Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் புற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு.

புற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு.

  • PDF
lankasri.com மனித உடலில் நோய் ஆக்கிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கும் தனித்துவமான புரத மூலக்கூறை பிரித்தானிய புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

DNGR-1 என்று குறியீட்டுப் பெயருடைய இந்த புரத மூலக்கூறு Dendritic கலங்களில் காணப்படுவதாகவும் இவையே செய்தி காவிகளாக இருந்து உடலுக்குள் புகும் அந்நியக் கூறுகள் பற்றிய தகவல்களை கூறி அவற்றை அழிக்க T வகை கலங்களை தூண்டி விடுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகையின் கீழ் புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான கலங்கள் பரவலடையும் போது அவற்றையும் தாக்கி அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆய்வின் பிரகாரம் எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு எதிரான vaccine உருவாக்க வாய்ப்புக் கிடைக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ள ஆய்வாளர்கள் இதேவழியில் எயிட்ஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராகவும் vaccines ஐ உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1211652702&archive=&start_from=&ucat=2&