Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வாசகர்களும் நாங்களும்

  • PDF

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். மார்க்சிசமானது உழைக்கும் மக்களின் தத்துவமானது வென்றே தீரும். அதை நாம் உறுதியாக நம்புவோம். ஏனெனில் அது விஞ்ஞான பூர்வமானது. இன்றைய உலகின் ஆக முன்னேறிய தத்துவம் அதுவேயாகும்.

 

சி. கணேசமூர்த்தி -ஜெர்மனி

 

நாட்டுச் சூழலிருந்து அந்நியப்பட்டு இருந்து கொண்டு கற்பனையில் போராட்டம் நடத்துவதா என்று தான் தோன்றுகின்றது. அந்தச் சூழலில் இப்போதும் இருந்து கொண்டு இது பற்றி சிந்திப்பவர்கள் ஏதாவது யோசனைகள் சொன்னால் இதைப்பற்றி நாங்களும் சிந்திக்கலாம். நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கும். எல்லோரும் புத்தகங்களில் விடுதலைப்புலிகளைக் கண்டிக்கின்றார்கள். இதற்கெதிராக போராடவேண்டும், மக்களை விழித்தெழுங்கள் என்று எல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எப்படி நாங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அங்கு நடைமுறையில் என்ன நடக்கின்றது, கேட்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர்களே கோசங்களை வைக்கின்றார்கள். எனக்கென்றால் இவையெல்லாம் நாங்கள் போராட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை ஏதோ செய்கிறோம் என்று எமது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்வதற்காக செய்வது போல் இருக்கிறது.

 

இங்கு இப்போது ஒரு சிலரை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலையை உண்மையான விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் நேர்மையானவர்கள். ஆனால் இவர்கள் த-வி-பு- ஆதரவாக இருக்கிறார்கள். சாதாரணமாக கதைக்கும் போது அவர்கள் செய்வது சரியா? ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் தொடங்கிய போராட்டத்தை கைவிடுவதா? மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் ஏதோ செய்கிறார்கள் உதவிசெய்கிறோம் என்று விட்டு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்.(தற்போதைய நிலைமைக்கு) அதாவது த-வி-பு விட்டால் அடுத்து( )என்ன என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்ன மாதிரி பதில் சொல்வீர்கள். மேற்குறிப்பிட்ட த-வி-பு- பிழைகளையும் விளங்கிக் கொள்கிறார்கள். பிழை விட்டாலும் அவர்களை விட்டால் வேறு இல்லை தானே என்று கதைப்பார்கள். உங்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

சாந்தி அவுஸ்திரேலியா

 

உங்கள் கேள்விகள் போல் பலர் இக் கேள்வியை எதிர் கொள்ளுகின்றனர். இன்று நாட்டுக்கு வெளியில் வெளிவரும் சஞ்சிகைகளும் அதில் எழுதும் எழுத்தாளர்களும் ஈழப்போராட்டம் தொடர்பாக உண்மையில் அக்கறை கொண்டவர்களா?.... இப்படி எழுதுபவர்கள் நாட்டுக்கு திரும்புவார்களா?.... எனப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். இதில் ஒரு பகுதியினர் இப்படி வெளிவரும் கருத்துக்களை இதை தடுக்கும் நோக்கிலும் இன்னும் ஒரு பகுதியினர் உண்மையான போராட்டத்தின் அக்கறை மீதும் கோருகின்றனர். இன்று வெளிவரும் சஞ்சிகைகள் பல நோக்கங்களில் வெளிவருகின்றன.

 

1) தமது சுயதிருப்திக்காகவும் தமது மேதாவித்தனத்தை காட்டுவதற்காகவும்.

 

2) தமது தோல்வியை மறைக்க தமது அறிவுஜீவித்தனத்தைக் காட்ட புதிய இடது போக்கையும், தாராளவாத போக்கையும், கலைப்புவாதப் போக்கையும், ஒரு வேலைத்திட்டத்தை முன்வைப்பதை எதிர்ப்பவர்களும். உள்ளடங்கிய பிரிவினர்.

 

3) சமூக நோக்கம் கொண்ட எதிர்காலத்தில் போராட்டத்தில் நம்பிக்கையுடையவர்கள்.


என மூன்று வகையான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இது போன்றே இவர்களுக்கு எழுதும் வாசகர்களும் உள்ளனர். இவர்கள் மூன்று வகையான சஞ்சிகைகளிலும் தமது கருத்தை பிரசுரிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் தம்மை தாம் முற்போக்குகள் எனச் சொல்வதிலும் தாம் இடதுபோக்கு கொண்டவர்களாக மார் தட்டி கொள்பவர்கள். எல்லோரும் தமக்கிடையில் விமர்சனத்தை தவிர்ப்பதினூடாக ஜக்கியப்பட்டது போல் நடித்து வாசகர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் பற்றிய மாயைகள் மக்கள் முன் அம்பலப்பட்டு போவதால் (இதை பத்திரிகையாசிரியர்கள்) காப்பாற்ற வேண்டும்.) மக்கள் எல்லோரையும் தவறாகப் பார்ப்பதுடன் நம்பிக்கையையும் இழக்கினறனர். ஒரு வகையில் கருத்து சுதந்திரத்தை பெற்று விட முயலும் இச் சிறு சஞ்சிகைகள் மறுபுறத்தில் மக்களை ஏமாற்றி நம்பிக்கை இழக்க வைத்துப் புலிகளைப் பயன்படுத்தியும் வருகின்றனர். எல்லாக் கருத்துகளுக்கும் ஜனநாயகம், விமர்சனம் எனக் கூறி புலி எதிர்ப்;பாளர்கள் எல்லோரும் ஜக்கிய முன்னணியென கூறிக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற முயலும் இச்சஞ்சிகைகள் எதிர்காலப் போராட்டத்தை சிதைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்று சமூக நோக்கம் கொண்ட பலரின் செயல்பாடுகள் பல்வேறுபட்ட பர்வையைக் கொண்டிருந்த போதிலும் எதிர்காலத்தில் ஜக்கியப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களே. இவர்களின் செயற்பாடு இலங்கைக்கப்பால் இன்று எதைச் சாதிக்க முனைகிறது. எமது மண்ணில் இழந்து போன கருத்துச் சுதந்திரத்தை முடிந்த வரையில் இங்கும், எம் மண்ணுக்கும் எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கை வகிக்க முடியும். சஞ்சிகைகளின் பின்னுள்ள வாசகர்களுக்கு இவர்களால் மட்டுமே சரியானதும், உண்மையானதுமான கருத்தையும் கொண்டு செல்ல முடியும். அதன் ஊடாகவே எதிர்காலப் போராட்டத்திற்கு குறிபிடத்தக்களவு சக்திகளை வெளிநாடுகளில் வழங்கும.; இன்று நாம் செய்ய முனையும் எந்த நடவடிக்கையும் மண்ணில் ஒரு சரியான சக்தி இருந்தால் பாரிய விளைவுகளக் கொடுக்கும். இன்று மண்ணில் ஒரு சரியான சக்தி இல்லை என்ற போதும் இல்லை என்று சொல்லிவிட முடியாத வகையில் சில சக்திகளுமுள்ளனர். அவர்கள் கூட பல கருத்துக்களை வெளியிட முடியாத நிலையில் சமூகநோக்குள்ள சஞ்சிகைகள் எழுத்தாளர்கள் என காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றனர்.

 

எமது எதிர்காலப் போராட்டத்தில், கருத்தில் நம்பிக்கை இருப்பின் அக் கருத்துக்காக, போராட்டத்திற்காக நாம் அங்கு இருந்தாலும் குரல் கொடுக்க முடியும். அவை எதை சாதிக்கின்றது என்பது நாம் சொல்ல வரும் கருத்து சமூகத்தை சென்றடையும் போது மட்டுமே தெரியும். இன்று எம் மண்ணில் பாசிசம் பலரை நாட்டை விட்டு துரத்திய போதும், அவர்களின் நம்பிக்கைகள் சிதைந்து சீரழிந்து விடவில்லை. மாறாக இங்கிருந்து செய்யக்கூடிய வகையில் குரல் கொடுக்கின்றனர். குரல் கொடுக்க வேண்டும். இதன் விளைவாகவே புலிகள் இவர்கள் கருத்துக்களை தடை செய்வதும், தாக்குவதும், மிரட்டுவதுமாக தொடர்கின்றனர். இந் நிகழ்வுகள் தான் இக் கருத்தின் வெற்றியே. இன்று பலர் மிரட்டல்களையும் மீறி புதிதாகக் குரல் கொடுக்க முன் வருவதும், பலர் போராட்டத்தில் நம்பிக்கை பெற்றும் வருகின்றனர். உலகில் நடந்த, நடக்கின்ற பல புரட்சிகளில் பலர் நாட்டுக்கு வெளியிலிருந்து குரல் கொடுத்ததை மறக்க முடியாது. இன்று எம் ஒவ்வொருவரின் கடமையும் எதிர்காலப் போராட்டத்திற்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் எமது செயற்பாட்டை நாம் செய்ய முன்வர வேண்டும்.

