Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!

  • PDF

book _4.jpgகிழக்கில் அன்றாடம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புலிகளின் வரி விதிப்பு பதற்றத்தை உருவாக்கின்றது. புலிகள் கேட்பதைக் கொடுக்கத் தயாரற்றவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுகின்றனர். இனம் காணப்படும் நபர்கள் மேலான குண்டு வீச்சுகள், பொருட்கள் மீதான குண்டு வீச்சுகள், தீர்த்துக் கட்டுதல், இனம் காணப்பட்ட நபர்களை கடத்திச் செல்லல், பொருட்களைக் கடத்துதல் என்று புலிகளின் அன்றாட நிகழ்வுகள் மேலான பதற்றத்தின் முடிவும், சமூகம் மேலான வன்முறையாகின்றது. வழமை போல் புலிகள் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று வெள்ளையாகவே அறிக்கை விட்டபோதும் உண்மை இதற்கு நேர்மாறானது.


 முஸ்லீம் மக்கள் மேலான வன்முறை, புலிகளுக்கு வரி பற்றி பேரம் பேசும் ஆற்றலை வழங்குகின்றது. முஸ்லீம் மக்கள் மேல் வரி அறவிடும் உரிமைகள் மீது தான் வன்முறைகள் தொடர்ச்சியாகத் தலைதூக்குகின்றது. மறுப்புகள் எதிர் வன்முறையாகின்றது. ஒவ்வொரு வன்முறையின் முடிவில் பேச்சுகளும், பேரங்களும் நடக்கின்றன. பீதி விதைக்கப்படுகின்றது. இதன் மூலம் வரியை வசூலிப்பது இலகுவாகின்றது. முஸ்லீம் மக்கள் மேலான வரி விதிப்பு எப்படி உள்ளது? சில உதாரணங்களைப் பார்ப்போம்.


ஒரு போகம்; நெல் உற்பத்திக்கு ஏக்கருக்கு        1,500 ரூபா
ரைக்ரருக்கு போகத்துக்கு                                            15,000 ரூபா
ஆடு மாடுக்கு தலா ஒன்றுக்கு                                      300 ரூபா
சாதாரன மீன்பிடி படகுக்கு மாதம்                              300 ரூபா
இயந்திர மீன்பிடி படகுக்கு மாதம்                           1,000 ரூபா
மாட்டு வண்டிக்கு வருடம்                                           1,500 ரூபா
எரிக்கும் விறகுக்கு  மாதம்                                         1,500 ரூபா


 இப்படி வரி அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. புலிகளின் எல்லைகளைத் தாண்டி வரும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி அறவிடப்படுகின்றது. மறைமுக வரி பரந்த தளத்தில் காணப்படுகின்றது. வர்த்தக ரீதியாக முஸ்லீம் மக்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற சிறப்பு பிரச்சாரத்தைக் கூட புலிகள் செய்கின்றனர். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள முதலாளிகளை இதனடிப்படையில் வடக்கு கிழக்கில் முதலீடக் கோருகின்றனர்.


 முஸ்லீம் மக்கள் மேலான வன்முறையானது வரி அறவீட்டில் ஏற்படும் இழுபறிகளில் இருந்தே தோற்றம் பெறுகின்றது. ஆனால் புலிகளும் புலிகளின் பினாமியான கூட்டணியும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வையே, அன்றாடம் நடைமுறைக் கொள்கையாக கொள்கின்றனர். முதுகெழும்பற்ற பினாமி எழுத்தாளர்களும் முஸ்லிம் விரோதப் போக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மீடியாவை கறைப்படுத்தி முஸ்லீம் விரோத உணர்வை வளர்க்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் குளிர் காய்வதாகக் கூறி, அவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன?


