Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது

புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது

  • PDF

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று,  பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

 

மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அரசியல் பேசியவர்கள் நிலைப்பாடு  மாறிவந்தது. அன்று நாம் கொடுத்த அரசியல் அர்த்தத்தையே அது இழந்துள்ளது. இனி நாம் அவர்களை புலியெதிர்ப்பு அணி என்று கவுரமாக கூட அழைக்க முடியாது. மாறாக புலியெதிர்ப்பு பேசும் மாமாக்கள் என்று அழைத்தலே பொருந்தும்.

 

நாம் புலியெதிர்ப்பை வரையறுத்த அரசியல் அடிப்படை என்ன? அவர்கள் புலியை முதலாம் எதிரியாகவும், அரசை இரண்டாம் எதிரியாகவும் கூறி, இரண்டையும் தம் எதிரியாகவே காட்டினர். புலியை ஒழித்தலே முதன்மையானது என்றனர். இதனால் அவர்களை புலியெதிர்ப்பு என்ற அடையாளத்தின் ஊடாக, மக்களின் பிரதான எதிரியை இரண்டாம் எதிரியாக்கும் கோணங்கித் தனத்ததையே இனம் காட்டிவந்தோம். இப்படி அவர்கள் முன்வைத்த புலியெதிர்ப்பு என்ற அரசியலை, அம்பலப்படுத்தி வந்தோம்.

 

இவர்களின் மக்கள் விரோத அரசியல் வளர்ச்சியில், இவர்கள் அரசு தம் இரண்டாம் எதிரி என்ற தம் நிலைப்பாட்டை இன்று கைவிட்டுவிட்டனர். இந்த புலியெதிர்ப்பு, படிப்படியாக புலிமட்டும் தான் எதிரி என்கின்றது. அரசை தமிழ்மக்களின் நண்பனாக காட்டுகின்றனர். அரசு தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்டுத்தரும் என்கின்றனர். தாம் இதற்காக மக்களைச் சார்ந்து போராட முனைவதாக காட்டிய அனைத்து பாசங்குத்தனத்தையும், இன்று கைவிட்டுவிட்டனர். இப்படி இவர்கள் புலியெதிர்ப்பு மாமா வேலையைத் தான், இன்று அரசுக்காக  செய்கின்றனர். உண்மையில் அரசின் எடுபிடிகளாக உள்ளனர். முற்றுமுழுதாக அரசை நம்பி செயல்படுகின்றர்.

 

இப்படி இவர்கள் செய்யும் மாமா அரசியலை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த, புலியெதிர்ப்பு மாமாக்கள் என்று இவர்களை இனி கூறுவதுதான் பொருந்தும். இதன் மூலம் இவர்களின் மாமா வேலையை அம்பலம் செய்யவேண்டும்.

 

இந்த புலியெதிர்ப்பு மாமாக்கள், இலங்கை அரசு செய்கின்ற அனைத்து இனஅழிப்பையும் புலியின் பெயரில் ஆதரிக்கின்றனர், நியாயப்படுத்துகின்றனர். இவர்களின் மையக் கோசமான 'ஜனநாயகத்தை" சிங்களப் பேரினவாதம் பெற்றுத்தரும் என்று கூறத்தொடங்கிவிட்டனர்.  துரோகக் குழுக்களாகவே அரசின் தயவில் நக்கும் குழுக்களை மிஞ்சும் அளவுக்கு, இந்த மாமாக்கள் கடை விரித்துள்ளனர். அரசை அம்பலம் செய்யாத வண்ணம் அவர்களை பாதுகாத்து, தமிழ்மக்களை தம் மாமா வேலையூடாக விபச்சாரம் செய்ய அழைக்கின்றனர்.

 

இவர்கள் முன்பு புலியிடம் கோரியது, அரசுக்கு எதிராக தாம் போராடும் ஜனநாயகத்ததையே. இப்படி போராட முடியாத வண்ணம் போராடும் ஜனநாயகத்தை புலிகள் மக்களுக்கு மறுத்தனர். இந்த ஜனநாயகத்தைக் கோரியவர்கள், இன்று அரசின் பின் சென்றுவிட்டனர். அரசு தருவதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இப்படி இன்று இவர்கள் மக்களுக்காக போராடும் ஜனநாயகத்தை புலிகளிடம் கோரவில்லை. சிங்கள பேரினவாதம் புலியின் பெயரில் செய்யும் இனவழிப்பை, மக்களை அடிமை கொள்வதையுமே, ஜனநாயகம் என்கின்றனர்.

 

இப்படி தமிழ் மக்களை விபச்சாரம் செய்ய அழைக்கும் இந்த புலியெதிர்ப்பு மாமாக்கள், இன்று அயோக்கியர்களாக உள்ளனர். இவர்களுடன் கூடி கூத்தாடிய பச்சோந்திகள் சிலர், இன்று வேஷம் போட்டு புலம்புகின்றனர். கடந்த 20 வருடமாக, புலிக்கு மாற்று என்று கூறிக் கொண்ட சஞ்சிகைகள், இலக்கியங்கள், ஜனநாயகங்கள் பேசி போது, கூடி கும்மியடித்தவர்கள், இன்று இதன் மேல் எந்த சுயவிமர்சனமுமின்றி கருத்துரைக்கின்றனர். சுயவிமர்சனமற்ற அனைத்தும் பழைய சொதப்பல்கள் தான்.

 

அன்று இந்த போக்குக்கு எதிராக நாம் மட்டும் தனித்துப் போராடிய போது, இவர்கள் செய்தது என்ன? கூடி கும்மியடித்து கல்வெட்டு, முதுகுக்கு பின்னால் ஆயிரம் அவதூறுகள் என்று பலர் பலவித அரசியல் விபச்சாரம் செய்தவர்கள். இன்று எந்த சுயவிமர்சனமுமின்றி, எமது சரியான நிலையை ஒட்டி தம்மைத் தாம் பூசி மெழுகுவதுதான், இவர்களின் இன்றைய கும்மியடிப்பாகும்;. தம்மை சுயவிமர்சனம் செய்யாத, அதே இழிவரசியல்.

 

ஜனநாயகம், இலக்கியம், பெண்ணியம், தலித்தியம் என்று இனி எந்த வேஷத்தையும் போட்டு யாரும் ஆடமுடியாது. மாறாக புலியெதிர்ப்பு மாமாக்களை அம்பலப்படுத்தியும், தம்மை சுயவிமர்சனம் செய்தும் போராட முன்வராத அனைத்தும், மாமா வேலைக்கு துணை போவதுதான். வரலாறு இதை இனம்காணாது, கடந்து செல்லாது.    

 

பி.இரயாகரன்
27.02.2009

 

Last Updated on Friday, 27 February 2009 20:08