Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

  • PDF

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் கூட ஆணின் ஒழுக்கக்கேட்டை மடடுமல்ல,

 அதன் பாதையில் பின்தொடரும் பெண்ணின் ஒழுக்கக்கேட்டையும் கூட நியாயப்படுத்துவது நிகழ்கின்றது. ஒழுக்கக்கேடு என்பது இவர்களின் வாழ்வியல் கண்ணோட்டத்தில் எதுவும் கிடையாது. அப்படி எதாவது உண்டு என்றால், தாம் அடக்கியாளும் வர்க்கத்தின் போராட்டங்களைத் தான்.

 

நான் எழுதிய "ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டை கோருவதா பெண்ணியம்?" என்ற கட்டுரைக்கு தமிழ்மணம் விவாதத்தளத்தில் இரண்டு முரணிலையான ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதரவு (டோண்டு, மற்றது உண்மை) கருத்துகள் போடப்பட்டடு இருந்தன. அவை இக் கட்டுரையில் முழுமையாக தரப்படுகின்றன. உலகமயமாதல் விபச்சார பெண்ணியத்தின் வாழ்வியலை போற்றும் இந்த இரண்டு பதிவுகளும், தனது சொந்த முகத்துடன் வெளிவந்துள்ளது. கால்மார்க்ஸ் குறிப்பிட்டது போல் "மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனி மனிதனிடமும் இயல்பாக உள்ளாhந்திருக்கும் சாரம் என்பதல்ல, அதன் எதார்த்தத்தில், அது சமூக உறவுகளின் முழுத் தோற்றம் ஆகும்;" அதையே இந்த பதிவுகள் மீண்டும் பதிவு செய்துள்ளன.

 

இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர். ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பின் முழுத் தோற்றத்துடன், அதன் விபச்சாரத்தனத்தை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதமே முதலாளித்துவத்தின் உள்ளடக்கம் தான். தனிப்பட்ட சுதந்திரம், பெண்ணின் தனிப்பட்ட விடையம், பாலியல் ஒரு உடல் சார்ந்த உணர்வு இன்னும் பலவாக கூறி தப்பிக்க நீக்கல் தேடுகின்றனர்.

நான் எழுதிய கட்டுரையில் இருந்து டோண்டு என்பவர் "கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது." என்று நான் எழுதியதற்கு, அவர் எப்படி பதிலளிக்கின்றார் எனப் பாhப்போம்.

 

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதற்குள் இப்போது போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்"

 

இப்படித் தான் அவரால் வாதிட முடிகின்றது. இங்கு ஆணாதிக்கம் பற்றி எந்த அக்கறையும் இவருக்கு இருக்கவில்லை.



மாறாக வெளிப்படுத்துவது நுகர்வு வெறி. சந்தையில் பொருளை வாங்கும் கண்ணோட்டத்தில், அதையே பாலியலுக்குரிய உரிமை என்கின்றனர். இச்சை என்கின்றார். சில ஆண்கள் எரிச்சலால் புகைவதாக கூறகின்றார். இது ஒரு சமூக ஆய்வா? இல்லை தனிப்பட்ட மனிதனின் சொந்த உலகு நோக்கில் இருந்து கூறும் சொந்த சீரழிவு தான்;. இதைத் தான் குஷ்புவும் செய்தார். இதில் இருந்து சமூகம் வேறானது. தனிமனித சொத்துரிமை சார்ந்து வெளிப்படுத்தும் கருத்து எப்போதும் வேறானது, அதையெல்லாம் இழந்த சமூகம் வெளிப்படுத்தும் கருத்து வேறானது. வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. அவை நேர் எதிர் தன்மை கொண்டவை. உதாரணமாக பார்ப்பானின் உலகம் வேறானது. பள்ளர்களினதும் பறையர்களினதும் உலகம் வேறானது. பார்ப்பான் தனிமனித நலன் சார்ந்து உலகை சூறையாடும் மனித விரோதியாக இருக்கின்றான். பள்ளர் பறையர் சமூக உயிரியாக உலகை சூறையாடுவதற்கு எதிராக இருக்கின்றான்;. கருத்தின் தளம் வேறுபடுகின்றன. பெண்ணை இதில் இருந்து ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறுபடுகின்றது.

