Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

  • PDF

 தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

 1979இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். 1996இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத் தொகையில் ஒரு சதவீதம் பேராவர். இவர்கள் அமெரிக்க நிலத்தில் 22 சதவீதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன்  மூலம், கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995இல் 1.19 லட்சமாகியது. இது 1998இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டிக் கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலைக் கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர்எதிர்வீதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.


 இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும். இது சமூகப்  பிளவின் வீச்சையே எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் 1999இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் 1,00,000 கோடி டாலராக இருந்தது. இது முந்திய வருடத்தில் 73,800 கோடி டாலராகவே இருந்தது. இந்த அதிகரித்த தொகையில் ஐந்தில் ஒன்றைக் கொண்டு, அதாவது 4,800 கோடி டாலரைக் கொண்டு அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 15 சதவிகிதத்தினரின் வறுமையை அகற்றி, அவர்களை வறுமைக் கோட்டின் எல்லைக்குக் கொண்டு வரமுடியும். மறுபக்கத்தில் அமெரிக்காவில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்க, ஏழைகளின் கூலி வீதம் குறைவது அதன் அடிப்படை விதியாகின்றது. 1998இல் அமெரிக்காவின் உண்மைக் கூலிவீதம், 1973இல் இருந்ததை விட 7 சதவீதம் குறைவானதாகியது. அமெரிக்காவில் வசதி உள்ளவனை விட ஏழை மக்கள் நோய்க்கு உள்ளாவது ஏழு மடங்கு அதிகமாகும். 2000க்கு முந்திய பத்தாண்டுடன் ஒப்பிடும் போது, அமெரிக்காவில் வறுமை 50 சதவீகித்தால் உயர்ந்துள்ளது. 1980க்கும் 1985க்கும் இடையில் கல்விக் கட்டணம் 256 சதவீதம் உயர்ந்தது. அதேநேரம் குடும்பத்தின் வருமான உயர்வு 95 சதவீதம் மட்டுமே. இது கூட அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிபரமே. ஆனால், இந்த 95 சதவீதத்தை மேல் இருந்து கீழாக ஆராயும் போது, வருமானம் குறைந்து வருமான அதிகரிப்புக்கு பதில் குறைவே ஏற்படுகின்றது.


 உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கின்றது. அமெரிக்க மக்களின் 90 சதவீதமானவர்களின் சொத்தைவிட ஒரு சதவீதம் பணக்காரக் கும்பலின் சொத்து அதிகமாகும். 1967க்குப் பின் பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து, 1997இல் 46 சதவீதம் உயர்ந்தது. அதே நேரம், ஊதியம் 14 சதவீதமே உயர்ந்தது. 1996இல் அமெரிக்காவில் மேலே உள்ள 20 சதவீதத்தினர் ஒட்டு மொத்த அமெரிக்க வருமானத்தில் 46 சதவீதத்தை நுகர்ந்த போது, கீழே உள்ள 20 சதவீகித்தினர் அமெரிக்காவின் ஒட்டு மொத்த வருமானத்தில் 1.8 சதவீதத்தையே நுகர்ந்தனர். அமெரிக்கா என்ற சொர்க்க பூமியில், 2003இல் அமெரிக்காவில் 90 சதவீதமான கீழ்மட்ட மக்களின் வருமானத்தை விட, 400 மிகப் பெரிய பணக்காரர்களின் வருமானம் 15 மடங்காக அதிகரித்தது. சொர்க்கம் யாருடையது என்பதையே, தரவுகள் தெளிவுபடுத்தி விடுகின்றது.


