Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இன்றைய இலங்கையின் இந்த அரசியல்

  • PDF

இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா?

ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில்

கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் விய+கத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது.இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தரணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.இதுரைத் தமிழ்த் தேசமெங்கும் பாரிய படைகளை நகர்த்தித் தமிழ்பேசும் மக்களைக் கொன்று, அவர்களது வாழ்வாதாரங்களைத் திட்டமிட்ட அழித்துள்ளது.இதற்கு இந்தியாவினது முழு ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது.நமது தரப்போ போதாக் குறைக்கு நமது மக்களையே அடிமைப்படுத்தித் துரோகி சொல்லியொடுக்கிச் சிங்களப்பாசிசத்தை எதிர்கொள்ள முடியாதபடி நமது மக்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தொடரப்போகும் யுத்தத்தை நமது மக்கள் எப்படி எதிர்கொள்வது?எங்கள் மக்களின் தார்மீகப்பலம்-ஒத்துழைப்பு இன்றி போரில் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வென்றிட முடியுமா?இருந்தும் நாம் மேலே செல்வோம்.


இப்போது,புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முறிப்பில் எண்ணப்பட்டுவரும் யுத்தமானது வெறும் வெற்றியை நோக்காகக் கொண்டதல்ல.அது தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் நாசமாக்கி,மக்களின் இருப்பை அழித்து நாடோடிகளாக்கும் தந்திரத்தைக் கொண்டிருக்கிறது.நிலைத்த காலூன்றலைத் தடுத்துப் புலிகளின் பொருள் ஆதாரத்தை-மக்களின் தார்மீக ஆதரவை அழிப்பதற்கானதாகவும் அதையே தமிழ்ப் பிரதேசமெங்கும் பரவலாக்கி மக்களின் அகதியக் கோலத்தில் அற்ப சலுகைகளை வழங்கித் "தேசத்தை நிர்மாணிக்கும் அபிலாசையின் விளைவு இது" எனும் பாடாத்தைப் புகட்டும் ஒற்றைத் தேசக் கயமைத் தந்திரம் இதுவாகும்.


எங்கு திரும்பினாலும் புலிகளுக்கெதிரான கருத்துக்களை மிக இலகுவாக உருவாக்கித் தள்ளிய இந்திய-இலங்கை அரசானதுகள் இன்றைய யுத்த முனைப்புக்குள் ஊடுருவியுள்ள தமது உளவுப் படைகளுடாகத் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே அழித்துவிடுவதற்காகப் புலிகளின் மேல்மட்டத் தலைமையை அழிப்பதற்கான விய+கத்தில் பாரிய யுத்தத்தைச் செய்வதில் பற்பல திட்டங்களை இந்திய ஆலோசனைப்படி நடைமுறைப்படுத்தக் காத்திருக்கிறது.
இந்தியாவின் நெறியாண்மையோடு இலங்கை இராணுவங்கள் போர் முனைக்கு நகர்த்தப்படும் இந்த வேளையில் நடைபெறப் போகின்ற சண்டையானது புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமானதல்ல.மாறாகப் புலிகளைச் சாடித் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிரானதான இந்த யுத்தத்தில் இந்திய-இலங்கைக் கூட்டு இராணுவ வலிமையை-யுத்த தந்திரத்தைத் தமிழ் பேசும் மக்களின் யுத்த முனை சந்திக்கப் போகிறது.இங்கே,புலிகளின் தலைமைத்துவத்தைத் துவசம் செய்துவிட முடியுமென்ற பேரவா இலங்கைப் பாசிச அரசுக்குமட்டுமல்ல இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் இருக்கிறது.


இவர்களின் எதிர்பார்ப்பானது தனியே திரு.பிரபாகரனை இலக்காகக் கொண்டதல்ல.மாறாகத் தமிழ் பேசும் மக்களின் குழந்தைகளான புலிகளின் அதியுயர் மேல்மட்டத் தளபதிகளையே அவர்கள் இலக்கு வைக்கின்றார்கள்.பிரபாகரனை அழிப்பதற்கு இலகுவானது அவரது அரண்களைச் சிதைப்பதே.அத்தகைய அரண்கள் பிரபாகரனுக்குமட்டுமல்ல அரண்கள் கூடவே தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும்,அவர்களது பாரம்பரிய மண்ணுக்குமே புலிகளின் போராளிகளும்,அவர்களை வழிநடத்தும் மேல்மட்டத் தளபதிகளும் அரண்களாக இருக்கிறார்கள்.நாம் தொடர்ந்து புலிகளை மக்களிடமிருந்து பிரித்து அவர்களது இயக்க நலனை விவாதித்து வந்திருக்கிறோம்.இது சரியானதும்கூட.எனினும்,இன்றைய தரணம் ஆபத்தானது!அது இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன்(இராணுவ நுட்பம்,மற்றும் புலனாய்வு,தகவல்-தரவுகள்,செய்மதிப்பட வரைவுகள்,தளபாடங்கள்,சித்தாந்தம்,மற்றும் போர் நிலை ஆலோசனை,யுத்த ஜந்திரத்துக்கான அனைத்து மூலவளங்கல்,வழங்கல்கள் என்றும்,இன்னும் இத்தியாதிகள்)அந்நிய முற்றுகையாகத் தொடரும் இந்தத் தொடரப் போகும் யுத்தத்தில் புலிகள் தோற்பதை நாம் அங்கீகரிக்க முடியாது.எனவே,தொடரும் யுத்தம் முழுத் தமிழ் மக்களுக்கும் எதிரானதாக நாம் முன் எச்சரிக்கிறோம்.இது எம்மைப் ப+ண்டோடு அழித்து,வெறும் அநாதைகளாக்கும் முயற்சியாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.இங்கே, புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறொரு நிபந்தனை எம்மிடம் இல்லை!ஆனால், புலிகள் மக்களைச் சார்ந்து அவர்களின் புரட்சிப்படையாக மாறாதவரை அவர்களால்-மக்களால் இத்தகைய யுத்தத்தை வென்றுவிட முடியாது.

