Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் ஓட்டுத் தையல்

ஓட்டுத் தையல்

  • PDF

எம்ப்ட்ராயட்ரிங்கில் சங்கிலித் தையல் முறையைப் பார்த்தீர்கள் அல்லவா அது மிகவும் எளிதான மற்றும் அடிப்படை முறைதான்.

அதை விட மிக எளிதான ஒரு தையல் முறை உள்ளது. அதுதான் ஓட்டுத் தையல். இதனை மிக அழகாகக் கையாண்டால் இந்த ஒரேத் தையல் மூலமாக ஒரு புடவை முழுமையையும் கூட பூ வேலைப்பாடு போட்டுவிடலாம்.

ஆனால் இதனை கற்றுக் கொள்வதுதான் கொஞ்சம் எளிது...

என்ன ரொம்ப ஆர்வமாக இருக்கின்றீர்களா... வாருங்கள் ஓட்டுத் தையல் பற்றி பார்க்கலாம். ஓட்டுத் தையல் புகைப்படத்தைப் பார்த்த உடனே அடடா இதுவா என்று நினைத்திருப்பீர்களே.

ஆம் இதே தான். ஒரு வட்டம் அல்லது முழுயான உருவம் போன்றவற்றை எளிதாக போட்டு முடிக்க இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தலாம்.

அதாவது ஊசியில் ஓரிடத்தில் குத்தி வெளியே எடுத்து பின்னர் எண்ணிக்கையாக 5 இழை விட்டு மீண்டும் துணியில் ஊசியைக் குத்தி உள் வாங்கி பின்னர் அதே எண்ணிக்கையில் மீண்டும் ஊசியை வெளியே இழுத்தும் போடலாம்.

அல்லது ஊசியை துணியின் அடிப்பகுதியில் குத்தி எண்ணிக்கையாக 5 இழைகள் எடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வெளிப்பக்கமாக ஊசியைக் குத்தி எடுத்துக் கொண்டே போனால் ஓட்டுத் தையல் தயார்.

முதலில் நீங்கள் உங்கள் கைக்குட்டை, தலையணை உறைகளில் இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தி சில பல பூக்களைப் போட்டுப் பாருங்கள். இதற்காக நீங்கள் சிரமப்படாதீர்கள். உங்கள் பழைய ஆடைகளில் ஏற்கனவே இருக்கும் டிசைன்களின் மீதே அப்படியே இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தி பூ வேலைப்பாடு செய்யலாம்.

அதனை மேலும் மெருகூட்ட வேண்டும் எனில் ஒட்டுத் தையல் போடும் இடங்களில் ஆங்காங்கே சின்ன சின்ன சமிக்கிகளையும் ஊசியில் கோர்த்துக் கொண்டு தையல் போட்டுப் பாருங்கள்.

உங்கள் தோழி அணிந்திருந்த மிக விலை உயர்ந்த ஆடையைப் போன்று உங்கள் ஆடையும் ஜொலிப்பதை உணர்வீர்கள்.

அப்புறம் என்ன எல்லா பழைய ஆடைகளையும் பூ வேலை மற்றும் சமிக்கி சேர்த்து புதுசாக்குங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் அம்மா அல்லது தோழிகள் திட்டுவதை.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0807/03/1080703040_1.htm