 

புலிகள் மீதான விமர்சனம் என்பது புலிகளை பெருமளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாகப் புலிகள் வெளிநாடுகளில் தமது செயற்பாட்டில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இது எம் மண்ணில் அல்ல. வெளிநாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வகையில் பலம் பலவீனத்துடன் இன்று மாற்றுக் கருத்துக்களை கையாள்வதில் நடிக்கின்றனர். சில காலம் வன்முறைக்கூடாக கையாண்டவைகளை இன்று சில தவறுகளை விட்டுள்ளோம் என ஏற்றுக் கொண்டு தமது நிதி சேகரிப்பில் வெற்றி பெறுகின்றனர். கடுமையான விமர்சனங்கள் மக்களைச் சென்றுள்ள நிலையில் புலிகள் மீதான தவறை மக்கள் கேட்க தொடங்கி பணம் கொடுக்க மறுத்த நிலையில் புலிகள் சற்று கீழிறங்கி பிழைப்பை மறுபடியும் தொடங்கியுள்ளனர். புலிகள் சிறு தவறு விடுவதாகவும், அவை போராட்டத்தில் தவிர்க்க முடியாதது எனவும் சொல்லி பிழைப்பை நடத்துகின்றனர். இதன் வெளிப்பாடாக தேசத்தின் மீது உண்மையான பற்றுள்ள சில தேசியவாதிகளும் புலிகளின் வலைக்குள் சிக்கி விடுகின்றனர். என்ன தான் இருந்தாலும் புலிகள் எம் மக்களுக்காக போராடுகின்றனர். அவர்களை விட்டால் வேறு வழி என்ன என்ற வாதங்கள் கூட புலிகள் அம்பலப்பட்டதைத் தொடர்ந்து அண்மைக்காலமாக மக்களிடம் புலிகள் எடுத்துச் சென்ற கருத்துக்களின் ஒரு பகுதியே. அதையே சில சமூகநோக்கம் கொண்டவர்கள் திருப்பியும் சொல்கின்றனர். இதே பாணியில் கிட்லர் காலத்தில் ஜெர்மனியில் இருந்த ஒரு பெண் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கீழ் பிரசுரிக்கின்றோம்.

அன்புடன் மகனுக்கு

இக் கடிதம் கிடைக்கும் போது நாம் உயிருடன் இருப்போமா தெரியாது! அமெரிக்கா-பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களது குண்டுமாரியிலிருந்து தப்புவது மிகவும் கடவுளால் அருளப்பட்ட வரமாகவே இருக்கும்.

இந் நிலைமையிலும் எமது ஜெர்மனியின் சிரசு நிமிர்நது நிற்க வேண்டும். எமது மக்களை அழிவிலிருநது காப்பாற்ற வேண்டும். முற்றான தோல்வியை எவ்வகையிலாவது தவிர்த்துவிட வேண்டும் என்ற கடமை உணர்வுடன் 15 வயதான இளைஞர்கள் கூட மேற்குமுனைப் போர்க்களத்திற்கு தம்மை அர்ப்பணிக்கச் செல்கிறார்கள். எமது மூலைக் கடை (இன்று இல்லை) கான் கயின்ஸ் இனுடைய இளையமகள் போர் முனையிலிருந்து ஒரு கையும் இரு கால்களும் இழந்து திரும்பி வந்துள்ளாள். 19 வயதிலேயே இளமையின் இனிய விவரங்கள் யாவும் கற்பனையாகி விட்டன அவளுக்கு! ஆனால் இன்றும் தளராது அவள் காட்டும் தேசப்பற்றையும் வீரத்தையும் காணும் உற்றார்கள், அயலவர்கள் உன்னையும் மகனாகப் பெற்றாயே என்று தூற்றுகிறார்கள். உனக்கு எங்கே இந்த நிலைமைகள் விளங்கப் போகின்றது. நீயோ கனடாவிலிருந்து எம்மை பாசிசவாதிகள் கொலைகாரர்கள் என வர்ணித்தபடி எமது இம்சைகள் துன்பங்கள் எவற்றையுமே உணராது கற்பனை வார்த்தைகளை எழுதியபடியுள்ளாய். இந்தப் போரில் நாட்டின் தற்காப்புக்காகவும் வேறு நியாயமான காரணங்களுக்காகவும் பலர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவையெல்லாம், இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்களா என்ன? நாற்கோடியிலும் இருந்து ரசியர்கள் அமெரிக்கர்கள் பிரித்தானியர்கள் என எம் இனத்தையே அழித்துவிட நடத்தப்படும் இந்த நரபலி வேட்டையில் உனது கேள்விகள் கருத்துக்கள் யாவுமே அர்த்தமற்றவையாக, வேளை புரியாதனவாகவே காணப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டவேண்டிய கடமை தாயான எனக்கு உண்டு....

இங்ஙனம் அம்மா டெர்ஸ்டன் (ஜெர்மனி) (நன்றி சுவடுகள்)

இந்த வகையில் கிட்லர் தனது நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு மக்களை ஏமாற்றி எப்படித் தனது கருத்தை மக்களுக்குச் சொல்ல வைத்தானோ அது போல் புலிகளும் எம்மக்களை ஏமாற்றிக் கிட்லர் பாணியில் சொல்ல வைப்பதில் புலிகள் கிட்லரிடம் கற்றுள்ளனர். புலிகள் இன்று அம்பலப்பட்டு போனமையால் சற்று கீழிறங்கி நடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். சில தவறுகள் நடைபெற்றுள்ளன எனக் கூறிக் கொள்கின்றனர். இதை என்றும் புலிகளின் தலைமை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அதே தவறுகளையே புதிது புதிதாக புலிகள் தொடர்கின்றன. இதை நியாயப்படுத்த சில களையெடுப்புக்களை தவிர்க்க முடியாதெனக் கூறுகின்றனர். இங்கு களையெடுப்பு என்பது ஈழப்போராட்டத்தை உண்மையில் நேசிப்பவர்களை அழிக்கின்றனர். இவர்களை விட்டால் (புலிகள்) வேறு யாh ;தான் போராடவுள்ளனர்? என்ற வாதம் மக்களை ஏமாற்றுவதே. புலிகளுக்கப்பால் புலிகள் போன்ற இயக்கங்களும் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களை கொன்றொழித்தனர். அவ்வியக்கங்களுக்கப்பால் தீப்பொறி- என்-எல்-எவ்-டி-, ..பி-எல்-எவ்-டி-- பேரவை......போன்ற உண்மையான விடுதலையை நேசித்த சக்திகளை அழித்தபடி வேறு யார் போராடவுள்ளனர் என்ற கேள்வியின் கபடத்தைப் புரிந்து கொள்ளக் முடியாததல்ல. இவர்கள் விடும் தவறுகள் களையெடுப்புகள், எல்லாம் வேறு யார் இருக்கிறார்களோ அவர்கள் மீதானதே. இன்று வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்டபடி புலிகள் வேறு யார்கள் என்போரை கொன்று சித்திரவதை செய்து வருகின்றனர். இன்று புலிகள் வதை முகாங்களிலுள்ள 5000 கைதிகள் யார்? இவர்கள் இந்தியக் கைக்கூலிகளோ, இலங்கைக் கைக்கூலிகளோ அல்ல. மாறாக அவர்கள் புலிகளின் தவறுகளை விமர்சித்தவர்கள். உண்மையில் தமிழ் மக்களை நேசித்தவர்கள். இவர்களை கொன்றபடி வேறு யார் என்ற கேள்வி மக்களை ஏமாற்றப் புலிகளைல் திட்டமிட்டு செய்யும் பிரச்சாரமே.

புலிகள் உண்மையில் சரியான விடுதலையை விரும்பின் முதலில் மக்களுக்கு, கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கவேண்டும். அத்துடன் சொந்த இயக்கத்திற்கும் கருத்து சுதந்திரம் வழங்க வேண்டும். புலிகளின் மக்கள் முன்னணி மீதுள்ள தடையை நீக்க வேண்டும். புலிகளின் வதைமுகாமில் உள்ள 5000 கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். புலிகளின் ஜக்கிய முன்னணிக்குக் கருத்து சுதந்திரத்தை வழங்கும்படி முதல் குரல் புலிகளே கொடுக்க வேண்டும். அதை நடைமுறை ரீதியில் அமுல்படுத்தி காட்டவேண்டும். இதை விடுத்து சில தவறுகள் நடந்துள்ளது, சில களையெடுப்புகளை தவிர்க்கமுடியாதது, வேறு யார் போராட உள்ளனர் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றி நிதிச் சேகரிப்பை நடத்த நடத்தும் திரைமறைவு நாடகங்களே.

இதை புரிந்து கொண்டு புலிகள் இறங்கிவரச் செய்ய புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க முனையவேண்டும். உண்மையில் தேசத்தின் மீது பற்றுள்ள அனைவரும் இழக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை மீட்க முன்வர வேண்டும். அந்த வகையில் புலிகளை விமர்சிப்பதும், ஒரு புதிய தலைமையை உருவாக்கவும் வேண்டும். இதை விடுத்து புலிகளின் பொய் பிரச்சாரத்தில் மயங்கி அவர்களை நியாயப்படுத்துவது என்பது மக்களைக் கொல்ல நாமே பச்சைக் கொடி காட்டுபவர்களாக இருப்போம்.

