Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

  • PDF

ஐனநாயகம், சுதந்திரமும் மூலதனத்துக்கே ஒழிய மக்களுக்கல்ல என்பதும், அதன் போலித்தனமும், இன்று ஐரோப்பாவின் வீதிகளில் இழுத்து வைத்து நாறடிக்கப்படுகின்றது.

மூலதனத்துக்கு எதிராக கிறிஸ்சில் எழுந்துள்ள போராட்டம், ஐரோப்பா எங்கும் அதை கற்றுக்கொடுக்கின்றது. மூலதனத்தின் அமைதியான உலகம் தளுவிய சூறையாடல், இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா எங்கும் ஓன்றன் பின் ஒன்றாக, வர்க்க எழுச்சிகளை உருவாக்கி வருகின்றது.

 

ஆம் மீண்டும் கம்யூனிசம். மூலதனம் யாரை எல்லாம் தன் மண்ணில் இருந்து ஓழித்துக்கட்டி விட்டதாக கொக்கரித்தோ, அவர்களின் மடியில் இருந்தே, அந்த மண்ணில் புரட்சிக்கான விதைகள் ஊன்றப்படுகின்றது.

 

கிறிஸ்சில் மீளவும் எழுந்துள்ள வர்க்கப்போராட்டத்தை 'சுதந்திரமான ஊடகங்கள்" இருட்டடிப்பு செய்ய, அதையும் மீறி ஐரோப்பாவின் ஓவ்வொரு தலைநகரங்களிலும் அதற்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்து வருகின்றது.

 

பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றது. பன்னாட்டு கடைகளின் உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு பகிரப்படுகின்றது. அசையா சொத்துகளும்;, அவர்களின் மூலதனங்கள் அடித்து சேதப்படுத்தப்படுகின்றது அல்லது சூறையாடப்படுகின்றது. இப்படி கிறீஸசின்; சில பகுதிகளின் கட்டுப்பாட்டையே, மூலதனம் இழந்துள்ளது. அதன் சொத்துகள் மக்களால் அழிக்கப்படுகின்றது. 

 

கிறிஸ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் நடைபெறும் போராட்டங்கள், வேகமாக வர்க்க உணர்வை பெறும் படிப்பினைகளாக மட்டுமின்றி, உலகம் தளுவிய ஒன்றாக மாறி வருகின்றது.

 

முதலில் ஐரோப்பாவிலேயே, இது வர்க்கக் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஐரோப்பாவில் பெரிய நகரங்கள்pல் இதற்கு ஆதரவான போராட்டங்களையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. கம்யூனிச போலிகளை கடந்து, கம்ய+னிசம் மீண்டும் உயிர்ப்புடன் வர்க்க போராட்டத்தை நோக்கி நகர்கின்றது. மீண்டும் செங்கொடிகள், வர்க்க உணர்வுடன்  ஐரோப்பா வீதிகளில் அணிவகுக்கத் தொடங்கியுள்ளது.

 

நம்பமுடியாத வேகத்தில் சமூகம் பற்றிய அரிய படிப்பினைகள், வாழ்வின் மீதான தெளிவை, என்றுமில்லா வீச்சில் சமூகத்தை ஊடுருவிப் பாய்கின்றது.

 

இன்றைய உலக பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து வரவுள்ள பொருளாதார சுனாமிகளும், கடந்தகால அமைதியை அமைதியின்மையாக்கியுள்ளது. பெரும் மூலதனத்துக்கு, மக்களி;ன் வரிப்பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசுகளின் செயல்கள், மக்களை அரசுக்கு எதிராக விழிப்புறவைக்கின்றது.

 

மக்களின் வறுமையை போக்கவும், மக்கள் நலன் சார்ந்த தேவைகளுக்கு பணம் இல்லை என்று மறுத்த இந்த அரசுகள் தான், இன்று பல பத்தாயிரம் கோடி பணத்தை பெரும் நிறுவனத்துக்கு அள்ளிக்கொடுக்கின்றது. முன்னாள் கொள்ளைக்காரர்கள், மீண்டும் கொள்ளையடிக்க எற்பாடு செய்யும் அரசுகளின் இழிசெயல்களை, மக்கள் இனம் காணத் தொடங்கியுள்ளனர்.

 

பெரும் மூலதனம் சூறையாடியே உருவாக்கியுள்ள பொருளாதார சுனாமியை, அமைதியான வழியில் மக்கள் எதிர்கொள்ளமாட்டார்கள் என்பதை கிறிஸ் உதாரணமாகியுள்ளது. அவை கொந்தளிப்பான வர்க்கப் போராட்டங்களாக வெடித்துக் கிளம்பும் என்பதை, கிறிஸ்சும் அதற்கு ஆதரவாக ஐரோப்பாவில் நடக்கும் போராட்டங்களும் எடுத்துக் காட்டுகின்றது.

 

மூலதனம் மெய்சிலிர்க்க உச்சரித்து வந்த மந்திரங்களான ஜனநாயகம் சுதந்திரம் என்பதை, அவர்களே மறுக்கும் கட்டத்தில் உலக மூலதனம் பாசிசத்தை நோக்கி நகருகின்றது.

 

இதை எதிர்கொள்ளும் திறன் மக்களுக்கு உண்டு. அதையே கிறிஸ் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. சிவப்புகொடிகளை அசைத்தவண்ணம், இதை தலைமைதாங்கும் திறன் கம்யூனிசத்துக்கே உண்டு என்பதை, அந்த மக்களின் சொந்தத் தெரிவு எடுத்துக் காட்டுகின்றது. ஆம், மக்கள் கம்யூனிஸ்டுகளாகின்றனர். மூலதனம் அவர்களை கம்யூனிஸ்டாக்குகின்றது. 

 

வர்க்கப் புரட்சியின்றி மக்கள் மக்களாக வாழமுடியாது என்பதை உணர்ந்;து வரும் காலத்தில்,  அதை உணர்த்தும் காலமும் இது தான். இது தான் ஐரோப்பாவின் இன்றைய காலநிலை. மக்கள் கடும் குளிரையும் புரட்சிகர உணர்வால் எதிர்கொண்டு, போராட வீதிகளில் குவிகின்றனர். புரட்சிகர செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

கம்யூனிஸ்ட்டுகள் மறுபுறத்தில் அனார்க்கிஸ்ட்டுகள் என்று இரு நேரெதிர் கோட்பாட்டுத் தளத்தில் இந்தப் போராட்டம் தன்னை வெளிப்படுத்தியுள்ள போதும், ஒழுங்குபடுத்தப்பட்ட கம்யூனிசப் புரட்சி நடைமுறை போராட்ட வழயில் வெற்றிபெறுவதை, மனித வரலாற்றில் இனி யாராலும் தடுக்க முடியாது.

 

மூலதனத்தின் ஆட்சியை நிலைநிறுத்த பாசிச ஆட்சியை அல்லது இராணுவ ஆட்சியை மூலதனம் தெரிந்தெடுத்தாலும், ஐரோப்பாவில் எழுந்துள்ள தீப்பொறி காட்டுத் தீயாகிவிட்டது. இனி இதை யாரும் அணைக்க முடியாது. பொருளாதார சுனாமியையே, அது எதிர் கொண்டு நிற்கும்.

 

பி.இராயகரன்
14.12.2008   

 

Last Updated on Sunday, 14 December 2008 12:10