Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளத்தை பெருக்குவதன் மூலம் பாசனத்தை விருத்தி செய்து அபிவிருத்தி காண முனைய வேண்டும் நீர்வள வலயங்களின் அடிப்படைத் தரவுகளின் துணையுடன் திட்டங்களைச் செயற்படுத்தினால் அவை வெற்றிபெறும் நன்னீர் ஏரித்திட்டம் நற்பயன்களைத் தரும்

யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளத்தை பெருக்குவதன் மூலம் பாசனத்தை விருத்தி செய்து அபிவிருத்தி காண முனைய வேண்டும் நீர்வள வலயங்களின் அடிப்படைத் தரவுகளின் துணையுடன் திட்டங்களைச் செயற்படுத்தினால் அவை வெற்றிபெறும் நன்னீர் ஏரித்திட்டம் நற்பயன்களைத் தரும்

  • PDF

தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட் டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின் றது. வடமாகாணத்தின் மொத்த குடித்தொகை யில் 70 வீதத்தினர் யாழ். குடாநாட்டில் செறிந்தி ருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய் கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

 

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத் தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசீன்காலச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள் ளன. இப்படிவுகள் தரைக்கீழ்நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை யாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புக விடும் இயல்பை அதிகளவு கொண்ட வையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப் படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீ“ர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப்பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல் கின்றது. ஆகக்கூடிய தடிப்பு "100110' வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர்நீர் ஏரிகளி னால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர் நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.


சுண்ணக்கற் பாறைப்படிவுகள் பிரதான நிலப் பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழ மற்று மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட் டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படு கின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செல வில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பண்படுத்த முடி யும்.


கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயேயாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன

 யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வர லாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிண றுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்ப தற்காகவும் விவசாயத்திற்காகவும் மக்கள் பயன் படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப் பாக துலா மூலமும், உள்ளூர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப் பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந் துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை இன்றைய காலகட்டங்களில் உபஉணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச் செய்கை முறை யாக மாறிய பின்னர் நீர் நிறைக்கும் இயந்திரத் தின் பாவனை யாழ்.குடா நாட்டின் சகல கிரா மங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.


இவற்றினால் அண்மைக் காலங்களில் குடா நாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் உவர் நீராதல் போன்ற பிரச்சினைகள் தோன்றியுள் ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்ப தில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்ல முறை யில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடா நாட்டில் தரைக் கீழ் நீர்வளம், பாவனை, முகாமைத் துவம், அபிவிருத்தி பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வள சபை வடபகுதி தரைக் கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதி லும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப் படவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் வளம் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறை கள் பற்றியும் முன்னெப்போதுமில்லாதவாறு இன்றைய கால கட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண் டியவர்களாகவுள்ளோம். திட் டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங் கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத் திற்கு முன்வைக்கப் படுகிறது.


சில அபிவிருத்தி ஆலோசனைகள்


யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசன மும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம் சமே முன்னுரிமை பெறுகின்றது.


* யாழ்ப்பாணக் குடாநாட்டில் இனி மேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை, முக்கி யமாக விளை பரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது "உள்ளதையும் கெடுக்கும்' ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற் போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறை யிலானதாக மாற்றுவதோடு நீர்ப் பாசன முறைகளிலும் நவீனத் துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்து வத்துவத்தைப் பேணி வீண் விரயமாதலைத் தடுத்து உள்ள விவசாயப் பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்க தாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.


*யாழ்ப்பாணக் குடா நாட்டின் நிலப்பயன் பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்ற தாக மாற்றப்பட வேண் டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்சப் பயன் தரத் தக்கதாக அமைக்கப்படுதல் வேண் டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந் ததாக அமையப் பெறவேண்டும். யாழ்ப் பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர் செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வரு மானம் தரத்தக்க பணப்ப யிர்ச்செய்கைவிருத்தி செய்யப் பட வேண்டும். உபஉணவு, காய் கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப்பயிர்ச் செய்கை போன்றவனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சிலவிவசாய இந்த கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப் பொருள் களை வழங்குபவையாயும் இருக்க வேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகை யிலை செய்கை ஊக்குவிக்கப்படுதல் வேண் டும். ஏனெனில் இது செய்கையாள ருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர்வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்கும் உதவுவதாகும். தேயிலை, றப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச் செலாவணி பெறுவது போல் நாம் புகையிலையால் அந்நியச்செலா வணி பெறலாம்.


* நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதி களில் விவசாயச்செய்கை. நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்ய்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண் டும். சந்தை நிலைமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவ சாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ் வகை யான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதா கும்.


மழை நீரைத் தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்


* யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக்கீழ் நீரின், மீள் நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும், என்பதில் பலர் ஒருமித்த கருத் தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத் திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பி யான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரானது மேற் பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்ப தற்கு சகல வழிகளிலும் நாம் முய லுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட் டின் சுண்ணக்கற் புவி அமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங் களில் நிறையும் தண்ணீ ரில் பெரும் பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிக ரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின் றன. இவ்வாறான குளங்களைத் துப்பரவு செய் தலும் தூர் அகற்றுதலும் அவ சியம். இங்கு இவ்வாறான முயற்சிகள் அரிதாகவே இடம் பெறுகின்றன.