 

"ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபற்றி பிரச்சனையல்ல. அது இயற்கையானது. ஆனால் அதை இந்த ஆணாதிக்க சமூக பொருளாதா அமைப்பில் உறவு கொள்ளும் வடிவம், அதை துண்டம் சமூக காரணிகள் தொடர்பானதே இங்கு பிரச்சனையாகும். யாரும் இந்த சமூக பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயமாக இயங்குவதில்லை. எந்த முடிவுகளும் இந்த சமூக பொருளாதாரத்துக்கு வெளியில் யாரும் எடுப்பதில்லை. நாம் இந்த சமூக பொருளாதார அமைப்பின் சிறைக் கைதிகள். சிறைக்குள் இருப்பவன், சிறையின் எல்லைக்குள் உட்பட்டே, அவன் தனது சொந்த முடிவுகளை எடுக்கின்றான். இங்கு சொந்தமாக முடிவு எடுப்பது, அவன் சுதந்திரமாக தோந்தவையாக அல்ல.



உலகம் ஆணாதிக்க சமூக அமைப்பிலானது. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம். மறுபக்கம் உலகமயாதல் என்ற ஆணாதிக்கம். நிலபிரபுத்துவம் பெண்ணை அடிமையாக இருக்க கோருகின்றது. உலகமயமாதல் பெண்ணை விபச்சாரியாக இருக்க கோருகின்றது. இது தவறு என்றால் இதைப்பற்றி முதலில் விவாதியுங்கள். இதை இரண்டையும் எதிர்த்து நாம் போராடக் கோருகின்றோம்;. இப்படித் தான் சமூகம் எங்கும் பெண்கள் போராடுகின்றனர்.


ஆணும் பெண்ணும் இயற்கை சார்ந்த பாலியல் தேவையை பூர்த்திசெய்ய, நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சரி, உலகமயமாதல் அமைப்பிலும் சரி பாலியல் ரீதியாக உறவைக் கொள்ளமல் வாழவில்லை. இதை யாரும் மறுக்கவுமில்லை? இந்த சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, இதை எப்படிச் உறவு கொள்ளல் வேண்டும் என்று வழிகாட்டுகின்து. இந்த சீரழிவுக்குள் நின்று பொது விபச்சாரமா அல்லது அடிமைத்தனமா என இரண்டில் ஒன்றை சமூகத்தின் தனி அலகுகள் தேர்ந்தெடுக்கின்றனர். இது அக்கம் பக்க்கமாகவே உள்ள போது, பலமான அமைப்பு வடிவம் சார்ந்து மோதல் வெடிக்கின்றது. இந்த இரண்டையும் எதிர்த்த போராட்டத்தில் சமூகம் உள்ள போது, அதை பலமான சமூக பொருளாதார அமைப்பு, இதை எதிர்நிலைக்கு முத்திரை குத்தி தூற்ற முனைகின்றனர்.

 

"பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே என்ற எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை." என்ற வாதம் முதலாளித்துவ அற்பவாதியின் கண்டுபிடிப்புத்தான். விவாதத்தின் உள்ளடகத்துக்கு பதிலளிக்க முடியாதபோது, இப்படி கூறி தப்பிக்க முன்வைக்கும் குதர்க்கமாகும். உலகின் வறுமைக்கு தங்களுடைய சுரண்டலே காரணம் என்பதை மறைக்க, ஏகாதிபத்தியம் சனத்தொகை பெருக்கம் யுத்தங்கள் என்று தமது சொந்த சூறையாடலை மறைக்க வைக்கும் வாதம் போன்றதே இது. ஒரு முதலாளித்துவவாதி மட்டும்தான், வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் விளைவு என்று, தனது தனிச்சொத்துரிமை உலக நோக்கில் நின்று கூறமுடியும். அவனின் சொந்த மனிதவிரோத அர்ப்பத்தனங்கள், சமூக இயக்கத்தின் நோக்கில் எதையும் ஆராய்வதில்லை. இதை சந்தர்ப்பங்கள், சூழல்கள், வாய்ப்புகள் என்று புலம்பத் தொடங்குகின்றான். இதை தனிமனித எரிச்சல் என்று, எந்த ஒரு சமூக ஆய்வாளனும் கூறமாட்டான். தனிமனித சமூக அமைப்பினால் உச்ச நன்மை பெறும் அற்பவாதிகள் மட்டும், இப்படி கூறுதை வரலாறு முழுக்க நாம் காணமுடியும். இந்த கனவான்கள் சமூகத்தில் காணப்படும் சமூக ஒடுக்குமுறைகள் பற்றி வாய்திறப்பதேயில்லை. எப்போதும் தனிமனித விருப்பங்கள் மீதான சமூகத்தின் எதிர்வினையை பற்றி மட்டும் பேசுபவர்கள்.

 

"உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்" என்ற வரிகள், இயற்கையான உடல் சார்ந்த உணர்வை பற்றி பேசவில்லை. மாறாக இந்த இயற்கையான உடல் சார்ந்த உணர்வை தீர்மானிப்பவனின் உலக கண்ணோட்டத்தைப் பாதுகாப்பது பற்றியே பேசமுற்படுகின்றார். இயற்கையான உணர்வு சார்ந்த பசி, தாகம் போன்ற அடிப்படையான தேவையை இந்த உலகமயாதல் சமூகத்தில் கோடானுகோடி மக்களுக்கு கிடைப்பதேயில்லை. அதை கிடைக்கவிடாமல் பண்ணுபவர்கள் யார். இவர்களைப் போன்ற அற்பவாதிகள் தான். இதை சம்பந்தப்பட்டவரின் விடையமாக குறுக்கி காட்டிவிடுவர். மாடிவீட்டில் இருந்து குடிசை பார்த்து ஏப்பமிடுபவர்கள் யார். தாழ்ந்த சாதியை உருவாக்கி அதில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர்கள். இதையெல்லாம் அவன் அவன் தனிப்பட்ட தெரிவாக கூறுவதும், தனிப்பட்ட உணர்வு சார்ந்தாக கூறுவதும், இதை சுதந்திரமாக இந்த சமூக அமைப்பில் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூற முற்படுவன் ஒரு அற்ப வாதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு உடல் இச்சையைக் கூட, ஆணாதிக்க ஒழுக்ககேட்டுக்கு வெளியில் ஆணோ பெண்ணோ யாரும் பெறமுடியாது. இவை அனைத்தையும் சுவீகரித்து வைத்திருக்கின்ற சிலர் சமூக அமைப்பில், இதை துணிச்சலாக உபதேசிப்பதற்கு யாரால் முடியும் என்றால், இதை எல்லாம் சுதந்திரமாக கூறும் அற்பவாதியால் மட்டும்தான் முடியும். மற்றவனுக்கு சுதந்திரத்தை மறுப்பதால் கிடைக்கும் அற்பத்தனத்தில் இருந்து இது வெளிப்படுகின்றது.


