Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள்

எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள்

  • PDF

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக  எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

 

இன்று இதற்குரிய சூழல். சம காலத்தில் புலிப் பாசிசம் தற்கொலை செய்த நிலையில், அரச பாசிசம் அம்பலமாகும் போதும், பாசிசம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு எம்மை தம் அரசியலுக்கு எதிராக நிறுத்தி அரசியல் அரங்கில் நுழைய முனைகின்றது. கடந்து 20 வருடமாக நாம் போராடி நிலைநாட்டிய உண்மையை, எதுவுமற்றதாக காட்ட முனைகின்றது. எனது மொழியும், எனது அணுகுமுறையின் குறைபாடுகளும் தான், இதைக் கடக்க, கடந்தகாலத்திலும் இன்றும் தடையாக இருந்தாக, இருப்பதாக காட்ட முனைகின்றது. இதனால் நாம் சந்திக்கும் அரசியல் போராட்டங்கள் பல முனையாகி, அவை கடுமையானதாகின்றது. 

 

ஈழத்து தமிழ் அரசியல் போக்கு என்பது, கடந்த 20 வருடமாக எதிர்ப்புரட்சி அரசியல் ஊடாக நகர்ந்துள்ளது. இது "தேசியத்தின்" பெயரில் ஜனநாயகத்தை மறுத்தது. மறுபக்கத்தில் "ஜனநாயகத்தின்" பெயரில் தேசியத்தை மறுத்தது. இந்தப் போக்கில் புலிப் பாசிசத்தினையும், அரச பாசிசத்தையும் சார்ந்து சமூகம் இயங்கியது. உண்மையில் தேசியத்தின் அடிப்படையான ஜனநாயகக் கூறுகளையும், அதன் அரசியல் கூறுகளையும் பாசிசம் மறுத்தது.

 

இந்தப் போக்கே கடந்த 20 வருடத்தில் ஆதிக்கம் பெற்ற ஒன்றாக, இதுவே எல்லாமாக இருந்தது. இதற்கு வெளியில் புலம்பெயர் இலக்கியம் பேசியவர்கள், மக்களைச் சார்ந்த அரசியலை முன்னிறுத்தவில்லை. மாறாக அதை மறுத்தனர். இப்படி புலிக்கு எதிராக நின்றவர்கள், அரசு ஆதரவு குழுக்களுடன் நல்ல அரசியல் உறவை கொண்டும் இருந்தனர்.

 

இந்த நிலையில் இவற்றை எல்லாம் எதிர்த்து ஒரு போராட்டத்தை, தன்னந் தனியாக நான் நடத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. இதை எதிர்த்து நான் கடுமையான போராட்டத்தை நடத்தியதால், எமக்கு எதிராக இவர்கள் அனைவரும் இயங்கினர். எமக்கு எதிராக முத்திரை குத்தமுனைந்தனர். நாம் இணக்கமற்ற அரசியல் போக்கை கொண்டவராக கூறிய, ஒரு பிரச்சாரத்தை புலத்திலும், இலங்கையிலும் இந்தியாவிலும் கட்டவிழ்த்து விட்டனர். எம்முடன் எதையும் விவாதிக்கவும், சேர்ந்து வேலை செய்யவும் முடியாது என்று கூறினர். இதன் மூலம் தங்கள் சொந்த அரசியல் போக்கை தக்கவைத்துக் கொண்டும், தங்கள் மக்கள் விரோத அரசியல் போக்கு அம்பலமாகாதும் நழுவிக் கொண்டனர்.

 

எமது அரசியலுக்கு எதிராக இவர்களால் இப்படித்தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. இதற்கு எமது தனித்த, விடாப்பிடியான கடும் போராட்டம் இதைச் சொல்லவும் பிரச்சாரம் செய்யவும்  அவர்களுக்கு வாய்ப்பாக்கியது.

