Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான்

போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான்

  • PDF

தேசங்கள் உருவானதும், உருவாகிக் கொண்டு இருந்த காலத்திலும் அதற்கு முன்னும் ஆக்கிரமிப்பு என்ற சொல்லை பொதுவானதாக பயன்படுத்துவது ஏற்புடையனதாகவும் இருப்பது இல்லை. குறு நில அரசுகள் முதல் மாபெரும் அரசுகள் ஈறாக அடிக்கடி மாறிய ஆட்சி அமைப்புகளில் மக்களும், தோற்றவர்களும், சொந்தத்திலும் அநேகமாக மற்றைய படையுடன் இணைந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவது வரலாறாக நின்று கிடக்கின்றது.


ஒரு அரசு கொடுங் கோலாட்சி கட்டவிழ்த்து விடும் போது மக்கள் மற்றைய அரசுடன் இணைந்தும், தனித்தும், சிலவேளை மற்றைய அரசுகள் மக்கள் துணையுடன் நேரடியாக தலையிட்ட போது மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளனாகப் பார்க்கவில்லை மீட்பாளராகவே கண்டனர்.


இது தேசம் உருவாகும் காலகட்டத்தில் கூட அப்படித் தான் இருந்தன. அது மட்டும் தான் அந்த மக்களின் மீட்சிக்கான பாதையாக இருந்தன.


மக்கள் மீது காட்டு மிராண்டித் தனமாக ஒடுக்குமுறையை மதத்தின் பெயராலும், பல்வேறு வகையாகவும் கட்விழ்த்து விட்ட காலத்தில் மக்கள் ஆதரவுடன் அந்நிய ஆட்சிகள் தலையிட்டு மீட்ட வரலாறு இன்று நிறையவே உள்ளன. ஆனால் அனைத்தும் இருக்கும் உற்பத்தி முறையை மீறி அல்ல. அதை அடிப்படையாகக் கொண்டு நடந்தன. உற்பத்தி முறையின் பண்பியல் மாற்றங்கள் மட்டுமே காலத்துக்கு காலம் நடந்தன.


தேசம் உருவான போது அயல் நாடுகளில் நிலப்பிரபுத்துவ காட்டு மிராண்டித் தனங்கள் உள்ள அரசுகள் இருந்தபோது மக்களை மீட்க தேசமல்லாத நாடுகள் மீது படையெடுப்பு அம்மக்களால் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுவதில்லை. மாறாக மீட்பாகவே பார்க்கின்றனர்.


ஏன் இன்றுஒரு பாட்டாளி வர்க்க அரசின் முற்போக்கான பாத்திரம் உள்ள நிலையில் தற்காப்பு நிலையில் நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சுரண்டல் உள்ள நாடுகள் மீதான படையெடுப்பு, நிலைமை ஒட்டி அது இன்றும் ஆக்கிரமிப்பாக இருப்பது இல்லை. 2ம் உலக யுத்தத்திற்கு முன் சோவியத் படை போலந்து, மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளைக் கைப்பற்றியது ஆக்கிரமிப்பு அல்ல. முன்னேறிக் கைப்பற்றியது (கோரியும், வெளியிலும்) சரி என்பதை மார்க்சிய லெனினிய மாவோயிசம் காட்டுகின்றது.


தென் கொரியா-வடகொரியா யுத்தத்தின் போது சீனப் படைகள் உட் புகுந்ததும், பல நாடுகளுக்கு உதவியதும் ஆக்கிரமிப்பு அல்ல. 2ம் உலக யுத்தத்தில் ஸ்பானியாவில் சோவியத் படையும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் படையும் புகுந்த போது அது ஆக்கரமிப்பு அல்ல. எனவே ஸ்தூலமான நிலையில், ஸ்தூலமான ஆய்வில் இருந்து தான் இதை ஆராய வேண்டுமே ஒழிய, இன்று அமெரிக்கா, மேற்கு நாட்டு மற்றும் முதலாளித்துவ மீட்பின் பின் ருசியா ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒப்பீட்டுடன் இதை படம் பிடித்து காட்டுவது மார்க்சிய லெனினிய மாவேயிச சிந்தனை மீது சேறு அடிக்கவே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இவர்கள் மார்க்ஸ் இந்திய சமூகம் காட்டு மிராண்டிச் சமூகம் எனக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் சாதாரண நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித் தனமான மனநிலையை தட்டி விடுவதன் மூலம் மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனைக்கு எதிராக அணிகளை அணிதிரட்ட கனவு காண்கின்றனர். மார்க்ஸ் ஏன் காட்டு மிராண்டிச் சமூகம் எனக் குறிப்பிட்டார். என இவர்கள் சொல்வதும் இல்லை சொல்ல விரும்பவும் இல்லை. சொன்னால் பார்ப்பனர்களின் மந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தினால் அது எப்படி கிழிந்து போகுமோ அதே போல் அந்தோனிசாமி மார்க்சின் நோக்கம் கிழிந்து போகும்.