பசிக்கு கையேந்த வைத்து, குடிக்கும் தண்ணீரையே பணமாக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். இந்த நிலையில் இதை போல் தான் உடல் இச்சை (பாலியலும்) என்று கூறும் போது உடல் இச்சை விபச்சாரத்தை தாண்டி எதுவுமல்ல. தாம் அனுபவிக்கும் ஆணாதிக்க சுகத்தைத் இப்படித்தான் இவரால் கூற முடிகின்றது. உலகில் பசி எப்படி கோடிக்கணக்கில் மக்களை கொல்கின்றதோ, குடிக்க நீர் இன்றி உலகில் கோடிக் கணக்கில் மக்கள் கொல்கின்றதோ அப்படித் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலும்; உள்ளது. உணவு இன்மையால், சுத்தமான நீh இன்மையால் வருடம் 10 கோடி மக்கள் உலகில் உயிருடன் இறந்து போகின்றனர். அதையே கண்டு கொள்ளது வெறும் உணர்வாக கூறும் இவர்கள், இதை மற்றவனுக்கு மறுத்து தாராளமாக நுகருகின்றான். இதேபோல் தான் உடல் இச்சை சார்ந்த பாலியலுக்கும் நடக்கின்றது. சிலர் கோடானுகோடி மக்களின் உணவை பறித்து உண்டு கொழுப்பதும், மற்றவனின் குடிநீரையே அபகரித்து நீச்சல் தடாகங்களில் வாழ்வது போல், பெண்ணின் உடலை சுதந்திரமாக வரைமுறையின்றி அனுபவிக்க வைக்கும் வாதங்கள்; தான் இவைகள். இதுவே உலகமயமாதல் ஒழுக்கம். ஆண் விரும்பும் வரைமுறையற்ற பாலியல் சுதந்திரம் என்னும் விபச்சாரத்தைத் தான், பெண்ணின் உரிமை என்ற கூற முற்படுகின்றனர்.

 

இதே போன்ற தான் உண்மை கருத்திடுகின்றார். அவர் மற்றொரு வாலில் தொங்கிக் கொண்டு "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். இது தான் அவரின் அனைத்து ஆணாதிக்க வாதத்தையும் காட்டிவிடுகின்றது. சமூகம் பெண்விடுதலையை ஏற்கனவே அடைந்து விட்டதாகவும், மீண்டும் பழையபடி பெண்ணடிமைத்தனத்தை கொண்டு வர முயல்வதாகவும் கூற முனைகின்றார். இவர் அடைந்த பெண்விடுதலை என்பது ஆணாதிக்க உலகமயாதல் விபச்சாரத்தைத் தான்;. இதே போன்று தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் போராடும் போதும், சாதியை மீண்டும் கொண்டு வர முயல்வதாக ஒடுக்கும் சாதிகள் கூறுவது வழமை. அதேவாதம் இங்கும் வெளிப்படுகின்றது. சொந்த ஆணாதிக்க சமுகம் அம்பலமாகும் போது, இப்படி புலம்புவது நிகழ்கின்றது.

 

இப்படி கட்டுரையை முடிப்பவரின் பதிவைப் முழுக்கப் பார்ப்போம். "முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும். குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்.

 

ஆண்களின் ஒழுங்கீனங்களை பெண்களும் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்கவில்லை, பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம். ஒழுக்கமாயிரு என்று சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். பாலியல் விவகாரம் என்பது ஒரு எடுத்துக்காட்டு.. ஆண்கள் உங்கள் மனப்போக்கிற்கு வாழவேண்டும், ஆனால் நீங்கள் கட்டிக்காக்கும் போலி கலாசாரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் , பெண் உயிரை விடவேண்டும். எந்த ஊர் நியதி இது. தினம் ஒருவனுடன் படுப்பதற்கும், உடல் இச்சைகளைப் பற்றி பேசுவதையும் உரிமையாகக் கேட்கவில்லை. அது உங்கள் உலகம். ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்? உங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காப்பதற்காக இத்தனை நாள் நீங்கள் கொடுத்த தியாகச்சுடர் என்ற பட்டம் எங்களுக்கு தேவையில்லை. பெண்கள் தன் விருப்பத்தை, தனக்கென்று ஒரு வாழ்க்கை தன் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியதில், எங்கே நீங்கள் இது நாள் கட்டிக்காத்துவந்த பெயர் போய்விடுமோ என்ற பயம் ஆண் வர்க்கத்தைப் பீடித்துக்கொண்டுள்ளது. இது நாள் வரை உங்கள் இனத்தின் பெருமையைக் காக்க நீங்கள் பயன் படுத்தி வந்த பெண்குலம், தனக்கென்று ஓர் உலகம் அமைத்துக்கொள்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதன் வெளிப்பாடாய், இதுபோன்ற விஷயங்களைப் பெரிதாக்கி அதன் மூலம் உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறீர்கள். பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார்.

