாசம் செய்யும் எச்செயலையும் சமர் எதிர்த்து நிற்கும்.

 

இன்றைய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய ஆயுதக் குழுக்கள் அனைத்துமே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பின்;னைய நாட்களில் கொழும்பிலும் இந்தியாவிலும் வளர்ப்புப் பிள்ளைகளாக துரோகம் இழைத்து இயங்கியதுடன், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்தும் வருகின்றன. தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பச்சையாகவே துரோகம் இழைத்து வரும் இவர்கள் இலங்கை அரசு, இந்திய அரசு மற்றும் ஏகாதிபத்திய நிலை என மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசுகளுடனும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் அவைகளின் ஈவிரக்கமற்ற செயல்களுக்கும் தலையால் சேவகம் செய்தும் வருகின்றன.

 

சிறுபான்மை தேசிய இனங்களின் விடுதலை சுயநிர்ணய அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதை நாம் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஜனநாயகத்தை மீள அமைக்கும் எந்த வழி வகைகளிலும் இது எப்பொழுதும் தொலைந்து போய்விடக் கூடாது. குறிப்பாக இதை ஏறு;றுக் கொள்ளும் அனைத்துத் தரப்பினரும் ஒரு பொதுவான ஜனநாயகத்திற்கான முன்னணியைக் கோரும் பட்சத்தில் அது ஜனநாயகத்திற்காக உண்மையில் இயங்கும். அது மகஜர் கொடுப்பதற்கு பதில் சொந்த மக்களை, அதன் புரட்சிகர அணிகளை செயலில் இயங்கும் வகையில் புரட்சிகர அறை கூவலுடன் செயற்பட வேண்டும்.

 

இவைகள் அல்லாத ஜனநாயகம்! ஆம் சமாதானத்துடன்… என்ற கோரிக்கை இன்றைய இனவாத அரசை, பெரும் தேசிய இனத்தை , ஜனநாயக மீறலை தொடர மக்கள் இதை எதிர்க்காத வகையில் திசை திருப்பும் ஒரு முன்மொழிவே ஆகும். குறிப்பாக இதன் செயற்பாடுகள் அரசு சார்பான சிங்களப் பகுதிகளில் இருப்பதால் இதை வளர்த்தெடுக்கும் என்பதையும் மறந்து விட கூடாது. மக்கள் செயலில் இறங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும் வகையில், மக்கள் புரட்சிகர வகைகளை தேடாத வகையில், கூட்டணியின் சத்தியாக்கிரகம், தொண்டமானின் பிராத்தனை போன்றவற்றிற்கும் இவர்களின் மகஜர் அனுப்பும் செயற்பாட்டிற்கும் அடிப்படையில் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

 

சிங்களப் பிரதேசத்தில் கொஞ்சமாவது சிந்தித்து முன் வர முயலும் ஒரு சிலரைக் கூட ஜனநாயகமற்ற இவ்வுலகில் மகஜர், மற்றும் புரட்சிகர வழியற்ற வெற்றுக் கூட்டங்களினூடாக செக்கு மாடாக சுற்றிவரச் செய்வதுடன், மக்களை திசை திருப்பி மக்களை மந்தைகளாகவும் ஆக்கி வருகின்றனர். இதன் மூலம் சந்திரிகா இனவாத அரசை பலப்படுத்த முயல்கின்றனர்.

 

தேசிய விடுதலைப் போராட்டத்தின் இனவாத அரசின் சமாதானம் பற்றிய போலிப் பிரச்சாரமும் தேசிய விடுதலையின் பால் புலிகளின் இராஜ தந்திரம் அற்ற வழமையான செயல்முறைகள் என்பனவும் இணைந்து இயல்பில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ‘சமாதானம்! ஜனநாயகத்துடன் ’ என்ற கோசமானது நடைமுறையில் எதிரானதாகவே செயற்படுகின்றது.

 

இதை இவர்கள் எப்படிச் செயற்படுத்த முயல்கின்றனர் எனின்;: புலிகள், அரசு என இருவரிடத்தில் சமர்ப்பித்த மகஜரில் புலிகளை நோக்கி பொருத்தமான சமாதானத் திட்டம் ஒன்றை முன்வைக்க கோருகின்றனர். இக்கோரிக்கை அடிப்படையில் பெரும் தேசிய இனவாதத்திற்கு பெயர் போவதுடன், தனிச் சலுகையை இழக்க விரும்பாத, தனிச்சலுகையை கட்டோடு வைத்திருக்க உதவுகின்ற ஏகாதிபத்திய நாட்டின்; எல்லைக் கோட்டை தாங்கிக் கொள்ளும் காலணித்துவத்திற்கு துணை போகும் செயற்பாடுகளும் ஆகும். பெரும் தேசிய இனத்தின் இனவாத இயல்புக்கு ஏற்ப, அதன் இருப்பை தக்க வைக்கும் வகையில், அதன் நலன்களை பாதிக்காத வகையில், புலிகளை நோக்கி பொருத்தமான தீர்வை முன்வைக்க கோருகின்றனர்.