ஆசிரியர் குழு

 

என்-எல்-எவ்-டி யைப் பற்றிய கடந்த காலச் செயற்பாடுகள் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் பற்றிய எழுத்துக்களில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் இன்று ஸ்தாபன வடிவம் இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக எக்ஸ் என்பவர் ம.கு இல் பணியாற்றிய ஏனையோரைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் வைப்பது சரியான செயற்பாடல்ல என்பதும், அப்படி எக்ஸ் ஒரு விமர்சனம் தனிநபர்களைப் பற்றி வைப்பாதாயின் என்-எல்-எவ்-டி-இல் செயலாற்றிய ஒரு சிலருடனாவது விமர்சனங்களை முன்வைதது பின்னர் முடிவில் ஒரு ஜக்கியப்பட்ட தீர்மானத்தின் பேரில் பகிரங்கமான விமர்சனத்தை வைத்திருக்கலாம். சரி இனி மேலாவது நடந்தவற்றை நிறைவு செய்வதற்க்கு சமர் குழு அத் தனிப்பட்ட நபர்களால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு அல்லது பதிலளிப்பதற்க்கு சமர் பத்திரிகையில் இடமளிக்க வேண்டும். உண்மையில் இது தனிநபர்களின் பாதுகாப்பு சம்மந்தமான விடயமாக இருந்த போதிலும் எதிரிக்கு எங்களிலும் கூடியளவு விபரம் தெரியுமென சமர் வாதிடுவதால் சமரின் கூற்றில் நம்பிக்கை வைத்து அதை எவரிடமிருந்தாவது ஏதாவது பதில்கள் கிடைத்தனவா? என்னைப் பொறுத்தவரை தனிநபர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய விமர்சனங்களில் எனக்கும் அதிகளவு உடன்பாடு உண்டு. முக்கியமாக ராகவன், மோகனைப் பற்றியவை. ரமணி ஒரு நேர்மையான இயங்குசக்தி அவரின் இறப்பிற்கும் ராகவன் தான் பொறுப்பேற்க வேண்டும். மோகனிடம் ஓரளவு போர்க் குணாம்சத்தைக் காணக் கூடியதாக இருந்தது. ஆனால் எம்மில் பலரிலும் நான் உட்பட போர்க் குணாம்சம் பற்றாக்குறையாகவேயிருந்தது. இது ஸ்தாபனத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அதில் ஸ்தாபனத்தில் தலைமைக்கு முக்கிய பங்குண்டு. புலிகள் எங்களைப் பற்றி பெரிதாகக் கணக்கெடுக்காத போது வெள்ளைப்பயங்கரம் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். தேவையில்லாமல் பயந்தொழித்தோம். எமது ஸ்தாபனத்தை சில ஆதரவாளர்கள் காந்திய இயக்கம் என்று நேரடியாகவே குற்றம்சாட்டி எம் முன்னால் எள்ளி நகையாடினார்கள். முக்கியமான பிரதானமான விடயம் 83 இல் விசுவின் வீட்டில் நடைபெற்ற முதலாவது என்-எல்- எவ்-டி-இன் மகாநாட்டின் செயல்திட்டத்தில் சோசலிசமே எமது சமூக அமைப்பு என்பது குறிப்பிட வேண்டுமென நான் வாதாடியது இன்னும் நல்ல ஞாபகமாக இருக்கின்றது. ஆனால் அன்று அதைக் குறிப்பிடுவது ஜக்கிய முன்னணிக்குப் பாதகம் என்று தவிர்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஈ-பி-ஆர்-எல்-எவ்-, புளெட் என்பன இவற்றை வெறும் கோசங்களாக வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றினார்கள். அன்றைய இயக்கஙகளில் ஒரளவாது இடதுசாரி பிறப்பு( ) என்-எல்-எவ்-டி-மட்டுமே ஆனால் எமது திட்டத்தில் சோசலிசம் மறைக்கப்பட்டு விட்டது. சமர் 7 இல் வெளியிடப்பட்ட திட்டத்தில் கூட இரண்டு முக்கியமான விடயங்களை குறிப்பிடப்படவில்லை முதலாவது போராட்டத்துக்கு தலைமை தாங்குவது என்பது. இரண்டாவது எப்படியான தமிழீழம் அல்லது இலங்கையை உருவாக்கப் போகிறோம் என்பதாகும்.

 

என்னைப் பொறுத்தவரை தலையும், காலும் இல்லாத ஒரு முண்டமாகத் தான் இத்திட்டம் தோன்றுகிறது. சில வேளைகளில் ஏகாதிபத்தியத்தின் தேவை கருதி தற்செயலாக ஒரு தமிழீழ இஸ்ரேல் உருவாக்கினாலும் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவே நீண்ட கால நோக்குடன் திட்டம் அமையவேண்டும். சமர் பத்திரிகை ஆரம்பத்திலிருந்து படிப்படியாக

 

1) ஜனரஞ்சகத் தன்மையை இழந்து இறுக்கமாகி வருகின்றது.

 

2) ஆரம்பத்தில் ஒரு கூட்டு முயற்சியிலிருந்து படிப்படியாக ஒரு சில தனிநபர்களின் கட்டுரைகளை மடடும் தாங்கியுள்ளது. உதாரணம் கட்டைதாசனின் கட்டுரைகள் மறைந்து விட்டன.

 

பத்திரிகையின் ஆரம்ப வடிவம் வரவர ஒழுங்கில்லாமல் அழகு குறைந்து விட்டது. இதை அட்டைப்படத்திலிருந்து கட்டுரைகளின் அமைப்பு வடிவம் வரை காணக் கூடியதாவுள்ளது. எமது (சமரின்) நோக்கம் பலமான ஒரு ஸ்தாபன அமைப்பைக் கட்டுவதொழிய தனிமைப்பட்டுப் போவதில்லை.

 

90 களில் பார்த்த மனிதத்துக்கும் 92 இல் மனிதத்துக்கும் பாரிய வேறுபாடுண்டு. இன்று அங்கே திரிபு வாதம் தான் கோலோச்சுகின்றது. அதே போல் 3 இற்கும் 7 இற்கும் இடையே சமரில் (ஒரு அடிப்படை தத்துவத்திலிருந்து நழுவக் கூடாதென்றாலும்) ஏனெனில் இன்றைய காலக்கட்டம், மிக முக்கியமானது. அனைத்து வர்க்கங்களையும் (புரட்சியுடன் இணைத்து வரக்கூடிய) வென்றெடுக்க வேண்டியகால கட்டமிது. உதாரணத்திற்கு ஒரு விடயத்தை எனது அனுபவத்திலிருந்து சுட்டிக்காட்ட முடியும். 1970 இல் நாங்கள் தமிழ் மாணவர் பேரவையால் தரப்படுத்தலுக்கெதிராக ஊர்வலம் நடத்திய போது (ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது) சீன இடதுசாரி கட்சியினாரால் அமைப்புக்குழுவின் அனுமதியின்றி இருந்தாற் போல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் துண்டுப்பிரசுரம் விநியோகித்தவர்களை அடித்த பின்னர் கம்யூனிஸ்டுகள் காத்திருந்து அந்த மாணவர்களை அடித்தார்கள். உண்மையில் அன்று இடதுசாரிகள் (செந்தில், மணியம், அன்று ஒன்றாக இருந்தவர்கள்) அமைப்புக்குழுவுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டு இணைந்து செயற்பட்டிருந்தால் பல பேரை அன்று (இயங்கு சக்திகளை) வென்றெடுத்திருக்க முடியும். பின்னர் பல வருடங்களின் பின் அன்றைய அமைப்புகுழுவிலிருந்த சிலர் தாங்களாகவே இடதுசாரி தத்துவத்தை தேடிப்போனார்கள். எனவே அரசியல் ரீதியில் ஒரு பிரச்சனையை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எப்படிக் கையாளுவது என்பது மிக முக்கியமான விடயம். அன்று தமிழ் மாணவர் பேரவையில் சிவகுமாரன் உட்பட பலரும் தமிழ் கட்சிக்கு எதிரான உணர்வுகளோடு தான் இருந்தார்கள். ஆட்சியதிகாரத்தில் வெற்றிகரமாக அமர்ந்துள்ளது. 70 இன் மாணவர்களாகிய நாங்கள் இன்றும் (தரகு முதலாளித்துவத்தால்) தோற்றுப் போய் தான் வீழ்ந்து கிடக்கின்றோம். இதற்குள் தனிய நாங்கள் மாத்திரம் காரணமல்ல. மக்கள் அவர்கள் எப்பவும் நடைமுறைக்கூடாகத் தான் படிக்கமுடியும்.

 

4) பத்திரிகை தத்துவார்த்த, கொள்கை அடிப்படையில் பலமாக இருந்தாலும் கூட மேற்குறிப்பிட்ட அம்சங்களால் மற்றவர்களிடம் சென்றடையாமல் தடைப்படலாம்.

 

துக்ளக் ஒரு முதலாளித்துவப் பத்திரிகையாக இருந்தாலும் கூட சோ இன் எழுத்துக்களில் கவரப்படாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். தன்னுவடய கருத்துக்களை அழகாக, ஆணித்தரமாக, தனக்குச் சாதகமாக எழுதுகின்ற திறமை சோவிடம் உண்டு. எனவே தான் நாங்கள் முதலாளித்துவத்திடமுள்ள நல்ல விடயங்களை எமதாக்கிக் கொள்ள வேண்டும். முன்னர் நக்சல்பாரித் தோழர்களால் வெளியிடப்பட்ட மனிதன், சமரன், கேடயம், புதிய ஜனநாயகம் போன்றவையும் உங்களது பத்திரிகை எழுத்துக்கள் சிறப்படைய வழிகாட்டியாக அமையுமென நம்புகின்றேன்.

 

மாஸ்டர்--- இத்தாலி

 

என்-எல்-எவ்-டி தொடர்பான விமர்சனத்தில் என்-எல்-எவ்-டியை சார்ந்த எவரும் தொடர்பு கொள்ளவில்லை. உங்கள் கடிதமே முதலாவது கடிதம். தனிநபாகள் பற்றிய விமர்சனம் கட்டுரையைத் தொடர்ந்து சிறப்பாகபுரிந்து கொள்ளமுடியும் என்பதால் முன்வைக்கப்பட்டது. என்-எல்-எவ்-டி தொடர்பகான கூட்டு விமர்சனம் நடைமுறைரீதியாக சாத்தியமின்மையாகவேயுள்ளது. என்-எல்-எவ்-டி பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளமையால் கூட்டுமுடிவு என்பது சில விடயங்களை ஆராயாமல் தவிர்த்துவிட வாய்ப்பு ஏற்படும். என்-எல்-எவ்-டி தொடர்பான விமர்சனத்தை ஒட்டி கருத்துவைப்பின் நிச்சயமாக பிரசுரிக்கப்படும். எமது விமர்சனம் என்பது முதலில் சம்பவங்களை முன்வைத்து இறுதியாக விமர்சனத்தை முன்வைப்பது என்ற அடிப்படையியுள்ளது.

