Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

முஸ்லிம் கங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி

  • PDF

book _4.jpgஅமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களின் உரிமைகளை ஏலம் விட்டபோது, முஸ்லீம் காங்கிரசையும் அது விட்டுவிடவில்லை. இந்த யுத்தம் மற்றும் அமைதி வழிமுறையில் சிக்கிய அனைத்துத் தமிழ் முஸ்லிம் சிங்களக் கட்சிகளையும் குழுக்களையும் கூட, அதிகாரப் போட்டியின் எல்லைக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் இட்டுச்சென்றுள்ளது. மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை ஏகாதிபத்தியத்துக்குத் தாரைவார்க்கின்ற நிலையில், இதனுடன் சம்மந்தப்பட்ட குழுக்கள் தம்மை மூடிமறைத்த போது, அதிகாரப் போட்டியை முன்நிறுத்தி அதற்குத் துரோகம் அல்லது தியாகம் என்ற முத்திரையைப் பதிக்கின்றனர். எதார்த்த சமூக உண்மைகள் இதன் மூலம் மறைக்கப்பட்டு, தமது அற்ப அரசியல் கோஷ்டி சண்டைகளுக்குள் மக்களின் உரிமைகளைப் புதைத்துவிடுகின்றனர்.


 முஸ்லிம் காங்கிரஸ், ஏகாதிபத்தியம் முதல் இந்திய ஆளும் வர்க்கங்களின் கால்களை சுற்றிப் படர்ந்த படிதான், முஸ்லிம் மக்களின் நலன் பற்றி மூக்கால் சிந்தி வருகின்றது. இந்த நிலையில் பிரபா- அஸ்ரப் கையெழுத்திட்ட தேன்நிலவு ஒப்பந்தம் ஒன்று, யுத்த நிறுத்தம் தொடங்கிய சூட்டுடன் சூடாக உருவாக்கப்பட்டது. சிங்கள இனவெறி அரசுகள் போல் புலிகளும்; தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி மதித்தது கிடையாது. ஒப்பந்த மை காயும் முன்பே அதை மீறுவதே புலிகளின் அகராதி.


 இந்த தேனிலவு ஒப்பந்தம், முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலை மூடிமறைப்பதை அடிப்படையாகக் கொண்டு புலிகளால் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் மேலான எந்த மீறலையும், பேசித் தீர்க்க முடியும் என்ற போர்வையில், அதை வெளியில் கொண்டு வருவதற்குப் பதில் அதை பேசித் தீர்க்கும் எல்லைக்குள் முடக்கிவிட புலிகள் முயன்றனர். தொடர்ந்தும் பாரிய ஒடுக்குமுறையையும், வரிக் கொடுமையையும் முஸ்லிம் மக்கள் மேல் தொடர்வதை இந்த ஒப்பந்தம் மறைமுகமாக அங்கீகரித்தது. எந்தப் புலித் தலைவர்களும் முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வை இப்போதும் கைவிட்டுவிடவில்லை. மாறாக வன்மமான எதிர்ப்புணர்வை விதைத்தபடி, பொருளாதார ரீதியாக முஸ்லிம் மக்களின் முதலீட்டை எதிர்க்கக் கோரி, தமிழ் முதலாளிகளுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வடக்கு கிழக்கு தொடங்கி புலம்பெயர் நாடுகள் வரை பிரயோகிக்கின்றனர். தொடர் தாக்குதல்கள் பலவற்றைத் திட்டமிட்டு நடத்தினர். முஸ்லிம் மக்கள் மத்தியில் அமைதி சமாதானமானது கடுமையான ஒடுக்குமுறைக்கு சட்டப்ப+ர்வமான வழியை உருவாக்கிக் கொடுத்தது. அமைதி சமாதனம் என்று கோஷமிட்டுக் கொண்டு இலங்கையை ஏலம் விட்டபடி ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்த அஸ்ரப் தலைமைக்கு எதிரான மக்களின் உணர்வை வடிகாலாக்கி கொள்ள, அஸ்ரப்; தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்சில் போட்டிக் குழு ஒன்று உருவானது. கோஷ்டி மோதல் பிளவாகியது. அஸ்ரப், ~அரசு பலம் மற்றும் நீதிமன்ற துணையுடன்| போட்டிக் குழுவுடனான அதிகாரப் போட்டியில் தன்னை தற்காத்துக் கொண்டார்.


 போட்டிக் குழு அஸ்ரப்புக்கு நிகராக மந்திரிப் பதவியைக் குறிவைத்து, அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள சிங்கள கட்சிகளின் துணையுடன் களமிறங்கினர். இலங்கையை ஆளும் சிங்கள கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற ஒரு காரணத்தைப் பயன்படுத்தி உருவான கோஷ்டி மோதல் மூலம் முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கவே அதிகாரப் போட்டியில் குதித்தனர். முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை, அவர்களின் உழைப்பு, அவர்களின் தேசியப் பண்புகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றது. இதற்கு இந்த இரு கும்பலும், அக்கம் பக்கமாகத் துணை நின்று ஆசி வழங்குகின்றனர்.  


 மறுதளத்தில் புலிகள் முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களில் தொடர்ச்சியான பதட்ட நிலையையும், தாக்குதலையும் நடத்துவதுடன், வரி மற்றும் கப்பத்தை அறவிடுவதை ஆணையில் வைத்துள்ளனர். உண்மையில் புலிகளின் தொடர்ச்சியான திட்டமிட்ட வகையில், முஸ்லிம் மக்கள் மீது நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலால், முஸ்லிம் பிரதேசம் அமைதி  - சமாதான காலத்தில் பாரிய இழப்பைச் சந்திக்கின்றது. முன்பு போலவே இனம் தெரியாத தாக்குதல்கள் மூலம், பல தொடர்சியான படுகொலைகளை நடத்துகின்றனர். விரிவான வரி அறவிடல் நடத்தப்படுகின்றது. பணம் கொடுக்க மறுத்தால், கடத்தல் பற்றிய விவகாரம் ஒரு அரசியல் வடிவமாகியுள்ளது. இது கண்காணிப்பு என்பதும் குழுவரை சென்றால், இனம் தெரியாத கடத்தல் நாடகத்தை தாம் செய்யவில்லை என்று கூறுவதன் மூலம், அவர்களை கொன்றுவிடுவது நடக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் மேலான தன்னெழுச்சியான எதிர்த் தாக்குதல்கள், முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களிடம் இருந்து பிரதிபலிப்பாகக் கிடைக்கின்றது. உண்மையில் புலிகளின் திட்டமிட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னெழுச்சியான பதிலடியான பயங்கரவாதமாக இது உருவாகின்றது. மறுதளத்தில் கோஷ்டி மோதலுக்குள் இந்த விடயம், கோஷ்டி நலனாகி மூடிமறைக்கப்படுகின்றது. ஒட்டு மொத்தத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படையான சமூக நலன் என்பது புலிகள் மற்றும் முஸ்லிம் கோஷ்டி தலைவர்களால் அழிக்கப்படுகின்றது.