 

 

இலங்கையில் இனங்களுக்கிடையால முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இவ்வகை நடத்தையால்-யுத்தத்தால் ஒருபோதும் நியாயமான தீர்வை எவரும் எட்ட முடியாது.ஆனால்,மகிந்த போன்ற இந்தியக் கைக்கூலி அரசியல் தலைவனால் இது தமிழ்மக்களுக்குள் நிலவும் பாரிய முரண்பாட்டைத் தீர்க்கும் முதற்படியாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.புலிகளே தமிழ் பேசும் மக்களின் முரண்பாட்டைத் தீர்க்கத் தடையாக இருக்கும் பயங்கரவாதிகளென்றும்,புலிகளைப் ப+ண்டோடு அழித்துவிட்டால் தமிழ் பேசும் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து காத்து,அவர்களுக்கான தீர்வை முன்வைத்து நிம்மதியாகக் கௌரவமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிட முடியுமென்றும் பரப்புரைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.தொடரப்போகும் யுத்தத்திற்குப் பல முகங்கள் இருக்கின்றன!இதை இனம் காணும் நிலையில் நாம் எதிர்கொள்வது சிங்களப் பாசிச இராணுவத்தை அல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது.இலங்கை இராணுவத்தின் பின்னே எம்மைக் கருவறுக்க முனையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏவற்படைகளின் ஒத்துழைப்பு இருக்கிறது.இது, நமது அனைத்து வளங்களையும் அழித்து நம்மை முடவர்களாக்க முனைகிறது.அதிலொரு வளம் புலிகளின் போராளிகளாகும்!


இதை முறியடிக்கும் ஆற்றலைப் புலிகள் கொண்டிருப்பதற்கு அவர்கள் முழுக்கமுழுக்க மக்களைச் சார்ந்து,அந்த மக்களின் அனைத்துப் பங்களிப்பையும் பெற்று மக்களின்மீது எந்தக் காட்டுமிராண்டித் தனத்தையும் கட்டவிழ்த்துவிடாது அவர்களுக்காகவே அவர்கள் மூலம் போராடினால் இந்தச் சதி இராணுவத் தந்திரப் போரை வென்றெடுக்க முடியும்.அங்கே,மகிந்தாவின் இராணுவத்தை மட்டுமல்மல்ல இந்திய இராணுவத்தின்-இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் தமிழ்பேசும் மக்கள் வெல்வார்கள்!புலிகளின் யுத்த தந்திரமானது தமிழ் பேசும் மக்களின் உருமைகளுக்கானதாக இருக்கும்போது அது தோற்பதற்கான சூழ்நிலையொன்று உருவாகமுடியாது!ஏனெனில், நமக்கு மக்கள் போராட்டப்படிப்பனைகள் நிறைய உண்டு.நமது மக்களின் உயிர்-உள ஆதரவானது தமது எதிர்காலத்தை நோக்கியதானது.நாம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிற்கிறோம்.நமது மக்களை ஒடுக்குபவர்கள் இலங்கை-இந்திய உலக அரசுகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஒடுக்கு முறையை நமது மக்கள் தடுத்து அந்த ஒடுக்கு முறையாளர்களை வியாட்நாம் பாணியில் தோற்கடிப்பார்கள்.புலிகள் தமது ஆதாரத்தையே அடக்கி ஒடுக்கியபடி அந்நிய இராணுவத்தைச் சந்தித்தால் நிச்சியம் தோல்வியடைவார்கள்!எனவே,எங்கள் மக்களின்மீது ஒடுக்குமுறையைச் செய்யாத மக்கள் படையணியாகப் புலிகள்மாற்றப்பட்டுப் புதிய பாணியிலான முறைமைகளை இளைய தலைமுறையின் அறிவுகொண்டு பெற்று எமது மக்களை விடுதலை செய்தாகவேண்டும்.

