Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமூகத்தின் எல்லையா தனிமனிதன்? அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்?

சமூகத்தின் எல்லையா தனிமனிதன்? அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்?

  • PDF

சரிநிகர் இதழ் 167 இல் "..சமூகம் என்பது  தனிமனிதத் தொகுப்பின் பொதுமை. இப் பொதுமைக்கும் தனிமனிதத்வத்திற்குமான உறவாடலில் முரணில் பிறப்பது தான் சழுக இயக்கம். இதில் எதையும் சமூகத்தையும் சரி,

 தனிமனிதனையும் சரி, இரண்டிக்குமான உறவாடல்! முரண் எதையும் மறுக்க இயலாது." என வெங்கட சாமிநாதன்  சிவசேகரத்துக்கான பதிலில் "சமூகத் தேவைக்கு ஏன் இந்தக் குரங்குப்புத்தி?" என்ற தலைப்பில் விவாதிக்கின்றார்.

 

சரிநிகர் விவாதிக்க கோரிய தனிமனிதனுக்கு சமூகத்துக்கும் இடையிலான உறவு குறித்த இயக்கம் தான் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்கு இடையிலான விவாதமும் போராட்டமும் மட்டுமின்றி மனிதவராலாற்றில் நிகழ்ந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறுமாகும். இது சாதிக்குள், ஆணாதிக்கத்துகுள் என எங்கும் அடிப்படையான பிரச்சனையாகும்.

 

சமூகம் என்பது தனிமனிதனின் தொகுப்பு என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை கோட்பாடாகும். இதில் இருந்ததான் தனிநபர் தனானக திருந்தினால், மாறினால் உலகம் தலைகீழாக மாறிவிடும் என முhலாளித்துவ அறிஞர்கள் தொடக்கம் மதம் ஈறாக புகட்டுகின்றன. இன்று உலகமயமாதல் கூட தனமனித முதன்மையை பாறைசாற்றியே, அதன் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டே இச்சமூகத்தை சூறையாடுகின்றனர். அதாவது சமூகத்தின்  சுதந்திரம் என்பது தனிமனித சுதந்திரத்தின் தொகுப்பு  என்பது தான் இந்த தனியுடைமை சமூதாயத்தின் உள்ளாhந்த இயங்கியல் விதியாகும்.

 

மாறாக பாட்டாளி வாக்கம் சமூகத்தின் சுதந்திரத்தை மீறிய தனிமனித சுதந்திரத்தை எற்றுக்கொள்வதில்லை. தனிமனித சுதந்திரம் என்பது சமூக சுதந்திரத்தை மறுத்து மட்டுமே இருக்கக் கூடியவை. இதுதான் சமுக முரண்நிலையின் இருத்தலுக்கான அடிப்படையாகும். முரண் என்பது மனித வாழ்வை மறுப்பதில் கருக்கொள்கின்றது. இயற்க்கையான இயற்க்கையின் முரண்கன் மனிதமுரண்களை எற்படுத்துவதில்லை மாறாக இயற்க்கை முரண்களையே பிரதிபலிக்கும்;. இயற்க்கையின் முரண்களை செயற்க்கையான மனித முரண்கள் எற்படாதவரை இயல்பான மனித இயக்கையின் சமூக ஐக்கியத்தில் பரஸ்பர உதவி மூலம் மேவமுடியும்.

 

இங்கு சுதந்திரம் என்பது என்ன எனப் பார்ப்போம். சுதந்திரம் என்ற கோரிக்கை சுதந்திரம் மறுக்கப்படும் போது மட்டும் யதார்த்தமாகின்றது. எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளபோது சுதந்திரம் கற்பிதமாகிவிடுகின்றது. ஓட்டு மெதத்த சமூகம் சுதந்திரத்தை அடைகின்றபோது தனிமனித சுதந்திரம் அர்த்தம் இழந்துவிடுகின்றது.  ஆதிகாலத்தில் மனிதர்கள் எல்லோரும் சுதந்திரமாக இருந்த போது சுதந்திரம் கேள்வியாகவில்லை. தனியுடமை சமூகம் உருவான போதுதான், தனிமனிதனை நோக்கியும், கோரியும் சுதந்திரங்கள், உரிமைகள் பற்றிய நிலைநாட்டல்கள், சூறையாடல்கள், விவாதங்கள் "தனிமனிதனைச்" சார்ந்து இவ் தனியுடைமை சமூகம் பாதுகாக்க பின்நிற்க்கவில்லை.