 

இங்கு நாங்கள் அரசியல் ரீதியாக தவறு இழைத்தோமா? அரசியல் ரீதியாக இணங்கி வரக் கூடியவர்களை அடித்து விரட்டினோமா? இந்தக் கேள்விக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்காமல், பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பது அரசியல் ரீதியானதல்ல, அவையோ அபத்தமானது.

 

எமது அணுகுமுறையால், எமது மொழியால் எம்முடன் ஒரு புரட்சிகர அரசியலை செய்ய முடியவில்லை என்று அடித்துக் கூறுபவர்கள், தங்கள் புரட்சிகர அரசியலை எப்படி எங்கே வைத்துள்ளனர். அதையாவது அரசியல் ரீதியாக எமக்கு காட்டாது, எம்மை கொச்சைப்படுத்துவதும், குற்றம்சாட்டுவதும் அரசியல் அபத்தமாகும்.

 

புதிய ஜனநாயக புரட்சி முன்னெடுக்க கூடிய எந்த வர்க்கப் பிரிவினரையாவது, நாங்கள் எம் விமர்சன மற்றும் மொழி அணுகுமுறையால் அவர்களை தனிமைப்படுத்தியிருந்ததாக நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் யார்? அவர்கள் என்ன அரசியலை வைத்திருந்தனர் அல்லது வைத்திருக்கின்றனர். சரி எம்மால் எதிர்ப்புரட்சி அரசியலுக்கு சென்றனர் என்றால் யார்? இதை சுட்டிக்காட்டி, எமக்கு அதை அரசியல் ரீதியாக விளக்க வேண்டும். ஆனால் உண்மை என்ன,  அதை யாரும் செய்யத் தயாரில்லை.

 

இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் சூழலைக் காட்டி, நாங்கள் அவர்களின நிலையை  புரிந்து கொள்ளவில்லை என்கின்றனர். இவர்கள் தமிழ்நாட்டு புரட்சிகர சக்திகளை சந்திக்கும் போது, இப்படி கூறி தம்மை நியாயப்படுத்துகின்றனர். இப்படி அவர்கள் அரசியலை வேடிக்கையாக்குகின்றனர்.

 

நாங்கள் உங்கள் நிலைமையை புரிந்தோமா இல்லையா என்பது, தர்க்கமற்ற அரசியல் வாதம். நாங்கள் செந்தில்வேலின் புதிய ஜனநாயக கட்சி உட்பட, எவரையும் இதனடிப்படையில் விமர்சனம் செய்தது கிடையாது. அரசு, புலி, அரச கூலிக்குழுக்களை எதிர்க்காத அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்தபோது கூட, இலங்கையில் உள்ளவர்கள் மேல் இந்த வகையில் நாம் அணுகவில்லை. அந்த சூழலை புரிந்து, மக்கள் அரசியலை எப்படி அவர்கள் முன்னிறுத்துகி;ன்றனர் என்றே ஆராயந்தோம். இதை அவர்கள் செய்யாத போது கூட, நாம் அவர்களை விமர்சிக்கவில்லை. அவர்கள் பிரதான அரசியல் எதார்த்தத்துக்கு வெளியில், பேசிக்கொண்டு இருந்தனர் என்பதே உண்மை.   

 

அங்குள்ள சூழலை புரியாதவர்கள், அரசியல் இணக்கமற்றவர்கள், விவாதிக்க முடியாதவர்கள், என்று எமக்கு எதிராக கூறி தப்பிக்கும் இவர்கள், எப்படி வர்க்கப் போராட்டத்தை வர்க்க அரசியலுடன் இலங்கையில் முன்னெடுக்கின்றனர்? நாம் இவர்களின் வர்க்கப் போராட்டத்தை நடத்த, என்றும் தடையாக இருந்தவர்களல்ல. இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில், இவர்களின் அரசியல் தான் அதை மறுத்து நின்றது, நிற்கின்றது.

 

இந்த நிலையில் எம்முடன் அரசியல் உறவை அவர்கள் என்றும் விரும்பியது கிடையாது. ஏன்?