 

எமது திட்டம் நிச்சமாகப் பூரணமானதல்ல. முன்வைக்கப் பட்டதிட்டம் மாறுபட்ட சில கருத்துக்ளை உள்ளடக்கியும் உள்ளது. மற்றும் திட்டம் நீங்கள் குறிப்பிட்ட இரு விடயத்திற்க்கும் அப்பால் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக ஒரு பரந்த விவாதத்தை நடத்த பல கருத்துக்ளைக் கொண்டு ஒரு திட்டத்தை முன் வைப்பது என்ற அடிப்படையில் முள்வைக்கப்பட்டது. ந்Pங்கள் குறிப்பிட்ட இருவிடயங்களையும் எப்படிவைக்கலாம் என்பதை எமக்கு அறியதரவும். இவைகளை விட எமக்கு தொலைபேசி மூலம் இந்ததிட்டம் தொடர்பான புதிய இரு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது.

 

1) சாதியமைப்புக்கு எதிராகப் போராடுதல்

 

2) ஆண் ஆணாதிக்க சமூகத்திற்க்கு(பெண் விடுதலை) எதிராகப்போராடுதல்

.

இவை கூட இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். இதைவிட திட்டம் தொடர்பான விமர்சனத்தை மேலும் வரவேற்கின்றோம்.

 

மற்றும் சமர் பற்றிய விமர்சனத்தில் ஜனரஞ்சகத்தன்மையை இழந்துள்ளது. மற்றும் கூட்டுமுயற்சியிலிருந்து தனிநபர்களின் கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. கட்டை தாசனின் பக்கஙகள் நின்று விட்டது. மற்றும் தனிப்பட்டுப் போய்விட்டது;. சமரில் ஒரு இறுக்கத்தை காணமுடிகிறது. இவைகளை நாம் பார்போமாயின் ஒரளவு உண்மையே. இன்று சமர் கூட்டு முயற்சியில் உள்ளது. இதற்க்கப்பால் கட்டுரைகளை வெளியிலிருந்து (அரசியலுடன்) அனுப்பின் நிச்சயமாகப் பிரசுரிக்கப்படும். சமர் குழுவிற்க்கு கருத்து முரண்பாடு இருப்பின் சமர் தனது கருத்தையும் பிரசுரிக்கும். கட்டைதாசனினின் பக்கங்கள் அதை எழுதுபவர் எழுதாமையால் தான் நின்று போனது. ஜனரஞ்சகத்தன்மையை இழந்து இறுக்கமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இவைஏற்படப் காரணங்கள் இருந்துள்ளது. உங்கள்பார்வைப்படி இன்றைய காலகட்டம் மிக முக்கியமானது. ஆதாவது அனைத்து வர்க்கங்களையும் ( புரட்சியுடன் இணைத்து வரக்கூடடிய) வென்று எடுக்கவேண்டிய காலகட்டம்மிது. இந்த நிலையை நாம் சமரை ஆரம்பித்தபோது எமது கருத்தாக இருந்த போதும் சமர் வெளிவந்த இக்காலகட்டத்தில் இம்முடிவை இயல்பாக நாம் கைவிட நிர்ப்பந்திக்கப் பட்டோம். இதன்; வெளிப்பாடாகவே எமது இறுக்கம். நாம் சமர் வெளியிடமுடிவெடுத்தபோது எதிர்காலப் போராட்டத்துக்கு தலைமை தாங்கக்கூடிய ஒரு தலைமையிருக்கவில்லை. இதுவே இன்றைய நிலையும். இப்படி தலைமையில்லாத நிலையிலும் நாம் ஜக்கிய முன்னணியை கட்டும் அதேநேரம் ஒரு தலைமையை மறுபக்கத்தில் கட்டிவிட முடியும் எனநினைத்தோம். இதன் வெளிபபாடாகவே நாம் மூன்றாவது பாதைக்கான 5 அடிப்படையான விடயங்களை உளளடக்கி ஒரு திட்டத்தை முன்வைத்தோம். ஏன் பிரான்சில் 17பேர் உள்ளடக்கிய கல்விவட்டத்தை உருவாககினோம். இவையெல்லாம் ஜககிய முன்னணியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினோம். ஆனால் அடிப்படையில் இவை வெற்றியளிக்க முடியாதிருந்தது. இவர்கள் தமக்கிடையிலான கருத்து முரண்பாட்டை பகைமுரண்பாடாக பார்ககமுற்பபட்டனர். கருத்துக்கள் மீதான விமாசனத்தை நிராகரித்தனர். ஒவ்வொரு நபரும் சுயவிமர்சனம் செய்வதை நிராகரித்தனர். இதை தனிப்பட்ட நபர்களுக்டையில் செய்யமறுத்தனர். மாற்றுக்கருத்தை பகிரங்கமாக முன்வைத்த போது, அதன் விமர்சனத்தை முன்வைக்க முற்பட்டபோது, எதிர் நிலைக்குச் சென்றனர். இவர்களை நாம் ஆராய்யும் போது இன்று எழுந்துள்ள முற்போக்கு அலையை பிழைப்புக்காக நடத்தி பிரமுகர்களாக பவனிவருகின்றனர். இன்று பெரும்பகுதியினர் கருத்தை திரித்து போராட்டத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இதறகப்பால் உள்ள பல நல்ல சக்திகள் இன்று ஒரு சரியான நிலையை வந்தடையாதநிலையில் உள்ளனர். இவர்களை சரியான பக்கத்துக்கு வென்றெடுக்க நாம் எமது கருத்தை மிகத்தெளிவாக உயர்த்திப் பிடிப்பதன் வெளிப்பாடாக எமது இறுக்கம் உருவாகியுள்ளது.

 

இந்நிலையில் இந்தியாவில் வெளிவரும் நக்சல்பாரி சஞ்சிகைகளை நாம் பார்ப்போமாயின் அவர்கள் நடமுறைப் பிரச்சனை மீது கருத்தை முன்வைக்கின்றனர். இதுவே சரியானது. இதை சமர் செய்ய வேண்டும் என்ற போதிலும் எம்மால் அதைச்செய்ய எவ்வளவு முயன்றபோதும் முடியாதுள்ளது. ஏனெனின் ;தத்;துவார்த்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் மாற்றுச் சஞ்சிகைகள் கட்டுரைகளை பிரசுரிககின்றன. அதனால் நாம் அவற்றின் மீது கருத்துக் கூறுவதால் சமர் அதிலிருந்து அதிலிருந்து விலக முடியாதுள்ளது. நாம் தற்போது, தொட்டுவரும் தத்துவார்த்த பிரச்சனைகளை ஒட்டி மாற்று சஞ்சிகைகளை கட்டுரைகள் பிரசுரிப்பின் அவாகளுக்கே எமது விமர்சனத்தை முன்வைப்பதனூடாக சமரில் நடைமுறை பிரச்சனைகளை ஆராய ஒரளவு முயல்கின்றோம். நீங்கள் குறிப்பிட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் தமிழ் மாணவர் பேரவையுடன் இணைந்த ஊர்வலமெனின் முதலில் அவர்களுடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மாறுபட்ட கருத்திருப்பின் அதை தமிழ் மாணவர் பேரவைக்குள் விமர்சனங்களை வைக்க ஜனநாயகம் இருந்திருக்க வேண்டும் அவை முககியமாவையெனின் அவற்றை மக்களுக்கு வைக்கும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது கருத்துச்சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும.; இதற்கப்பால் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடவடிக்கையை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். அப்போது மககள் எமது நிலையை புரிந்து கொள்ளவும். அதே நேரம் அதை நடத்தும் சக்திகள் நீண்ட காலத்தில் எம்மை நோக்கி வரவும் செய்யும். மாற்றுக் கருத்தை எச்சந்தர்ப்பத்திலாவது சொல்லாமல் விடின் சரியான சக்திகள் எம்மை நோக்கி வர சந்தர்ப்பம் இருக்காது.

 

ஆசிரியர்-குழு

 

சமர் சஞ்சிகையின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்களவு என்னில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிடவேண்டும். இதுவரை நான் கொண்டிருந்த கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்ற அளவு என்னளவில் கருத்துப் பலத்தை கொண்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வருகின்ற சஞ்சிகைகளில் சமூகமாற்றம் இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு சரியான தலைமை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட சஞ்சிகைகளை நாம் பெற்றிருக்கிறோம். சில விமர்சனம் எழுதியுள்ளோம். எனினும் அதை சாதிக்கும் திசையில் நீங்கள் காட்டும் முனைப்பைப் போல வேறு சஞ்சிகைகளிடம் காணவில்லை. தங்களது ஆர்வம் எனக்கு உற்சாகம் தருகின்றது.

 

1) சமர் சஞ்சிகை வெளிப்படுத்துகின்ற இரு முக்கிய போக்குகள் விடயத்தில் நான் முழுமையாக உடன்படுகின்றேன்.

 

2) மார்க்சிய, லெனினிய, மாசேதுங் சிந்தனைகளை, அதன் அடிப்படைகளை உறுதியுடன் பற்றி நிற்பது.

 

3) திரிபுவாதம், பிழைப்புவாதம் என்பனவற்றுக்கெதிரான விட்டுக் கொடுக்காத போராட்டம்.