 1962இல் அமெரிக்காவில் அடிமட்டத்தில் வாழ்ந்த 90 சதவீதமான மக்களின் வருமானம் மொத்த தேசிய வருமானத்தில் 69 சதவீதமானதாக இருந்தது. இது 1992இல் 59 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பணக்காரனின் செல்வம் அதிகரித்துச் சென்றதையே இது சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. அமெரிக்காவில் ஒரு சதவீதமான செல்வந்தர்களிடம் குவியும் பணத்தின் அளவு, ஆண்டுக்கு 70,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. செல்வக்குவிப்பு பிரமிப்பான எல்லையை தொடர்ந்தும் கடந்து செல்லுகின்றது. 100 கோடிக்கு அதிக சொத்து வைத்திருந்த முன்னணி அமெரிக்க பணக்காரரின் சொத்துக்கள் 1997க்கும் 1999க்கும் இடையில் சராசரியாக 94 கோடி டாலராக அதிகரித்தது. மறுபக்கத்தில் 19831995க்கும் இடையில் அடியில் இருந்த அமெரிக்க மக்களின் சொத்துக்கள் 80 சதவீதத்தால் குறைந்து போனது. இதுவே ஒரு சுதந்திரமான ஜனநாயகமான இந்த சமூக அமைப்பின் உள்ளடக்கமாகும்.


 இந்த பணக்காரக் கும்பல் உருவாக்கமே, மக்களின் மந்தைத் தனத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது. உலகின் முதல் பணக்காரனின் சொத்து (தீடிணஞீணிதீ சேர்ந்த ஆடிடூடூ எச்tஞுண்) வின்டோஸ் மென்பொருளின் வருகையுடன் தொடங்கியது. கடந்த 10 வருடமாக உலகின் மிகப் பெரிய மக்கள் விரோதியாக ஆடிடூடூ எச்tஞுண் நீடிக்கின்றான். ஆடிடூடூ எச்tஞுண் குவித்த செல்வம், 1999இல் உச்சத்தை எட்டி பின் சீராகி வருகின்றது. வின்டோஸ் சர்வதேச ரீதியாக நவீன கணினி அறிவியல் தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உலகில் மிகப் பெரிய பணக்காரன் தனது சொத்தைத் தக்கவைக்க முனைகின்றான். சர்வதேச ரீதியாக அமெரிக்க நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றமும் வின்டோஸ்சின் அராஜகத்துக்கு எதிராக தீர்ப்புகளையும், அபராதங்களையும் விதித்தபோதும், தொழில்நுட்ப ரீதியான கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாக கணினியில் கட்டுப்படுத்துவதன் மூலமே, உலகில் முதல் பணக்காரன் கொழுத்து நிற்கின்றான். உலகில் அறிவியல் தொழில் நுட்பத்தைத் தமது தனிப்பட்ட சொத்தாக்கியதன் மூலம், உற்பத்தி மீதான கட்டுப்பாட்டைத் தனிமனிதச் சொத்தாக்கி உலகையே சூறையாடுகின்றனர். தனிமனிதனை நோக்கி, செல்வத்தின் பெரும் பகுதி இப்படி வரைமுறையின்றி திரளுகின்றது. உழைப்பின் ஆற்றலையும், உழைப்பின் திறனையும், தனிமனிதர்கள் தமது தொழில் நுட்பம் மூலம் வரைமுறையின்றி சூறையாடுவதால், எங்கும் செல்வக் குவிப்பில் அராஜகம், மக்களுக்கு எதிராகத் தலைவிரித்தாடுகின்றது.


 செல்வக்குவிப்பின் ஏற்றயிறக்கம் சர்வதேச பொருளாதார ஏற்றயிறக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகவே இருந்தது, இருந்து வருகின்றது. சர்வதேச நெருக்கடிகள் ஏற்படுத்தும் ஏகாதிபத்திய முரண்பாட்டை, உலகமயமாதல் ஊடாக அமைதியாகவே நகர்த்த முனைகின்றது. மூலதனங்களுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரக் கும்பல், சொத்து இழப்பை அனுமதிக்கும் எந்த ஒரு நிலையையும் சகித்துக் கொள்வதில்லை. இதில் இருந்து மீள அனைத்துவிதமான மக்கள் விரோத வழிகளையும் கையாள்வதில் வக்கிரமாகவே செயலாற்றுகின்றது. இந்த வகையில்


 1.வன்முறை சார்ந்த யுத்தம் மூலமான பங்கீட்டைச் செய்தல் ஒரு வடிவமாகும். ஈராக் நெருக்கடி கூட ஏகாதிபத்திய பங்கீட்டையே கோரியது. ஏகாதிபத்தியங்கள் ஈராக் யுத்தத்தில் காட்டிய எதிர்ப்பும், ஆதரவும் கூட இதற்கு உட்பட்டதே.


