Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மும்பை மாநகரம் பயத்தில் மிதக்கிறது!

  • PDF

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், வேலை தொடர்பாய், மும்பைக்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். இதற்கு முன்பு மும்பைக்கு போன அனுபவமும் இல்லை.

 

எங்கும் சோதனை! எதிலும் சோதனை!

 

மும்பையில் எங்கு சென்றாலும் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்த்து பயந்தே போனேன். கேட் வே ஆப் இந்தியா அருகே உள்ள அனைத்து வங்கிகளின் கார்ப்பரேட் அலுவலகங்களிலும், பேருந்து நிலையங்கள், மக்கள் வந்து போகும் பூங்கா, விநாயகர் 

 

கோவில், மகாலெட்சுமி கோவில், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா கோவில், ரயில் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் மெஷின் கன் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு. ஒவ்வொரு இடத்திற்கும் போகும் பொழுது, நம் உடலை தடவி தடவி பரிசோதிக்கிறார்கள். இங்கே ஒப்புக்கு சோதனை செய்கிறார்களே! அப்படியெல்லாம் இல்லை. போலீஸ் உண்மையிலேயே சோதிக்கிறது. ஆம்! குண்டு வெடித்து வெடித்தால்... அவர்களும் தூக்கியெறியப்படுவார்கள் அல்லவா! உயிர் பயம்.

தேசிய கீதம்

ஒரு மாலை வேளையில் பிரபல திரையரங்கு ஒன்றிக்குப் போனேன். அது பெரிய காம்பளக்ஸ் மால். உள்ளே நுழையும் பொழுதே, அலுவலர்கள் நம்மைச் சோதிக்கிறார்கள். ஆங்காங்கே கடக்கும் பொழுது, நிலைக்கதவு பாதுகாப்பு சோதனை. டிக்கெட் எடுத்து திரையரங்குக்கு நுழையும் பொழுது மீண்டும் சோதனை. ஆண்களின் பர்ஸ், பெண்களின் கைப்பை தவிர திரையரங்கிற்குள் வேறு எதுவும் உள்ளே அனுமதியில்லை.

அறுவை படம். பாதியில் தப்பத்துக்கொள்ளலாம் என நினைத்தால், திரையரங்கை விட்டு நீங்கள் வெளியேற முடியாது. முழுதாய் பார்த்துவிட்டுத்தான் நகல வேண்டும். (ஆமாம். நீங்க பாட்டுக்கு குண்டு வைச்சுட்டு இடைவேளையோடு எந்திரிச்சு போயிட்டிங்கனா! அதுக்கு தான்!)

உங்களுடைய பாதுகாப்புக்காக தான், இவ்வளவு சோதனையும். பலமுறை சோதித்ததற்காக நிர்வாகம் தன்னை மன்னிக்க சொல்லி, திரையில் கார்டு போடுகிறது. படம் போடுவதற்கு முன்பு, தேசிய கீதம் போடுகிறார்கள். எல்லோரும் எழுந்து நிற்க சொல்லி, கார்டும் போடுகிறார்கள். எங்கே எழுந்து நிற்கவில்லையென்றால், “பயங்கரவாதி” என சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில், நானும் நின்றுவிட்டேன்.

 

தங்குமிடம், சைபர் கபே இடங்களில், நம்முடைய அடையாள அட்டையை நகல் எடுத்து அவர்களே ஒன்றை வைத்துக்கொள்கிறார்கள். எல்லா தகவல்களும் எழுதுகிற ஒரு பெரிய நோட்டை பராமரிக்கிறார்கள்.

 

“தேர்தல் சமயத்தில் பாதுகாப்பு கொடுக்கமுடியாத காரணங்களுக்காக தான் ஐ.பி.எல். 20/20 

கிரிக்கெட் தென்னப்பிரிக்காவில் நடப்பதற்கு காரணம். ஆனால், இப்பொழுது, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைந்திருக்கிறது. ரயில்வே காவலர்களில் பாதி பேரை தேர்தலுக்கு அரசு அனுப்பிவிட்டது” – என பத்திரிக்கைகள் கடுமையான குற்றம் சாட்டின.

 

“அப்படியெல்லாம் இல்லை. ரயில்வே அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களை தான் நாங்கள் தேர்தல் பணிக்கு அனுப்பியுள்ளோம். முக்கிய நிறுத்தங்களில் எண்ணிக்கையை குறைக்கவில்லை.” என்று பதிலளிக்கிறார் ஒரு ரயில்வே பாதுகாப்பு உயரதிகாரி.

 

ஏன் இந்த நிலை?

 

இதுவரை, பலமுறை வெடித்துள்ள குண்டுகளும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், 

 

அதனால் விளைந்த ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் தான் காரணம். இப்படி எங்கும் சோதனை! எதிலும் சோதனை! செய்து, எப்பொழுதும் கவனமாய் இருந்து, தேசியகீதம் பாட்டு போட்டு, வலுக்கட்டாயமாக தேசப்பற்றை ஏற்றி.. இனி குண்டுகள் வெடிப்பதை தவிர்த்துவிட முடியுமா! முடியாது. இந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம், அடிப்படை காரணமான இந்து மதவெறி பயங்கரவாதமும், இதுவரை நடந்த மதவெறி கலவரங்களுக்கு காரணமாயிருந்தவர்கள் தண்டிக்கப்படாதவரை.. இந்த குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாது.

 

பின்குறிப்பு : இந்த மும்பை பயணத்தில், நான் ஒரு இஸ்லாமியனாய் இருந்து போய் வந்திருந்தால்... இன்னும் அதிகமாக பயமுறுத்தப்பட்டிருப்பேன். இனி போகவே கூடாது என்ற முடிவுக்கும் வந்திருப்பேன்.

Last Updated on Tuesday, 02 June 2009 14:36