 

இப்படிக் கேட்க இந்த பெரும் தேசிய வாதிகளுக்கோ சமாதானம்!  ஆம், ஜனநாயகத்துடன்: என்ற அமைப்புக் குழுவுக்கோ, எந்த தனிநபருக்கோ எந்த வித உரிமையும், அதிகாரமும் கிடையாது. தமிழ்த் தேசிய இனமானது இதன் கபடத்தனத்தை பல நீண்ட கால வரலாற்று அனுபவங்களின் ஊடாக நன்றாகவே அறிவர்.

 

புலிகளின் ஜனநாயக மீறலைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையாக சுயநிர்ணய கோரிக்கையை ‘சமாதானம் ! ஆம், ஜனநாயகத்துடன்:’ என்ற கோரிக்கையுடன் பெரும் தேசிய இனத்திற்கு தாரை வார்க்க மறைமுகமாகக் கூறும் இவர்களை இட்டு எப்பொழுதும் விழிப்பாகவே இருத்தல் வேண்டும்.

 

தமிழ் பேசும் மக்கள், சிங்கள மக்கள், என அனைத்து இலங்கை வாழ் மக்களும் அரசு, மற்றும் பல்வேறு அமைப்புகளால் ( புலிகள் உள்ளிட்டு ) ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு, உரிமைகளை இழந்துள்ளனர் என்பது உண்மையே. இம்மக்களின் ஜனநாயகம் மீதான விருப்பு எப்பொழுதும் உண்மையான விடுதலையின் மீதானதாகவே இருந்து வந்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்ற சந்திரிக்கா அரசு, மற்றும் இக்குழுவினர் செய்ய நினைப்பது மக்களை ஏமாற்றவே.

 

மக்கள் உண்மையான சமாதானத்தை அடைந்து விடுவதை தடுக்க மகஜர் அனுப்புவதுடன் “பொருத்தமான தீர்வு” என்று ஒன்றைக் கூறி இலங்கையின் சிறுபான்மை மக்களின் சமாதானக் கோரிக்கையை கேளிக் கூத்தாக்கி கொச்சைப் படுத்துகின்றனர். இது பெரும்பான்மை இனவெறி தேசிய வாதத்திற்கு பசையாக ஒத்தப் போவதே ஆகும்.


“பொருத்தமான தீர்வை தமிழ் மக்கள் சார்பாக புலிகள் கூட சமர்ப்பிக் முடியாது. ஏனெனில் தமிழ் தேசிய இனத்தின் உண்மையான சமாதானம், ஜனநாயகம் என்பது சுய நிர்ணய உரிமையில் தான் தங்கியுள்ளது. சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து போவதா என்பது சிறுபான்மை இனத்தின் உரிமை. இது மட்டுமே உண்மையான சமாதானம்! ஆம் ஜனநாயகத்துடன்:

 

சமாதானம்! ஆம் ஜனநாயகத்துடன்: என்பது தமிழ் தேசிய விடுதலைக்கு அப்பால் உருவாகி விடாது. இது சுய நிர்ணயம் என்ற அச்சாணியில் மட்டுமே சாத்தியம். அதாவது இதற்காக போராடுவதன் மூலம் மட்டும் அதன் வழிகளில் மக்கள் அணி திரள்வதன் ஊடாக மட்டுமே, அதன் வழி முறைகளில் புரட்சியை நடாத்துவதன் மூலம் மட்டுமே சமாதானம்! ஆம் ஜனநாயகத்துடன்: என்பதைப் பெற முடியும்.

 

இதை நிராகரித்த சமாதானம் ஆம் ஜனநாயகத்துடன் என்பது எந்தக் குறுக்கு வழிகளிலும் சாத்தியமில்லை. இது இருப்பிலுள்ள ஜனநாயக விரோத செயல்களைத் தக்க வைப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேச விடுதலையை கிடப்பில் போட்டு விடுவதற்கும் செய்யும் கைங்கரியமே ஆகும்.

