Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் வெப்பத்தால் கடல் மட்டம் உயர்கிறது: 100 கோடி பேர் மூழ்கும் ஆபத்து

வெப்பத்தால் கடல் மட்டம் உயர்கிறது: 100 கோடி பேர் மூழ்கும் ஆபத்து

  • PDF
விஞ்ஞான வளர்ச்சி, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக பனிமலைகள் உருகுவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.

இதுபற்றி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-

உலகின் மொத்த மக்கள் தொகையில் 100 கோடி பேர் தாழ்வான பகுதிகளில் வசிக்கிறார்கள். கடல் நீர் மட்டத்தில் இருந்து 100 அடிக்கு கீழே இவர்களது பகுதிகள் உள்ளன.

திடீரென 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி போன்று பேரலைகள் ஏற்பட்டாலோ கடல் நீர் மட்டம் அதிகரித்தாலோ இந்த பகுதிகள் மூழ்கிவிடும்.

கடல் மட்டம் 100 அடி உயர்ந் தால் உலகம் முழுவதும் 37 லட்சம் சதுர மைல் பரப்பளவு நிலம் மூழ்கி விடும். 100 கோடி பேருக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும்.

கடல் நீர் 16 அடி உயர்த் தலோ 66 கோடி பேர் பாதிக் கப்படுவார்கள். 20 லட்சம் சதுர பரப்பளவு நிலம் மூழ்கி விடும்.

தற்போதைக்கு ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 08 அங் குலம் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கடல் மட்டம் 20 மீட்டர் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1177306620&archive=&start_from=&ucat=2&