Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தலைவனைத் தேடும் தமிழர்களே... by சோமி

தலைவனைத் தேடும் தமிழர்களே... by சோமி

  • PDF

//புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா..... புலிகளை வலிமையாக ஆதரித்தவர்கள் போக முடியாது என்பது யதார்த்தம். நீங்களாவது போய் அவர்களுக்காக காசு சேருங்கள் உதவுங்கள். வணங்கா மண் கப்பலுக்காக சேர்த்த பொருட்களை வவுனியா முகாமில் உள்ள மக்களுக்கு கொடுக்க உலக வல்லரசுகளின் அனுமதியைக் கேளூங்கள்.//

 

//மகிந்தவின் அடுத்த அடக்குமுறை தாக்குதல்கள் சிங்களவர்கள் பலரையும் கூட உலகத்தை நோக்கி அவலக் குரல் எழுப்ப வைக்கப் போகிறது. உலகை அழைத்து வருவதற்க்குச் சரியான அரசியல் வேலையைச் செய்வோம். தலைவனைத் தேடாமல் தமிழனைக் காக்க அரசியல் போராட்டம் செய்து உலகை நம் பக்கம் இழுத்து வருவோம்.//

 

சோமி,முதலில் அரசியல்-போராட்டம்,விடுதலை என்பதைப் புரிந்து எழுதும்.இதைவிட்டு அதே புலிப்பாணி எழுத்துள் காலத்தை ஓட்டினால்,இன்றைய அழிவுக்கான அன்றைய தவறுகள்,மீளவும் விட்டு முழுமொத்த மக்களையும் கொன்றுவிடுவீர்கள்.தலைவனதும் அவருக்குப் பின்னால் உள்ள வர்க்கத்தினதும் தவறுகள்தான் இன்று கொத்துக்கொத்தாக மக்களை அழியவிட்டது-போராளிகளை நாசமாக்கியது.மக்களைக் குறைகூறுவதைவிட்டு,உமது மண்டையைக் கசக்கும்.

 

புலிகள் உலகத்தை நம்பித்தான் இன்று மக்களுக்கும் தமக்கும் பாடைகட்டியவர்கள்.இதே உலகத்தை நம்பாது சொந்து மக்களை நம்பிப் போராட்டத்தை மக்கள்மயப்படுத்துவதற்கு என்னவழியெனச் சிந்திக்கவும்.இதைவிட்டுத் தலைமைவழிபாடுகளுக்குள் புதையுண்டுபோன வரலாற்றில் காவுகொடுக்கப்பட்ட உயிர்களை"மாவீர்ர்"ஆக்குவதில் நேரத்தைப் போக்க இப்படி எழுதத்தான் வேணுமென்றால்-இது நேரமல்ல!

 

இந்த அவலங்குறித்து-தவறுகள் குறித்து விமர்சனத்தோடு போருக்குள் சிக்கிய மக்களது வாழ்வைச் செப்பனிடுவதற்கு வழிகள் காணமுனையும்.சும்மா மனம்போன போக்கிகல் அரசியலையும் உலக நாடுகளையும் புரியவேண்டாம்.இதுதானே எதிரியையே நண்பனென உங்கள் தலைவரைக் கடந்த மாவீரர் தினத்தில் பேசவைத்தது?

 

"புலிகள் தோற்ற காரணம் ஆராச்சி நடாத்துகிறார்களாம்" எனும் ஏளனந்தான் இன்று உம்மை இப்படி எழுத வைக்கிறது.

இணையத்தில் அரட்டையடித்த உங்கள் புசத்தல்களின் உச்சம் இப்போது மாபெரும் வரலாற்றுத் தவறையும்,அழிவையும் வெறும் மனிதாபிமான தன்னார்வ உதவிக்குள் குறுக்கியபடி ஐ.நா.துருப்புகளைத் தேடுதோ?

எதற்கு?

 

மீதமுள்ள மக்களையும் ஒடுக்கிச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும் உலகக் கம்பனிகளுக்கும் அடிமையாக்கி வேடிக்கை பார்க்கவா?

 

இன்றைய புலிகளது அழிவு என்ன வெறும் ஏளனத்தோடு மற்றவர்களைத் துரோகி எனச்சொல்லவா?

 

நெடில்-குறிலெனப் புலம்புவதைவிட்டுப் போராட்டத் தவறுகளைச் சுயவிமர்சனங்செய்து, முன்னேறப் பாருங்கோ.அல்லது,வாயையும்-கையையும் இறுக மூடியபடி இரும்.தலைவர் நாளை நிச்சியம் வருவார்.

 

"நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்"என்றதை மாற்றி,இனிப்பாடுங்கள் "நம்புங்கள் நாளை தலைவன் வருவான்"என்று.

 

சுத்த மடையர்களாக இருப்பதற்கு உமது எழுத்து உதவும்.

 ஸ்ரீரங்கன்.

Last Updated on Monday, 01 June 2009 16:44