Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கோக்கின் புதியகைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கோக்கின் புதியகைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  • PDF

12_2006.jpg

கொலைகார "கோக்'கிற்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வும் போராட்டங்களும் தொடரும் சூழலில், கோக்கின் சரிந்துவிட்ட சந்தையை முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த நடிகை ராதிகா கிளம்பியிருக்கிறார். ""கோக்கில் எந்த நச்சுத் தன்மையும் இல்லை; கோக்கில் என்ன மிக்ஸ் பண்ணுகிறார்கள் என்பதிலிருந்து எல்லா

 சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றேன்; எனக்கு நம்பிக்கை இருக்கு, குடிக்கிறேன். நீங்களும் குடிக்கலாம்'' என்று பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்து வருகிறார்.

 

கோக்கினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு கேரளத்தின் பிளாச்சிமடா கண்ணெதிரே சாட்சியமாக உள்ளது. கோக்கில் நஞ்சு கலந்துள்ளதை ஆதாரங்களோடு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. கோக்பெப்சியை ஓரிரு மாநிலங்கள் தடை செய்துள்ளன. கல்லூரி வளாகங்களில் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் கூட தடை செய்யப்பட்டுள்ளது. மைய சுகாதார அமைச்சர் அன்புமணி, ""கோக்கில் நச்சுத்தன்மை இல்லை என நடிகர்கள் விளம்பரம் செய்யக் கூடாது'' என அறிவுறுத்தியிருக்கிறார்.

 

இத்தனைக்கும் பின்னரும், நாட்டையும் மக்களையும் அடிமையாக்கி வரும் கொலைகார கோக்கை நியாயப்படுத்தி கூலிப் பிரச்சாரம் செய்யும் நடிகை ராதிகாவின் திமிர்த்தனத்தையும், சமூக உணர்வற்ற கைக்கூலித்தனத்தையும் எதிர்த்து, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 23.11.06 அன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. சென்னையில் நடிகை ராதிகாவின் ""ராடன் தொலைக்காட்சி'' நிறுவனத்துக்கு முன்பாக, செங்கொடி ஏந்தி பெண்கள் குழந்தைகளுடன் திரண்டு முற்றுகையிட்டு, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ""கோக் கிற்கு விளம்பரம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், நடிகை ராதிகாவுக்கு எதிராகத் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் முற்றுகைப் போராட்டங்களை நடத்தும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


— பு.ஜ. செய்தியாளர்கள்.