Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

எழுச்சி கொள்ளும் காஷ்மீர்

  • PDF

இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை கட்டாயப்படுத்தி இணைத்த இந்திய அரசு இன்று இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர். 1947 இல் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செல்வாக்குப் பெற்ற பதான்ஸ் என்ற இனக்குழு காஸ்மீர் மீது படையெடுத்தனர். அத்துடன் உள்நாட்டுக்கிளர்ச்சியிலும் மக்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சேக் அப்துல்லாவும் மகாராஜா ஒரிசிங்கும் நேருவுடன் ஒப்பந்தம் செய்து நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைத்தனர்.

 

இவ்விணைப்பு ஒப்பந்தமானது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. அதே ஒப்பந்தத்தில் இந்திய அரசியல் அமைப்பை காஸ்மீரியர்களை நிர்ப்பந்திக்கமுடியாது எனவும் உள்ளது. அத்துடன் அன்னியரின் தலையீடு நீங்கியவுடன் இந்தியா வெளியேறவேண்டுமெனவும் ஒப்பந்தம் வரையறுக்கின்றது. இவ் ஒப்பந்தத்துக்கு வழமைபோல் துரோகமிழைத்த இந்திய அரசு இந் நிபந்தனை எதையும் நிறைவு செய்யாது இன்று வரை காஸ்மீரை ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

 

1947க்கு முன்பு பதான்ஸ் இனக்குழு கைப்பற்றிய காஸ்மீரின் ஒரு பகுதி பாக்கிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் துரோக ஆக்கிரமிப்புக்கு எதிராக 1945 முதல் காஸ்மீரியர்கள் வீறுகொண்டு எழுந்து போராடுகின்றனர். நாள் தவறாது வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் இராணுவத்தின் அடக்குமுறைக்கும் பலியாகின்றனர். பாலஸ்தீன விடுதலைப்போராட்டத்துக்கு நிகராக இன்று வீதிகளில் மக்கள் நின்று போராடுகின்றனர்.

 

இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் நாளாந்தம் பொய்களையும் கபடப்பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டுள்ளனர். இநதிய இராணுவ கொலைப்படை காஸ்மீரில் போராளிகளை வேட்டையாடுவது என்ற பெயரில் காஸ்மீர் தேசிய இனத்தின் மீது இன அழிப்பை மேற்கொள்கிறது. அரசும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளும், பத்திரிகைகளும், போலிச்சினிமாக்காரர்களும், தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவையும் காஸ்மீரியர்களை பயங்கரவாதிகள் என்றும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பவர்கள் என்றும், கொலைகாரர்கள் என்றும் குறிப்பிட்டு காஸ்மீரியர்களின் சுதந்திரப் போராட்டத்தை சிறுமைப்படுத்த முனைகின்றன.

 

இன்று காஸ்மீர் போராட்டத்தில் 43 குழுக்கள் உள்ளன. இவற்றுள் பாகிஸ்தா சார்புக் குழு சுயநிர்ணய உரிமையை கோரும் தேசிய விடுதலை முன்னணி, தீவிர மதவாதக் குழு உட்பட ஒவ்வொரு அணியும் தத்தம் நோக்கில் போராடுகின்றன. காஸ்மீரில் பல கிராமங்கள் விடுதலைப்போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 

15-10-1993 இல் இஸ்லாமியர்களினதும், காஸ்மீரியகர்களினதும் புனிததலமாக விளங்கும் விரஸ்ரத்பால் மசூதியை இந்திய இராணுவம் சுற்றிவளைத்து அங்குள்ள விடுதலைப்போராளிகளை சரணடையும்படி புதிய ஸ்டென்ட் அடித்தது இந்திய இராணுவம். இந்த மசூதிக்குள் முகமது நபியின் தலைமுடி ஒன்று பாதுகாக்கப்படுவதாக உலக முஸ்லீம் சமூகத்தால் நம்பப்படுகின்றது. இந்த முற்றுகையினால் ஏற்படும் அழிவால் மசூதியின் புனிதம் கெட்டுவிடும் என்ற முஸ்லீம்நாடுகளின் கண்டனத்தால் டெல்லி அரசு வெகுண்டுபோனது. ஒரு மாதமாக சர்ச்சை உள்ள விடையமாக இது இருந்தது.

 

மசூதி முற்றுகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 100 க்கு மேற்பட்டவர்கள் சுட்டுகொல்லப்பட்டனர். பின் வழமைபோல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பேரப்பேச்சினால் முற்றுகை நடவடிக்கை முற்றுப் பெற்றது. ஆனால் விடயம் இத்துடன் நின்றுவிடாமல் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைக்கு வரை சென்று விட்டது. இன்று உள்ள உலகப் பொருளாதார நெருக்கடியில் உலகை மறு பங்கிட அவசரமாக ஏகாதிபத்தியங்கள் முயலுகின்றனர்.

 

இந்திய, பாக்கிஸ்தான் என்ற பெரிய சந்தையை யார்? யார்? கட்டுப்படுத்துவது என்ற நோக்குடன் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் காஸ்மீரியர் பற்றி கண்ணீர் வடிக்க முயலுகின்றனர். இது போன்று இன்று சோமாலியா, யூகோஸ்லாவியா, ஆக்கிரமிப்பாளரின் நோக்கை நாம் காணமுடியும். இன்று காஸ்மீரியர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தில் பாக்கிஸ்தான், அமெரிக்கா, இஸ்லாமிய ஆக்கிரமிப்பை இனங்கண்டு தேசத்தின் விடுதலைக்காக மக்களின் சுதந்திரத்துக்கு சரியான அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதன் ஊடாக காஸ்மீரியர்களின் எதிர்காலத்தை ஒளிவீசச் செய்யலாம்.