 

சமர் சஞ்சிகையினது விமர்சன அணுகுமுறை மிகச் சரியானது என்பதில் எவ்வித அய்யமுமில்லை. சமூக நலன் மீது அக்கறை கொண்டுள்ள எவரும் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். விமர்சனங்கள் முடக்கிப் போட்டுவிடும் என்றும் அதனால் பாதிப்பு உற்றவர்கள் சொந்த நலன்களை பெரிதுபடுத்துபவர்களே. புலம் பெயர்ந்த நாடுகளில் முற்போக்கு அணி என்கின்ற வரையறைக்குள் அடங்குபவர்கள் ஏறத்தாள முழுமையாக குட்டிபூர்சுவா வர்க்க பின்னணியினரே. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் வர்க்க அரசியலை ஏற்பதாக கூறிக்கொள்கின்ற எத்தனையோ நபர்கள் ஏகாதிபத்திய சூழலில் பெறுகின்ற எத்தனையோ சீரழிவுக்காக வக்காலத்து வாங்குகின்றார்கள். தன்னினச்சேர்க்கை இதனால் சமூகத்துக்கு என்ன தீங்கு என வாதிடும் முற்போக்காளரை நான் அறிவேன். சொல்லில் புரட்சியாகவும் செயலில் பிரமுகர்களாகவும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பான்மையினர் வேடமணிந்து நிற்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினருக்கான தத்துவத்தை இந்த ஊதாரித் கூட்டம் மாசு படுத்த அனுமதிக்ககூடாது. அச்செயற்பாட்டுக்கான மையமாக நீங்கள் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

 

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாக மனிதம் இதழில் மூ.சிவகுமாரன் என்பவர் திரிபுவாதம் என்பதற்கு புது விளக்கம் கொடுத்ததினை மறுத்து எனது கருத்தை மனிதம் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அதில், விவாதப் பகுதி ஒன்றிற்கு ஒரு நபர் எழுதுகின்ற ஆக்கத்தை அச்சஞ்சிகையினது கருத்தாக எடுக்க முடியாது.(உதாரணமாக பனிமரின் முன்னைய படிகள் சஞ்சிகையின் கட்டுரைகள் அவர்களது கருத்தல்ல என்பது போல்) என்கின்ற அபிப்பிராயத்தில் சமரினது அணுகுமுறையில் இருந்த தவறுடன் ஒப்பிட்டு திரிபுவாதத்தை நியாயப்படுத்த முயல்வதாக குறிப்பிட்டிருந்தேன். எனினும் அடுத்த மனிதம் இதழ் அக்கட்டுரை (கரிகாலனது) வெளியிடுவதிலும், அதிலிருந்த கருத்து தொடர்பாகவும் தனது பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதனால் எனது அம் முடிவு தவறானதாகிவிட்டது. சமரினது அணுகு முறையில் இருந்த தவறு எனக் குறிப்பிட்டதில் எனது கருத்துகள் மனிதம் இதழில் பிரசுரமானால் பின் எனது இந் நிலையை அவர்களுக்கு அறியத் தருவேன். சில வேளைகளில் மனிதம் இதழ் பிரசுரித்தால் எனது நிலைப்பாட்டை நீங்கள் அறிவதற்காகவே எனது நிலைப்பாட்டை அறியத் தந்துள்ளேன்.

 

2) அடுத்தது விடுதலைப் புலிகள் பற்றிய சமரினது முடிவு தொடர்பாக, இதுவரை விடுதலைப் புலிகளை முதலாளித்துவ தேசியத் தன்மை கொண்டவர்களெனவும் தேசியத்தன்மை இருப்பதாகவும் பிற்போக்கு தேசியவெறி எனவும் முடிவெடுத்திருந்தேன். முதலாளித்துவ தேசியவாதம் என்பதில் தரகு முதலாளித்துவம் தேசிய இயல்பைக் கொண்டிருக்காது என்பதால் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையே பிரதிநிதித்துவம் செய்வதாக அபிப்பிராயம் கொண்டிருந்தேன். எனினும் தரகு முதலாளிய இயல்பைக் கொண்ட பல பண்புகள் அவதானத்துக்குட்படுத்தியதுடன் அது பற்றி ஆதாரங்களுடன் என்னால் உணர முடியாதிருந்தது. ஆயினும் புலிகளது ஏகாதிபத்தியங்களை எதிர்க்காத சார்பான அணுகுமுறை அவர்களது தன்மையை புலிகள் தொடர்பாக எனது அபிப்பிராயங்களை விரிவடைய செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் வரையறை செய்கின்ற தெளிவை வந்தடைய முடியுமென நம்புகின்றேன்.

 

3) மூன்றாவது பாதைக்கான தங்களது திட்டம் தொடர்பான என்னால் தெளிவான ஒரு வேலைமுறையை கிரகிக்க இயலவில்லை. இதழ் 7 இலேயே அதனுடைய திட்டம் பார்த்தேன். அது பொது வேலைத்திட்டமா, புலம்பெயர்ந்த நாடுகளுக்குரிய பிரச்சார வேலைத்திட்டமா? நீங்கள் இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றேன். 1ம் 2ம் இதழ்களில் வெளியாகியிருப்பின் இவ்விதம் பெற முயற்சிக்கின்றேன்.

 

மேலும் பாசிச அபாயம் உச்சமடைந்துள்ள நிலையில் அதையும் எதிர் கொண்டு உருவாகின்ற அரசியல் தலைமை, கட்சி சூழ்நிலையின் தன்மைகளை கிரகித்துக் கொண்டு அந்நிலைமைக்கேயுரித்தான கட்டுமானங்களை கொள்ள வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். அது விடயத்தில் தங்களது அணுகுழுறை தொடர்பாக எனக்கு அபிப்பிராய பேதமுண்டு. உணர்ச்சி வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறவையாக சில செயற்பாடுகள் இருக்கின்றதாக ஒரு சிறு எண்ணப்பாடுமுண்டு. எனினும் மறுதரப்பாக இயல்பாகவே எனது வர்க்க குணாம்சத்தின் கோழைத்தனங்களிலிருந்து இவ் அணுகுமுறை எழுகின்றதா என்பனவற்றில் சரியான நிலையை வந்தடையாமல் திடமான முடிவுகளை வரையறுக்கவில்லை.

 

4) கருச்சிதைவு சம்பந்தப்பட்டதில் தங்களது கருத்துக்களுடன் உடனபாடுண்டு. மற்றும் அது தொடர்பான தங்களுடைய கட்டுரைகளில் காணப்பட்ட பாலியல் சம்மந்தப்பட்ட விடயங்கள் முழுமையாக நான் உடன்படுபவையாகவும் எனது கருத்துக்களின் எதிர்பார்ப்புக்களாகவுமுள்ளன. இங்கு முற்போக்கான நபர்கள் என்று வரையறுப்போரிடையே உடன்பாடு காணப் பேச முற்படும் போது பாலியல் தொடர்பான விடயம் பேசினால் ஒரு உடன்பாடும் வராது. அதை எடுக்கக்கூடாதென்று சொல்வதைக் கடந்த காலங்களில் கண்டதே எனது அனுபவம். பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் பற்றியதில் நான் தெளிவாகவுள்ளேன். எதிர்வரும் காலங்களில் அதை விரிவாக பரிமாறிக் கொள்ளலாம் என நம்புகிறேன்.

 

5) ஜக்கிய இலங்கைப் புரட்சியா? தமிழீழப் பிரிவினையா? இவ்விடயத்தில் இவ்விரண்டு கோசத்தினுள்ளும் தமிழ் பேசும் மக்களினது சுயநிர்ணய உரிமையடங்கியுள்ளது. பெரும்பான்மை சிஙகளமக்கள் எவ்விதம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும், ஆதரவளிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதேயளவு தமிழ் மக்களும்(அதாவது புரட்சிகர தலைமையின் கீழ் அணிதிரட்டப்படும் மக்கள் திரள்) சிங்கள மக்களது நலன் மீது அக்கறையும் ஜக்கியத்துக்கான ஆர்வமும் காட்டவேண்டும். தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை கையில் எடுப்பதன் மூலம் இலங்கையில் ஜனநாயகப் புரட்சி இலக்கை நோக்கி செயற்பட வேண்டும். இலங்கையின் அமைவு, ஏகாதிபத்திய தலையீட்டு அபாயம்(இந்திய தலையீடு) என்பன இலங்கை மக்களின் ஜக்கியத்துக்கான தேவையை வலியுறுத்துவதாக கருதுகிறேன். மேலும் பாரம்பரியத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்ற பாட்டாளி வர்க்க சக்திகளது பலவீனமான தன்மை நாம் அக நிலையாக எவ்வளவு விருப்பம் கொண்டாலும் தமிழ்ப் பிரதேசங்களில் தனியே பாட்டாளி வர்க்கக் கட்சி புரட்சியை தலைமை தாங்கும் சக்தியாக உருப்பெறுமா என்பதையிட்டு இன்னும் சந்தேகமான நிலைமையும் விரிவான துல்லியமான ஆய்வும் வேண்டப்படுகிறதாகவுள்ளது. கடந்த காலங்களில் பாட்டாளி வர்க்க இலட்சியத்தை ஏற்ற அமைப்புக்கள் குட்டிபூர்சுவா வர்க்க நபர்களை அணிதிரட்டியதும் அவ் அமைப்புக்கள் சில நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்ததும் சிதைந்து போனதும் நாம் அறிவோம். எனவே குட்டிபூர்சுவா வர்க்க நபர்களோ, புத்திஜீவிகளோ பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கு தம்மை அர்ப்பணித்தாலும் அதை முழுமையாக தன்னுடையதாக்கி, நடைமுறைப்படுத்தும் வர்க்கம் எது என்பதை நாம் எமது தேசத்தில் கண்டறிய வேண்டும். முன்னணிப் படை எது என்பதைக்கண்டு அதனது ஆறறலை சரியான திசையில் கட்டவிழ்த்து விடவேண்டும். அவ்வகையில் பாட்டாளி வர்க்க நீண்டகால நலன்களினடிப்படையில் உறுதியான உருக்குப்போன்ற பாட்டாளி வர்க்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்க வேண்டிய அவாவின் வழியில் தேசிய அபிலாசைகளை சர்வதேச அபிலாசைகளுக்கு இசைவாக முரணில்லாது கையாள்வதே பாட்டாளி வர்க்க அணுகுமுறையென கருதுகிறேன்.

