Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமூக உளவியல் தற்கொலைகள்

சமூக உளவியல் தற்கொலைகள்

  • PDF

ஆ ப்பிரிக்காவில் வாழும் 60 கோடி மக்களில் சகாராவுக்குத் தெற்கே வாழும் 10 கோடி மக்கள் மனநோய் சார்ந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஓலட்டவுரா கூறும் போது, பாரம்பரியக் கூட்டுக்குடும்பச் சிதைவு, சமூக நெருக்கடிகள், சமூகச் சீரழிவுகள் இதன் மூலமாக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.


பிரான்சில் நெருக்கடி ஏற்படும் போது உணர்ச்சி வசப்பட்ட சுயஉணர்விழந்த உளவியல் பாதிப்பு எத்துறைகளில் ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோம். இதை 100 என்ற சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வோம். ஆய்வின் முடிவினை அட்டவணை:18-இல் காணலாம். (7.5.2000)30


அட்டவணை: 18
எப்போது                                                                        விகிதம்
துணையை இழக்கும் போது                                 100
விவாகரத்தின் போது                                                   73
பிரிந்து வாழ்கின்ற போது                                         65
மிக நெருங்கியவரை இழக்கின்ற போது          63
நோய் அல்லது விபத்தின் போது                          53
திருமணத்தின் போது                                                  50
வேலையை விட்டு நீக்கும் போது                       47
வேலையை விட்டு ஓய்வு எடுக்கும் போது   45
மருந்தை மாற்றும் போது                                       44
தாய்மை அடையும் போது                                      40
குழந்தையைப் பெறமுடியாத
பாலியல் நெருக்கடியின் போது                           39
நிதி நெருக்கடியின் போது                                      38
நல்ல நண்பன் இறக்கும் போது                           37
வேலை மாறுகின்ற போது                                      36
ஆண் பெண் குடும்பத்தில் கதைக்கும் போது 31
சொத்தை இழக்கின்ற போது                                 30


உளவியல் நெருக்கடிகள் யதார்த்த வாழ்க்கைப் பிரச்சனைகள் மீது, சமூகக் கூட்டுத்தன்மை சிதறுகின்ற போது ஏற்படுவதை இது காட்டுகின்றது. உணர்ச்சிவசப்பட்ட சினந்து வாழும் வாழ்க்கை சமூகச் சிதைவில் பண்பாவதைக் காட்டுகின்றது. இயந்திரமான வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றமும் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. தனிமனித வாதங்கள் சமூகக் கூட்டுத் தன்மையை நிராகரிக்கின்ற போது, மாற்றங்கள் அசாத்தியமான நெருக்கடியைத் தருகின்றது. இந்தத் தனிமனித வாழ்க்கையில் இசைவாக்கமடையும் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும் தனிமனித ரீதியாக உளவியலில் சிக்கலைக் கொடுக்கின்றது. இவை தற்கொலை, கோபப்படுதல், எரிந்து விழுதல், உணர்ச்சி வசப்படல்... என பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.


சீனாவில் குடும்பப் பிரச்சனை, பட்டினி காரணமாக நாளொன்றுக்கு 474 பெண்கள் தற்கொலை செய்கின்றனர்.7 இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் கி.பி. 1983-இல், 4,380 ஆக இருந்த தற்கொலை கி.பி. 1991-இல் 8,400 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு தற்கொலை நடக்கின்றது. (16.3.1992)1


ஒரு இலட்சம் ஆண்களுக்குத் தற்கொலை செய்யும் சராசரியை அட்டவணை:19 மூலம் காணலாம். (1989 - 1991)31


அட்டவணை: 19
நாடுகள்                              மொத்த ஆண்களில்                          ஆண்கள் 75 இக்குக் கூட

கங்கேரி                                           58                                                                      186.2
பிரான்ஸ்                                        30                                                                       114

பெல்ஜியம்                                    30                                                                          98
சுவிஸ்                                            34                                                                          80.7
டென்மார்க்                                   30                                                                          72.8
இங்கிலாந்து                                12                                                                           21.5
அமெரிக்கா                                  20.4                                                                       41.1

15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு இலட்சம் இளைஞர் - இளைஞிகளின் தற்கொலைகளை அட்டவணை:20-இன் வழியாகப் பார்ப்போம். (1991-1993)32
அட்டவணை: 20