 முஸ்லிம் மக்களின் உயிர் இழப்பு, பொருள் இழப்பு தமிழ் மக்களுக்கு நிகரானது. இந்த விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் தமிழ் மக்கள் என்று கூறி, அவர்கள் மேல் இனப்படுகொலைகளை நடத்தியது மட்டுமின்றி பொருட்களைச் சூறையாடியதை யாரும் கண்டு கொள்வதில்லை. வரியாக அவர்களின் வாழ்வில் அத்துமீறி சூறையாடுவதை இட்டும் யாரும் மூச்சுக் கூட விடுவதில்லை. அவர்கள் தமது சொந்த விவசாய நிலங்களை புலிகளிடம் இழந்து நிற்பதுடன், அன்றாடம் வரியாக பல பத்து லட்சம் பெறுமதியான சொத்தை இழந்து வருகின்றனர். என்பதே எதார்த்த உண்மை. புலிகளின் வரி அறவீடுகள் தொடர்பாகக் கிண்ணியா பிரதேசத்தில் செயற்பட்டு வரும் அகில இலங்கை ஜயத்துல் உலமா சபை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் எழுத்து மூலமான முறைப்பாடு செய்தது. அதில் நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு 1,500 ரூபா வீதமும், உழவு இயந்திரத்துக்கு மாதம் ஒன்றுக்கு 15,000 ரூபாவும், மாடு ஒன்றுக்கு 300 ரூபாவும், பெரிய மீன்பிடிப் படகுக்கு மாதம் 1000 ரூபாவும், விறகு வியாபாரிகளிடம் 1000 ரூபாவும் புலிகள் அறவி;டுவதாக முறையிட்டுள்ளது. முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்தில் குளிர் காயவில்லை. மாறாக முஸ்லீம் மக்களைச் சூறையாடிய பணத்தில்;, போராட்டம் என்ற பெயரில் முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.


 முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களின் தியாகத்தில் குளிர் காயவில்லை. அவர்கள் இங்கு போராடுவது தமக்கு எதிரானவற்றை நிறுத்தும் உரிமையைத் தான். முஸ்லீம் மக்களின் மேலான உரிமை மீறல் மிகப் பெரியது. வடக்கில் இருந்து பலாத்காரமாக உடுத்த உடுப்புத் தவிர மற்றவை அனைத்தையும் உருவிய பின்பு, துரத்தப்பட்ட 21,614 குடும்பங்களைச் சேர்ந்த 1,02,867 முஸ்லிம் மக்கள் புலிகளிடம்; எதை இழந்தனர். விபரமாக


வீடுகள்                                                                                  22,000
கடைகள் மற்றும் தொழில் நிலையங்கள்           24,002
கோயில் மற்றும் கலாச்சார நிலையங்கள்              340
விவசாய நிலம்                                                                   39400 ஏக்கர்
தங்கம்                                                                                    475000 கிராம்   (475 கிலோகிராம்   அல்லது 59,375 பவுன்)
ஆடு, மாடு                                                                           2,11,000
மோட்டார் சைக்கிள்                                                              800
மோட்டார் வாகனம்                                                               320
கார்                                                                                                 750
சைக்கிள்                                                                                  4,000
மீன்பிடி படகு                                                                           850
இயந்திரப் படகு                                                                       400
மீன் வலைகள்                                                                     1,200
குளிர்சாதனப் பெட்டி                                                            200
தொலைக்காட்சி பெட்டி                                                   2,000
ரேடியோ                                                                                      600


