Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
October 2013

Sunday, 27 October 2013

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 27 October 2013 09:35
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 03

உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.

Read more...
Last Updated ( Friday, 29 November 2013 08:31 )


Thursday, 24 October 2013

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 24 October 2013 15:17
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 02

மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.

Read more...
Last Updated ( Friday, 29 November 2013 08:31 )


Monday, 21 October 2013

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 October 2013 09:05
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 01

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.

Read more...
Last Updated ( Friday, 29 November 2013 08:30 )


Thursday, 10 October 2013

தமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 10 October 2013 06:55
அரசியல்_சமூகம் / தேவன்

தேர்தல் என்றால் என்ன..? மக்களின் வாக்குக்களை வாங்கி பதவிக்கு வந்து அரசாங்கத்தினை அமைத்து அதிகாரம் செலுத்துவது. அரசியலில் ஒரு தீர்வு.., வாழ்க்கைக்கு ஒரு தீர்வு.., வேலைக்கு ஒரு தீர்வு.., பசி பட்டினி, வதிவிடத்திற்கு ஒரு தீர்வு.., என்ற பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு மக்கள் அரசியலில் வாக்களிக்கின்றார்கள். ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் எதையுமே இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றி வைப்பதில்லை.

Read more...
Last Updated ( Thursday, 10 October 2013 06:58 )