Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நான் நாம் என்பது எதை? : மக்களுக்கான புரட்சிகர வரலாற்றை மறுத்தல், அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதம்

  • PDF

தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.

 

 

இந்த வகையில்

1. 1980 முதல் 1990 வரையான காலத்தில், மக்களுக்காக எம் மண்ணில் ஒரு புரட்சிகர போராட்டம்; நடந்தது. இது உள்ளியக்க மற்றும் வெளியியக்கத்துக்கு எதிராகவே நடந்தது. ஜனநாயகத்துக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்குமான போராட்டங்கள் அவை. இந்தப் புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டனர். (குறிப்பாக புலிகள் நடத்திய இயக்க அழிப்பை, இப்படி நாம் குறிப்பிடவில்லை.)

 

2. 1990 க்கு பின்பாக இன்று வரையிலான காலத்தில், மக்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட செயல்பாடுகள்; நடைபெற்றது. இதில் பலர் இடையில் நின்றுவிட, பலர் தாமாக காணாமல் போக, சிலர் பிற்போக்குவாதிகளானார்கள். நாம் மட்டும் தொடர்ந்து தனித்துவிடப்பட்ட நிலையில், ஒரு நீண்ட ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்தினோம். (இதை நாம் குறிப்பிடும் போது, இன்று பலர் இருப்புக்கொள்ள முடியாது திணறுகின்றனர்)

 

இந்த இரண்டு தொடர்ச்சியான புரட்சிகர செயல்பாட்டை அங்கீகரிக்காது, ஒரு புரட்சிகரமான எந்த ஒரு அரசியல் அடிப்படையையும் நிறுவமுடியாது. இந்த அரசியல் வரையறை இன்று அரசியல் அடிப்படையாகி, அரசியல் அளவுகோலாகி நிற்கின்றது.

 

1. இதை அரசியல் ரீதியாக ஏற்காத எந்த அரசியரும், உண்மையாகவே மக்களுக்;காக போராடமுனையவில்லை என்பதே அதன் அரசியல் அர்த்தமாகும். உண்மையில் அவை மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதே உண்மை.

 

2. இக் காலத்தில் தமது சொந்த அரசியல் நிலையை சுயவிமர்சனம் செய்யாததும், தாமல்லாத மற்றைய போக்குகளை விமர்சனம் செய்யாத அனைத்தும், மீண்டும் மக்களை ஏமாற்றுகின்ற சதியுடன் கூடிய சூழ்ச்சியான சந்தர்ப்பவாத அரசியல்தான். 

 

கடந்த 30 வருடத்தில் எம் மக்களுக்கு நடந்தவைகளையும், நடப்பவைகளையும் மறுத்து, அதில் நாம் என்ன பாத்திரம் வகித்தோம் என்பதை சொல்லாத யாரும், உண்மையான நேர்மையான எந்த ஒரு செயல்பாட்டையும், ஆய்வையும்; ஒருக்காலும் செய்யமுடியாது. இந்த அவலமான மக்கள் வரலாறுகளை இயக்கியவர்கள், இயங்கிக் கொண்டிருப்பவர்கள், தமது கடந்தகாலம் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனமின்றி எதைச் செய்தாலும், அவை போலியானவைதான். அவை மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தையே அடிப்படையாக கொண்டதாகவே, எப்போதும் எந்தத் தளத்திலும் இருக்கும்.

 

எம்மைச் சுற்றிய எமது வரலாற்றுப் போக்கில், மக்களுக்கு எதிரான மூன்று பிரதான எதிர்ப்புரட்சி சக்திகள் இருந்துள்ளது.

 

1. அரசும், அரசைச் சார்ந்த புலியெதிர்ப்பு கும்பலும்

இதில் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசியவர்கள், தமிழினத்தின் சுயநிர்ணயத்தை மறுப்பவராகவே இருந்துள்ளனர். 


 
2. புலியும், புலிப் பினாமியும்

இதில் புலிசார்பு அரசு எதிர்ப்பை வைத்தவர்கள், ஜனநாயகத்தை மறுப்பவராகவே இருந்துள்ளனர். இதில் அரசு எதிர்ப்பு சுயநிர்ணயத்தை வைத்தவர்கள், ஜனநாயகத்தை கோருவதை மறுப்பவராகவே இருந்துள்ளனர்.