நான் திடமாகக் கூறுகிறேன் இந்தியா சமூகம் ஒரு காட்டு மிராண்டிச் சமூகம் தான். காட்டு மிராண்டித் தனத்தை மார்க்சுக்குப் பிந்திய 100 வருடத்தில் இன்னமும் கொண்டுள்ள இச் சமூக நடவடிக்கை காட்டு மிராண்டித் தனம் இல்லை எனக் கூறி நாகரீகச் சமூகம் என கூறும் துணிவு தான் இருக்கா அ.மார்க்சுக்கு?


மார்க்சின் காலத்தில் மக்கள் மந்தைகள் போல் தனக்குள் தான் மூழ்கிக்கிடந்ததும் கணவன் இறந்தால் மனைவியை உடன் கட்டை ஏற்றிக் கொழுத்துவதும், சிறுமியிலேயே திருமணத்தை செய்வதும், சிறுமியிலேயே பிள்ளை பிறக்க வைக்கவும், சிறுமியிலேயே ஆயுளை முடித்து வைக்கவும், கணவன் இறந்தால் மறு திருமணத்தை மறுக்கவும், சமுதாயத்தை சாதியாகப் பிரித்து தொட்டாலே மரண தண்டனை வழங்குவதும் இது போல் பல்வேறு கூறுகளைக் கொண்ட சமூகத்தை அ.மார்க்சும் அவரது சீடர்களும் நாகரீக சமூகம் எனப் பிரகடனம் செய்கின்றனர். அதாவது இது நாகரீக சமூகம் எனின் மார்க்சை எதிர்த்து இதைப் பாதுகாக்க முன்வைப்பதாகும்.


ஆனால் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இதை சரியாக அடையாளப் படுத்தியதன் மூலம் இதை எதிர்த்துப் போராடினர். இதை சகிக்க முடியாத அந்தோனிசாமி மார்க்சும், அவரது சீடர்களும் ஐயோ மார்க்ஸ் இப்படிக் கூறியவர் நீங்கள் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனையை ஏற்றுக் கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி, வைக்கும் ஒப்பாரித்த தனத்தின், பார்ப்பனத்தின் ஒரு வடிவமே இவை. இது போன்று மார்க்ஸ் எதை என்ன சொன்னார் என்பதை மூடி மறைத்து மார்க்சையே திரித்து காட்டுவது அந்தோனிசாமி மார்க்சின் மார்க்சிய விரோத நிலைக்கு அவசியமாக உள்ளது.


தேசிய இனங்கள் பற்றி மார்க்ஸ் - எங்கல்ஸ் என்ன நினைத்தனர் என்பதை லெனின், மார்க்ஸ் - எங்கல்ஸ் மேற்கோள்களுடன் கூறுவதைப் பார்ப்போம்.


" ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தைப்பற்றி எத்தகைய கொள்கையை உடையவராய் இருக்கிறார் என்பது பற்றி மார்க்ஸ் அவரைக் கேள்வி கேட்கின்றார். -- நசுக்கப்படும் தேசிய இனங்களின் விஷயத்தில் தாம் ஆற்ற வேண்டிய சோஷலிசக் கடமைககளை உணர்ந்து கொள்ள அவர்கள் தவறியது ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வாக்களிடமிருந்து அவர்களது தப்பெண்ணங்களைப் பெற்று அப்படியே எதிரொலிப்பது .


-- தேசியப் பிரச்சனை பற்றி மார்க்ஸ் எங்கல்ஸின் கொள்கை பொதுவாக முழுக்க முழுக்க விமர்சனக் கண்ணோட்டமானது என்பதையும், வரலாற்று பூர்வமாக வரையறை செய்யப்பட்ட அதன் முக்கியத்தை அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். --
1851 மே 23 ந் திகதி எங்கல்ஸ் மார்க்சுக்கு எழுதினார். வரலாற்றில் போலிஷ்காரர்கள் ஆற்றிய பங்கு துணிவுடன் கூடிய முட்டாள்தனம். ருஷ்யாவுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கூட போலந்தானது வெற்றிகரமாக முற்போக்கைப்பிரதிபலித்து அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதையாவது ஒன்றைச் செய்தது என்பதை நிரூபிக்க ஒரு உதாரணத்தைக் கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியவில்லை. ' --- பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ருஷ்யாவானது தூங்கிக் கொண்டும் போலந்தானது கொந்தளித்துக் கொண்டும் இருந்த சமயத்தில் போலிஷ் இயக்கத்தை ஆழ்ந்த பதில் பரிவுடன் அணுக எங்கல்சையும் மார்க்சையும் எந்த விதத்திலும் தடை செய்யவில்லை.

