Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மக்களை திசை திருப்பும் எதிரியை நோக்கி

  • PDF

பறையன் = அரியன் ஆகிவிடுவனா?, பறையன் = தலித் ஆகிவிடுவனா? இல்லை ஒருக்காலுமில்லை. ஆணால் அரிசன் = தலித் ஆக இருக்கின்றன் சில பண்பியல் வேறுபாட்டுடன். பறையன் என்ற கட்டமைப்பு உயர்சாதி ஓடுக்குமுறைக்கு

உடாக படிமுறை சாதி ஒடுக்குமுறைக்கு உட்பட்டதை வேறு பெயரில் சாதி ஒடுக்குமுறையை நீக்கக்கோராத பெயர் மாற்றம், சலுகை கோரல் போன்ற கபடம் பறையர் பெயரில் நக்கிப் பிழைப்பதுதான்.


சாதி ரீதியில் தொட்டாலே தீட்டு என்ற நிலையில் மரணதண்டனை வரையுள்ள இம்மக்கள் தமது விடுதலையை இச்சமூகத்துக்குள் அடைய வேண்டுமாயின் சாதியைக் கடந்த போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும். தலித் என்ற வடிவம் சாதியைக் கடந்த வடிவத்தைக் கோராவில்லை. மாறக தலித் என்ற கட்டமைவு சாதி எற்றத் தாழ்வை பேணியபடி, உயர்சாதி ஒடுக்கமுறைக்கு எதிராக வரையறுக்கப்பட்ட போராட்டங்களை சாதியை பாதுகாத்தபடி சலுகை கோரி நடத்தமுயல்கின்றது. இது அனேகமானவை சாதி சண்டையாக, கலவரமாக சீராழிகின்றது.

 

சாதிக்கட்டமைப்பு என்பது பார்ப்பானியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வேர் எல்லா சாதிக்குள்ளும் இறுக்கமாக கால் ஊன்றியுள்ள நிலையில், எல்லாச் சாதிகளும் இதில் எதோ ஒரு பகுதியை நியாயப்படுத்தி பாதுகாக்கின்றது.

 

சாதி கடந்த போராட்டம் என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த போராட்டமாக இருக்க வேண்டும். இதில் பார்ப்பனியம் அல்லாத சாதிப் பிரிவோ, தலித் பிரிவோ சாதிக்கட்டமைப்புக்குள் அல்ல சாதியைக் கடந்த போராட்டத்தை பார்ப்பானிய வேர்க்கு எதிராக நடத்த வேண்டும். அதாவது சாதியைக் கடந்த அமைப்பு மட்டும்தான் சாதியை யதார்த்தில் ஒழித்துக் கட்டும். இது எல்லாச் சாதிக்குள்ளும் உடுருவியுள்ள பார்ப்பனிய  சிந்தனையை தகர்க்கும் போராக எழுகின்றது.


பார்ப்பனிய சாதிக்குள் உள்ளவர்கள் தமது பார்ப்பனிய சிந்தனைக்கு எதிராக போராடி அடிமட்ட சாதிகளுடன் சாதியைக் கடந்து இணைய வேண்டும்.

 

இங்கு தலித், சாதி என்ற கட்டமைப்பின் எல்லாப் பார்ப்பனிய சிந்தனையைக் கடக்கும் போராட்டத்தை திட்டவட்டமாக மறுக்கின்றது. தலித் தலித்துக்குள் பார்ப்பனியச் சிந்தனையையும், சாதிய அமைப்பையும் திட்டவட்டமாக பாதுகாக்கின்றது.

 

அன்று காந்தி தாழ்ந்த சாதிகளை ஏமாற்றி சுதந்திரப் போராட்டத்தில் பார்ப்பனியம் சலுகைபெற அரிஜன் எனப் பெயர்மாற்றி சலுகை பெற்றதுடன் சில அரிஐன்களும் பிழைத்தது போல் தலித் பிரிவில் சிலர் பிழைக்க முனைகின்றனர்.

 

பறையர் தலித்துக்குள் அடிமட்ட சாதியாக இருக்கவும் தொட்டால் தீட்டு என வாழவும் விதியாக இருக்க வைக்கும் தொடர் முயற்ச்சிதான் தலித் கோசம். இந்த தலித் மோசடியை எதிர்க்கும் போது நாம் சாதி கடந்த அமைப்பை போராட்டத்தை சாதி ஒழிப்பில் முன்வைத்து திவிரமாக போராடக் கோருகின்றோம்.


...

 

சிலர் எழுதுவது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எனச்சபதம் எற்றாற்; போல் அதற்காகவே தேடியலைந்து எழுதுகின்றனர். அம்மா 6இல் "ஒடிபஸ் ஸ்டாலின்" என்ற கதையை சேணன், வின்சனால் மொழிபெயர்ப்புச்செய்யப்பட்டிருந்தது.