 இவை அனைத்தும் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்கள் இழந்தவை. இதை அன்று புலிகள் தமிழ் மக்களுக்கு விற்பனை செய்தனர். இதன் பெறுமானம்; 1026 கோடி ரூபாவாகும். வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டது உள்ளடங்க, 30,000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை, இன்றும் புலிகள் தமது சொந்த சொத்தாக வைத்துள்ளனர். வடக்கில் வாழ்ந்த ஐந்தில் ஒரு மக்களின் வாழ்வு இப்படித் தான் பறிக்கப்பட்டது. எந்தத் தமிழன் இதற்கு எதிராகப் போராடினான்? இன்று கூட அதைப் பற்றிப் பேசவும் போராடவும் யார் தயாராக உள்ளனர்? ஆங்காங்கே ஒரு கண்டனத்துடன் தூற்றுவது தொடருகின்றது. தமிழ் மக்கள் பிரச்சனையில் முஸ்லீம் மக்கள் குளிர் காய்வதாக எழுதுகின்ற வக்கிரம் மட்டும் உரக்க அரங்கேறுகின்றது. இதைக் கண்டிக்கக் கூட வக்கற்ற தமிழ் சமூகம், முஸ்லீம் மக்கள் மேல் தொடரும் கொடுமைகளை இட்டு மூச்சுக் கூட விடுவதில்லை. இதுதான் தமிழ் தேசியம். முஸ்லீம் மக்களின் இழப்போ ஆழமானவை. வரி வன்முறையாக 2002 ஜுன் மாதம் வாழைச்சேனையில் 13 முஸ்;லீம்கள் கொல்லப்பட்டனர். 15 கோடி ரூபா பெறுமானமான சொத்துக்கு அழிவு ஏற்பட்டது. திருகோணமலையில் கின்னியா பிரதேசத்தில் 2003 இறுதியில் 11 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் மக்கள் மேல் இப்படி பத்துக்கு மேற்பட்ட திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் பதிலடியாக லும்பன் குழுக்கள் அப்பாவி தமிழ் மக்கள் மேலான எதிர் வன்முறைகளை நடத்தினர். உண்மையில் அப்பாவித் தமிழ் முஸ்லீம் மக்களே பாதிக்கப்பட்டனர். மக்களின் நலனில் அக்கறை அற்ற, அவர்களைத் தமது எடுபிடிகளாக நடத்தும் அரசியலானது தமிழ் - முஸ்லீம் இனங்களின் தலைவிதிகளை பந்தாடுகின்றது.


 புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச் செலவ்ன் ~~தமிழீழ விடுதலைப்புலிகள் தமது உரிமைகளைப் பெற்றபின் முஸ்லிம்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்கலாம்.|| என்று கூறுகிறார். ஆக, மற்றொரு இனம் தனது உரிமையை ஒத்திப்போடக் கோரும் அதிகாரத்தை எப்படித் தமிழ்ச்செல்வனுக்கு யார் வழங்கியது. முஸ்லீம் மக்கள் மேல் புலிகள் அனுபவிக்கும் சூறையாடலையும் முஸ்லீம் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதையும் எதிர்த்து கேள்விக்குள்ளாக்குவதைப் புலிகள் விரும்பவில்லை. சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களை சூறையாடுவதை எதிர்த்து உரிமையைக் கோரும் புலிகள், முஸ்லீம் மக்களை புலிகள் சூறையாடுவதை கேட்க முடியாது என்று கூறுகின்றனர். இதன் பிரதிபலிப்பாகவே பினாமிகள் தமிழ் மீடியா எங்கும் முஸ்லீம் விரோத உணர்வையும், அவர்களின் உரிமைக்கான சமூகக் கோரிக்கைகளையும் கொச்சைப்படுத்து கின்றனர். இதற்கு எதிரான வன்முறைகளை ஊதிப் பெருக்குகின்றனர்.


