Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மூன்றாவது பாதைக்கான திட்டம்

  • PDF

பல வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறோம். இத்திட்டம் முடிந்த முடிவுகள் அல்ல. இத் திட்டத்தில் எம் கருத்துக்கு அப்பால் வேறு சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தையும் இணைத்தே முன் வைத்துள்ளோம். ஏன் எனில்; இவை விவாதத்துக்கு உட்படவும், ஆராய்வை தூண்டவும் உதவும் என்பதால். எனவே இத் திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை சமர் வரவேற்கின்றது.

 


 

-----சமர்--ஆசிரியர் குழு----

 

 

(1) தமிழ் மக்கள் வடக்கு,கிழக்கு பிரதேசங்களை தமது பாரம்பரிய பிரதேசமாகக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு தேசிய இனத்தவர். பிரிந்து போதல் உட்பட சுயநிர்ணய உரிமையுள்ளவர்கள்.


(2) பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறையும் அதன் இருப்பு, நோக்கம் என்பன தேசிய இன வளர்ச்சியை சிதைக்கிறது. இந்த திட்டமிட்ட இன அழிப்பிலிருந்து விடுபட தமிழ் மக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


(3) தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம்.

 

அ) தேசிய உரிமையை வென்றெடுக்க உறுதியாக விட்டுக் கொடுக்காது போராடுதல்.

 

ஆ) இலங்கையரசு, பிராந்திய வல்லரசு, மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்வதனூடாகச் சாதிக்க முடியாது.

 

(இ) மக்களது ஜக்கியத்தாலும், உறுதியாலும், அரசியல் பலத்தாலும் உருவாக்கப்படும் மக்கள் யுத்தத்தால் மட்டும் சாத்தியம்.

 

ஈ) தமிழ் தேசிய இனத்தின் அனைத்து ஒடுக்க்பபட்ட வர்க்கமும் இணைந்து, அவற்றிற்கு இடையேயான முரண்பாட்டைத் தேசிய முரண்பாட்டிற்கு கீழ்ப்படுத்தி சிநேககபூர்வ வழிகளில் கையாளுதல்.

 

உ) போராட்டத்தில் ஜக்கியப்படுகிற அனைத்துப் புரட்சிகர வர்க்கப்பிரிவினரும் தமது சொந்த நலன்கள் அடிப்படையில்ஐதமக்கான தனித்துவமான ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கும் ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும், ஆயினும் இந் நலன்கள் ஜக்கிய முன்னணியின் குறிக்கோள்களை பாதிக்காவண்ணம் அதன் நலன்களுக்குக் கீழ்ப்பட்டு அணுகப்படுவதாகவும், தனது வளர்ச்சிப்பாதையை வகுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும்.

 

(2)

1-முஸ்லீம் மக்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ, அல்லது அதற்குக் கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது, அவர்கள் தனியான ஒரு தேசிய இனத்தவர்கள். இவர்கள் எமது போராட்டத்தில் ஊக்கமிகு பங்காளிகளுமாவர். இவர்களிற:;கான அரசியலதிகார அமைப்பு முறைகள் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்டவையாக அமைதல் வேண்டும். அவர்கள் ஜக்கியப்படுவதற்கு மேலாக அவர்களது இணைவு குறித்த முடிவு அவர்களது சுயநிர்ணய உரிமையாகும்.

 

2. மலையக மக்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ அதற்கு கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது, அவர்கள் தனியான ஒரு தேசிய இனத்தவர்கள். இவர்கள் எமது போராட்டத்தில் ஊக்கமிகு பங்காளிகளாக இருப்பர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் அவர்களது சொந்தப் பிரதேசங்களில் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்டதும், அவர்களது இன உருவாக்கத்தை வளர்த்தெடுப்பதுமான அரசியலதிகார அமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும்.

 

(3) 1. சிங்கள மக்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளோ, தமிழ் மக்களின் எதிரிகளோ அல்லர். அவர்களும் எமது பொது எதிரியால் ஒடுக்கப்படுபவர்களே. ஆயினும் தேசிய ரீதியில் சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைப்போக்கினைக் களைந்தெறியாத வரை அவர்கள் நமது போராட்த்தின் நியாயத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்களை அந்தச் சிந்தனையில் இருந்து விடுவிக்க, நாம் எமது போராட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு உதவ முடியும். சிங்கள மக்கள் தற்போது ஒருவகை மறைமுக சேமிப்புச் சக்திகளாவர்.

 

2. தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தின் வளர்ச்சியில், எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் போக்குடன் சிங்களமக்கள் மத்தியில் இருந்து மக்கள் ஆதரவு உள்ள புரட்சிகர எழுச்சி ஏற்படும் பட்சத்தில் தமிழீழம் அல்லது தனிநாடு என்ற கருத்து மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதுடன், ஜக்கிய இலங்கைக்கான புரட்சிக்காக போராட வேண்டும்.