 

யதார்த்தில் மக்களையிட்டு எப்படி என்ன வகையில் அவர்களின் துயரத்துக்கும் துன்பத்துக்கும் தீர்வுவைக்கின்றனர் எனக் கேட்டால் எதுவுமில்லை. ஆனால் அந்தமக்ளுக்காக போராடியவர்கள் மீதும், அந்த தத்துவத்தின்மீதம் தாக்குதல் என தேடி எடுத்து தாக்கும் நோக்கம் தெளிவானது.
ஒடுக்கப்பட்டமக்களின் போராட்டப் பாதையில் நிகழ்ந்திருக்க கூடிய தவறுகளை விமர்சிக்க முடியும். ஆனால் விமர்சிப்பவன் முதல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாக எதை எப்படி என்ன தத்துவத்தில் முன்வைக்கின்றான்; என்பதைத் தெளிவாக்க வேண்டும். இல்லாத அனைத்தும் இந்த முதலாளித்துவ எச்சில்களே. ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு இன்று மார்க்சியம் மட்டும் உள்ளதால் அதை ஏற்பவர்கள் போராட்டத் தவறுகளை மிகச் சரியாக இனம் கண்டு எதிர்மறையில் கற்று முன்னேறுகின்றனர்.

 

சேனன், வின்சனின் மொழிபெயர்ப்புக் கதை முதலாளித்துவ மீட்சிக்கான சக்திகளை ஸ்டாலின் ஒடுக்கியதை ஒருமனநோயாளியின் செயலாக, உளவியல் சிக்கல் பிடித்த நபரின் செயலாக காட்டுவதன் மூலம் முதலாளித்துவ மீட்சிக்காக அதே கனவுடன் அதே விருப்புடன் மொழிபெயர்த்திருக்கின்றனர்.

 

மக்களைச் சுரண்ட அதற்க்காக நிற,மத, இன,........எனப் பிளந்து கோட்பாடுகளை முன்வைப்பதை எல்லாம் ஐஜனநாயக உரிமையாக காணும் இக்கதை, ஸ்டாலினைப் புகழ்வது போல் நடித்தபடி வைப்பதுதான் இதில் மோசடியாகும். அதாவது சிவப்புக் கொடியை ஆட்டியும், லெனின் பெயரால் எப்படி சீனா, சோவியத்தில் முதலாளித்துவம் அரங்கேறியதோ அதையே இக்கதை அரங்றே;ற விசுவாசமாக தேடியெடுத்து மொழிபெயர்த்திருக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் ஒடுக்கப்பட்டமக்கள் கதைகளை மொழி பெயர்த்தால் இவர்களின் மக்கள் (ஆள்வோர்) கோவித்துக் கொள்வார் என்றுதான் விசுவாசமாக களம் இறங்கியுள்ளனர். உலகில் இன்று உலகமயமாதல் வேகம் பெற்று அது இராணுவ தாக்குதலாக தேசிய எல்லை கடந்துள்ள நிலையில், அவைகளை எதிர்த்துப் போராட ஒரு துரும்பைத் தன்னும் எடுக்கத் தயாரற்ற நிலையில், அதை எதிர்த்து போராடியவர்களை எதிர்ப்பதில் வர்க்க விசுவாசத்துடன் செயல்படுகின்றனர்.

 

இது போன்ற கதைகள் சோவியத் மக்கள் அனுபவித்த அடிப்படை தேவைகளை பறித்தெடுத்த வரலாற்றை எமக்கு விட்டுச் சென்றுள்ளது. எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வீடு, பெண்களின் அடிப்படை உரிமைகள், சிறுவர் பராமரிப்பு பாதுகாப்பு உத்தரவாதம், வயோதிபருக்கான அடிப்படை உரிமை .....என நீளும் மக்களின் அடிப்படை உரிமைகளை இது போன்ற கதைகள் ஊடாக பறிபோனதை நாம் முதலாளித்துவ மீட்சியின் பின் இன்று சோவியத், சினாவில் யதார்த்தமாக கண் உள்ளவர் கணமுடியும். இது போன்ற கதைகள் எம் நாடுகளில் அதற்காக போராடுவதை மறுதலிக்கும் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர்.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட முடியாத, படைக்க முடியாத, எழுத முடியாத, மொழிபெயர்க்க முடியாத எல்லோரையும் இனம் காண்பது கூட போராட்ட அனுபவமாக, பாதையாக உள்ளதை இனம் கண்பது போராட்ட வெற்றிக்கான பாதையாக  மறுபுறத்தில் சமூக அக்கறையோர் முன் உள்ளது.

Last Updated on Friday, 18 April 2008 18:10