Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் எது வரலாறு?

எது வரலாறு?

  • PDF

மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வரலாறுகள் என்பது, எப்போதுமே உண்மையாய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து உண்மைகள் மாறுபடுகின்றன."

---- {ழூஹங்கேரிய சிந்தனையாளர் மான்ஹீம்}

 

வரலாறு என்கிறோம், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகள், போராட்டங்கள், நிகழ்வுகள் யாரோ எப்போதோ எழுதிய சரித்திரக் குறிப்புகளை வைத்துக்கொண்டு கணக்கீடு செய்கிறோம். அதை உண்மை என்று நம்புகின்றோம். அப்படி எதற்காக நம்பவேண்டும்? எதனால் நம்புகிறோம்? இந்த வரலாறு எப்படி வந்தது? யாரால் எழுதப்படுகிறது? நடக்கும் நிகழ்வுகளை  நடுநிலையில் இருந்து அக்காலத்திற்கேற்ற சமூக ஆய்வாளர்களால் எழுதப்படுகிறதா? நிறைய வரலாறுகள் அப்படி எழுதப்படவும் இல்லை. மொழிகள் எழுத்துக்கள் வழக்கில் இல்லாத மிலேச்சர்களாக மனிதர்கள் இருந்தபோது வரலாறுகள் எழுதப்படவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வது நம் முட்டாள்தனமே. சில நிகழ்வுகள் ஊகங்கள் அடிப்படையிலேயே சிந்திக்க வைத்திருக்கிறது. வரலாற்று ஆராய்ச்சியாளர்களை.

 

அடுத்த காலகட்டமாக குடியிருப்பு தலைவனுக்கு கீழே அடிபணிந்து வாழ்ந்த சமூக சூழல்கள் மொழி வழக்கத்தில் இருந்த போது கூட வரலாறுகள் எழுதப்படவில்லை. முதல் முறையாக வரலாறு மனிதர்களை பற்றி ஆய்வு செய்ய முற்பட்டபோது வரலாறுகள் தோன்றியது. அதை யூகமாகவே வைத்திருக்கிறது வரலாறு. அதிலிருந்தே நம் வரலாறுகள் ஆரம்பமாகிறது. இருப்பினும் சொதப்பல் வரலாறுகளை முன்ணிலைப்படுத்தியே நமது சிந்தனைகளில் மதிப்பீடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.

 

ஊழnஎநஒ, ஊழnஉயஎந ஆசைசழசள என்பார்கள். நான்கு சுவர்களுக்குள் பதிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் மனித வாழ்க்கை நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சிகளின் பிம்பங்கள் ஒவ்வொரு நொடியில் ஒவ்வொரு கோணத்தில் திரிபுகள் நடக்கின்றன. அவரவர் திரிபுகளுக்கேற்ப எதிரொளிக்கின்றன. நிகழ்ச்சியின் நிழல்களாக அவை பார்க்கப்படுகின்றன. இக்கோணத்தில் சிந்தித்துப்பாருங்கள். எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது நமக்கு? துரோகங்கள், சந்தோஷங்கள், கவலைகள், வார்த்தைகள், வலிகள்.... வெற்றுவெளியில் மௌனமாய் அங்கீகரித்துக்கொண்டு காட்சிகளாய் பார்க்க ஆரம்பித்துவிட்டால் எப்படி இருக்கும் நமக்கு? ஆனால், சமூதாயச் சிந்தனைகள் எல்லாமே தனிமனிதர்களின் சிந்தனைகள்தான். தனி மனிதன் என்று வரும்போது அவரவர் சமூதாயத்தில் செய்யும் பங்களுப்புக்கேற்ப சொந்த உணர்ச்சிகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கோண நிலையிலிருந்து ஊழnஎநஒ, ஊழnஉயஎந ஆசைசழசள போல, ஒரு கோணத்தில் இருந்தே சமூதாய விமர்சனம் செய்ய முற்படுகிறான். எனவே மனிதனிடமிருந்து பாராபட்சமற்ற உண்மையான கருத்து நமக்கு கிடைத்துவிட முடியாது என்பார் ஹங்கேரிய சிந்தனையாளர் மான்ஹீம்.