 

1) இலங்கையின் இன்றைய நிலைமையின் கீழ் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கும், பாதுகாப்புக்குமான போரை கட்டமைக்கும் போதே பிரிவினை தான் என முன்னிறுத்தாமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள். சிங்கள, முஸ்லிம், மலையக மக்களே புதிய ஜனநாயகப் புரட்சியில் ஒன்றுபடுவோம் என முழக்கம் வைக்கவேண்டுமெனக் கருதுகிறேன். தமிழீழம் தான் என்பது பாரம்பரிய தமிழ் மக்களது கோரிக்கை மட்டுமே. அது நியாயமானதெனினும் பாட்டாளி வர்க்க கோசமில்லையென்றே நான் கருதுகிறேன். முக்கியமாக நான் சுட்டிக்காட்ட விரும்புவது எதுவெனின் தமிழீழம் என முன்வைப்பினும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்ககோரி போராடுவதும் வர்க்கத் தலைமையை நிறுவ உழைக்கினற வர்க்கப் போராளிகளுக்கு முழக்கம் வித்தியாசமானதே ஒழிய போராட்ட உள்ளடக்கம் ஒன்றே. பிரிவினை தான் என வரையறை கொள்வதை தவிர்ப்பது இனங்களிடையேயான ஜக்கியத்துக்கான அறைகூவல்.

 

மற்றும் இம்முழக்கங்களின் மூலமே உண்மையான வர்க்க சக்திகளையும் மற்றைய கூறுகளையும் இனம்பிரிக்க இயலும். சமர் இதழில் தென்னிலங்கையில் புரட்சிகர சக்திகள் பலம் பெற்றால் நாம் ஜக்கியப்பட்ட புரட்சிக்கு போராடவேண்டுமென குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ்ப் பகுதியில் உறுதியான வர்க்கத் தலைமையை உருவாக்க இயலுமெனவும் மக்களை அவ் இலட்சியங்களுக்கு அணிதிரட்ட முடியுமெனவும் நம்புகின்ற அதேவேளை சிங்கள மக்களிடமிருந்து அப்போக்கு உருவாவதை சந்தேகத்துடன் நோக்குவது நீங்கள் இனரீதியில் நம்பிக்கை, அவநம்பிக்கை கொள்கின்ற போக்கு. மக்களை அதிலிருந்து மீட்பதற்காகவே நாம் உழைக்க வேண்டும். காலனியாட்சிக் காலம் முதலும், பின்பும் சிங்கள மக்கள் தமிழ் மக்களை விட வர்க்க உணர்வின் பாரம்பரியத்தில் மேம்பட்டவர்களென கருதுகிறேன். எனவே தான் பாட்டாளி வர்க்க கட்சி மலையகம் போன்ற தொழிலாளர்கள் மத்தியில் வேரூன்ற வேண்டும். எனினும் அதற்காக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கவனத்தில் கொள்ளாது தவிர்ப்பது என்பது பொருள் அல்ல. இரண்டையும் எப்படி முரணின்றி இணைப்பது என்பதே பிரச்சனை. அதற்கு தீர்வாக தமிழ் பிரதேச புரட்சிகர சக்திகள் சுயநிர்ணய உரிமைக்கும் பாதுகாப்புக்குமான போரிற்கு தயாராகும் போதே முழக்கங்களை கோசங்களை வர்க்கநலன் அடிப்படையில் வைக்கவேண்டும். ஜக்கியம் எப்போதும் சாத்தியப்படும் என்பதற்கு ஆருடம் சொல்லாமல் திறந்த மனதுடன் அதற்கு முயலவேண்டும். இது தொடர்பாக உயிர்ப்பு 2 இல் சமரன் என்ற பெயரில் வாசகர் கடிதம் எழுதியுள்ளேன். இவ் விடயம் தொடர்பான தங்கள் விமர்சனங்களை விரிவாக அறியத் தாருங்கள்.

 

மாறன்-(கனடா)

மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம், வெளிநாடுகளிலும், இலங்கையிலும் உள்ள புரட்சிகர முற்போக்கு சக்திகளால் (சமர் உட்பட) சம காலத்தில் நடந்த தத்துவார்த்த விவாதங்களினடிப்படையில் முனைப்பு பெற்றதே. முன்னணிக்கான இத் திட்டம் முழுமையானதாக நாம் உறுதி செய்யவில்லை. மாறாக இத் திட்டம் பற்றிய ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதோடு, திட்டம் முழுமை பெற எம்மால் உழைக்க முடியும். இத் திட்டம் முழுமை பெற நாம் ஆரோக்கியமாக விவாதிப்போமாயின் அது நாட்டுக்கான பொது வேலைத்திட்டமாக அமைய முடியும்.

 

2) வாசகர் குறிபிட்டது போல் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக நாம் இத் திட்டத்தை முன்வைக்க எவ்வித நியாயமில்லை. புரட்சிகர பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டோர், சிதைந்து அந்நிய நாடுகளிலும், இலங்கையிலும் உதிரிகளாகச் சிந்தித்ததின் விளைவே இத் திட்டம். இதில் நாட்டிலுள்ளோரின் கருத்துக்கள் ஆழம் பெற்றுள்ளன. போர்ச்சூழலில் உள்ளோரின் கருத்துக்கள் ஆழம் பெறும் போது அக- புறவய யதார்த்தம் கவனத்தில் கொள்ளப்படுவது இயல்பே.

 

.3) ஜக்கிய இலங்கைப் புரட்சி பற்றி இன்று பலரும் பேசுகின்றனர். முன்னைய நாட்களில் ஏதோ ஒருவகையில் இயக்கங்களோடு அரசியல் தொடர்பிருந்தவர்களும் இப்படிக் குழப்புவது இயல்பாகவேயுள்ளது. இதையொரு மாயையான தன்மையான அல்லது விரக்தி மனேபாவம் என்றே சொல்லலாம்.(சில மார்க்சிசவாதிகள் போல்) முழு இலங்கைக்குமானதோர் புரட்சிக்குரிய கருக்கட்டல் ஏற்படுமாயின் அது வரவேற்கத்தக்கதும் ஒன்றிணைய அல்லது இணைக்க வேண்டிய அவசியம் அனைத்து வர்க்க சிந்தனையாளாகட்கும் உண்டு. ஆனால் நாம் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கவனத்தில் கொண்டே எதிர்காலத்திற்குரிய திட்டத்தை வகுக்கமுடியும். எதிர் காலத்திற்குரிய திட்டம் நிகழவிருக்கும் சர்வதேச மாற்றங்கள் அலலது அழுத்தங்கள், பிராந்திய அரசியல் நிலைமை, இவைகட்கு நாம் ஈடுகொடுக்கும் ஆற்றலாலும் கருத்தியல் ரீதியான உறுதித்தன்மையையும் பொறுத்தே நமது சாதனை அமையும்.

 

சிங்கள மக்களது புரட்சிகர ஒருங்கிணைவு புறவயமாக எவ்வித உடனடிச் சாத்தியமும் உள்ளதாக நாம் கருதமுடியாது. ஏனெனில் போர்க்குணாம்சம் கொண்ட ஜே.வி.பி போன்ற ஆயுதக் குழுக்கள் சிங்கள மக்களை புரட்சியின் பால் நம்பிக்கையிழக்கச் செய்ததுமின்றி கருத்தியல் ரீதியாக தமிழர் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டன. நடைமுறையில் த-ஈ-வி-பு யினர் சிங்களமக்களை கூட்டம் கூட்டமாக படுகொலை செய்ததும், சிங்கள மக்களைத் தமிழர் மீது வெறுப்படையச் செய்துள்ளது. சமகாலத்தில் முற்போக்கு சிங்கள அரசியல் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியுள்ளது ஒரு நல்ல சகுனமே. இருப்பினும் தேசிய இனப்பிரச்சனை பற்றிய தீர்வுக்குரிய வேலைத்திட்டம் எதையும் தெளிவாக இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாமையும் குறிப்பிடத்தக்கது. இது இவர்கள் இன்னும் இலங்கையின் மரபுவழி அரசியலில் இருந்து மாறத் தயங்குவதையும், பேரினவாதத்தை எதிர்க்கும் திராணியுமற்றவர்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

 

1977-1983 ஆண்டுகளில் கூர்மையடைந்த இனமுரண்பாட்டுக்கும் இன்றுள்ள இனமுரண்பாட்டின் வெளிப்பாடும் தன்மையில் மிகவும் மாறுபட்டுள்ளது. இனவாதம் களையப்பட்டுவிட்டதாக நாம் எவ்வகையிலும் கருதமுடியாது. 1983 இல் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காக முழு இலங்கையிலுமே இனக்கலவரத்தை பேரினவாத சக்திகளும் ஆயுதப்படையினரும் துவக்கி வைத்தனர். இன்று ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதையொட்டி இனக்கலவரம் எதுவும் நடைபெறுவது இல்லை என்பது உண்மையே. மாறாக சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள் என்றே கருதமுடியும்.