*தோட்டங்கள் இளக்குவதற்கு குளங்க ளின் மண், மக்கி எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இது மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித் தெரியக் கூடியள விற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளி யேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.


*யாழ்ப்பாணக்குடாநாட்டில் சில பகுதிக ளில் , சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ்நீர் ஓடும் குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலா வரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன் னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிம லைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கர வெட்டி குளக்கிணறு, ஊறணிக் கிணறுகள், யமுனாஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப்பள்ளங் களாகும். இவற்றுள் சில பாசனத்திற்காக பயன்டுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத் தக்க வாய்ப்புகளை கொண்டுள்ளன.


நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஆய் வொன்றின் படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியா லங்களில் 30,000 40,000 கலன் நீர்தோட்ட பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து எடுக்கக் கூடிய தன்மை தெரியவந்தது. இவற்றை பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங் களில் பெருமளவு நீரைத்திட் டமிட்ட அடிப்ப டையில் தரைக் கீழ் நீர் மீள்நிரப் பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர் வளத்ததைப் பெரி தும் அதிகரிக்கக் கூடியதாக அமையும் என துணி யலாம்.


* தரைக்கீழ் நீர்க் குகைவழிகள் மூலம் நீர் கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப் படுகின்றது. கீரிமலைக்கேணிக் குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்க வேண் டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனை கள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல் முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.


நன்னீர் ஏரித்திட்டம்


* யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ் வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங் குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற் றும் திட்டம் பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப் பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிக ரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக் கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைகீழ் நீர்வில்லைகள் துண்டுபடாது தொட ராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சினைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளைநிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப் பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகளை நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்கு மெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922 இல் இரணைமடுக்குள அணை கட்டப்பட்ட போது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக் கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங் கொள்ளத்தக்கது.


யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்ட கால திட் டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற் றப் படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறை யிலுள்ள 33 உவர்நீர்த் தடுப்புத் திட்டங்களும் உள் ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீ ரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரி களாக மாற்றலாம். அவையாவன.


1. ஆனையிறவு மேற்கு கடனீரேரி
2. ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
3. உப்பாறு/ தொண்டைமானாறு கடனீரேரி


மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு, அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டு முள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடனீரை உள்ளே வரவிடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்லமுறையில் செயற்படுத் துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடா நாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரி களையும் அதிக பொருள்செலவு இன்றி நன்னீ ரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரண மாக மண்டைதீவையும் வேலணையை யும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரே ரியாக மாற்றலாம். பண்ணைத் தாம்போதி யையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ். நகரத்தின் தென்மேற்கு பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப் பரப்புக ளில் உவர்த்தன்மை நீக் கப்பட்டு அவற்றை வளமான விளை நிலங்காளக மாற்ற முடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமை யுமெனலாம்.


கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக் கின்றனர்.


1. சூழல் மாசடைதல் தொடர்பானது


கடல் நீரேரிகளில் நீர்வரத்துத் தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியி ருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற் றினால் (சோளகக் காற்று) புழுதி வாரி வீசப்படு மென்றும், இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் அபாயத்தைக் கொண்டுள் ளதெனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.


இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்க லாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப் பதன் மூலமாகவும் முற்றாக நீர் வற்றும் பகுதிக ளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்ட மிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமா கவும் இம் மாசடைதல் பிரச் சினையைச் சமாளிக் கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப் பிற்கு உட் படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக் குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.


2. கடல் நீரேரிகளில் மீன் பிடித்தொழில் மேற் கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து


* இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப் பகுதிகளில் குடியிருப்புக் களை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடி யதே. குடாநாட்டுப் பரவை கடற் பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்குக் கரையோ ரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக் குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண் டகால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.


பயிர்களுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சல்


* யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிறைப்பு, இயந் திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பணிர்க ளுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாகக் கருதப்படுகின்றது. உவர் நீராதல் பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத் திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசா யிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண் டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனை தடுப் பதற்கு இஸ் ரேல் நாட்டில் காணப்படும் பாசன முகாமை களான விசி றல் பாசன முறைமை,பல குழாய் வழி இணைப்பு க்கள்


மூலம் பயிருக்கு அடியில்நீரைச் செலுத் துதல், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பைத் தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறை களை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.


* நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்ட மிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண் ணியல், பொறியியல், விவசாய அறிவியல் போன்ற துறைசார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். யாழ்ப் பாணப் பிரதேசத்தை நீர்வள வலயங்களாக முதலில் வகுத்தல் வேண்டும். மழைநீர் ஓடை கள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவ தானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் அள வுகள், உவர்த்தன்மை, நீரின் கடினத்தன்மை, உரம் கிருமிநாசனிப் பாவனைகளால் நீர் மாசு படும் தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல் போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர்வள வலயங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவு களின் துணையுடனேயே அபிவிருத்தித் திட் டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படை கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங் கள் வெற்றி பெறுமென நம்பலாம்.


*யாழ்ப்பாணப் பிரதேச நீர்வள அபிவிருத் தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத் தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட் டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போதுதான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசன அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற் பத்தியில் நாம் தன்னி றைவு பெறுவது மாத்திரமின்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும். *
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
தலைவர், சமூகவியற்றுறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
(இணைப்பாளர், புறநிலைப் படிப்புகள் அலகு).