Language Selection

பி.இரயாகரன் -2026
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரையான, யாழ் வெள்ளாளிய சமூகத்தை விமர்சிப்பது தற்குறிகளுக்கு அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சுயமாகச் சிந்திக்கவும், பகுத்தறிவுபூர்வமாக விவாதிக்கவும், தர்க்கிக்கவும் அறிவும், நேர்மையும், சமூக அக்கறையும் வேண்டும்.

ஜனநாயகம் குறித்தும், சுதந்திரம் குறித்தும் தெளிவும், அதற்கான சமூகப்பண்பும் மனிதநாகரீகமும் வேண்டும். தமிழினவாதம் முன்வைக்கும் வெள்ளாளியத் தமிழனுக்கு இவை கிடையாது.

புலியால், தமிழினவாதத்தால், சாதியால், மதவாதத்தால் ..  உருவேற்றப்பட்ட வன்முறையையே, மாற்றுக்கருத்துக்குத் தீர்வாகக் கருதும் தற்குறிகளுக்கு, மனிதத்தன்மை கடுகளவும் இருப்பதில்லை. மாறாக மனித வெறுப்புக்கொண்டு, பாசிசமே அதன் குணாம்சமாக வெளிப்படும். பொதுவாக பணத்துக்காகக் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே, தமிழினவாதத்தை, புலியிசத்தை முன்வைத்துக் கூச்சலிடுகின்றது.

இந்தக் கூட்டமே அண்மைக்காலமாக அருண்சித்தார்த்தை இலக்குவைத்துத் தொடர் மிரட்டல்களை விடுத்தவர்கள், இன்று நேடியான வன்முறைக்குள் இறங்கியுள்ளனர். அருண்சித்தார்த் வீடு - அலுவலகம் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் செயலைத் தூண்டியவர்களும், இதில்; ஈடுபட்டவர்களும்.. புலிப் பாசிச தேசியத்தால் தற்குறியாக்கப்பட்ட லும்பன்களே.

நாலு வரி சிந்திக்கவும், எழுதவும், அதற்காக செயற்பட முடியாத தற்குறிகள் இவர்கள். மனப்பாடமாக்கும் பாடசாலைப் புத்தகப் பாடத்தைத் தவிர, வேறு எதையும் கற்றவர்களல்ல. மனிதத்தை நேசிப்பவர்களல்ல. இதுதான் இவர்களை உருவாக்கி வழிநடத்திய பிரபாகரனின் அறிவுமாகும். சிவகுமார், பிரபாகரன் வழியில் தனிநபர் பயங்கரவாதத்தை, கொலைவெறியுடன் அரங்கேற்றத் துடிக்கும் அறிவற்ற முண்டங்கள். இந்த அரசியல் இலட்சக்கணக்கான மக்களை விடுதலையின் பெயரில் பலியிட்டது. ஆயிரக்கணக்கான மக்களை இறுதியுத்தத்தின் போது பணயக்கைதிகளாக வைத்துத் தப்பிக்க முனைந்ததுடன், பலியிட்டது. இன்று மீண்டும் அதே பாசிசக் கனவுடன் வன்முறையை அரங்கேற்றத் துடிக்கின்றது.

அருண்சித்தார்த்தின் அரசியலானது

1.    சாதிய ஒடுக்குமுறை குறித்தும்

2.    கடந்தகால புலிப் பாசிசம் குறித்தும்

இவற்றை மையப்படுத்திச் செயற்படும் அருண்சித்தார்த், தனது கட்சி அரசியலையோ, பிற விடையங்களையோ அதிகம் பேசுவதில்லை.

அருண்சித்தார்த்தின் கருத்துகள் மீதான விமர்சனத்தை வைக்கவும், அரசியல்ரீதியாக அம்பலப்படுத்தவும் அனைவருக்கும் சுதந்திரமுண்டு. இதை அருண்சித்தார்த் மறுத்தது கிடையாது. அதற்காக வன்முறையை முன்வைத்தது கிடையாது.

இப்படியிருக்க விமர்சிப்பது, அம்பலப்படுத்துவது என்பது

1.    அறிவார்ந்த செயல்பாடு
        
2.    மக்களின் வாழ்வுடன் நடைமுறைரீதியாக இணைந்த செயற்பாடு

இந்த அரசியல் வழிமுறை வெள்ளாளியத்துக்கு, தமிழினவாதத்துக்குத் தேசியத்துக்கு, புலிப் பாசிசத்துக்குச் சம்மந்தமில்லாத ஒன்று. மாறாக மக்களைத் துப்பாக்கி முனையில் ஒடுக்கி, பிறர் கருத்துகளை வேட்டுகள் மூலம் படுகொலை செய்து, அதிகாரத்தைப் பெறுவதைத் தமிழீழம் என்றனர். இந்தப் பயங்கரவாதமே அவர்களை புதைகுழிக்குள் புதைத்தது வரலாறு. இந்தப் புலி அரசியலை, புலிக்குப்பின் தொடர முனைகின்ற தற்குறிகள் இன்னமும் அரசியல் அரங்கில் அழியவில்லை என்பது உண்மை.

தமிழினவாதத் தேசியத்தைக் கூவும் கூட்டம், இது போன்ற புலி வன்முறைகளை இன்றுவரை விமர்சனம் செய்தது கிடையாது. இதைத் தொழுதவர்கள் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்றும் இதைச் சொல்லிப் பாராளுமன்றம் மூலம் பிழைக்கும் அரசியல், இந்த வன்முறையுடன் மறைமுகமாக தொடர்புபட்டது.

வன்முறையைத் தீர்வாகக் கருதும் தற்குறிக் கூட்டம், உணர்ச்சி ஊட்டும் பிழைப்புவாதிகளின் கூச்சலுக்கு இசைவாக வன்முறையை இசைக்கின்றது.
புலம்பெயர் நாட்டில் தமிழினவாதம் மூலம் மக்களை ஏமாற்றிப் பணத்தைச் சூறையாடும் புலிக்கூட்டம், பணத்தைக் கொண்டு இலங்கையில் கூலிக்கு மாரடிக்கும் அரசியலையும், வன்முறையையும்.. தூண்டி விடுகின்றனர்.

மீண்டும் வன்முறைக்காகக் கனவு காணும் கூட்டம், அதை நியாயப்படுத்தும் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் பலியிட முனைகின்றது.

தமிழினவாதத்தை முன்வைக்கும், சாதிய அமைப்பைப் பாதுகாக்கும், புலியிசத்தைக் கொண்டாடும், மதவாதத்தை ஊட்டும் அனைவரும், நடந்த தீ வைப்புக்குப் பொறுப்பாகும்.

14.01.2027
இரயா