நாடுகள்                                            எண்ணிக்கை

நியூசிலாந்து                                         39.9
ஆஸ்திரேலியா                                   24.6
அமெரிக்கா                                           21.9
சீனா (கிராமம்)                                    17.4
சிங்கப்பூர்                                                10.2
ஜப்பான்                                                   10.1
கொங்கொங்                                            9.7
பிரான்ஸ்                                                  9.7
சீனா (நகரம்)                                          5.6


பிரான்சில் 1,50,000 பேர் வருடம் தற்கொலை செய்ய முயல்கின்றனர். இதில் 12,000 பேர் இறக்கின்றனர். இது கி.பி. 1974-இல் 8,000 மட்டுமேயாகும். தற்கொலைகளில் 80 சதவீதம் பெண் பாதிப்பால் நடக்கின்றது. 70 சதவீதம் தற்கொலை செய்பவர்கள் ஆண்கள் ஆவர். வேலைத்தள நெருக்கடியில் ஏற்படும் 1,500 தற்கொலைகளில், 600 தற்கொலைகள் முதலாளிக்கு எதிராகச் செய்யப்படுகின்றது. (11.12.1996)17


சென்னை நகரில் மட்டும் வருடம் 1,000 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் ஆண்கள்தான் அதிகம். தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் 15,000 பேர் ஆவர். (1.12.1992)1


ஐந்து ஆணுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பிரிட்டனில் 4,500 தற்கொலைகள் நடக்கின்றன. 15-24 வயதிற்கிடையிலான இளம் பெண்களின் தற்கொலை என்றுமில்லாத வகையில் அதிகரித்துச் செல்லுகின்றது.2


கேரளத்தில் இலட்சம் பேருக்குத் தற்கொலை 25 பேராக உள்ளபோது இந்தியாவில் சராசரி 8 ஆக உள்ளது. தற்கொலையில் 20 முதல் 25 சதவீதம்வரை குடும்பமாகவே தற்கொலையில் ஈடுபடுகின்றனர். தற்கொலையில் ஈடுபடுபவர்களில் 44 சதவீதம் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.


ருசியாவில் தற்கொலை அதிகரித்துச் செல்வது எல்லையற்று போயுள்ளது. கி.பி. 1997-ஆம் ஆண்டு மொத்தத் தற்கொலைகள் 54,900 ஆகும். இது கி.பி.1998 முதல் இரு மாதத்தில் மொத்தத் தற்கொலைகள் 44,700-ஐத் தாண்டி நின்றது. கி.பி. 1990 மார்கழிக்குப் பின் வேலையின்மை அதிகரிக்க தற்கொலைகள் அதிகரித்துச் சென்ற வண்ணம் உள்ளன. (12.2.1999)24


மனிதனின் சொந்த வாழ்க்கை மீதான போராட்ட நம்பிக்கைகளை இழக்கின்ற போது மனிதன் தற்கொலையைத் தீர்வாக நாடுகின்றான். மனிதர்கள் தமது தேவையை இந்தச் சமூகத்தில் தீர்த்துக் கொள்ள முடியாத போது அவலமாக மடிந்து போவதே மேல் என்று எண்ணுகின்றனர். அத்துடன் மற்றவனின் தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மீறி தனதாக்கும் கனவுகளிலும் தற்கொலை பரிணமிக்கின்றது. இந்தக் கண்ணோட்டம் தனிச்சொத்துரிமையிலான கண்ணோட்டத்தில் பரிணமிக்கின்றது.


வறுமை, பட்டினி, அவமதிப்பு, வேலை பறிப்பு, மற்றவனின் சுதந்திரத்தை மறுத்து தனதாக்கும் கண்ணோட்டம் போன்றன தற்கொலையின் பொதுப்படையாக உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் வருடம் 30,000 தற்கொலைகள் நடக்கின்றது. பெண்களைவிட ஆண்கள் நான்கு மடங்கு அதிகமாகத் தற்கொலை செய்வதுடன், வயது முதிர்ந்தவர்கள் அதிகமாகத் தற்கொலையை நாடுகின்றனர்.