 

சமாதானம்! ஆம் ஜனநாயகத்துடன் என்ற குழுவின் பிரதிநிதியானவர் இக்கைங்கரியங்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு சில வாதங்களைச் சுற்றிச் சுழன்று மீண்டும் மீண்டும் முன்தள்ளியனார்.


• இனக்கலவரம் என்று ஒன்று இனிமேல் வராது. அதாவது நாம் வரவிட மாட்டோம்.
• யாழ் சென்று புலிகளைச் சந்தித்த இக்குழு தம்முடன் எடுத்துச் சென்ற 50000 மகஜர் பிரதிகளை திடீரென விநியோகித்த போது புலிகள் விரும்பாத நிலையில் மக்கள் முண்டியத்துப் பெற்றுக் கொண்டனர். எனவே தமிழ் மக்கள் சமாதானம் மீது- ஒரு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளர்.


• வவுனியாவுக்கு பாத யாத்திரை வந்த 5000 மக்கள் உணர்வு பூர்வமாக சொந்தச் செலவில் வந்தனர்.


• பல நூறு சிங்கள கிராமங்களில் பிரச்சாரம் செய்துள்ளோம் என இவைகளை முன்னிறுத்தி வேறு விடயங்களை முன்வைத்தனர்.

 

இனக்கலவரம் இப்போதைக்கு வரமாட்டாது என்பது 99 மூ விகிதம் உண்மையானதே. இது இவர்கள் குறிப்பிடும், இவர்களின் அமைப்பினால் தடுக்கப்படும் என்ற எடுகோளில் இருந்து நாம் குறிப்பிடவில்லை. மாறாக இனக்கலவரம் வருவதை இப்போதைக்கு அரசு விரும்பாது என்பது தெளிவானது உண்மை. அன்று 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டவுடன் உருவான கலவரம் இன்று பல நூற்றுக் கணக்காக கொல்லப்பட்டதும் உருவாகவில்லை. ஏனெனில் இனி ஓர் இனக் கலவரம் வரின் இயல்பில் தமிழீலம் என்பது அங்கீகரிப்புக்கு நகர்ந்து விடும் என்பதை அரசு தெளிவாக உணர்ந்தள்ளது. 1983 முதல் 95 க்கு இடைப்பட்ட 12 வருட காலங்களில் இனக்கலவரம் நடக்கவவில்லை. அப்பொழுது இந்த 35 அமைப்புக்கள் இருந்தும் இருக்கவில்லை. இனியும் இனக்கலவரம் நடக்க அரசு இலேசில் அனுமதிக்காது.

 

இதை மீறி நடக்குமாயின் அரசு பலவினம் அடைந்த நிலையில் மட்டுமே சாத்தியம். குறிப்பாக காலி இனக்கலவரத் தூண்டுதலை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாகக் காட்டத் தலைப்பட்டனர். உண்மையில் அது ஓர் இனக்கலவரத் தூண்டுதலின் பேரில் உருவான நிகழ்வே. அதன் பூரணவத்துவத்தை இன்று சாதாரண பத்திரிகைளில் கூட காண முடியும்.

 

இனக்கலவரம் நடக்கமாட்டாது என்ற எடுகோளை எடுக்கும் இவர்கள், உண்மையில் இனக்கலவரத்தைத் தூண்டுதலை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாகக் காட்டத் தலைப்பட்டனர். உண்மையில் அது ஓர் இனக்கலவரத் தூண்டுதலை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக மாற்றிவிட படாதபாடுபடுகின்றனர். இது ஒரு தேசிய விடுதலையின் பால் , அதன் போராட்டத்தின் பால் எதிர்நிலைக்கு இலேசாக இவர்களை இழுத்துச் செல்கின்றது.

 

அடுத்து யாழ் மக்கள் துண்டுப் பிரசுரத்தை வாங்க ஆவல் கொண்டனர் என்பதை திடீரென ‘ கண்டுபிடிப்பாக ‘ காட்ட முயல்கின்றனர். மக்களிடம் காணப்படும் முரண்பாடுகள் , அவர்க் மாற்றுக் கருத்துக்காக போராட நினைக்கும் இயல்புகளை அந்த சம்பவத்திற்கு முன்பு வரை கண்டுகொள்ள முடியாதவர்கள் எப்படி சமாதானம் ! ஆம். ஜனநாயகத்துடன் … என்று வெளிக்கிட்டவர்கள் ? எப்படி அதை நோக்கிச் சென்றடைவார்கள்? எந்த மக்களும் தமது கருத்துக்களுக்காக போராட முயல்வது ஒரு சாதாரண இயங்கியல் நிலை. இதைத் திடீரென ஞானம் கலைந்து எழுந்தவன் போல் கூறுவது மக்களை ஏமாற்றும் ஒரு நடிப்பு, கபடம் நிறைந்த ஏமாற்று முன்முயற்சி.

