எந்த வெளிநாட்டு தலைவரையும் நாடு புகுந்து சிறைபிடிக்க முடியும்! தண்டிக்க முடியும்! என தனது மேலாதிக்க திமிரை உலகிற்கு அறிவிக்கிறது மீண்டும் அமெரிக்கா!
முன்பு ஈராக்கில் உலகிற்கு (அதாவது உலகம் என்றால் அமெரிக்கா என்று அதன் பொருள்) ஆபத்தை விளைவிக்கும் பயங்கர ஆயுதங்கள் அணுகுண்டு தயாரிப்புகள் இருப்பதாக குற்றம்சாட்டி ஈராக் அதிபர் சதாமை சிறை பிடித்துக் கொன்றது.
தனது நோக்கங்களை நிறைவேற்ற உலகெங்கும் போர் அல்லாத பல வழிகளில் அரசியல் ஏஜெண்டுகளை, கலை இலக்கிய சித்தாந்தவாதிகளை, உள்ளூர் அரசியல் கட்சிகளின் தொடர்புகளை கொண்டிருக்கிறது அமெரிக்கா.
எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இப்படி ஒரு கட்டமைப்பு இருக்கிறது.
நேரடி யுத்தத்திற்கு முன்னதான அரசியலில் யுத்தங்கள் அன்றாடம் நம் மீது நடந்து கொண்டிருக்கிறது, பொருளாதார கொள்கைகளாக வரிவிதிப்புகளாக இயற்கை வளங்களின் மீதான மூலதன கொள்ளையாக.
யாரெல்லாம் அமெரிக்க அடிபிடிகள் என்பதை இங்கே எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இதை கண்டிக்காத முதலாளித்துவக் கட்சிகள் இது போன்ற உலகப்போக்கின் போது தங்களையும் தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தின் முகங்களையும் அறியத் தருகிறது.
பதினெட்டுபட்டி அமெரிக்க நாட்டாமையின் அடாவடி ஆதிக்கத்தை கண்டிப்போம்!
அதன் உலகச் சுரண்டல் ஆக்கிரமிப்பு அரசியலை
அம்பலப்படுத்துவோம்!