 

3. மக்களைச் சார்ந்து நிற்காத அரசியலைப் பேசிய, 'முற்போக்கு" லும்பன்கள். இவர்கள் தாம்  எந்தக் கோட்பாடுமற்றவராக காட்டிக் கொண்டு எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளினர்.  அதேநேரம் பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், நவ மார்க்சியம், ஜனநாயகம், சுயநிர்ணயம் என்று பேசியபடி, எப்போதும் மக்களைச் சார்ந்து நிற்பதை முதன்மையாக எதிர்த்தவர்கள். வலது இடது வேறுபாடற்ற வகையில் தம்மைக் காட்டிக்கொள்ள, புரட்சிகர அரசியல் சாரத்தையே அதில் இருந்து உறிஞ்சிய அட்டைகள் இவர்கள். தம்மை மார்க்சிய விரோதிகளாகவும், மார்க்சியத்தை திருத்துபவராகவும், மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுப்பவராகவும், எப்போதும் தம்மை காட்டிக்கொண்டனர். தனிமனித வாழ்வில், தனிமனித உறவுகளில் அரசியலைக் கைவிட்டு, சந்தர்ப்பவாதிகளாகவே வாழ்ந்தவர்கள்.

 

எதிர்ப்புரட்சி அரசியலை முன்நிறுத்திய இந்த மூன்று போக்கின் எல்லைக்குள் தான், மனித வாழ்வு அனைத்தும் சீரழிக்கப்பட்டது. நம்பிக்கைக்குரிய எந்தக் கருவையும் இவர்கள் விட்டுவைக்காது அழித்தல், சீரழித்தல், சிதைத்தல், இதுவே இவர்களின் மையமான அரசியல் நடைமுறையாக இருந்தது. இதில் அரசும், புலியும், தம் சொந்த மக்கள் விரோத நடைமுறை மூலம் வெளிப்படையாக அம்பலமாகியது. இதற்கு மாறாக 'முற்போக்கு" லும்பன்கள் பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், நவ மார்க்சியம், ஜனநாயகம், சுயநிர்ணயம் பேசியபடி, பின்பக்கமாக ஒளித்து நின்று கொண்டே புரட்சிகர சக்திகளை  அழித்தல், சீரழித்தல், சிதைத்தல் என்பனவற்றை நடைமுறைப்படுத்தினர். ஆனால் இவை எல்லாம் இன்று அம்பலமாகி வருவதால், புதிய வே~ம் தேவைப்படுகின்றது. தம் சொந்த சந்தர்ப்பவாதத்துடன், புதிதாக நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இன்று புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையில், புதிய சூழல் உருவாகுகின்றது. கடந்தகால அரசியல் வரையறைகள் மாறிவருகின்றது. இதனால் அரசியல் அணிகளின் சேர்க்கைகளின் இருப்பு, அதை ஓட்டிய கோட்பாடுகள், நடைமுறைகள் எல்லாம் அம்பலமாகி வருகின்றது. தம் முகத்தை மூடிக்கொண்டிருந்தவர்கள், இரகசியமாக அங்குமிங்கும் தலையை புதைத்தவர்கள், ஊசலாடிக் கொணடிருந்தவர்கள் என்று எல்லோரும், தத்தம் சொந்த சுயரூபத்துடன் வெளிவருகின்றனர். சிலர் சந்தர்ப்பவாத நிலையெடுத்து பதுங்கிக் கொள்வதுடன், 'மக்கள்" என்று புதுவே~ம் போடுகின்றனர்.

 

தமது கடந்தகால மக்கள் விரோத அரசியலையும், அதையொட்டிய அவர்களின் அரசியல் நடைமுறைகளையும், இதற்கமைய வாழ்ந்த தனிமனித வாழ்வையும், விமர்சனம் சுயவிமர்சனமின்றி மூடி மறைக்கின்ற சந்தர்ப்பவாதத்துடன், 'மக்கள்" என்று நடிக்கத் தொடங்குகின்றனர். இப்படி இவர்கள் பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், ஜனநாயகம், சுயநிர்ணயம் என்று இன்று இவர்கள் எதைப் பேசினாலும், அதில் நேர்மையீனமே முதல் அரசியல் பண்பாக உள்ளது. அது தெளிவாக கடந்துபோன தம் சொந்த எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை மறுக்கின்றது. அதே நேரம் புரட்சிகர வரலாற்றை மூடிமறைக்கின்றது.