 

1864 இல் இண்டர்நேஷனனின் அறிக்கையை வரைந்து கொண்டிருந்த போது மார்கஸ் எங்கல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தாம் மாஐpனியின் தேசியவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கூறி, மேலும் எழுதியதாவது " அறிக்கையில் சர்வதேசியத்தைப் பற்றி பேசப்படுவதால் நான் நாடுகளைப்பற்றிப் பேசினேன். சிறு தேசிய இனங்களைப்பற்றியல்ல. ருஷ்யாவைத் தாக்கிப் பேசினேன், முக்கியத்துவம் குறைந்த அரசுகளையல்ல.

 

1886 இல் புரூதோன்வாதிகளின் கும்பலைப்பற்றி மார்க்ஸ் எங்கல்ஸ்சுக்கு எழுதினார். அக்கும்பல் சிறு தேசிய இனங்கள் அபத்தமானவை என்று கூறுகிறது. ...... பிரான்சில் அப்பெரிய மனிதர்கள் வறுமையையும் அறியாமையையும் அகற்றும்வரை ஐரோப்பா முழுவதும் வெறுமனே குந்தி உட்கார்ந்து கொண்டிருக்கமுடியும். உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். ..... இவர்கள் விசித்திரமானவர்கள் தான். ....... 1866 இல் ஐன 20 இல் மார்க்ஸ் " சிறு தேசிய இனங்களை மறுப்பதன் மூலம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பிரஞ்சு தேசிய இனத்தினால் அவை விழுங்கி ஐPரணிக்கப்பட்டு விட்டதாக தம்வசமின்றியே அவர் அறிந்து கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது என்றும் நான் கூறினேன்." மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து தோன்றும் முடிபு தெளிவானது. தேசியப் பிரச்சனையை வெற்று வழிபாட்டுப் பொருள் ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு மிக மிக அரிதாகவே இயலும் . .... அயர்லாந்தின் பூர்ஷ்வா விடுதலை இயக்கமானது வலு பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்தது. மார்க்ஸ் தனது கருத்தினை மறுபரிசீலனை செய்து திருத்தினார். தே.இ.சு.உ. - லெனின்-

 

மார்க்சின் மரணம் வரை, அதற்கு மேலும் 1890 வரையிலும் கூட ஐhரிஸமானது பிரான்சுக்கூடாக கூடிக்கொண்டு ஏகாதிபத்திய தன்மையற்ற, தேசிய இனரீதியில் சுயேச்சையான nஐர்மனிக்கெதிராக ஒரு பிற்போக்கு யுத்தத்தை நடத்தும் அபாயம் இருந்த பொழுது, ஐhரிசத்துக்கெதிராக போராட வேண்டிய முதற்பணி என்று கருதினார் எங்கல்ஸ். இந்தக்காரணத்துக்காகத்தான் இந்தக் காரணத்துக்காக மட்டுமே தான் செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள் ஆகியோரின் தேசிய இன இயக்கங்களை மார்க்சும் எங்கெல்சும் எதிர்த்தார்கள். மார்க்சியத்தை கழித்து ஒதுக்கி விடுவதற்காக இன்றி உண்மையில் மார்க்சியத்தில் உளமார அக்கறை காட்டும் எவரும் ( அ. மார்க்ஸ் கும்பல் போன்றவைக்கு அல்ல) மார்க்சும் எங்கல்சும் 1848 இலும் 1849 இலும் எழுதியதைப் பார்ப்பாரேயானால், ஐரோப்பாவில் 'ருசியாவின் புறக்கால நிலைகளாக ' பணியாற்றிய பிற்போக்கான முழு தேசிய இனங்களையும் nஐர்மனியர்கள், போலந்துக்காரர்கள், மத்யாக்கள் போன்ற " புரட்சிகரமான தேசிய இனங்களையும் " தெட்டத் தெளிவாக, திட்டவட்டமாக அவர்கள் வேறுபடுத்தினார்கள் என்பது நன்கு புரியும். இது மெய்விவகாரம் மறுக்க முடியாத உண்மையாக இது அப்பொழுது சுட்டிக்காட்டப்பட்டது. 1948 இல் புரட்சிகரமான தேசிய இனங்கள் சுதந்திரத்துக்காக போராடின. அச்சுதந்திரத்தின் பிரதான எதிரி ஐhரிஸம் ஆனால் செக் மக்கள், முதலியவர்களோ உண்மையிலேயே பிற்போக்குத் தேசிய இனங்கள் அல்லது ஐரிசத்தின் புறக்காவல் நிலைகளிலிருந்தனர்.