 

அடுத்து வவுனியா வந்த மக்கள் தொடர்பாக கூறுவதாயின் :- கூட்டணியினரின் வாய் வீச்சை நம்பி 90 மூ வீதமான மக்கள் இழுபட்டனர். தொண்டமான் மலையக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவார் என நம்பி ஆறு லட்சம் தொழிலாளர்கள் 15 ரூபாய் மாதச் சந்தா கட்டுகின்றனர். சந்திரிகா அரசு சமாதானத்தை பெற்றுத் தரும் என நம்பி 62 வீத மக்கள் வாக்குக்களை அள்ளிப் போட்டனர். இது போன்று சமாதானம் ! ஆம், ஜனநாயகத்துடன்.. என்ற நம்பிக்கையின் பேரில் 5000 பேர் வருவது ஒரு பொய் விசயமல்ல. இந்தக் கோரிக்கையை சந்திரிக்;கா வைத்துக் கொண்டு வவுனியா வந்திருப்பின் இதைவிடக் கூடப்பேர் வந்திருப்பர் என ஒருவர் சொன்னால் அதில் பொய்யிருக்காது.

 

அடுத்து சில நூறு கிராமங்களில் இதற்காகப் பிரச்சாரம் செய்துள்ளோம் என்பது மக்களை அணி திரட்டி விடாது. அது வெறும் பிரசங்கம். சமாதானம்! ஆம் , ஜனநாயகத்துடன் .. என்பதற்கு எந்த அரசியல் வேலைத் திட்டமும் ( முதலாளித்துவ வழிகளில் கூட) கிடையாது. இல்லாத வரை இது எதையுமே சாதிக்காது.

 

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புலிகள் அம்பலப்படும் போது ஒரு பெரும் தாக்குதலும் , அரசு அம்பலப்படும் போது ஒரு பெரும் தாக்குதலும் , கொழும்பில் ஒரு குண்டு வெடிப்பும் எல்லாவற்றையும் பழையபடி கொண்டு வந்து விடும். இன்று தேவைப்படுவது சமாதானம்! ஆம், ஜனநாயகத்துடன் என்பதை ஒரு அரசியல் வழியில் மக்களிடம் புரிந்து கொள்ள வைப்பதேயாகும்.

 

மேலும் , இவ் 35 அமைப்பக்களில் நாம் அறிய சில அமைப்புகள் ஜனநாகம் ஆம், சமாதானத்துடன் … என்ற முதலாளித்துவ கோரிக்கையை மாற்று அமைப்புக்களுக்கு வழங்கியதே கிடையாது. வாசுதேவாவின் நவ சமசமாயக்கட்சி ,கம்யூனிஸ்ட்டு கட்சி என்பன குறிப்பாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பல முறை தாக்கியுள்ளனர். (பார்க்க – தொழிலாளர் பாதை) மற்றும் துரோகம் இழைத்து நிற்கும் ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்கள் எப்படி சமாதானம் ஆம் , ஜனநாயகத்துடன் .. என்பதை வழங்குமாம்?

 

குறிப்பிடத்தக்கதாக நடந்த வவுனியா பாத யாத்திரையில் துரோக PLOT மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடாம். ஆனால் ஏமாற்றி விட்டனர். அது வேறு கதை , ஆனால் தலைவர்களோ விழுந்து விழுந்து சாப்பிட்;டனர். சாப்பாடு கொடுக்கும் சமாதான விரும்பிகள் கொடுக்கும் சமாதான விரும்பிகள் PLOT, சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன் .. வழங்கிக் கொடுத்த விருந்தும் , அதை உண்ட தலைவர்களின் சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன்.. என்பதுவும் என்ன என்பதை நாம் கூறத்தான் வேண்டுமா? தேவையே இல்லை. ஏனெனில் : PLOT சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன் .. வழங்கிக் கொடுத்த விருந்தும், அதை உண்ட தலைவர்களின் சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன் .. என்பதுவும் என்ன என்பதை நாம் கூறத்தான் வேண்டுமா? தேவையே இல்லை. ஏனெனில் PLOT சமாதானம் ஆம் , ஜனநாகத்துடன் ..என்று சொல்லுவது படுகோலைகள் , தேச விடுதலைத்துரோகம் என்பனவற்றை தாண்டியது அல்ல. இவர்களின் கொலைகள் , மற்றும் தேசத்துரோகத்தில் வேர்வை சிந்தி கிடைத்த உழைப்பில் விருந்து உண்ட தலைவர்கள் , அதன் வழியில் தொண்டர்களை அழைத்துச் செல்ல முனைவது அபாயகரமான சகதிக்கே. இதற்கு ஐரோப்பாவில் குறைந்த பட்சம் ஜனநாயகத்திற்காக போராடத் துடிப்பவர்களை பங்கு கொள்ள அழைப்பது இன்னுமொரு ஏமாற்று அவல நாடகமே.

