Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் கடல் நீரைச் சூடாக்கும் மனிதன்

கடல் நீரைச் சூடாக்கும் மனிதன்

  • PDF

உடம்பு சூடானால் குளிர்ந்த நீரில் குளித்து உடம்புச் சூட்டைத் தணிக்கிறோம். ஆனால் தண்ணீரே சூடானால் என்ன செய்வது?உலகத்தில் உள்ள எல்லாக் கடல்களிலும் தண்ணீர் சூடாகி வருகின்றது. இதற்கு மனிதர்களின் நடவடிக்கையே காரணம் என்று அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிவந்துள்ளது. கலிபோஃர்னியாவிலுள்ள ஸ்கிரிப்ஸ் கடல் வளக் கழகத்தைச் சேர்ந்த டிம் பார்னெட் என்ற அறிவியல் அறிஞர் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, கணிணி மாதிரிகளையும் நடைமுறை உலகில் கிடைத்த தகவல்களையும் வைத்து ஆராய்ந்தததில் பசுமைஇல்ல வாயுவினால் உருவாகும் வெப்பம். கடலுக்குள்ளும் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கடல் வெப்பம் அதிகரிப்பு மனிதர்களின் நடவடிக்கைகளால் தான் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு மனிதனால் கடல் நீர் வெப்பமடைந்து வருவதை அவர்கள் கணிணி மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர்.

 

கடந் நீரின் வெப்பநிலை மாற்றத்திற்கு இயற்கையான காலநிலை மாற்றம் காரணமா?அல்லது எரிமலை வெடிப்பு, சூரிய சக்தி போன்ற புறசக்திகள் காரணமா?என்று விளக்கம் காண முயற்சிக்கப்பட்டது. ஆனால் கடல் நீரின் பரப்பில் தெரிம்பும் வெப்பநிலை இசைந்ததாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. தற்போது புவிவெப்பமடைவதற்கு இவை சான்றுகளாகும். கடல் வெப்பம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வெற்றிகரமாக ஆராய முடியும் என்கிறார் டிம் பார்னெட்.

 

கடல் வெப்பத்தின் பாதிப்பு புறவெளியிலும் இந்த நிலத்திலும் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். தென் அமெரிக்காவின் ஆன்டெஸ் மலையிலும் மேற்குச் சீன மலைகளிலும் பனியல்கள் உருகி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இடர்கள் ஏற்படக் கூடும். கோடைகாலத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்று பார்னெட் கூறினார்.

 

கடல் நீர் வெப்பமடைவதற்கான மனித நடவடிக்கைகள் யாவை என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதை விட இந்த விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும் ென்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கடல் நீர் வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தீவிரமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும்.

 

இதற்கிடையில் சைபீரியாவில் 125 ஏரிகள் காணாமல் போய் விட்டன என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சைபீரியாவில் உள்ள 10,000க்கும் அதிகமான ஏரிகள் பற்றிய செயற்கைக் கோள் படங்களை அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.1973ல் 10.882 ஏரிகள் இருந்தன என்றும் அவை 1998ல் 9712 ஆகக் குறைந்து விட்டன என்றும் இந்த ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. மொத்தம் 125 ஏரிகளைக் காண வில்லை என்றும் எஞ்சிய ஏரிகளின் பரப்பும் சுருங்கி வருவதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

காணாமற்போன ஏரிகளைக் கண்டு பிடித்துத் தருவோருக்கு பரிசு என்று அறிவிக்கலாமா? முடியாது. ஏனென்றால் புவி வெப்பமடைவதால் உண்டாகும் விளைவு சைபீரியக் குளிரின் வேகத்தையும் குறைத்து விட்டது. சைபீரியா என்றென்றும் பனி உறைந்து கிடக்கும் நிலப் பகுதியாகும். அங்கேயே புவிவெப்பம் பரவி உறைந்த ஏரிகள் உருகி காணாம்ல போய்விட்டன. இவ்வாறு ஏரி உருகியதால் வழிந்தோடும் நீர் பூமிக்குள் ஊடுருவ முடியாம்ல பனிக் கட்டி மண் தடுக்கிறது இதனால் நிலத்தடி நீர்வளம் குறைந்து விட்டது. இப்படியே நோனால் குளிர் பிரதேசமான சைபீரியாவில் கூட தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடலாம். அப்படி ஒரு செய்தி ஒலிபரப்பானால் ஆச்சரியப்படாதீர்கள்.

 

http://tamil.cri.cn/1/2005/07/11/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it