 

(3) இந்திய வல்லாதிக்க அரசு தமிழ் தேசிய விடுதலையினதும், இலங்கையின் சுயாதிபத்தியத்தினதும் எதிரியாக இருப்பதும் கூட அதனுள் ஒடுக்கப்படும் இந்திய மக்களும், அவர்களின் புரட்சிகர அமைப்புக்களும் எமது நட்பு சக்திகளே. அவர்களது ஆதரவு எமது போராட்டத்தின் வெற்றிக்கு கணிசமான அளவு முக்கியமானது ஆகும்.

 

(5) 1. எமது எதிரிகளையும், நண்பர்களையும் இவ்வாறு வகைப்படுத்தலாம்.

 

அ) இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு தமிழ் தேசிய இனத்தின் முதல் எதிரி.

 

ஆ) இந்தியவல்லரசு, எதிரியின் கூட்டாளியும், எமது பிராந்திய எதிரியுமாகும்.

 

இ) அமெரிக்க தலைமையிலான இன்றைய சோவியத் உள்ளிட்ட ஏகாதிபத்திய கூட்டினர் எமது சர்வதேச எதிரிகளாவர்.

 

ஈ) இலங்கை நவகாலனிய அரைநிலப்பிரபுத்துவ அமைப்பாகும், தமிழ்தரகுமுதலாளிகளும், தமிழ் நிலப்பிரபுக்களும், எமது எதிரிகள். இவர்கள் போராடுவது போல் செயற்பட்டாலும் இவர்கள் திட்டமிட்டு போராட்டத்தை அழிப்பவர்கள்.

 

2 . அ) தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்படும் தமிழ் தேசிய வர்க்கங்களும் எமது சக்திகளாவர்.

 

ஆ) முஸ்லீம், மலையக மக்கள் எமது உறுதியான நண்பர்களும் பங்காளிகளுமாவார்.

 

இ) சிங்கள மக்கள் நமது மறைமுக சேமிப்புச்சக்திகளாவர். இந்திய மக்கள், தமிழ் நாட்டு மக்கள் எமது மறைமுக சேமிப்புச்சக்திகளாவர்.

 

3. அரசியல் கட்சிகள்

அ) தமிழர் விடுதலைகூட்டணி, தமிழ்தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதித்துவவப்படுத்தும் பிரிவினர்

 

ஆ) தமிழீழ விடுதலைப்புலிகள்

 

தமிழ்முதலாளித்துவப் தேசியவாதப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அல்லது தமிழ் தரகு முதலாளித்துவ நிலப்பிரிவினரைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள்.

 

இ) பிற தமிழ்கட்சிகள்

 

1- இக்கட்சிகளின் வர்க்க அடிப்படை குட்டி பூர்சுவா அடிப்படையே. போராட்டத்துக்கு துரோகம் இழைத்ததுடன் இவர்களுடைய தேசியவாதம் தமிழ்த்தரகு முதலாளிய தேசிய வாதத்தினை விட முன்னேறியதல்ல.

 

2- இவர்கள் தமிழ் தரகு முதலாளித்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கள தரகுமுதலாளித்துவ பிரிவுடன் சமரசத்துக்கு சென்று இன்று துரோகிகளாக மாறியுள்ளனர்.

 

ஈ) சிறு குழுக்கள் தமிழ்தேசிய விடுதலையில் ஈர்க்கப்பட்ட குட்டிப்பூர்சுவா வர்க்கத்தின் புரட்சிகரப் பிரிவினைக் கொண்டுள்ள இக்குழுக்கள் போக்கிடமற்றவையாக உள்ளன இவர்கள் புலிகளுடன் அல்லது புலிகளின் எதிர்ப்பு முகாமுடனே நட்புக்கொள்ளும் போக்குகளை கொண்டுள்ளன. சரியான அமைப்பு உருவாகில் அதனுடன் கூட்டு சக்திகளாக இணைவர்.

 

(6) 1- நாம் மேற்குறிப்பிட்ட விடயத்தை வென்றெடுக்க கையாளும் வழிமுறைகள்.

 

அ) எதிரிகளை அம்பலப்படுத்துதல்.

 

ஆ) பாதிவழிக் கூட்டாளிகளின் தவறுகளை இனம் காட்டுதல்.

 

இ) ஊசலாடும் நம்பகமற்ற கூட்டாளிகளை இனம் காட்டுதல்.

 

ஈ) ஊசலாடும் துரோக நிலையேடுத்தோரின் அரசியல் துரோகத்தை இனம் காட்டி அதன் அணிகளை வென்றெடுத்தல்.

 

உ) ஊசலாடும் புரட்சிகர அணிகளை வென்றெடுக்க போராடுதல்.

 

2- அ) பாராளுமன்றப் பாதையை, சமரசத்தை, பேச்சு வார்த்தை முலம் பிரச்சனை தீர்க்கப்படலாம் என்னும் போக்கை அம்பலப்படுத்துதல்.

 

ஆ) கடந்தகாலப் போராட்ட அனுபவங்களை கேள்விக்குள்ளாக்குதல்.

 

இ)- போராட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்துதல், விவாதித்தல்.

 

ஈ). ஆயுதப் போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்ற பொது அடிப்படைக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல்.

 

 

Last Updated on Friday, 02 January 2009 19:40