Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
May 2014

Friday, 30 May 2014

மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்!!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 30 May 2014 07:23
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Read more...
Last Updated ( Friday, 30 May 2014 07:25 )


Wednesday, 28 May 2014

முன்னாள் போராளிகள் கொலையும், மஹிந்த அரசும், இடதுசாரிகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 28 May 2014 10:22
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள்  கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும்,  புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப்  பின்,  அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை,  ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்-   அது தற்போது பல இக்கட்டான  நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.

Read more...
Last Updated ( Wednesday, 28 May 2014 10:28 )


Monday, 26 May 2014

கனவுலகிலிருந்து நனவுலகிற்கு! அதைப்பற்றிப் பேசுவோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 26 May 2014 12:05
சமகால நிகழ்வுகள் / இன்றைய பக்கங்கள்

இந்நாட்களில் பிரபலமான தொனிப்பொருள் எது?

சமீபகாலமாக நாட்டில் பேசப்பட்ட தொனிப்பொருட்களில் முக்கிய இடத்தை வகித்தது போதைப் பொருள் பாவனை. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் பொது வேட்பாளர் குறித்த பிரச்சினை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும், அதையும் கடந்து, அதிகாரமாற்றம், ஆட்சிமாற்றம் குறித்துப் பேச்சுக்களும் அடிபடுகின்றன. சிலர் அதற்காக பொதுவேட்பாளரைத் தேடுகின்றனர். இவற்றுக்கிடையில் எந்த வித்தி;யாசமுமில்லை.

போதைப் பொருளுக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் எந்த மாற்றமும் கிடையாது?

Read more...
Last Updated ( Monday, 26 May 2014 12:11 )


Thursday, 22 May 2014

நடைமுறையற்ற "சுயநிர்ணய" கோசத்தை முன்னிறுத்திய இனவாதம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 22 May 2014 09:51
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தே இன முரண்பாடுகளை கழைய முடியும் என்ற அரசியல் உண்மை இன்று அரசியல் ரீதியாக முன்னுக்கு வருகின்றது. அதேநேரம் எல்லாவிதமான இனவாத குறுந்தேசியவாத அரசியல் போக்குகளும் அம்பலமாகி முட்டுச்சந்திக்கு வருகின்றது.

இனவாதமும் குறுந்தேசியவாதமும் முந்தைய வியாபாரிகளினதும் பிழைப்புவாதிகளினதும் தொங்கு சதையாக எஞ்சிக் கிடக்கின்றது. இப்படி வலதுசாரியக் கூறுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு விட இடதுசாரிய வேடம் போட்டோர், சீரழிந்த தேசியவாதத்தை நடைமுறையற்ற "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக் கோசம் மூலம் மூடிமறைத்து மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இந்த வகையில் இன்று தனிநபர்கள் தொடக்கம் குறுங்குழுக்கள் வரை "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திக் கொண்டு இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களைப் போன்றோரை அணிதிரட்ட முற்படுகின்றனர்.

 

Read more...
Last Updated ( Thursday, 22 May 2014 14:59 )


Wednesday, 21 May 2014

மனிதப்பண்டங்கள்........... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 21 May 2014 09:21
சிறுகதைகள் / வைகாசி - 2014

இப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்...? சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது.

காரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

வேலையில்லாத ஆக்கள்;, குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள், இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள்  எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.

 

Read more...
Last Updated ( Wednesday, 21 May 2014 09:22 )


Monday, 19 May 2014

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் சந்திப்பு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 19 May 2014 07:46
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்:

 

Read more...
Last Updated ( Monday, 19 May 2014 07:50 )


Saturday, 17 May 2014

மகிந்தாவின் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீதான கைது தொடர்கின்றது. (படங்கள்) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 17 May 2014 07:03
சமகால நிகழ்வுகள் / Newsflash

நேற்று (2014-05-16) காலை 10:30 மணியளவில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதன் பின்னர் நான்கு மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

Read more...
Last Updated ( Saturday, 17 May 2014 07:11 )


Friday, 16 May 2014

மஹிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராடிய மாணவர்கள் கைது ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 16 May 2014 11:25
சமகால நிகழ்வுகள் / Newsflash

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக் கண்டித்தும்,  இணைந்த சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடங்களாக குறைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம்  இணைந்த சுகாதார கல்விபீட மாணவர்கள் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (16.05.20014) முற்பகல்  நடாத்தப்பட்டது.

Read more...
Last Updated ( Friday, 16 May 2014 11:28 )


Thursday, 15 May 2014

தேசியம் கொலை செய்யும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 15 May 2014 07:08
சமகால நிகழ்வுகள் / சிறப்பு கட்டுரைகள்

அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.

Read more...
Last Updated ( Thursday, 15 May 2014 07:12 )


Wednesday, 14 May 2014

மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 14 May 2014 14:29
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.

Read more...
Last Updated ( Wednesday, 14 May 2014 14:31 )

Page 1 of 3