Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வேறுபாடுகளை நியாயப்படுத்துவதே அழகியல்

  • PDF

கடந்த அம்மா இதழ்மீதான விமர்சனத்தில் அழகியல் தொடர்பான சிறுகறிப்பொன்றினை எழுதியிருந்தேன். இதை விரிவாக விவாதிக்கம் நோக்கிலும், ஒரு விவாதமாக வளர்க்கும்நோக்கிலும்  அழகியல் தொடர்பான மாயை - அதன் வர்க்கச்சார்பு தொடர்பாக எழுதமுனைகிறேன்.

 

 

இன்று மனிதநேயத்தை மீறிய சமுதாயத்தில் இயங்கும்தன்மையைமீறிய அனைத்தும் அழகியலாக நியாயப்படுத்தப்படுகின்றது. இந்த அழகியல் என்பது எது?

 

மனிதனுக்கு மனிதன், பொருளுக்குப்பொருள், சாதிக்குச்சாதி, மதத்துக்கு மதம், நிறத்துக்கு நிறம், இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு, சூழலுக்குச்சூழல், இயற்கைக்கு இயற்கை, சேர்க்கைக்குச் சேர்க்கை, நகரத்து நகரம், கிராமத்துக்குக் கிராமம் என உலகில் உள்ள எல்லாவற்றிலும் காணப்படும் இடைவெளிவேறுபாட்டையே அழகியலாக இனம்காட்டி, அதன் இருப்பு நியாயப்படுத்தப்படுகின்றது.

 

ஒன்றுக்குமேற்பட்ட ஒரே பொருட்களிற்கிடையில் இருக்கும் வேறுபாட்டை அழகியலாக இனம்காட்டி அதன் இருப்பு நியாயப்படுத்தப்படுகின்றது.

 

இந்நிலை ஒழிக்கப்படுவதன்மூலம் சமுதாய இடைவெளி அகற்றப்படுவதுடன் போலிமாயை அழகியலும் அழிந்துபோகும். 'இனவேறுபாடுகள், தனிப்பட்ட மக்கள் குழுக்களுக்கு உரிய வகை வேறுபாடுகள் கூட வரலாற்று வளற்சிப்போக்கில் நீக்கப்படவேண்டும், நீக்கப்படமுடியும்" என்கிறார் மார்க்ஸ்.

 

ஆம்! உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. எல்லாம் எப்போதும் மாறுகின்றது வேறுபாடு இடைவெளிமீதான வேறுபாடுகூட மாறித்தான் ஆகும். மனிதனை ஒரேமாதிரி உருவாக்கமுடியும் என்பத அண்மைய விஞ்ஞான முடிவு.


அழகியல் என்ற பெயரில் உள்ளமனிதவிரோதப் போக்கு அடிப்படையில் உயர்வர்க்கம் சார்ந்தது.

 

மனிதனின் ஆழமான உணர்வை, இரக்கத்தை, சுதந்திரத்தை, நியாயத்தை, வீரத்தை, போராடும் தன்மையை, அறிதல்வேட்கையை, பயன்பாட்டின் இலகுதன்மையை, இயற்கைபாதுகாப்பை, ஒழுங்கை, நேர்த்தியை, கலையுணர்வை, உள்ளடக்கத்தை, பயன்பாட்டின் வடிவத்தை....எனப் பரவலாக ஒவ்வொன்றிலும் நாம் அழகியலுக்கு பதில்தேடவேண்டும்.


மனித உடலியல் வடிவத்தை எடுப்பின் அவை புவியியல், வர்க்கம், சாதி, இனம், நிறம், மதம், மரபு என பலவற்றுடன் தொடர்புடையது. இதை ஆழமாக காணமறுத்த புறநிலைத்தோற்றம் அழகியல் என்று போலியான  மனிதனை விரோதிக்கின்றநோக்கோடு தொடர்புடைய அடிப்படையாகும்.

 

ஒருபெண்ணையோ, ஆணையோ நாம் எடுத்துக்கொள்ளின், அவரவர் சமூகம்பற்றி என்னநோக்கு கொண்டுள்ளனர் என்றுகாணவேண்டுமே தவிர, தவிர்த்து தலைமுடி, கண், மூக்கு, முகம், மார்பு, இடை, கால், விரல் என காண்பதும் அதை ஒட்டி அழகியல் என வகுப்பது அடிப்படைப் புறத்தோற்றம் சார்ந்த பொய்மையின் படிவங்களாகும்.

 

இவை சூழலியல், மதம், சாதி, இனம், நிறம், என அனைத்துடனும் மாறியகாரணியே ஒழிய வேறொன்றுமல்ல. இது மனித இன தோற்றத்தின் தொடக்கப்புள்ளியில் ஒன்றாக இருந்ததும், பின்னால் மனிதனின் நீண்டபோராட்டத்துதடன் நகர்ந்ததும் சூழலியலுடன் மாறுபட்டவையே தவிர இயற்கையாதுஅல்ல.

 

ஒரு நான்கு வயதை அண்மித்த பிள்ளைஒன்றிடம், மனிததோலில் கறுப்பா, வெள்ளையா அழகானது எனக் கேட்டுப்பார்ப்பின், வெள்ளை அழகானது என்றே பதில்வரும். இது சமூகம்பற்றிய பொதுவான கருத்துநோக்காக உருவாக்கப்பட்டதேஒழிய இயற்கையானது அல்ல.


ஒரு கறுப்பு நிறக்குழந்தைகூட  வெள்ளையே அழகானது எனக்கூறும் அழகியல் வெள்ளையின் வர்க்கஆதிக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது.

Last Updated on Friday, 18 April 2008 18:10