Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வன்னியனுக்கு ஒரு சிறு குறிப்பு

வன்னியனுக்கு ஒரு சிறு குறிப்பு

  • PDF

நட்புடன் அனைவருக்கும்


காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்ய+ட்டர் நுணுக்கங்கள், கள்ள வேலைகள் என எல்லாம் தெரிந்து கொண்டு விவாதத்தில் ஈடுபடுவதும் கிடையாது.

 தமிழ் மணம் விவாதங்களை பலதளத்தில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தால் நாம் இதில் பதிவிடுகின்றோம். இதில் 95 சதவீதமானவை சமூகத்துடன் தொடர்பற்ற தனிமனித பொழுது போக்குகள்.



இதற்கு வெளியில் நாம் தனியாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இணையம் ஒன்றை நடத்தி வருகின்றோம். இதுவரை பத்து நூல்கள் எழுதியுள்ளேன். ஒரு சிறு சஞ்சிகை 31 இதழ்கள் கொண்டு வந்துள்ளோம். 1000 கட்டுரைகளுக்கு மேலாக எழுதியுள்ளேன். இந்த நிலையில் விவாதத்தில் கருத்து பரிமாற்றத்துகே எமக்கு நேரம் இல்லாதபோது, இதைவிட்டுவிட்டு இது திருட்டா அல்லது போலியா என்று பொழுது போக்காக நாம் இணையத்தில் தேடி அலைவதில்லை.



விவாதத் தளத்தில் எது பொய் பதிவு எது உண்மை பதிவு என்ற அலட்டிக் கொள்வதில்லை. என்னை தூசணத்தால் துற்றிய போது கூட, அதையிட்டு நாம் கவலைப்படவில்லை. இந்த சமூக போக்கு குறித்துத்தான் கவலைப்பட்டேன். எமது நிலை என்பது, இது போன்ற பல அவதூறுகளை நேருக்குநேராக சந்தித்து வந்த வரலாறோடு கூடியது. கல்வெட்டே எனக்கு வெளியிடப்பட்டது. பைத்தியம் என்று ராக்கிங்கு எதிராக போராடியதால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துண்டுபிரசுரம் விட்டவர்கள் தான். அதே பல்கலைக்கழக மாணவர் தலைவனாக பின்னால் என்னை அவர்களே தெரிவு செய்து, பல வீரமிக்க போராட்டங்கைள நடத்தியவர்கள். இணையத்தில் ஒலிப் பகுதியில் இதை கேட்கமுடியும்;. புலியின் வதைமுகாமில் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி வந்தவர்கள்; நாம். விவாதத் தளத்தில் சம்பந்தப்பட்டவர் யார், அவரின் பின்னனி என்ன, அவர் போலியா என்று ஆராய்வது கிடையாது. விவாதத்தில் ஈடுபடும் போது, அது என் வேலையுமல்ல. வரும் கருத்தை, அதன் உள்ளடகத்தை புரிந்து ஏற்றுக் கொள்வது அல்லது மறுத்து விவாதிப்பது மட்டும் தான் எனது கடமை.

 

குறிப்பாக அன்று காசி பெயரில் வந்த செய்தியை பார்த்தவுடன், அதையிட்டு நான் அதிர்ச்சியடையவில்லை. டோண்டுவின் கருத்து நிலை அதை அனுமதிக்கின்றது. இது சாத்தியமானது. ஏன் டோண்டு அதற்கு விதிவிலக்கு! டோண்டுவின் கருத்தை நான் இன்றும் சரியாகவே புரிந்துள்ளேன்;. அதை மறுத்தால், அதை புரிந்து கொள்ளாத எனது நிலைக்காக நான் சுயவிமர்சனம் செய்ய முடியும். போலி காசி கூறியதையே, டோண்டுவின் கருத்தை உண்மையாக நடைமுறை வாழ்க்கையில் ஏற்றுக் கொள்பவர்கள் தமது வாழ்வில் நடைமுறையிலும்; கொண்டிருப்பார்கள்.

 

இது உலகில் அன்றாடம் நடக்கின்றது. டோண்டு ஏன் விதிவிலக்கு!. இந்த வகையில் அவர் தான் ஆதரித்த கோட்பாட்டின் நடைமுறைவாதி என்றே நான் நம்பினேன். அந்த அடிப்படையில் கேள்வி எழுப்பினேன்.