 

ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கைக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாமல் கருத்துக்கு சொந்தக்காரனின் அபிப்பிராயங்கள் பொதிந்துள்ளன. அவன் வரலாற்று ஆராய்ச்சியாளனானாலும் சரி. "கருத்துக்கு உடையவனுடைய நிழல் சிறிதும் பாதிக்காத உண்மைக் கூற்றுக்கள் இருக்க முடியும். அப்படி வரலாறுகள் இருக்கவே செய்கின்றன" என்கிறது மனித சுதந்திர சித்தாந்தம்.

 

ம்கூம்.., சான்சே இல்லை; அப்படி எதுவும் இருக்கவே முடியாது என்று அடித்து சொல்லிவிட்டார் மான்ஹீம்.

 

இங்கே இன்னொரு நிலைப்பாட்டினை பார்க்க வேண்டும். சமூதாயத்தில் கோட்பாடுகள் என்று பார்க்கும் போது பழங்காலத்தில் அரசனின் கோட்பாடுகள், சமயகுருக்களின் கோட்பாடுகள், நிலப்பிரபுக்களான செல்வந்தர்களின் கோட்பாடுகள் என மூன்று தரப்பிற்குட்பட்ட நிலைகளில் சமூதாயம் இயங்கி இருக்கிறது. குடிமக்கள் உழைப்பாளிகளின் கோட்பாடுகள் என்ன? என்பது எந்த வரலாற்றிலும் முன்ணிலைப்படுத்தப்படவில்லை. அவர்கள் அறிவற்றவர்களாகவும், படிப்பற்றவர்களாகவும், எதுவுமற்ற தகுதியில் இருப்பவர்களாகவும் கருதப்பட்டு அவர்களுடைய நல்லது கெட்டதை தகுதி வாய்ந்த தாங்களே தீர்மாணிக்கும் உரிமை உண்டு என்று சமூகத்தில் மேல்நிலையில் இருப்பவர்களால் கருதப்பட்டது. கருதப்பட்டது என்பதை விட அவ்வாறு சமரசம் செய்து அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாக  இருக்கும். இவர்களின் ஆதிக்கத்தில் தான் வரலாறுகள் எழுதப்படுகின்றன.

 

பழகாலத்தில் இம்முறையில் இருந்து மீள நினைத்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு முற்போக்குக் கோட்பாடுகள் சிந்திக்க வைத்திருக்கின்றன. மாற்றுக் கருத்துக்கள் மக்களிடையே நூற்றுக்கணக்கில் ஏற்பட்ட போது எழுதப்பட்ட வரலாறுகள் கூட மேல்மட்டத்தினருடன் சமரசம் செய்ய முற்பட்டிருக்கிறது. அல்லது கண்காணிப்பிற்குள்ளாகி இருக்கிறது.

 

"உலகத்திலுள்ள அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும், துன்பங்களுக்கும் ஒரு முக்கியமான காரணம் அதிகாரங்கள் ஒரு சில புள்ளிகளின் கையில் குவிந்து கிடப்பது தான். அதிகாரங்கள் பரவலாக்கப்படும்போது அநீதிகள் நிகழும் வாய்ப்பும் குறைவு. இது சமூதாயத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் போதும் பொருந்தும். வரலாறுகள் எழுதப்படும் போதும் பொருந்தும்."

 

இதேயே மான்ஹீம் சொல்கிறார் :

"சமூதாயக் குழுக்கள் பிற குழுக்களின் கோட்பாடுகளை பரிவோடு கவனித்து அவர்கள் கோணத்திலிருந்து அணுகினால், விவேகப்பூர்வமான கருத்துக்கு வரலாம். ஒரளவு முயன்றால் சமூதாயப் பிரிவுகளை அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற தேவைகளை அனுசரித்து இணைக்க முடியும். அவ்வாறு பல்வேறு கோணங்களை ஒருங்கிணைப்பதற்கு தனியாக ஒரு அறிவார்ந்த வர்க்கம் தேவை. பலதுறை நிபுணர்கள், சிந்தனையாளர்கள் அடங்கிய அந்த வர்க்கத்தினர் மக்களுக்கு அவரவர் கோட்பாடுகளிலுள்ள நிறைகுறைகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டு வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்பார். இன்றைய சமூக ஆய்வாளர்கள் இந்த கோட்பாட்டை தான் தற்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம் இன்றைய வரலாறுகள் நாளைய மனிதன் அறிந்து கொள்ள என்ன முறையில் வெளிப்படுகிறது என்று.


தமிழச்சி
14ஃ03ஃ2009

Last Updated on Saturday, 14 March 2009 20:40