இன்றைய இலங்கையின் இந்த அரசியல்-இராணுவ முன்னெடுப்பானது இன்னொரு "இஸ்ரேல்-பாலஸ்தீனம்"மெல்ல உருவாவதைக் காட்டிவருகிறது. மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள்! சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய மனமானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!இலங்கையின் மரபுரீதியான ஐதீகங்கள் மாற்றினத்தை சக தோழமையோடு பார்க்க மறுக்கும் ஒவ்வொரு தரணமும் பெருந்தேசியத்தின் வெற்றிக்குக் கனவு காண்கிறது!இந்தக் கனவின் பலானாக இரணுவத்தின் தேச பக்தியானது அதைக் கூலிப்படை ஸ்த்தானத்திலிருந்து விடபட வைத்துத் தமிழர்கள்மேல் தினமும் ஏவிவிடப்படுகிறது!இத்தகைய படையணியின் தளபதிகள் தங்கள் பதவிக்காலத்துக்குள்ளேயே தமிழரை அடக்கி ஒடுக்கிவிட முனைகிறார்கள்.இதன் பின்னே இருக்கும் திமிரானது இந்திய வழிகாட்டலின் திடமான உறுதியிலிருந்தெழுகிறது.அது,சிங்கள இராணுவத்தை மேன்மேலும் உற்சாகப்படுத்தும் மனோ தந்திரத்தையும் கூடவே கொண்டியங்குகிறது.நமது போராளிகளின் திடம் தினமும் தமது பெற்றோருக்கு நிகழும் சிங்கள ஒடுக்குமுறையின் நேரடி அநுபவமே.அது தமக்கானவொரு பாதுகாப்பான நிலப்பரப்புக்கான வாழ்வாதாரப் போரோடு புடம்போடப்பட்டிருக்கிறது.ஆனால்,தவறான வழிகாட்டல்கள் இப்போது அவர்களிடம் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருகிறதென்பதை எவரும் மறுத்தொதுக்கப்படாது!எமது மக்களின் பங்களிப்பின்றி எந்த யுத்தமும் எமக்குச் சாதகமாகாது!ஒவ்வொரு நகர்விலும் எமது மக்களின் தார்மீக ஆதரவும்,கூட்டுழைப்பும் அவசியம்.இதைத் தவிர்த்து "அவர்கள் யுத்தத்தைக்கண்டு அகதியாகக் கோவில்கள்-பாடசாலை நோக்கி ஓடும்" போராட்டமாகச் சூழல் தொடர்ந்தால் தொடரப்போகும் யுத்தம் இலங்கை-இந்திய கூட்டு இராணுவத்துக்கே சாதகமாக இருக்கும்.மக்கள்தாம் இத்தகைய சூழலை வென்றாக வேண்டும்.இத்தகைய யுத்தம் எதற்கானதென்பதை அவர்கள் உணர்வுப+ர்வமாக ஏற்று நடாத்தப்படவேண்டும்.அங்கே, நமக்கான தேசம் எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கானது முன்நிபந்தகைள் இருக்கிறது. இவை மக்களுக்குத் தெளிவாகப் புரியப்பட வேண்டும்.இன்றைய காலங்கள் நமக்கு-நமது தேச உருவாக்க அபிலாசைக்குச் சாதகமாக இருக்கிறது.நோர்வே போன்ற அரசின் பல் தேசியக் கம்பனிகள் நம்மைப் பயன்படுத்தி வருவதற்கான சூழல் இருக்கிறது.இது நம்மை மீளவும் இலங்கையிடமிருந்து இன்னொரு அந்நிய சக்தியிடம் அடிமையாக்குவதாக இருக்கப்படாது.

இந்த நிலையுள் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அது பற்பல விய+கத்துக்கூடாக எமது மக்களை ஒடுக்கிவருகிறது.என்றபோதும், இத்தகைய இன அழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது, தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிற விய+கத்தைக் கடந்த காலத்திலிருந்து நாம் படிப்பினையாகக் கொள்வதும் அவசியம்.


இது ஒருவகையில் வளவுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்துபல யுத்தம் மற்றும் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.இத்தகைய தந்திரங்களுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் விய+கமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.


இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது வலிந்த கூட்டு யுத்த ஒத்துழைப்புடன் செய்யப்படும் யுத்தத்துக்கூடாக தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.இந்த யுத்தம் இத்தகைய நிலைமைகளின் வெளிப்பாடாக இருக்கிறது.அத்துமீறிய இராணுவ அழுத்தம் மகிந்தாவின் வடிவில் இலங்கையில் ஆட்சி நடாத்துகிறது.இத்தகைய யுத்தத்தை மகிந்தா மறுத்தொதுக்கும் பட்சத்தில் அவர் ஏதாவதுதொரு இராணுவக் குண்டுக்குப் பலியாகலாம்.எனவே,,இலங்கையில் யுத்தம் தொடரப் போகிறது.அது எம்மை அழித்து இலங்கையில் இராணுவச் சர்வதிகாரமான மாற்றத்தைக் கோரியபடி.

இதில் தமிழ்த் தரப்பு விவேகமாகக் காரியம் ஆற்றுமா?


ப.வி.ஸ்ரீரங்கன்
13.01.2008

Last Updated on Thursday, 22 January 2009 19:54