 

எல்லா மனிதர்களும் தனிநபராக தனக்கும், சமூகத்கும் உழைக்கும் வரை, உழைக்கும் போது முதாலாளி இல்லாது போகுகின்றான். சமூக உழைப்பை தனிமனிதன் உழைப்பின் பொதுமையாக காட்டிய தனிமனித நலன்கள் தான் முதலாளித்துவ சூறையாடலின் அடிப்படை விதியாகும். இன்று உலகில் நவீன கண்டுபிடிப்புகள் மீதான  வெறியுடன் கூடிய வேட்க்கை சமூகத்தை மறுத்த தனிமனிதனின் முதன்மையில் மக்கனை கொள்ளையடிப்பதுதான், கண்டுபிடிப்புகள் தனிநபரின் கண்டுபிடிப்பாக காட்டியும், அவனின் திறமைக்கு பரிசாக பரிசுகள், மக்கள் மீது அவ் கண்டுபிடிப்புக்கு வரி அறவிடுவது எல்லாம் சமூகத்தை நிராகரித்த தனிமனித சமூக அமைப்பின் சூறையாடல்தான்.

 

ஆசியா மக்களின் நீண்ட வராற்றில் அவ் மக்கள் தமது அறிவியாலல் பயன்படுத்திய வேம்பு, மஞ்சள் .. என நீண்ட அறிவியல் கண்டு பிடிப்புகள் இன்று சமூகத்தின் கையில் இருந்து பண்ணாட்டு நிறுவனங் சார்ந்த தனிநபர் கண்டுபிடிப்பாக மாறிய வித்தை, தனிமனிதத்தின் செயலை சமூகச் செயலாக மாற்றியதன் விளைவே.

 

இங்கு மனிதனின் தொடர்ச்சியின் இயங்கியலை மறுக்கும் தனிமனித அற்புதங்கள் தமது தனித்திறமைகளின் முன் உலகை மண்டியிடக் கோருகின்றன. இந்த வகையில் "பாரம்பரியமாக ஒரு மரபாக தொடர்ரும் தொழில் திறன். இதை யாரும் ஒப்புக் கொள்வார்கள். இடையில் ஒரு கலைஞன் தோன்றி விட்டால் , அவனை மரபின் தொடர்சியாக வரும் தொழிற்காரனாகத்தான் காணவேண்டும் என்கிறார் சிவசேகரம்" எனக் கூறி விமர்சிப்பதன் மூலம், மக்கள் பாரம் பரியமாக மருத்துவத்துக்கும் பல்வேறு மனித செயல்களில் பயன் படுத்திய பொருட்க்களை நவீன பன்நாட்டு ஆய்வு கூடங்களில் பகுத்தராய்ந்து உள் கூறுகளில் எது குறித்த கரியத்துக்கு செயல் படுகின்றது என நிறுபுபவன், மக்களின் தொடர்ச்சியை மறுத்து, அதன் வழியில் இல்லை என மறுத்து, தனது தனித்திறமையின் கண்டுபிடிப்பாக வானத்தில் இருந்து விமுந்தாக சத்தியம் செய்யும், "டங்கல்" நிபந்தனைகளைத்தான் அச்சொட்டாக கலைத்துறையிலும் முன்வைக்கின்றார்கள் அதன் கோட்பாட்டுவாதிகள்.