இது தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காகத் தனிமைவாதக் கோட்பாட்டில் எழுபவைதான். தனிமனிதன் சமூகத்தை எதிராக நிறுத்தி, சமூகத்துக்கு எதிராகக் குண்டு வைப்பதும், முதலாளி மற்றவனின் வாழ்வைப் பறித்து தனது சுகபோகத்தை நிறுவுவதும், தனிமனிதன் தற்கொலை செய்வதும் என எல்லாம் ஒரே கோட்பாட்டால் கட்டமைக்கப்பட்டவைதான். கூட்டுச் சமூகச் செயல்பாட்டை மறுக்கும் தனிமனிதவாதத்தின் அடிப்படையாக இது உள்ளது. இதற்குள் இவை குறிப்பானதில் தான் தனக்குள் வேறுபடுகின்றது.


தற்கொலைகளில் பெண்களைவிட ஆண்கள், பெரியோரைவிட இளைஞர்களும், வயதானவர்களும், உரிமையைப் பெற்றவர்கள் இழக்கும் போது பொதுவில், கிராமத்தை விட நகரத்திலும் இந்தத் தற்கொலை பரிணமிக்கின்றது. பெண்கள் சமூகத்தின் அவலத்தை எதிர் நீச்சல் ஊடாக அல்லது அடங்கி போய் வாழ்வதால், ஆணைவிட குறைவாகத் தற்கொலையைச் செய்கின்றனர். இதே நிலையை ஆண்கள் சந்திக்கும் போது தற்கொலையை நாடுவது பெண்ணைவிட அதிகமாக உள்ளது. பெரியவர்கள் வாழ்க்கை அனுபவத்தின் ஊடாகத் தம்மைப் போராடக் கற்றுக் கொள்ளுதல் அல்லது அடங்கி போகின்றனர்.


இளைஞர்கள் அனுபவக்குறைவால் நம்பிக்கை இழந்து தற்கொலையை நாடுகின்றனர். வயதானவர்கள் பராமரிப்பின்றி அது சார்ந்த வாழ்வின் பிடிப்பின்றி தற்கொலையை நாடுவது அதிகரிக்கின்றது. இது வாழ்க்கை மீதான ஆதாரத்தைச் சார்ந்து மக்கள் பிரிவுக்கு இடையில் வேறுபடுகின்றது.


பெண்கள் தமது கடினமான வாழ்க்கைய+டாகப் போராடக் கற்றுக் கொண்டு ஆணைவிட இழிந்த நிலைகளைத் தாங்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் ஏற்படும் மாற்றம் பெண்ணையும் தற்கொலைக்கு அழைத்துச் செல்லுகின்றது. ஆண் தனிச்சொத்துரிமையின் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தின் வடிவில் நேரடியாகப் பிரச்சினைகளைக் காண்பதும், சிந்திப்பதும், தீர்வை நாடி ஓடுவதும் தவிர்க்க முடியாமல் தற்கொலையை நாடுவதைத் தீவிரமாக்குகின்றது.


பெண் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் மறைமுகமாகத் தனிச் சொத்துரிமைக் கண்ணோட்டத்தைக் காண்பதன் மூலம், இதன் மீதான அன்னியப்படல் தோல்விகளைத் தற்கொலைக்கு அழைத்துச் செல்வதில்லை. ஏனெனின் முன்கூட்டியே தனிச்சொத்துரிமை இழந்த பெண் அது சார்ந்;து தேவைகள் மறுப்புக்குள்ளாகும் போது, அதை அவள் முன்கூட்டியே இழந்து வாழ்வதால் தற்கொலையை நாடுவதில்லை. ஆனால் ஆண் இதைத் தாங்கிக் கொள்ளமுடியாத தோல்வி மனப்பான்மையில் தற்கொலையை நாடுகின்றான்.


ஆணின் பொருளாதாரப் பலமும், பெண்ணின் பொருளாதாரப் பலவீனமுமே தற்கொலையை ஆணை அதிகம் தூண்டியும் பெண்ணை எதிர்த்து நிற்கவும் கோருகின்றது. வேகமான மாற்றங்கள், கோரிக்கைகள் போன்றவற்றிலும் கூட, பெண்ணின் நிதானமான செயல்பாட்டையும், ஆணின் அவசரமான செயல்பாட்டையும் காணமுடியும். இது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இக்கண்ணோட்டம் தெளிவாகப் பலதுறைகளில் வேறுபடுகின்றது.