 

ஆணாதிக்க உலமயமாதல் பெண்ணியம் என்ற பெயரில் வழங்கும் விபச்சார உலகில் அதை பெண்விடுதலையாக காண்பதால் தான் "பெண்ணடிமை மறுபடியும் மலர அடிக்கல் நாட்ட முயலுகிறீர்கள்." என்கின்றார். உலகமயாதல் ஒரு ஆணாதிக்க அமைப்பு அல்ல என்றே, இவர் வாதாட முற்படுகின்றார். பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்ட அமைப்பில், வாழும் ஒரு கற்பனை பெண்ணின் ஆணாதிக்க புலம்பல் இது.



கொள்கை ரீதியாகவே நாங்களும் நீங்களும் இரண்டு வேறுபட்ட துருவங்கள். நாங்கள் இந்த சமூக அமைப்பபை ஆணாதிக்க அமைப்பு என்கின்றோம்;. நீங்கள் இல்லையில்லை என்று கூறி பெண் விடுதலை அடைந்த அமைப்பு என்கின்றீர்கள். உங்கள் வாதங்கள் அனைத்துமே ஆணாதிக்கம் சார்ந்ததென நாங்கள் கூற முற்படுகின்றோம்.


நிலபிரபுத்துவ அமைப்பு மட்டும் ஆணாதிக்கமானதல்ல. நீங்கள் விசுவாசிக்கும் நம்பும் உலகமயமாதல் கூட ஆணாதிக்க அமைப்புத் தான்;. ஆணாதிக்க விபச்சார உலகில் கற்பனைகளுடன் வாழும் போது, நாம் அதை ஆணாதிக்க விபச்சார அமைப்பு என்று கூறும் போது துடித்து பதைத்து குமுறிக் கொட்டுவது இயல்பே. இக்கட்டுரையை கண்டு கொதிக்கும் போது "முதலில், இது போன்ற சமூக ஒழுக்ககேட்டை சார்ந்த பதிவுகளைப் போடுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே உங்களைப் பற்றி தெரிந்துவிடும்." என்று தான் உங்களால் எழுத முடிகின்றது. உலகமயமாதல் சமூக ஒழுக்கக்கேட்டை நாம் மறுதலிப்பவர்கள். கோடானுகோடி மக்களின் உள்ளக்குமுறலின் குரலாக நாம் இருப்பவர்கள். எங்கெல்லாம் உலகில் நீங்கள் மக்களை அடக்கியபடி கூடி கூத்தடிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் உங்களின் மக்கள் விரோத கோமளித்தனத்தை அம்பலப்படுத்துபவர்கள் நாங்கள்.

 

விவாதத்தில் இருந்து தப்பவே, உடனே பெண் என்ற அடையாளத்தை தூக்கிகொண்டு ஒடி வருகின்றீகள். "குஷ்புவை பெண்ணியவாதியாக காட்டியது நீங்கள். அவர் பாட்டுக்கு, தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க அவர் கூறிய கருத்தை ஒரு சமூக ஆர்வலரின் கருத்துக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து அவரை பெரிய ஆளாக்கிவிட்டது நீங்கள். தன் கருத்தைக் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக, கேவலமாக நடத்தியது ஆண்களாகிய நீங்கள்." என்று கூறிய பின்பும் கூட, குஷ்புவுக்காக வக்காலத்து வாங்குகின்றீர்கள்;. இங்கு பெண் என்ற அடையாளத்தைக் கொண்டு, எதிராளிக்கு முத்திரை குத்தி தப்பிவிட முனைகின்றீர்கள்;. விவாதத்துக்கு பதில் குறித்த அடையாங்களில் தஞ்சமடைந்து தப்பித்துக் கொள்ளுதல் இங்கு அரங்கேறுகின்றது. இதுவே சமூக இயக்கம் எங்கும் காணமுடியும்.

