Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் இஸ்லாத்தில் மனுவாதிகள் : பதிப்புரை

இஸ்லாத்தில் மனுவாதிகள் : பதிப்புரை

  • PDF

இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.


தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ""ஃபிராண்டியர்'' (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு"தர்ம' அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.