 இவை ஒரு கடுமையான மனித உரிமை மீறலாக மாறுகின்ற போதும், சர்வதேச நெருக்கடியாக மாறுகின்ற போதும், முஸ்லீம் மக்களிடமும், தலைவர்களிடமும் பேரங்களையே முன்வைக்கின்றனர். தமிழ்ச்செல்வன் கோருவது போல முஸ்லீம்கள் தமது உரிமைகளை புலிகளிடம் விற்கக் கோருவதே அரங்கேறுகின்றது. அவர் அதை ~~வட - கிழக்கை வாழ்விடமாக கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரது உரிமைகளும் சம முறையில் உறுதிப்படுத்தப்படும். இது பற்றி யாரும் அஞ்சத் தேவையில்லை.|| என்று கூறுவது, எந்தவகையிலும் ஜனநாயகப் பூர்வமானது அல்ல. இது அவர்களின் உரிமையைத் தரமறுப்பதற்குச் சமமானது. முஸ்லீம் மக்கள் தனியான ஒரு சிறுபான்மை இனமாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாத ஒன்றாகும். புலிகள் முன்பு பலமுறை ஏற்றுக் கொண்ட முஸ்லீம் மக்கள் மதம் கடந்த அதே நேரம், தமிழ் மக்களில் இருந்து வேறுபட்ட தனித்துவமான ஒரு இனமாக இருப்பதை அப்பட்டமாகவே மறுப்பதாகும். யாரும் அஞ்சத் தேவையில்லை என்று யாரிடம் கூறமுனைகின்றனர். முஸ்லீம் மக்கள் இதைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத, புலிகளின் ஜனநாயக விரோத மனப்பான்மையில் இருந்தே முன்வைக்கப்படுகின்றது. தமிழர் தரப்பில் புலிகள் பற்றி உள்ள அதிருப்தியை வென்று, பினாமியாக்க இந்த ஒப்புவித்தல் ரப்பர் ஸ்டாம்பாகின்றது. உண்மையில் அச்சம் நீக்கப்பட வேண்டும் என்றால், முஸ்லீம் மக்கள் மத்தியில் நடைமுறையில் புலிகளின் அரசியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இப்படி அறிக்கைவிடும் மோசடியான ஏமாற்றுச் செயற்பாடுகள் கூட மாற்றப்பட்டாக வேண்டும்;.


 இந்த மோசடி என்பது தமிழச்செல்வனின் வார்த்தையலங்காரங்களாகி விடுகின்றது. 2002 நடுபகுதியில் வழங்கிய பேட்டி ஒன்றில் முஸ்லிம் மக்கள் பற்றி ~~... ஆள்பவன் ஆளப்படுபவன் என்ற பேதம் மலரும் வடகிழக்கு ஆட்சியில் இருக்காது|| நம்புங்கள் என்கிறார். இது எப்படி ஒழிக்கப்படும் என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். சுரண்டுபவன் இருக்கும் வரை, ஆள்பவன் ஆளப்படுபவன் என்ற கட்டமைப்பு இருக்கும். தமிழ் மக்கள் மூச்சு விடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத அமைப்பில், முதலில் அதை அனுமதியுங்கள். புலிகளின் வார்த்தை ஜாலங்கள் வழமை போல் அர்த்தமற்ற வக்கிரமாகும். நடைமுறைக்கும் சொல்லுக்கும் இடையில் எந்த உறவுமற்றவை. அர்த்தமற்ற புலிகளின் இந்த வார்த்தை, உண்மையை பளிச்சென்று தெளிவாக்கின்றது. வார்த்தைகளின் நம்பகத் தன்மை புலிகளின் நேர்மைக்கு விடப்பட்ட மற்றொரு எடுத்துக்காட்டு.


 இப்படி வார்த்தை ஜாலங்கள் மூலம் முஸ்லீம் மக்களைப் பந்தாடிய தமிழ்ச்செல்வன், சொந்த சுயரூபத்தைப் பளிச்சென்று நிர்வாணமாக்கும் போது வக்கிரமாகவே வெளிவருகின்றது. ~~கடந்த 25 வருடங்களாக முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து உள்ளனர். அவர்கள் தமது உரிமைகளை அரசிடம் கேட்டு என்றோ பெற்றிருக்கலாம்.|| என்ன வக்கிரமான வாதம்! தமிழ்த் தலைமைகளும் கூடத் தானே சிங்கள இனவாத அரசுடன் கூடித் திரிந்தனர். தற்போது உங்கள் பினாமியாகி வெட்கம் மானம் இன்றி நக்கித் திரிகின்றனர். சரி இதை விடுவோம்.


