உழைத்து உழைத்து
மாடாய் போனாய்
வளைத்து வளைத்து
வறுமையின் வாயில்- போதும்
உழைப்பதை நிறுத்து
மூட்டை தூக்கி
முதுகில் கூணல்
கொக்கி மாட்டி
கிழிந்த சட்டை -போதும்
உழைப்பதை நிறுத்து
மெலிந்து சிறுத்த
கால்கள் கெஞ்சும்
கொஞ்ச நேர ஓய்வை
கருணை இல்ல
மனங்கள் சொல்லும்
முதலில் முடி வேலையை- போதும்
உழைப்பதை நிறுத்து
இரவு முழுவதும்
வேலை செய்வாய்
விடிந்ததும் கடன்
வாசலில் நிற்கும் -போதும்
உழைப்பதை நிறுத்து தோழனே
கழுத்து நோவை
காக்கைகள் கேளா
வயித்து பசியை
வர்க்கம் கேளா -போதும்
உழைப்பதை நிறுத்து தோழா
பருத்த வயிறும்
பகட்டில் உடையும்
நகையும் நட்டும்
நழுவும் புடவையும்
உனக்கில்லையெனில் -போதும்
உழைப்பதை நிறுத்து
கொழுத்தும் வெயிலில்
கூலி வேலை கிடைத்தும் நாளை
கிடைப்பது எளிதா -போதும்
உழைப்பதை நிறுத்து
வேலை வேண்டும்
கூலி வேண்டும்
சோறு வேண்டும்
கேட்டால் வராது - போதும்
உழைப்பதை நிறுத்து
--