Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம்

அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம்

  • PDF

ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.

பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘‘பொருள்-வெளி-இயக்கம் என்பவைகள் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள்.

பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், இன்று பெருவாரியான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வது ‘பெரும்வெடிப்பு (bigbang) மற்றும் ‘அடிப்படை துகள்பிணைப்பு’ கொள்கைகளைத் தான்.

‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள்திணிவு பந்திலிருந்து(bigbang) வெடித்துசிதறி பறந்து விரிந்தது தான் இந்த பிரபஞ்சப்பொருட்களும் இயக்கங்களும்’’ என சிலவிஞ்ஞானிகளும், ‘‘பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்ச அடிப்படை துகள்களின் ‘பரஸ்பர ஈர்ப்பு - விலக்கு’ விசைகளினால் உறுவானதே இந்த பிரபஞ்சத்தோற்றம்’’ என சில விஞ்ஞானிகளும் விளக்குகின்றனர். மொத்தத்தில் ‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள் எனும் மூலத்தின் பரிமாற்றங்களும் பரிணாமங்களுமே இப்பிரபஞ்சத்தோற்றம்’’என்பது அறிவியல்துறையின் ஒட்டுமொத்த விளக்கம்.

பிரபஞ்ச அடிப்படைபொருள் எது? அது எப்படிஉருவானது? அதன்இயக்கம் என்ன? இயக்க காரண காரியம் என்ன? இவைகளை கண்டுபிடித்துவிட்டால் பிரபஞ்ச ரகசியங்களையெல்லாம் விளக்கிக்கொள்ளலாம் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.

பிரபஞ்ச அடிப்படை பொருள் எது? என்பதை கண்டுபிடிக்க பொருளை பிரித்துத் பிரித்து மூலக்கூறு, அணு, அணுத்துகள்கள், குவாண்டங்கள், போட்டான்கள் என பல நுணுக்கங்களை கண்டுபிடித்திக்கிறார்கள்.

அணுத்துகள்களுக்கு கீழ்நிலையான குவாண்டங்களைப் பற்றி புரிந்துகொள்வது கடினம். எளிமையாகச் சொன்னால் குவாண்டகளை ‘ஒளித்துகள்கள்’ எனலாம். ஆனால் அதை முழுமையான விளக்கம் என்றிட முடியாது.

ஒளி என்பது ஒத்த கணத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கலாம் என்பது ஒளிதன் அடிப்படை தத்துவம். ஒளியை துகளா அலையா எனநிர்ணயிப்பது கடினம். ஒளியானது துகளாகவும் இருக்கலாம் அலையாகவும் இருக்கலாம் - அது அறியப்படும் அல்லது அளக்கப்படும் கருவிகளைப் பொருத்தது என குவாண்டவியல் இறுதி வரையறை தருகிறது.

பொருளைப் பிரித்தால் அணுக்கள். அணுவைப்பிரித்தால் அணுத்துகள்கள். அணுத்துகளை நுணுக்கினால் குவாண்டங்கள். குவாண்டங்களுக்கீழ் என்ன இருக்கிறது? இதை கருவிகளைக் கொண்டு அறியமுடியாது என்பதை குவாண்டவியல் அறிஞர்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்!

கருவிக்கு கருவி குவாண்டங்களின் தன்மைகள் நிச்சயமற்ற நிலையில் மாறுபடுகின்றன. நிலையை நிச்சயிக்காமல் அதுகுறித்த ஆய்வை அல்லது அறிவை பெறமுடியாது என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது.

‘அறியப்படும் அறிவைப்(கருவியை) பொருத்தே ஒளியின் தன்மை’ என்ற தத்துவம் புரிந்துபோன விஞ்ஞானிகளுக்கு ‘ஒளியின் நிச்சயமில்லாத் தன்மைகளைத் தாண்டி அறிவியல் அறிவை செலுத்தமுடியாது’ என்பதுவே இன்றுவரை கிடைத்திருக்கும் தீர்க்கமான பதில். பொருள் அறிவியலால் ஒளிவரை மட்டுமே பயணிக்கமுடியும். அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம். இதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பொருள் அறிவியல் என்றால் என்ன? அதற்கு அப்பாற்பட்டஅறிவு என்பது என்ன? அது ஏன் அவசியமாகிறது? இதற்கான விளக்கங்களை புரிந்துகொண்டு தொடர்ந்து பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வோம்.

http://tamilarivu.blogspot.com/2008/08/11.html