 முஸ்லீம் மக்கள் உரிமையாக எதைக் கேட்கின்றனர்? அதிலும் உங்களிடம் எதைக் கேட்கின்றனர். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? முஸ்லீம் மக்களுக்கு எதிராக இப்படிக் கூறுவது ஏன்? உங்களின் போராட்டத்தை அவர்கள் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் உரிமைகள் எதையும் யாரிடமும் கோரவில்லை. உங்கள் உரிமைகளுக்குத் தடையாக அவர்கள் இருக்கவில்லை. உண்மையில் தமிழ் மக்களின் போராட்டத்தை, அவர்களின் உரிமைகளை மனதார ஆதரித்து நிற்கின்றனர்.


 அவர்கள் தமது பிரச்சனையைத் தாமே பார்த்துக் கொள்ள விட்டுவிடுங்கள் என்கின்றனர். ஆனால் நீங்கள் தான் இல்லை இல்லை என்கின்றீர்கள். அவர்களின் உரிமையில் தலையிடுவோம் என்கின்றீர்கள். அவர்களை தொடர் வன்முறை மூலம் பந்தாடுகின்றீர்கள். இதனால் அவர்கள் தமது பிரச்சைனை பற்றி பேச நிர்ப்பந்திக்கிறீர்கள்;. நீங்கள் அம்பலப்படும் போது தூற்றுகிறீர்கள். முதலில் முஸ்லீம் மக்களை அவர்கள் பாட்டில் விடுங்கள். அவர்களின் வாழ்வில் தலையிடுவதைக் கைவிடுங்கள். அவர்கள் தமது தனித்துவமான வாழ்வை வாழும் உரிமையை அங்கீகரியுங்கள். இது அல்லவா புலிகள் முதலில் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது உரிமையைக் கோர வேண்டாம் என்று சொல்ல என்ன தார்மீகப் பலம் உண்டு உங்களுக்கு? என்னை வேண்டும் என்றால், உங்கள் வக்கிரத்தை தோலுரித்துக் காட்டியதற்காக தமிழ்த் துரோகி என்று சொல்லுங்கள். அதன் பெயரில் உங்கள் ஜனநாயக விரோதத் தொடர் படுகொலைக்கு வேண்டுமென்றால் பலியிடுங்கள். ஆனால் உண்மை எப்போதும் வெட்டவெளிச்சமானது.


 முஸ்லீம் மக்களின் வாழ்வில் அன்றாடம் தலையிடும் நீங்கள், ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் புடுங்குகின்றீர்கள். இதற்கு எதிராக அவர்கள் போராடும் போது, உரிமைகளைக் கோரும் போது இதை எதிர்கின்றீர்கள். புலிகளாகிய நாங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்த பின்பு உங்கள் பிரச்சனையை தீர்க்கின்றோம் எனப் பலவாக பேசுவதும், ஏமாற்றுவதும், மிரட்டுவதும் தொடருகின்றது. முஸ்லீம் மக்கள் அன்றாடம் எதிர் கொள்வது,  ஏதோ ஒரு விதத்தில்  உங்கள் அடக்கு முறைகளையே. அதனால் அவர்கள் இதற்கு எதிராகப் போராடும் போது, முஸ்லீம்கள் தமிழர் பிரச்சனையில் குளிர் காய்வதாக குற்றம் சாட்டுவது ஜனநாயகத்தில் வற்றிப் போன வக்கிரமே. 