 

இப்படி இவர்கள்

 

1. தம் மீதான விமர்சனம் சுயவிமர்சனத்தையே மறுக்கின்றது. தம்மை ஓத்த எதிர்ப்புரட்சி செயல்பாட்டையும், அதன் மீதான விமர்சனத்தை செய்யவும் மறுக்கின்றனர். மாறாக மூடிமறைக்கப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர். 

 

2. 1990 க்கு முந்தைய மற்றும் 1990க்கு பிந்தைய மக்களுக்கான எமது (நான், நாம் மட்டும்) புரட்சிகர போராட்டத்தையே மறுக்கின்றனர். இதன் மூலம், தமது சொந்த மக்கள் விரோத செயலை மூடிமறைக்கின்றனர். சந்தப்பவாதத்துடன் கூடிய புதிய எதிர்ப்புரட்சிகர அரசியலை மூடிமறைத்தபடி முன்தள்ளுகின்றனர்.

 

இந்த புதிய எதிர்ப்புரட்சிகர சூழல், தம் கடந்தகாலத்தை இருட்டடிப்பு செய்வதில் இருந்து தொடங்குகின்றது. புரட்சிகர வரலாற்றை மறுப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. இவைதான், புதிதாக உருவாகும் எதிர்ப்புரட்சி அரசியலின்; அடிப்படையாகும். 

 

இங்கு நான் நாம் மட்டும் என்று கூறவருவது என்ன? சிலர் இதை தனிமனித முனைப்பாக, இரயாகரன் தன் மீதான சொந்த வழிபாடாக காட்டவும் கட்டியமைக்கவும் முனைகின்றார் என்று,  இதை குறுகிய எல்லைக்குள் முத்திரை குத்த முனைகின்றனர். இந்த அடிப்படையில் வாய்வழியாக சேறடிப்பு பிரச்சாரத்தை, இந்த சந்தர்ப்பவாதிகள் செய்கின்றனர். இதன் மூலம், தம்மையும், தமது மக்கள் விரோதமான தொடர்ச்சியான அரசியலையும் சாயம் பூசி தக்கவைக்க முனைகின்றனர். 

 

இங்கு நான், நாம் என்று குறிப்பிடுவது, நாம் வைக்கும் அரசியலைத்தான். 1990 களுக்கு பிந்தைய எதிர்ப்புரட்சிகர அரசியலுக்கு மத்தியில், நான் நாம் மட்டும் நடத்திய தொடர்ச்சியான போராட்டம், அரசியல் ரீதியானவை. தனிப்பட்ட ரீதியில் 1990 க்கு முந்தையதின் நீட்சி. இது எந்த விதத்திலும், இரயாகரன் என்ற தனிமனிதன் பற்றியதல்ல, அதுபோல் இரயாகரனை சுற்றியிருந்தவர்கள் பற்றியதல்ல. மாறாக ஒரு புரட்சிகர அரசியல் போக்கில், நான் நாம் என்பது மையமான அரசியலை குறிப்புணர்த்தி நிற்கின்றது. நான், நாம் என்று கூறுவது, இந்த புரட்சிகர அரசியலைத்தான். தொடர்ச்சியான அரசியல் நடைமுறையாக, இதை வேறு யாரும் கொண்டிருக்கவில்லை.

 

இன்று எது புரட்சி? எது எதிர்ப்புரட்சி? என்பதை அளக்க, இதுவொரு அரசியல் அடிப்படையாகியுள்ளது. இந்த புரட்சிகர பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளாத அனைத்தும், சந்தர்ப்பவாத அரசியலாக இருப்பதை இனம்காட்ட நான் நாம் என்ற அரசியல் அடையாளமாகியுள்ளது. 