 

ஏனெனில் நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் இச்சிங்கள இராணுவத்தினர்க்காகவோ தேசிய இனப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வருமாறோ அரசை நிர்பந்திக்கும் குறைந்தபட்ச வெகுசனங்களைக் கவரக்கூடிய எவ்வித போராட்டங்களுக்காகவும் சிங்கள மக்கள் எந்த ஒரு இடதுசாரி குழுக்களாலும் அணிதிரட்டப்படவில்லை. ஜ-தே-க தரகுகள் மக்களை ஒட்ட சுரண்ட ஏகாதிபத்தியங்களுக்கு கதவு திறந்து விட்டதுமல்லாமல், இந்நாடுகளில் உதவியையும், கடனையும் பெற்று யுத்தம் செய்வதனூடாக ஒவ்வொரு குடிமன் மீதும் கடன் சுமையை ஏற்றுவதோடு தேசிய இனப்பிரச்சனையை கேலிசெய்யும் அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். இந்நிலைமையை விளக்கி மக்களுக்கு ரோசமூட்ட சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஒரு வர்க்க சிந்தனை கொண்டோரோ, ஜனநாய சக்திகளோ இல்லை என்றே கூற முடியும். சிங்கள மக்கள் பேரினவாதத்திலிருந்து சற்றேனும் வெளியேறவில்லை என்பது புலனாகின்றது. (இந்தியாவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் போன்ற கட்சிகளாலும், இவர்களது கூட்டமைப்பான மத அமைப்புக்களாலும் இந்து மத அடிப்படைவாத அரசியல் மயப்படுத்தலுக்கு எதிராக தமிழ்நாட்டிலும் மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளிலும், புதிய ஜனநாயகம், மக்கள் யுத்தகுழு போன்றோர் உழைக்கும் இந்துக்கள் உட்பட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியல் மயப்படுத்தி பலவகையான எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தற்போது கருவறை நுழைதல் என்னும் போராட்ட வடிவத்தை முன்னெடுப்பதை நாம் ஒப்பிட்டு ரீதியாக கவனத்தில் கொள்ளவேண்டும்.). யுத்தப் பிரதேசங்களில் இறக்கும் இராணுவத்தினரை வீரபுருசர்களாக சிங்கள மக்கள் கருதுமளவுக்கு சிங்களமக்கள் பேரினவாத சக்திகளால் திசை திருப்பபட்டுள்ளனர். பேரினவாதத்திருந்து விடுதலை பெற சரியான இலக்கற்று துவங்கப்பட்ட போராட்டம் திசைமாறி தேக்கத்துக்கு உள்ளாகிய உள்ள இவ்வேளையில் ஒரு அடியேனும் முன்னேற முடியாத நிலைக்குக் தளளப்பட்டுள்ளது. இந் நிலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் புரட்சிகர சக்திகள் ஈடுபாட்டோடு வேலை செய்வது எவ்வகையில் சாத்தியப்படும். இதுகாலவரையும் மிகுந்த துன்பத்துக்கு உட்பட்ட தமிழ்பேசும் மக்களின் சமூக பொருளாதார அரசியல் விடுதலைக்கு வழிகோலுவதே இச் சூழ்நிலைக்கு சாத்தியமானதாகும். இதை கவனத்தில் கொண்டு நம்முன்;னுள்ள பாரிய பொறுப்பு யாதெனில் , தேசியவிடுதலையை வெல்லவும், புதியதோர் தலைமையை கட்டவும், உழைக்கும் மக்களை முன்னணிப்படையாக்குவதன் மூலமே பொதுஉடமை புதியஜனநாயக புரட்சியாக மாற்றமுடியும். இதுவே இன்றைய சிங்கள உழைக்கும் மக்களதும், இஸ்லாமிய, மலையகமக்களின் தனித்துவமான விடுதலைக்கும் முன்நிபந்தனையாக அமைவது மாத்திரமல்லாமல் தென் கிழக்காசியாவில் விடிவெள்ளியாகவும் அமையமுடியும். சிங்கள மக்கள் மத்தியில் சரியான புரட்சிகர சக்திகள் உருவாகின் முரண்பட்ட இணைவா, முரணற்ற இணைவா ஏற்படுத்துவது என்பதை மக்களே தீர்மானிப்பவர்களாக உரிமை பெறவேண்டும்.

 

4) தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கும், பாதுகாப்புக்குமான போரை கட்டமைக்கும் போதே பிரிவினை தான் என முன்னிறுத்தாமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் எனக்கோர வேண்டுமெனக் கூறும் வாசகரின் கூற்றை நன்கு ஆராயவேண்டும். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்படி நாம் யாரைக் கோருவது.? விஜயதுங்காவின் அரசையா? அலலது எதிர்காலத்தில் வரக்கூடிய சிறிமா அரசையா? அல்லது நாட்டில் வரக்கூடிய வேறொரு அரசையா? இக் கேள்விகளின் பின்னுள்ள நியாயத்தன்மை நம் சார்பில் அதிகபலமானதே. இவர்கள் அங்கீகரிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழ் மொழி அமுலாக்கல் போல் கேலிக்குரியதாக இராதென்று நாம் எப்படிக் கருதமுடியும். இவ்வினம் தன்னைதானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையைப் பெற்று விடவில்லை என்று மீண்டும் தலைசொறியும் தேவை ஏற்படாதென்பதை இலங்கையின் கடந்தகால அரசியல் மரபைக் கணக்கில் எடுப்பின் விளங்கிக்கொள்வது கேலிக்குரிய அரசியலல்ல. இன்று இலங்கையில் வேலை இல்லாத திண்டாட்டம,; விலைவாசி அதிகரிப்பு, தேசிய சிறு கைத்தொழில் வீழ்ச்சி, நெற்செய்கைப் பாதிப்பு ஏகாதிபத்தியங்கள் சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பல துறைகளில் நாட்டை சூறையாடல் போன்ற மக்கள் விரோதச் செயல்களுக்கு அரசு இடமளித்துள்ளமை நாட்டை தாக்கும் பாரதூரமான விடயமாகவே உள்ளது. ஆனால் வடகிழக்கு யுத்தத்தை மாத்திரமே அரசு உட்பட்ட பேரினவாத சக்திகளும், இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனை ஒன்று என மக்களை திசைதிருப்புவதுடன் சிங்கள இளைஞர்களையும் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளுகிறது. உண்மையில் தேசிய இனமுரண்பாட்டை பாசிச அரசு யுத்தத்தினூடாக தீர்க்க முனைவதால், அது நாட்டின் முதன்மை பிரச்சனையாகியுள்ளது. இதே போன்று மேற்கூறிய அரசின் மக்கள் விரோத மக்கள் கொள்கைகளும் திட்டங்களும் இதற்கு சமமாக நாட்டைத் தாக்கியுள்ளது. இவைகள் எதையுமே கண்டுகொள்ளாத தென்னிலங்கை சிங்கள இடதுசாரிகளும், முற்போக்குக் குழுக்களும் தாம் சிங்களப் பேரினவாதத்துக்கு முழுமையான எதிரியல்ல என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் சிங்கள இடதுசாரிகள் தமிழ் தேசிய இனவிடுதலைக்கு எதிர்ப்பைக் காட்டும் முகமாகவே அரசின் அனைத்துப் பிற்போக்கு அம்சங்களையும் தீவிரமாக எதிர்க்க மக்கள் மத்தியில் வேலைசெய்யாமல் இருந்து அரசுக்கு உதவி புரிகின்றனர்.

 

இனவாதம் கலக்காத அரசியல் இலங்கையில் பலம் பெறாது என்னும் கருத்து சிங்கள அரசியல் கட்சிகளிடம் வேரூன்றியுள்ளதை வரலாறு நமக்குப் புகட்டியுள்ளது. இன, மொழி, முண்பாட்டினால், இலக்கற்றுத் துவங்கப்பட்ட போராட்டம் தேக்கநிலைக்குள்ளாகி, தற்காப்பு யுத்தத்துக்குத் தள்ளப்பட்ட போதிலும் பாட்டாளி வர்க்க சிந்தனையையும், இனங்களின் ஜக்கியத்துக்கு வர்க்கப் போராட்டத்தை முன் நிபந்தனைப்படுத்தி தேசிய இனவிடுதலையை வெல்ல முடியுமென நம்பிக்கை கொண்ட பல சிந்தனையாளர்கள் உதிரியாய் உள்ளது வரலாற்றின் சோதனையும் சாதனையுமே. இந்நிலையில் ஒடுக்கப்படுமினம் வர்க்க நிலைப்பாட்டிலிருந்து ஒடுக்குமினமுட்பட்ட ஓர் விடுதலைக்கு அடித்தளமிடுவது அறிவிஜீவிகட்கு சாத்தியமாகலாம். இன்றைய யதார்த்தம் கவனத்தில் கொள்ளப்படுமாயின் புத்திசாலித்தனமாயிருக்க முடியாது. தேசிய இனவிடுதலைக்கு உறுதியான, தெளிவான வேலைத்திட்டத்தை வகுத்து போராடுவதோடு கொள்கையளவில் முழு இலங்கைக்குமான வேலைத்திட்டத்தைக் கொண்டிருந்தால் வரலாற்றில் இணைந்த போராட்டத்தைக் கொண்டிருந்தால் வரலாற்றில் இணைந்த போராட்டத்துக்கு வாய்ப்பாகக் கூடும். பிலிப்பையின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜக்கிய முன்னணிக்கு வந்த மிந்தனா விடுதலை இயக்கத்தை சிறப்பாக சுட்டிக் காட்டமுடியும்.

 

நமது விடுதலையில் அனைத்து சிங்கள மக்களின் விடுதலை தங்கியுள்ளதா? அல்லது நமது விடுதலையோடு சிங்கள மக்கள் இணைவார்களா? என்பது காலத்தாலும் சிங்கள, தமிழ் புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியுடன் தலைமையின் சரியான வழிகாட்டலுடன் சாத்தியப்படலாம்.