 இந்த ஜனநாயக விரோத வக்கிரங்களை மூடிமறைக்க தமிழ்ச் செல்வன் கூறுகின்றார் ~~முஸ்லிம் தமிழ் மக்கள் மத்தியிலான விரிசலை போக்க நீண்ட செயற்திட்டம் தேவை. பொருளாதார விடயங்களில் ஏற்றத்தாழ்வு உள்ளது.|| என்கிறார். என்ன அரசியல்! ஏற்றத் தாழ்வானப் பொருளாதாரக் கட்டுமானம் தான் வன்முறைக்கு காரணம் என்ற புலிகளின் கண்டுபிடிப்பு உலக அதிசயமாகிவிடுகின்றது. இதனால் முஸ்லீம் மக்கள் மேல் வன்முறையிலும்;, வரி அறவீட்டிலும் ஈடுபடும் உரிமையை உங்களுக்கு எப்படி இது வழங்குகின்றது? அதாவது பொருளாதாரத்தை சமப்படுத்த முஸ்லீம் மக்களை கொள்ளையிடும் உரிமையை நீங்கள் கோருகின்றிர்களோ! இலங்கை வர்த்தகத்தில் முஸ்லீம் சமுகம் கொண்டுள்ள பலத்தை உடைக்க வேண்டும் என்கிறீர்களா? அதனால் அவர்கள் மேல் தாக்குதல்கள் அவசியம் என்கிறீர்களா! முஸ்லீம் மக்களின் தனித்துவமான அவர்களின் பிரச்சனையில் தலையிடும் உரிமையும், அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தும் உரிமையும் புலிகளுக்கு கிடையாது. இதுவே அடிப்படையான ஜனநாயகக் கொள்கையாகும். இதை ஏற்றுக் கொள்ளாத யாரும், முஸ்லீம் மக்கள் பற்றிய எதிர்ப்புணர்வுடன் அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் தான்;. ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கு, வெளியில் வேறு எந்த விளக்கமும் அவசியமில்லை. இதுவே போதுமானது. இதை யாரும் கொச்சைப்படுத்தவும், கற்பழிக்கவும் முடியாது. வக்கிரமாகி நக்கிப் பிழைக்கும் பினாமிய அரசியலால் இதை மூடிமறைக்க முடியாது.


 இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் 2002ம் ஆண்டு ஆரம்பத்தில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு எப்போதோ முறிந்து விட்டது என்று தமிழ்ச் செல்வன் புலிகள் சார்பாக அறிவித்தார். முஸ்லீம் மக்கள் பற்றி செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை புலிகள் முறிந்து விட்டது என்பது, சொந்த (புலிகளது) மனிதவிரோத நடவடிக்கைகளை ஒப்பந்தம் அம்பலப்படுத்துவதில் இருந்து தப்பிவிடத் தான். முஸ்லீம் மக்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் புலிகள் தொடர்ச்சியாக மீறி வந்த நிலையில், அதை ஒப்பந்த அடிப்படையில் விமர்சிக்க முற்பட்ட போது புலிகள் ஒப்பந்தம் முறிந்து போனது என்கின்றனர். அதாவது தமிழர்களுக்குச் சிங்கள இனவாதிகள் எதைச் செய்தனரோ, அதையே முஸ்லீம் மக்களுக்குத் தமிழ்க் குறுந் தேசியவாதிகள் செய்துள்ளனர். இது மேலும் முஸ்லீம் மக்களுடன் கையாள வேண்டிய நல்லெண்ண உணர்வுகளுக்கு வைத்த மற்றொரு வேட்டாகும். முஸ்லீம் மக்கள் மத்தியில் அத்துமீறித் தலையிடவும், அவர்களை அடக்கி ஒடுக்கும் புலிகளின் அரசியல், முஸ்லீம் மக்கள் மேலான வன்முறையையும், வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையும் தனது உரிமையாக வைக்கின்றது. இதற்கு எதிரான போராட்டம் என்பது, முஸ்லீம் மக்களின் தவிர்க்க முடியாத அடிப்படை ஜனநாயக உரிமையாக உள்ளது. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ முடியாது.