Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் ஸ்டெம் கலங்களில் இருந்து மனித இதயத்தின் பகுதியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கினர்

ஸ்டெம் கலங்களில் இருந்து மனித இதயத்தின் பகுதியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கினர்

  • PDF
உலக அளவில் முதல் முறையாக பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தண்டுகலங்கள் எனப்படும் ஸ்டெம் செல்களிலிருந்து மனித இதயத்தின் ஒரு பகுதியை வளர்த்து உருவாக்கியுள்ளார்கள்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுவது குறித்த சிக்கல்கள் குறையக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி பெறுமேயாயின், இன்னமும் மூன்று வருடங்களில் செயற்கையாக வளர்க்கபட்ட மனித இதயத்தின் திசுக்கள், செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தபடக் கூடும் என இந்த ஆராய்ச்சியின் தலைவர் மக்டி யாகூப் பிரிட்டனின் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக செயற்கையாக ஒரு மனித இதயத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பழுதடைந்த ஒரு திசுவை தண்டுக்கலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திசுக்களின் மூலம், மரபு ரீதியாக சேர்க்கப்படும் போது அதை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனவே இனி வரும் காலங்களில் தானங்கள் மூலம் செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்கப்படக் கூடும்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1175538420&archive=&start_from=&ucat=2&

Add comment


Security code
Refresh