 

சுயநிர்ணய உரிமையை முன்நிறுத்துகையில் தேவைப்படும் போது பிரிவினையும் அதன் உள்ளடக்கமே. ஆனால் பிரிவினையை எப்போதும் சுயநிர்ணய உரிமை முதன்மைப்படுத்தவில்லை. சுயநிர்ணய உரிமை பற்றிய பிரக்ஞையில்லாத(ஜ-தே-க) போன்ற அரசிடம் எவ்வகையில் சுயநிர்ணய உரிமை சாத்தியமாகும்? சோவியத் ஒன்றியம் புரட்சியின் போதும், புரட்சியின் பின்னரும் பரஸ்பரம் சுயநிர்ணய உரிமை பற்றிப் புரிந்து கொண்டே இணைந்திருந்தன. முதலாளித்துவ மீட்சியால் தேசிய இனங்களுள் முரண்பாடு ஏற்பட்டதும்,, தேசிய இனங்களின் தனித்துவமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய பிரக்ஞை பூர்வமாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து உருவாக்கப்கட்டடிருந்த அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்துக் குடியரசுகளும் சுயமாகப் பிரிந்து சென்றது. (இன்றைய முதலாளித்துவ வெகுசனத் தொடர்புசாதனங்கள் ஜெல்சின் சோவியத் குடியரசுகட்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததாகப் பிதற்றுவதில் எவ்வித உண்மையுமில்லை). இன்றைய இந்தியாவில் அனைத்துத் தேசிய இனங்களும் அடங்கிய ஒரு புரட்சியின் மூலமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியும். புரட்சி சாத்தியமில்லாத பட்சத்தில் காஸ்மீர், பஞ்சாப், அசாம் போன்ற அனைத்து மாநிலங்களும் பிரிவினையின் மூலமே சுயநிர்ணய உரிமையை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

 

ஜக்கிய இலங்கை பற்றிக் குறிப்பிடும் சிலகுழுக்களும் சஞ்சிகைகளும் குறுங் குழுவாதமும், குறுந்தேசிய வாதமும் போன்ற பதங்களை தமிழ் மக்களின் அரசியல் மீது பிரயோகித்து தங்கள் கலப்பு இடதுசாரி தனத்தைக் காட்ட முனைகின்றனர். தமிழ் மக்கள் இந் நிலைக்குத் தள்ளப்பட்டதையும், இன்றுள்ள அரசியல் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளாது இவர்கள் எழுதுவது கவலைக்குரியதாகும். நாம் மிகவும் அவதானமாக ஆராயவேண்டிய விடயங்களை எப்போதும் விளையாட்டாகக் கருதிவிட முடியாது. தமிழ்தேசிய இனவிடுதலைப்போராட்டத்தில் நடந்த பாரதூரமான பிழைபாடுகளும், தோல்விப்பாதையும், பல்தேசிய விடுதலை விரும்பும் தீவிரவாத இடதுசாரிகளை உருவாக்கியுள்ளது. புலிகள் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போதும் தமிழ் மக்கள் சார்பிலிருநது முற்போக்கு சக்திகளால் பல கோணங்களில் கண்டனங்களும் விமர்சனஙகளும், தீர்வும், வருவது கண்கூடு. யுத்தநேர்மையின்றி இராணுவம் பல தமிழ்கிராமங்களுக்குள் புகுந்து பெண்களையும் குழந்தைகளையும் வெட்டியும் சுட்டும் கற்பழித்தும் பயங்கரவாதம் செய்தமை கிராமம் கிராமாக பல தடவைகள் நடந்துள்ளன. இதை எதிர்த்து எந்தவொரு சிங்கள இடதுசாரிக் கட்சியோ, முற்போக்கு சக்திகளோ அல்லது எந்தவொரு தனிமனிதனோ குறைந்த பட்சம் எதிர் அறிகையை, விட்டதில்லை என்பதை சற்றுக் கவுனியுங்கள். இது போன்றே ஜீகாத் போன்ற இயக்கஙகள் தமிழ்மக்களைக் கொல்லும் போது இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியோ, அமைப்போ, தனிநபரோ கண்டனம் செய்யவில்லை. (1983 காலகட்டங்களில் தமிழ் இளைஞர்கள் தங்கள் தங்கள் எதிரிகளை கொன்ற போது கூட்டணியினரின் மௌனம் போன்றதே.) இதிலிருந்து நாம் உணரக்கூடியது யாதெனில் தமிழ்மக்கள் இடதுசாரி அரசியலில் சிங்கள, முஸ்லிம் மக்களிலும் பார்க்க சற்று வளர்ச்சியடைநதுள்ளனர் என்பதே. நாம் இப்படி எழுதுவதையிட்டு தமிழ்க்குழுக்களின் நடவடிக்கைகளையோ, அரசியலையோ நியாயப்படுத்துவதாக யாரும் தவறாக நினைக்கக் கூடாது. இம்முரண்பாடு தீர்ந்து சமன்பாடு ஏற்படும் போதே ஜக்கிய முன்னணியாவது ஏற்படலாம் என்பதே எமது கருத்து. பாரம்பரியத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்ற, பாட்டாளி வர்க்க சக்திகளது பலவீனத்தன்மை, நாம் அகநிலையாக எவ்வளவு விருப்பம் கொண்டாலும் தமிழ்ப் பிரதசங்களில் தனியே பாட்டாளி வர்க்ககட்சி புரட்சியைத் தலைமை தாங்கும் சக்தியாக உருப்பெறுமா? என்னும் இக்கேள்வியை நாம் மார்க்ஸ் குறிப்பிட்ட கூரிய வர்க்க முரண்பாட்டை கொண்ட பாட்டாளி வர்க்கம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்னும் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டே குறிப்பிட்டுள்ளதாக நாம் கருதுகிறோம். இக்கேள்வியில், கூரிய வர்க்க முரண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இல்லையென்பது உண்மையே. வர்க்கப் புரட்சி புறவயமாக சாத்தியமில்லை என நாம் கருதிவிடமுடியாது. இவ் அவசியத்தை முடுக்கிவிடும் கட்சியும், உறுதியான தலைமையுமே குறையானது. இதை நாம் மிகவும் எளிமையாக ஆராய்வோமானால் தற்போதைய தமிழ்ப்பிரதேச அரசியல் நல்ல சான்று பகரும். தமிழீழப்போராட்டத்தின் ஆரம்பம் தமிழ் தரகு முதலாளிகளின் தேவையை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது. காலப் போக்கில் வளர்ச்சியடைந்த ஆயுதப் போராட்டம் இதைச் சற்று மலினப்படுத்தியது. ஆயினும் வர்க்க நலன் பேணுவதாகக் காட்டிக் கொண்ட சில இயக்கங்கள் கூட உழைக்கும் மக்களைக் கட்டவோ, அரசியல் மயப்படுத்தவோ முன்வராமல் மார்க்சிய (முத்திரை) இயக்கங்களாக சீரழிந்து அதிகாரத்தில் மாத்திரம் குறியாகவிருந்தன. (என்-எல்-எவ்-டி-, பி-எல்-எவ்-டி-, தீப்பொறி போன்ற அமைப்புக்களில் நல்ல சக்திகள் இருந்ததை நாம் உணருகிறோம். இவ் அமைப்புக்கள் எவ்வித அதிகாரத்தையும் கைப்பற்றாததால் இவர்களை எதுவித கணிப்பிலிருந்தும் தவிர்க்கிறோம்) ஆனால் தற்போது தரகு முதலாளித்துவ பாசிச (த-ஈ-வி-பு) யிடம் போராட்டத்தலைமை ஏகபோகமாகியுள்ளது. நிகழ்கால போராட்டத்தலைமையைத் தவிர்ந்த போராளிகளை நீங்கள் கணிப்பீர்களானால், கணிசமான உழைக்கும் இளைஞர்கள் போராடுகின்றனர்.

 

யாழ்குடாநாட்டில் உள்ள நடுத்தரவர்க்கமும் அதிலிருந்த மேல் வகுப்பினரும் மேற்கத்தைய நாடுகளை நாடி ஓடுகின்றனர். அங்கே சாதியடிப்படையில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளோரும், வறிய கூலி விவசாயிகளும் உதிரி தொழிலாளிகளுமே உள்ளனர். இவை தவிர மன்னார் தவிர்ந்த வடமாகாணம் தவிரவுள்ள பகுதிகளிலுள்ள வறிய கூலி விவசாயிகளின் பிள்ளைகள் (இளைஞர்கள்,யுவதிகள்) மீன்பிடி அன்றாடக்கூலிகள், கற்குவாறித் தொழிலாளர் போன்றோரே அதிகாமாயுள்ளனர். (குறிப்பாக கிழக்குமாகாணம்)வெளிநாட்டுப் பொருளாதாரத்தை நம்பியுள்ள, வாழ்நிலையில் சற்று உயந்தோரின் இளம் சந்ததியினர் யாழ் குடாவை விட்டு பா}ஸ் பெற்றுக் கொண்டு வெளியேறும் இவ் வேளையில், நாதியற்ற, வாழ்வா,? சாவா? என நித்தம் எதிர்பார்க்கும் தங்கள் அன்றாட உழைப்பைப் பறிகொடுத்த, கிழக்கு பிரதேச இளைஞர்கள், யுவதிகள் குடாநாட்டுக்குள் நுழைந்து ஆயுதபாணியாகின்றனர்.

 

விரும்பியோ விரும்பாமலோ போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இவ்வர்க்கத்தின் போர்க்குணாம்சத்தை புலிகள் நன்கு சாதகப்படுத்தியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளுவது அவசியம். இங்கே உழைக்கும் வர்க்கம் போர்முனையில் நின்று பாசிச அதிகாரவர்க்கத்தின் பாதுகாப்பு யுத்தத்தை நடத்தி அரசோடு பேரத்தை நடத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இங்கே பாட்டாளி வர்க்கம் தனது விடிவுக்குப் போராடவேண்டியதை நெறிப்படுத்த ஒரு கட்சி இல்லை என்பதே குறை. இயல்பாகவே இவ்வர்க்கம் போர்முனையில் பலமுள்ளது என்பது நிதர்சனம். இந்தியாவில் மார்க்ஸ் குறிபிடப்பட்ட பாட்டாளி வர்க்கமும் கூர்மையான முரண்பாடும் உண்டு. ஆனால் புரட்சி நடக்கவில்லை. இவ் வர்க்கம் இருந்தால் மாத்திரம் போதாது. தட்டி எழுப்ப நல்ல கட்சியும் தேவை என்பதே இங்கு அவசியம். (மேற்குறிப்பிட்ட பகுதியை வாசிக்கும் வாசகர்கள் தூண்டில் 40 இல் ஜக்கிய இலங்கை சாத்தியமா? என்ற கட்டுரையையும் சேர்த்து வாசிக்கவும்.)

சமர் 8 - 1993

Last Updated on Thursday, 11 December 2008 12:13