 

1990 க்கு பிந்தைய காலத்தில், நான் நாம் மட்டும் தொடர்ந்து மக்கள் போரட்டத்தை கோரினோம். இதனடிப்படையில் ஒரு விரிவான தத்துவார்த்த அரசியல் போராட்டத்தை நடத்தினோம். சகல நிகழ்ச்சி நிரல்கள் மீதும், இயங்கு அரசியல் போக்குகளின் மீதும், அனைத்து தத்துவ விலகல் மீதும், தத்துவார்த்த விமர்சனத்தை நாம் மட்டும் தான் தொடர்ச்சியாக நடத்திவந்தோம். அனைத்து மக்கள் விரோதமான சிந்தனைகள் மீதும், நாம் நடத்திய போராட்டம், அநேகமாக தனிமனித போராட்டமாக இருந்துவந்தது. இதை பெரும்பான்மை பைத்தியக்காரத்தனமாக கருதியது. இதற்கு மத்தியில், தனித்து இடைவிடாது இயங்கினோம். எமக்கு அரசியல் குறிகோள் இருந்தது, நோக்கமிருந்தது.

 

இன்று எம் கருத்துகள், எம் போராட்டமும் தான் சரியானது என்று ஏற்றுக்கொள்ளும் போக்கு, பொதுவான உண்மையாக மாறிவருகின்றது. நாம் வைத்த விமர்சனங்கள், அதை ஓட்டிய நடைமுறைகள் இன்று, விமர்சனமாக சுயவிமர்சனமாக பலரும் உள்வாங்குகின்ற நிலைமை உருவாகி வருகின்றது.

 

இந்த நிலைமை என்பது, கடந்தகாலத்தில் புலிக்கு எதிராக 'முற்போக்காக" இயங்கியவர் மத்தியில் அல்ல. மாறாக சமூகம் மீதான அக்கறையுள்ளோர் மத்தியில், இளம் தலைமுறைகளின் மத்தியில், இந்த புதியநிலை உருவாகி வருகின்றது. 'முற்போக்காக", புலம்பெயர் இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், நவமார்க்சியம், ஜனநாயகம், சுயநிர்ணயம் பேசியவர்களில் யாரும், மக்கள் அரசியலுக்காக தொடர்ந்து போராட முடியாதவராக சீரழிந்தவராக உள்ளனர். இவர்கள் மாறுகின்ற இன்றைய சூழலை, மூடிமறைக்கப்பட்ட தம் சந்தர்ப்பவாத அரசியலாகவே முன் நகர்த்துகின்றனர்.

 

தாம் மக்களுக்காக போராடியதாகவும், தொடர்ந்து போராடப் போவதாகவும் கூறுகின்ற சுத்துமாத்து அரசியலை முன்நகர்த்துகின்றனர். இந்த இடத்தில் தான், நான், நாம் என்ற எம் அரசியலை, அரசியல் வழியை உயர்த்துகின்றோம். எமக்கு வெளியில், இதற்காக யாரும் போராடவில்லை என்று உரத்து குரல் கொடுப்பதுடன், இதன் மூலம் மூடிமறைத்தபடி வரும் சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்துகின்றோம். மக்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சி, புலிகளின் அழிவுடன், அதுவும் 'மக்கள்" என்ற சொல்லாடல் மூலம் புதிய வேசம் போடத் தொடங்குகின்றது. புரட்சிகர தத்துவ போராட்டம் மேலும் நுட்பமாகி, தத்துவார்த்த துறைக்குள் இதை ஆழமாக இட்டுச்செல்லுகின்றது. புலிகளின் வீழ்ச்சியின் பின்பும், மீண்டும் எதிர்ப்புரட்சிகர சக்திகளின் கையில்தான் மக்கள் அடிமைப்பட்டு கிடப்பார்கள் என்பதே எதார்த்தம். மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்படும் எதார்த்தம், மக்களுக்காக போராடுவதை வரலாறு தொடர்ந்து கோரி நிற்கின்றது. அதில் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தை கருவறுக்க கோருகின்றது.

 

பி.இரயாகரன்
14.03.2009

 

Last Updated on Saturday, 14 March 2009 20:47