 

கலைஞன் கலையின் தொடர்ச்சியில் தான் உருவாகின்றான். அது எல்லத் தொழிலுக்கும் பொருந்தும். எது மனிதனுக்கு தெரிகின்றதோ அதில் அவன் சரசாரி நிபுனத்துவனாக இருக்கின்றான்;. குறித்த ஒன்றின் சமூகத்தொடர்புகளையோ அல்லாது அதன் இயங்கும் முழுமையை புரிந்து கொள்ளும் ஒருவன், அப்போது சராசரி எல்லையைத் தாண்டி நிபுணன் ஆகின்றன்.

 

மார்க்ஸ் மாக்சியத்தை நிறுவியது அவரின் தனிப்பட்ட தனித்திறமையால் அல்ல. மாறாக பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின்; தொடர்ச்சியில் இருந்துதான் மாhக்சியத்தை அதன் முழுமையில் நிறுவினர். சமூகத்தை மீறிய படைப்பை, தனிநபர் சழுகத்துக்கு வெளியில் உன்னதமான மயைகளில் எதையும் படைக்கமுடியாது. சமூகம் தான் படைப்பின் இயற்க்கையும் எல்லையுமாகும். சமூகம் இயக்கையின் எல்லைக்கு உட்பட்டதே. உலக வரலாறு மனித வரலாறாக எப்படி தவறாக இன்று விளக்கப்பட்டு இயக்கையின் வரலாற்றை மறுப்புக்கு உள்ளக்கின்றனரோ, இதுதான் மனித வரலாற்றை மறுத்த, அதன் தொடர்ச்சியை மறுத்த தனிமனித வரலாறுகளை முதன்மைப்படுத்தல் ஆகும்.

 

மனிதன் எல்லோரும் எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் கொண்டவர்களே. இந்த படைப்புத் திறன் வேலைப் பிரிவினையால் படிப்படியாக சிலதை படைக்கும் ஆற்றலை இழக்கத் தொடங்கினன். முதலாளித்துவ இயந்திரமயமாதல் உடன் தொழில் புரட்சி மனிதர்களின் அற்புதமான படைப்புத்திறன்களை நலம் அடித்து ஒருதுறையில் மட்டும் இருந்த சிறப்புத் தகுதியைக் கூட தனது உயர்ந்தபட்ச்ச சுரண்டலுக்கு இசைவாக்க இயந்திரத்துக்கு அடிமையாக்கினன். இயந்திரத்துக்கு இசைவாக மனிதனை உழைப்பதற்க்கு இசைவாக மனித ஆற்றல்களை அழித்து இயந்திரத்தின் உறுப்பாக மாற்றிய போது மனிதனின் முழு படைப்பற்றலில் இருந்தும், ஒன்றின் மீதான தனித் திறமையையும் இழந்தான். இதைத்தான் வெ.சா "ஃபாக்டரி லேபரைத் தவிர" என கிண்டல் செய்கின்றார்.

 

தனித் திறமை என்பது ஆதியில் சில கூட்ட மக்களின் திறமையாக  உருவாக வேலைப் பிரிவினை கராணமாக இருந்தது. எகிப்திய சமூதயத்தின் உன்னதமான படைப்புகள் எற்பட காரணம் என்ன? நிலம் இலகுவான வகையில் தேவையை பூர்த்தி செய்த இயக்கையின் கொடை, எகிப்திய மக்கள் தனது தேவைக்காக உழைக்கும்  காலத்தை குறைத்து மேலதிக உபரியை செய்யக்கூடிய இயற்க்கையுடன், அங்கு கணப்பட்ட கட்டாயமான வேலைப்பிரிவினை நுனுக்கமான படைப்பற்றலை வழங்கியது. எகிப்தில் கட்டாய வேலைப்பிரிவினையை தாண்டி வேலையை தெரிந்து கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக சட்டங்கள் இருந்தன. இவைதான் செய்யும் தொழிலில் கலைத்தன்மையை அம்மக்களுக்கு அல்ல குறித்த தொழிலில் ஈடுபட்டோருக்கு வழங்கியது.