 

1. எம்முடன் அரசியல் தொடர்பை பேணுவது, அரசு மற்றும் புலியூடாக தம் இருப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதினர். நாம் அரசு மற்றும் புலியை பாசிசமாக வரையறுத்து விமர்சிப்பதை, அவர்கள் விரும்பவில்லை.

 

2. எமது கறாரான வர்க்க அரசியல் பார்வையை, அவர்கள் எம்முடன் இணங்கி போவதற்குரிய ஒன்றாக என்றும் அவர்களுக்கு இருக்கவில்லை.

 

இவ்விரண்டும் இலங்கையில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை பேசியவர்கள் முன், தடையாக இருந்தது. இந்த இடத்தில் நாம் அவர்களுடன் இணக்கமான, கண்டும் காணாமல் போன அரசியல் போக்கை கையாண்டதுடன், விமர்சனங்களை அவர்கள் மேல் செய்தது கிடையாது. அவர்கள் எம்முடன் இணங்க முடியாத தங்கள் அரசியல் வழியில் கூட, அவர்கள் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பத்தில் எந்த தடையும் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் எதார்த்தத்தில் தங்களை இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு வர்க்க சக்தியாக, அரசியல் ரீதியாக தம்மை நிறுவமுடியவில்லை.

 

இந்த நிலையில் எம்மைப்பற்றிய கேள்வி இந்தியாவிலும் இலங்கையில் எழும் போது, நாம் இணக்கமற்ற கடும் போக்காளராக காட்டி முத்திரை குத்தி தப்பிக்கின்றனர். இதை அவர்கள் எந்த அரசியல் அடிப்படையில் கூறுகின்றனர். இப்படி கூறுபவர்கள், புதிய ஜனநாயக வர்க்க அரசியல் அடிப்படையில் உறுதியாக எங்காவது அரசியல் ரீதியாக நிற்கின்றனரா!? அதை அவர்கள் அரசியல் ரீதியாக நிறுவியபடி தான், எம் மீது இப்படிக் கூறுகின்றனரா!? எம் விமர்சன மொழி மற்றும் எம் அரசியல் அணுகுமுறை மீது குற்றம்சாட்டும் எவரும், ஒரு மக்கள் அரசியல் செயல்பாட்டில் நிற்கின்றனரா என்ற கேள்வியே இங்கு மையமானது, பிரதானமானது. எமது அரசியல் நிலைப்பாடு மீது விமர்சனம் இருந்தால், யாருடனும் அதை அரசியல் ரீதியாக விவாதிக்க நாம் தயராகவே உள்ளோம்.

 

தமிழகம் ஊடாக எம்மை தடம் புரள வைக்கும் அரசியல் 

 

இந்தியாவில் ஈழத்து அரசியல் ஏற்படுத்திய தாக்கம், அங்கிருந்து இங்கு வரும்போது, அரசியல் கடந்து எம்மை திருத்தும் அரசியல் அபத்தமாக எம்மை நோக்கி வெளிவருகின்றது. எம்மை சூழவிருக்கும் பாசிச அரசியல் சூழலை புரிந்து கொள்ளாத, தமிழகத்து தமிழினவாதிகளின் எல்லையில் எங்கள் பாசிச அரசியல் சூழலை தரமிறக்கி காட்டமுனைகின்றனர். இந்த பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை, எமது சொந்த அரசியல் குறைபாடாக சொல்லி விடுகின்ற அரசியல் அபத்தம் அரங்கேறுகின்றது.

 

இதனால் ஈழத்து பாசிட்டுகளை தமிழக தமிழினவாதிகளின் எல்லையில் வைத்து கொஞ்சும் போக்கு வெளிப்படுகின்றது. அரச பாசிட்டுகளுடன் சேர்ந்து கொஞ்சிக் குலாவுவோருடன் சேர்ந்து நடைமுறை அரசியல் செய்பவர்களை, அதாவது இப்படி வர்க்க அரசியலற்ற நபர்களை மகுடம் சூட்டி எம்முன் முனனி;றுத்துகின்றனர். நாங்கள் இதை முறியடிக்க நடத்தும் கடுமையான போராட்டத்தை, மொழி சார்ந்ததாக எம் அணுகுமுறை சார்ந்ததாக சிறுமைப்படுத்துகின்றனர்.

