Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
October 2017

Tuesday, 31 October 2017

கட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 31 October 2017 07:06
அரசியல்_சமூகம் / சீவுளிச்சித்தன்

இலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.

Read more...


Wednesday, 25 October 2017

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 25 October 2017 07:36
பி.இரயாகரன் - சமர் / 2017

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

Read more...

மிருக பலி !? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 25 October 2017 07:27
பி.இரயாகரன் - சமர் / 2017

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...


Sunday, 22 October 2017

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 22 October 2017 07:27
பி.இரயாகரன் - சமர் / 2017

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

Read more...


Saturday, 14 October 2017

அரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட்சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 14 October 2017 06:24
அரசியல்_சமூகம் / போராட்டம்

 

நம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.

பண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.

Read more...


Saturday, 07 October 2017

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 07 October 2017 18:43
பி.இரயாகரன் - சமர் / 2017

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

Read more...


Tuesday, 03 October 2017

இதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்: PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 03 October 2017 06:16
அரசியல்_சமூகம் / அசுரன் மாவோ,

“கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.

அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.

Read more...