 2.சர்வதேச ரீதியான பொருளாதார நெருக்கடியை அடுத்து, பணக்காரக் கும்பலின் சொத்திழப்பைத் தடுக்க உலகளவில் மக்களின் சேமிப்பு மீதான வட்டிக் குறைப்பு ஒரு குறிப்பான தாக்குதலாக இருந்தது. வட்டிக் குறைப்பின் மூலம் பெரும் மூலதனங்கள் திடீர் லாபத்தைப் பெற்றன. வட்டியைக் குறையக் கொடுத்ததன் மூலம், செல்வம் திடீரெனக் குவிந்தது. பரந்துபட்ட மக்கள் பெரும் சொத்திழப்பைச் சந்தித்தனர். வட்டியைப் பெறும் மூலதனம் மிகக் குறைவாகச் செலுத்தியதன் மூலம், மக்களின் சேமிப்புகளுக்குக் கிடைத்த வட்டி திடீரெனக் குறைந்து போனது. இதில் கிடைத்த லாபம் சில தனிப்பட்ட நபர்களிடம் குவிந்தன. உதாரணமாக அமெரிக்காவில் மக்களின் சேமிப்புக்கு வட்டியைக் குறைத்த போது, 8.4 கோடி மக்களுக்கு வட்டிப் பணமாக கிடைக்க வேண்டிய 4,000 கோடி டாலரை இழந்தனர். ஆனால் மூலதனம் இதை நேரடியாகவே தனதாக்கியது.


 3.அண்மையில் ஏற்பட்ட டாலரின் பெறுமதி இழப்பு, தனிப்பட்ட பணக்காரனின் அசையாத சொத்துக்களின் பெறுமதியை உயர்த்தியது. இதன் மூலம் தனிப்பட்ட பணக்காரனின் சொத்துக்கள் திடீரென உயர்ச்சி பெற்றன.


 4.உலகளவில் வரிக்குறைப்பு, நடைமுறை ரீதியான செயல் பூர்வமான செல்வக் குவிப்பின் ஒரு நினைவுபூர்வமான வடிவமாகியுள்ளது. கீழ் உள்ளவர்கள் வரி கட்டவே முடியாத வறுமையில் உள்ள போது, மேல் உள்ளவர்களிடம் பணம் குவியும் போது வரிக் குறைப்பு என்பது செல்வக் குவிப்புக்கு மேலும் இசைவானதாகி வருகின்றது. ஏழைகள் உள்ளடக்கிய நுகர்வின் மேலான பொதுவரியை உயர்த்துவதன் மூலம், வருமானம் மீதான வரியை குறைப்பது உலகளாவிய ரீதியில் செல்வக் குவிப்பின் மற்றொரு அடிப்படையாக உள்ளது.


 5.உலகளவில் நிதி மூலதனம் பரவிப் பாய்வதால், பின்தங்கிய நாடுகளில் இருந்து ஏகாதிபத்தியம் நோக்கித் தாவும் பணத்துக்கு வரைமுறையற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் செல்வத்தின் இருப்பு மேலும் சிலரை நோக்கிக் குவிந்து வருகின்றது. வரிகள் அற்றதும், சலுகைகளைக் கொண்டதுமான நிதியின் ஊடுருவல், பெரும் தனிப்பட்ட கும்பலின் பணக்குவிப்பை துரிதமாக்குகின்றது.


 6.மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் நிதி, நிதிச் சந்தையைக் கட்டுப்படுத்துவதால், தேசிய நிதியாதாரங்களை தமது தனிப்பட்ட சொந்த நிதியாதாரங்களாக கைமாற்றுகின்றனர்.

Last Updated on Saturday, 22 November 2008 18:50