 

புலிகள் ஜனநாயக மீறலை எதிர்க்க என்ன செய்யலாம்? இவர்களின் அதாவது , சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன் .. என்ற வாதிகளின் வழி முறையில் புலிகளுக்கு எதிராக இவ் ஏகாதிபத்திய அரசுகளுக்கு ‘பெட்டிசன்’ போடுவது , மகஜர் கொடுப்பது போன்றவைதானம் வழிகள். (புலம் பெயர் நாடுகளிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட பிரச்சனைகளுக்கு , இங்கு நிதியைக் கோருவது என்பது இவற்றிலிருந்து முற்றிலும் வேறானது.) இந்த வழியைக் கைக்கொள்ளும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆங்கில மொழியில் (கவனிக்கவும் ஆங்கில மொழியில்) புலிகளின், அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை இவ் ஏகாதிபத்தியங்களிடம் சமர்ப்பிக்கின்றனர். (தமிழ் மக்களிடம் அல்ல என்பதை வாசகர்கள் நன்றாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும.;) இதன் மூலம் மொத்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக இவ் அரசுகளை எம் நாட்டில் தாழ்மையுடன் தலையிட வைப்பதன் மூலம் , தேசிய விடுதலைப் போராட்டத்தை சமாதானம்! ஆம் ஜனநாயகத்துடன்.. என்ற கோரிக்கையுடன் காட்டிக் கொடுத்து அழிக்க முனைகின்றனர்.

 

இதற்குள் தெரியாமல் , அப்பாவித்தனமாக தான் செய்வது தேசிய விடுதலைக்கு உதவும் என நம்பிய சபாலிங்கம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையை பிரஞ்சில் மொழி பெயர்த்து அதை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி … இவர்களின் வழியில் சென்று ஓர் அப்பாவித் தொன்டன்தான் சபாலிங்கம். இந்தச் சபாலிங்கங்கத்தை பலிக்கடா ஆக்கியவர்கள் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆசிரியர் குழுவே. (ஆனால் இக் கொலைகளில் ஈடுபடுபவர்கள் ஓர் அரசியல் வரையறையில் நின்று தான் கொலைகளைச் செய்பவர்கள் அல்ல என்பதை நாம் மறந்து விடக் கூடாது.) இதையொட்டி நாம் மறைமுகமான விமர்சனம் ஒன்றை சமர் -12 ல் ‘ ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானமும் மாற்று மொழிக் கட்டுரைகளும்” என்ற தலைப்பில் செய்திருந்தோம்.

 

இருந்த போதும் தமது கருத்துக்கைளைத் திருத்திக் கொள்ளாது அதன் வழிகளில் செல்வதுடன் , அவர்களுத் சமாதானம்! ஆம், ஜனநாயகத்துடன்.. என்ற குழுவில் ஊக்கவித்து நின்கின்றனர்.

 

தேச விடுதலைக்கு எதிராக மாறிவிடும் சமாதானக் குழுவின் செயற்பாடு , எதிர்கால செயற்பாடுகள் என்பன மிகவும் ஆபத்தானது. அவர்கள் உண்மையான விடுதலையின் பால் ஆர்வம் இருப்பின் புரட்சிகர வழிமுறைகளில் மக்களை அணி திரட்டவும், தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் தயங்காது முன்வரல் வேண்டும்.

 

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையை அப்பாவித்தனமான மொழி பெயர்த்து சபாலிங்கம் படுகொலை செய்யப்பட வாய்பளித்ததைப் போல் மேலும் சிலரை ஐரோப்பாவில் மோட்டுத்தனமாக பலியிட ‘சமாதானம்’! ஆம் ஜனநாகத்துடன் ..’ என்ற கோரிக்கையின் பின்னுள்ள கோரிக்கைகள் , மற்றும் அதன் பிழையான செயல் வடிவம் என்பன நியாயப்படுத்த முடியாத அரசியற் படுகொலைகளுக்கு பரிதாபமாக வழி வகுக்கும் என்பதை சமரானது சுட்டிக் காட்ட விரும்புகின்றது.