 

பள்ளன், பறையன் என்று அடையாளம் இட்டு பார்ப்பான் அவர்களை சுரண்டியது உயர் நிலை அடைந்தது போல், கறுப்பன் என்று இழிவுபடுத்தி வெள்ளையன் அடக்கியாண்டு கொள்ளையி;ட்டது போல், தமிழன் என்று கூறி சிங்களவன் அடக்கியது போல், அடையாளங்களின் மீது நின்று தற்காப்பை பெறுவது அபத்தம். முடிந்தால் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதியுங்கள். ஆண்கள் எல்லோரையும் பெண்ணுக்கு எதிராக நிறுத்தும் ஆணாதிக்க உத்தி, பார்ப்பனிய தந்திரம் தான். ஆணாதிக்க அமைப்பில், ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க வாதிகள் தான். இங்கு ஆண் எதிர் பெண் அல்ல. ஆணும் பெண்ணுமற்ற எந்த சமுதாயமும் கிடையாது. ஆணாதிக்க அமைப்புக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை தான். இதை நிலப்பிரபுத்துவ அமைப்பிலும் பெற முடியாது உலகமயமாதல் அமைப்பிலும் பெறமுடியாது.

 

ஆண்கள் தான் குஷ்பு விவாகரத்தை முன்னிலைப்படுத்தியதாக கூறுவது, சமூக ஆய்வு முறையல்ல. ஆணாதிக்க அமைப்பு தான் அதை முன்னிலைப்படுத்தியது. இதில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கமும், உலகமயதாதல் ஆணாதிக்கமும் தனது எதிர்நிலை பண்பாட்டின் மீது நின்று குரைத்தனர். இந்த இரண்டடையும் எதிர்த்தே நாம் போராடுகின்றோம். எனது முழுக்கட்டுரையும் இதை தெளிவாக துல்லியமாகவும் எடுத்துக் காட்டுகின்து.

 

"பெண்ணின் ஒழுக்கம் என்பதை வரையறுக்க நீங்கள் யார் என்றுதான் கேட்கிறோம்." இதைச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. நீங்கள் பெண்கள் என்றால், அதை ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் ஆண்கள் உள்ளடங்கி ஆண் பெண் சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்றே கூறுகின்றோம். அடுத்து நீங்கள் கூறுகிறீர்கள் "ஆனால், யாருடன் படுப்பது, என்ன பேசலாம் என்பதற்கும் தடை விதிக்க நீங்கள் யார்?" நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் அடிமையாக இருக்கும் உரிமையையும், உலகமயமாதல் அமைப்பில் விபச்சாரியாக வாழ விரும்பும் உரிமையை நாங்கள் ஒரு நாளுமே மறுக்கவில்லை. தனிமனித சுதந்திரத்தின் பெயரில், இவை இந்த அமைப்பில் அவர்களின் சொந்த தெரிவாகவே உள்ளது. ஆனால் நாங்கள் இந்த இரண்டடையும் எதிர்த்து ஒரு சமூக உயிரியாய், போராடும் ஆண் பெண் சமூகத்தையே கோரி நிற்கின்றோம்;. அடிமைத்தனத்தையும், விபச்சாரத்தையும் எதிர்த்து நாம் போராடுவதை யாரும் தடுக்கவே முடியாது. அது எங்கள் சமூகத்தின் உரிமை.


மார்க்ஸ் கூறியது போல் "கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன் தான்" உலகத்தின் உண்மைகளையும, சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியை செய்ய முடிகின்றது. அதை நாம் செய்ய முனைகிறோம்.

21.12.2005

Last Updated on Friday, 18 April 2008 19:58