 

மார்க்சிசத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால் மேற்கூறிய ஸ்தூல உதாரணத்தை நாம் ஸ்தூலமான முறையில் ஆராய வேண்டும் . நாம் அப்பொழுது பெறும் படிப்பினை என்ன ?


இதுதான்

(1) ஐரோப்பாவில் பெரிய மிகப்பெரிய தேசிய இனங்கள் சிலவற்றின் விடுதலையின் நலன்கள் சிறிய தேசிய இனங்களின் விடுதலைக்கான இயக்கங்களின் நலன்களை விட மேலானவை.


(2) ஒரு ஐனநாயகக் கோரிக்கையை தனியாக எடுத்து பரிசீலனை செய்யக் கூடாது. ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் - இன்று உலகக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும்.


...... சிறு தேசிய இனங்கள் சோஷலிசப் புரட்சியைத் தொடங்கி 1848 இல் ஐரோப்பாவில் பூர்சுவா ஐனநாயகப்புரடசி தொடங்கியதைப் போல், பூர்ஷ்வாக்களின் பிற்போக்கு வாதத்தின் பிரதான அரண்களாக மற்ற தேசிய இனங்கள் விளங்குமேயானால் - அப்போது பிந்திய தேசிய இனங்களுக்கு எதிராக புரட்சிப்போர் புரிவதை நாமும் ஆதரிக்கவேண்டும். அவற்றை நசுக்கி எத்தகைய சிறு தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் சரியே, அவற்றின் புறக்காவல் நிலைகளையெல்லாம் அழிப்பதை ஆதரிக்க வேண்டும். தே.இ.பி.பா.வ.சர்வதேசியவாதம் -லெனின்-


லெனினின் நீண்ட மேற்கோள்களை நாம் முன்வைக்குமளவுக்கு இப்பிரச்சனை மீது அ.மார்க்ஸ் கும்பல் அதிகளவுக்கு மார்க்சியம் மீது சேறடித்துள்ளது. தேசிய இனங்களின் பிரச்சனை மீதான வாதங்கள், நியாயங்கள் எப்போதும் மொத்த மக்கள் நலன் தொடர்பான நிலையில் நின்று ஆராய வேண்டும். இதன் ஸ்தூலமான நிலைமையில் உள்நாட்டிலும் உலகிலும் உள்ள பொது நிலவரத்திலும் நின்ற ஆராய வேண்டும்.


ஏனெனில் எந்தப் பிரச்சனையும் அது தேசியப் பிரச்சனையாக இருந்தாலும் அது தனித்து இயங்குவது இல்லை அது உலகின் பல பிரச்சனைகளுடன் தொடர்புபட்டுத்தான் இயங்குகின்றது. எனவே எழும் தேசியத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்படி பூர்ஷ்வா வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தைப் பலவீனப்படுத்த ஏகாதிபத்தியமும் கோரும். இதை ஒட்டி லெனின்

 

" முதலாளித்துவம் போன்றே ஏகாதிபத்தியமும் எங்களது ஐவமரண எதிரியாகும். நிலப்பிரபுத்துவத்திலும் பார்க்க முதலாளித்துவம் முற்போக்கானது. ஏகாதிபத்தியம் ஏகபோகத்திற்கு முந்தைய முதலாளித்துவத்திலும் பார்க்க முற்போக்கானது என்பதை எந்த மார்க்சியவாதியும் மறுக்கமாட்டார்கள். ஆதலால் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எல்லாப் போராட்டத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பிற்போக்கு வர்க்கங்கள் போராடினால் நாங்கள் அதை ஆதரிப்பதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிரான பிற்போக்கு வர்க்கங்களின் கிளர்ச்சி எழுச்சிகளை நாங்கள் ஆதரிப்பதில்லை. ' - போல்ஷிவிக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு- லெனின்