இது போன்ற பாலியல் உறவுகள் உலகமயமாதல் ஆணாதிக்க உறவு வகைப்பட்டது. தனிமனிதன் சமூகத்தில் இருந்து விலகி தனது குறுகிய வட்டத்தில் தன்னை வக்கிரப்படுத்தும் போது, இது இயல்பாக வெளிப்படுகின்றது. இதை அவர்கள் தமது வாழ்வின் கோட்பாடாக கொள்வர். இதை டோண்டு கோட்பாட்டு ரீதியாக ஆதரித்த போது, எனது தர்க்கமான வாதம் நியாயமாகவே எழுந்தது. ஆனால் இந்த வகையான ஆணாதிக்க கோட்பாட்டை எதிர்த்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. தனிப்பட்ட பாலியல் உறவுக்குள் நாம் சமூக மாற்றமின்றி தலையிடுவதில்லை. சமூக மாற்றத்தின் ஊடாகவே சமூகம் தலையிடுகின்றது. அதாவது கடவுளை வழிபடும் தனிமipத உரிமையில் நாம் சமூக மாற்றமின்றி தலையிடுவதில்லை. ஆனால் மதக் கோட்பாடுகளையே நாம் எதிர்கின்றோம். அது போல் ஆணாதிக்க பாலியல் கோட்பாடுகளையும் எதிர்கின்றோம். தனிமனித விடையங்கள் சமூக உறவுடன் சம்பந்தப்பட்டதால், சமூக மாற்றத்துடன் தான் தனிமனித நம்பிக்கைகளையும் மனித உறவுகளையும் மாற்ற முனைகின்றோம். கோட்பாட்டு ரீதியான எதையும் எதிர்கொண்டு விவாதிக்கின்றோம்.


அந்த வகையில் சமூகத்தில் விவாதத்தையும், நடைமுறை போராட்டத்தையும் தொடக்குகின்றோம்.
இரண்டாவது விடையம் இதை டோண்டு அவசரமாக ஆட்சேபித்து. அத்துடன் ஆட்சேபித்த விதம். இதில் ஒரு அதிகார வர்க்கத்தின் சமூகத்திமிர் இருந்தது. சம்பந்தப்பட்டவர் ஆட்சேபிக்காது, டோண்டு அல்லாத ஒருவர் ஆட்சேபிக்காது டோண்டுவே ஆட்சேபித்தது. இதில் அவர் குடும்பம் சார்ந்தது என்ற வகையில், அதை ஆட்சேபித்து இருந்தால், அது நேர்மை. அதை அவர் செய்யவில்லை. இங்கு நேர்மையாக அவரால் அணுகமுடியாது. அது அந்த வர்க்கத்தின் குணம்;. பொழுது போக்கு வம்பளப்பவர்கள் தான் இவர்கள். அவர் காசியின் பெயரில் இருப்பதை மட்டும் ஆட்சேபித்தார். முரண் இங்கு தான் உள்ளது. அவர் தானும், தன் குடும்பமும் கூட, தான் சொன்ன கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை சொல்ல மறுத்த போதே, அவரின் நேர்மையீனத்தை அம்பலமாக்கும் வகையில் இதை எடுத்துக் காட்டினேன்.

 

நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். இதுவரை யாரும் பதலளிக்கவில்லை. போலிக் காசி பெயரால் இடப்பட்ட செய்தி மறுபடி பிரசுரித்தால், டோண்டு அதற்கு பதிலளிப்பாரா! கேள்வி இங்கு நேரடியானது. அவர் சொன்ன கருத்துக்கு உட்பட்டது. அது சராம்சத்தில் அவர் கூட அவர் குடும்பத்தின் சார்பாக பதிலளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெண்கள் தான் பதிலளிக்க வேண்டும். உடனே மீண்டும் பார்ப்பன சதி போல் திருத்தம் செய்ய முனைகின்றார். விதவை, விவாகரத்து செய்தோர் போன்ற பெண்கள் திருமணம் செய்யக் கூடாதா என்று தன்னையே திரிக்கின்றார். எமது விவாதம் குஷ்பு சொன்னது பற்றியது.

 

பெண்ணின் தெரிவு பற்றி பல கட்டுரைகள், எனது இணைத்தில் பார்க்கமுடியும். எனது பதிவின் கீழான கருத்துதளத்தில் காட்டுமிராண்டி சமூகத்தில் பெண் எப்படி வாழ்ந்தாள் என்ற ஒரு பகுதியை இரண்டு தரம், விவாதிக்க துப்பில்லாமல் போட்டு இருந்தனர். அந்தக் கருத்து கூட எனது கட்டுரையில் எடுக்கப்பட்ட எனது கருத்துதான். பெண்கள் சமூகத்தை விரிவாக ஆராய்ந்த 1000 பக்கம் கொண்ட மூன்று நூல்களை எழுதியுள்ளேன்.


நான் ஆணாதிக்க ஏகாதிபத்திய விபச்சார பாலியல் வகையையோ, அடிமைத்தனமான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க வாழ்வை எதிர்த்து போராடும் வகையில் தான், ஆண் பெண் உறவை, அதாவது இணையான வாழ்வியலை முன்னிறுத்தி வருகின்றோம்.

 

மூன்றாவது சொற்களை எழுதுவது தொடர்பாக. உதாரணமாக கற்பு என்ற சொல்லை பயன்படுத்தினால் அதை ஆணாதிக்கம் என்று கூறுவோர் உள்ளனர். இவைகள் உங்கள் பார்வை. ஆனால் எங்கள் பார்வை வேறானது. இது பற்றி எல்லாம் பல கட்டுரைகள் நான் எழுதியுள்ளேள். இணையத்தில் அவற்றை பார்வையிடலாம். தர்க்க ரீதியான எனது வாதத்தை எடுத்து மறுப்பின், அவை பற்றி விவாதிக்க முடியும்;. இல்லாது சொற் கோவைகளால் குற்றம் சாட்டுவது விவாதமாகிவிடாது.

Last Updated on Friday, 18 April 2008 19:59