 

இந்;திய வரலாற்றில் தொழில் சார்ந்து உருவான சாதிப்பிரிவு செய்யும் தொழிலில் புலமையையும், கலை நேர்த்தியையும் வழங்கியது. அடிமட்டசாதிகள் தமது உணவுக்கு உழைப்பது கூட தடை செய்யப்பட்டு உபரியை பயன்படுத்திய மேல்மட்ட ஆளும் சாதிப்பிரிவுகள், ஆளும் பீடங்கள் தமது சமுதாய நோக்கத்தின் வெளிப்படுகளை வாழ்வு மறுக்கப்பட்ட கலையர்களைக் கொண்டு சவுக்குகளின் உதவியால் வடித்தெடுத்தனர். சோழர் காலம் பொற்காலம் அல்ல இருண்ட காலமாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உபரிகளை அதிகளவு சுரண்டிய காலமாகும். அதன் வெளிப்பாடுதான் இன்று அதன் மீது உரிமை கோரி காட்டும் படைப்புகளாகும்;. சழுகத்தின் கலைஞன் அங்கு சுதந்திரமாக  தன் மீதான சாதிய, சுரண்டல் ஒடுக்குமுறையின் அவலத்தை சமூகம் சார்ந்த படைக்கும் சுதந்திரம் ஆளும் பிரிவுகளால், உயர்சாதிப் பிரிவுகளால் அணுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்களின் இருண்டகாலமாகும். அதாவது இன்று எப்படி அம்பேக்கர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டு வன்முறை பரிசாக கொடுக்கப்படுகின்றதோ, அதுவே சோழர்காலத்தில் அந்த மக்களின் அதியுயர் எல்லையில் சாதி அடக்குமுறையுடாக சுரண்டியதன் கொடூரங்கள்தான் இந்த சிற்பத்தின் வரலாறுகள். சாதிவேலைப் பிரிவினையை அதிகம் சுரண்டி தமக்கு சேவகம் செய்யும் பார்ப்பாணிய கலைகளையும், சுரண்டும் கலைகளையும் தமது வரலாற்றுச் சின்னங்களாக படைப்பித்தனர். இதறக்கு பலியிட்ட மனிதங்கள் சோழ பொற்காலங்கள் மீட்க்கப் போவதில்லை. மாறாக அந்த மக்கள், இதை சவுக்குகளின் முன் இரத்தையும், வேர்வையையும் சிந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தனது சொந்த வரலாற்றின் ஊடாக மீடடு எடுக்கவேண்டும். சோழ கலைகள் உண்மையில் இன்று இருக்கும் அந்த தனியுடமையின் அற்புதங்கள் அல்ல. அதாவது கிணறு தோண்டுபவன் அதன் உரிமையைமட்டுடல்ல, குடிக்க தண்ணிரும் மறுக்கப்பட்டு யாருக்கோ சொந்தமாகி பின் அதை உரிமையாக்கியவன் அல்லது தோண்டக் கோரியவன் மெச்சுவது போல்தான் சோழ கலைகள். மாறாக அக்கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகள் என்பதையும், இவை அன்று சோழ பார்ப்பானிய, நிலப்பிரபுத்துவ நுகத்தடிக்குள், அதன் வக்கிரங்களை கலையாக்கிய வரலாற்றையும் மிட்க்கவேண்டியுள்ளது.



இதை மறுத்து சோழர் காலம் மிக உயர்ந்தது என்பது, பார்ப்பணியத்தையும் (கோட்பாட்டை), ஆதிக்க தனியுடமை சமுகத்தை பாதுகாக்கும் எல்லையில் தான், சமூக சுதந்திரத்தை தனிமனிதனின் சுதந்திரமாக காட்டும் இவ் அமைப்பின் கோட்பாடு நிடிக்கின்றது.

Last Updated on Friday, 18 April 2008 18:24