 

எம்மை தனிமைப்படுத்தி, நாங்கள் மட்டும் எமக்குள் பேசிக்கொள்வதாக முத்திரை குத்த முனைகின்றனர். பாசிசத்தையும், அதன் குணம் குறிகளுடன் இனம் காணமுடியாது,  தேசியவாதிகளாகவும் சமூக அக்கறையாளராகவும் அப்பாவிகளாக பாதிக்கப்பட்டவராக காட்டி விடுகின்றனர்.

 

விவாதம், விவாதச் சுதந்திரம், கருத்துச்சுதந்திரத்ததை பாசிசம் எப்படி எந்த வழியில் பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை, எம் சூழலில் இருந்து வரையறுக்கமால் தாம் கையாளும் அதே அரசியல் எல்லையில் வைத்து எம்மை அதற்குள்  தள்ளிவிட முனைகின்றனர்.

 

நாங்கள் வாழும் அரசியல் சூழல் பாசிசமயமானது. பாசிசம் தன் பிரச்சாரத்தை, இந்த சூழலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டுதான் எப்போதும் நடத்துகிறது. அரசு சரி, புலி சரி, அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றது.

 

எம் சூழலில் மக்கள் சார்பு அரசியல் நிலையை பிரிப்பது எது?           
                            
தேசியத்தைப் பேசும் போது ஜனநாயகத்தை அங்கீகரித்தல் அவசியமானது. கடந்த காலத்தில், தேசியம் அதை மறுத்ததை விமர்சன ரீதியாக இனம்காட்டி அதற்கு எதிராக உறுதியாக தம்மை இனம் காட்டவேண்டும். அதை முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும்.  ஜனநாயகம் பேசுவர்கள் இனங்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். தேசியத்தில் உள்ள ஜனநாயகக் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

இதை செய்யாத அனைவரும், இன்றைய இலங்கை அரசியல் சூழலில் பாசிட்டுகள்தான். ஒன்றில் புலி அல்லது இலங்கை அரச கூலிகள்தான். இது முத்திரை குத்தலல்ல. இலங்கை அரசியல் சூழல், இதை இங்கு தெளிவாக வரையறுக்கின்றது.

 

இங்கு யாரும் அப்பாவி வேஷம் போட முடியாது. எதுவும் தெரியாத மாதிரி விவாதிக்க முடியாது. இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், அரசு மற்றும் புலி ஊடாக, இரண்டு பாசிசத்தையும் நன்று புரிந்து அனுபவித்தவர்கள். இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக நடிப்பவன் பாசிட் தான். அனைவருக்கும் அனைத்தும் இன்று தெரியும். சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள் இதை அனுபவிக்காத, அதை இன்று அறிந்திராத "அப்பாவி" மனிதம் இன்று எம் சூழலில் கிடையாது. இதை மறுக்க எமக்கு மறைமுகமாக 'புலி எதிர்ப்பு முத்திரை" குத்தி சொல்ல முனையும் அரசியல் எது? 

 

30 வருடமாக நாம் போராடும் அரசியல் போக்கை, தமிழகத்தில் பொதுவாக மறைக்க முனைவது எதற்காக!? எம்மூடாக அணுகினால், புலியூடாக தேசியத்தை பார்ப்பவர்களை அணுக முடியாது என்ற நிலையா? நாம் புலிப் பாசிசத்தை விமர்சிப்பது தவறா? எமது போராட்டம் எம் சூழல் சார்ந்தது. பாசிசத்தையும், அதன் சிந்தனை முறையையும்  முறியடிக்காமல், எம்மால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது.

 

பி;இரயாகரன்
19.07.2009

 

 

Last Updated on Monday, 20 July 2009 06:02