Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் வாலுழுவை. : வேறு பெயர்கள் -: வாலுழுவை அரிசி.

வாலுழுவை. : வேறு பெயர்கள் -: வாலுழுவை அரிசி.

  • PDF

 

வாலுழுவை.

 


1) மூலிகையின் பெயர் -: வாலுழுவை.

2) தாவரப்பெயர் -: CELASTRUS PANICULATUS.

3) தாவரக்குடும்பம் -: CELASTRACEAE.

4) வேறு பெயர்கள் -: வாலுழுவை அரிசி.

5) தாவர அமைப்பு -: வாலுழுவை ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. காடு மலைகளில் சுமார் 200 மீட்டர் முதல் 600 மீட்டர் வரை கடல் மட்டதுதிலிருந்து இயற்கையாக வளரக் கூடியது. இதன் கொடி 25 செ.மீ. விட்டத்திலும், இலைகள் 6 - 10 செ.மீ. நீளத்திலும், பூக்கள் 5 - 20 எம். எம். மும், பழம் 1 - 2 செ.மீ. விட்டமாகவும், விதை 3 - 6 ஆரஞ்சு நிரத்திலும் இருக்கும். இது வட அந்தமான் மற்றும் மத்திய அந்தமானிலும் காணப்படும். இது மலேசியா, தாய்லேண்டு, இந்தோ சைனா, சைனா மற்றும் தாய்வானிலும் பரவியுள்ளது. சிறிய பூக்கள் மஞ்சள் கலந்த பச்சையாகத் தென்படும். ஆண் பூ,பெண் பூ என்றும் உள்ளது. பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கையால் விதைகள் உற்பத்தியாகும், மரக்கலராக இருக்கும். இதிலிருந்து எண்ணெய் எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்திகிறார்கள். இது கசப்பாக இருக்கும். இது திகட்டும் நெடியாக இருக்கும். இதில் புரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி , சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்திக்கள் உள்ளன. வாலுழுவை கட்டிங் மூலமும், விதைமூலமும் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது. வீடு, பூங்காக்களில்அழகுக் கொடியாகவும் வளர்க்கிறார்கள்.

6) பயன் படும் பாகங்கள் -: இலை மற்றும் விதை மட்டும்.

7) மருத்துவப் பயன்கள் -: வாலுழுவை எண்ணெயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வறை நல்ல ஞாபக சக்தியை உண்டாக்கக் கூடியது. புண்களைக் குணப்படுத்தும், குடல் புண் மற்றும் வாதத்தைப் போக்கும். குஸ்டம், தலைவலி,தோல் வியாதியைக் குணப்படுத்தும்.

'வயிற்றுக் கடுப்புவலி மாறாக் கிராணி
பயித்தியங் காசமல பந்தஞ் - சயிக்க வொணாச்
சூதிகா வாதமும் பேரந்தவல் வாலுழுவை விதைக்
கோதிவைத்த நல் மொழியை யோர்'

குணம்- :வாலுழுவை அரிசிக்கு வயிற்றுப் பிடுங்கல் கடுப்பையுடைய ரத்தபேதி, பித்தம், இருமல், மலக்கட்டு, அசிர்கரம் போம்.

உபயோகிக்கும் முறை -: இதன் சூரணத்தை வேளைக்கு 5 - 7 குன்றி எடை சரக்கர்யுடன் கூட்டி தினம் மூன்று வேளை சாப்பிடவும். அல்லது கால் அல்லது அரை விராகனெடை அரிசியைப் பசுவின் பாலில்அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை சாப்பிடவும், இப்படிச் சில தினம் உட்கொள்ள இழமைப் போல் மேனி உண்டாகும்.மேற் கூறப் பட்டநோய்களும் குணமாகும் வாலுழுவையரிசி, மரமஞ்சள், கடுகுரோகனி, அதிவிடயம், சித்திரமூல வேர்ப் பட்டை, வட்டித்திருப்பி (செடிஇலை) இவற்றைச் சமனெடையாக இடித்து சூரணம் செய்து வேளைக்குத் திரிகடிப் பிரமாணம் சர்கரை கூட்டித் தினம் இரண்டு வேளை சாப்பிட்டுவர இரைப்பையிலுண்டான பல பிணிகள் போம். இதன் இலையை ஈரவெங்காயத்திடன் சேர்த்துஅரைத்து ஆசன வாயில் தடவினால் மூலம் குணமாகும்.

Last Updated on Thursday, 31 July 2008 15:07