Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
May 2013

Friday, 31 May 2013

இருண்ட நிலவு - (சிறுகதை) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 31 May 2013 12:10
அரசியல்_சமூகம் / நிலாதரன்

அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும்.

குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 20:39 )


Thursday, 30 May 2013

இனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 30 May 2013 12:02
அரசியல்_சமூகம் / ஜெகதீசன்

பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை தனது அடக்குமுறையினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவற்றினை அரசு, படைகளைக் கொண்டு முன்னெடுப்பதாலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிக நீண்ட காலமாக பேரினவாதத்திற்கு எதிரான குரல்கள் மற்றும் செயற்பாடுகள் அற்ற நிலையில் எம்முன்னால் ஒட்டுமொத்த சிங்கள இனமுமே எதிரியாக தெரிகின்றது. தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும் “சிங்களம் எம்மை அடக்கியாள அனுமதிக்கோம். தகுந்த பதிலடி கொடுப்போம்” என்பன போன்ற இனவெறியூட்டும் கோசங்களை முழங்கி தமது அரசியல் இருப்புக்காக முழுச் சிங்கள மக்களுமே இனவாதிகள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

Read more...
Last Updated ( Tuesday, 11 June 2013 12:54 )


Wednesday, 29 May 2013

மின்கட்டண ஏமாற்றமும் நிவாரத்திற்கான போராட்டமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 29 May 2013 12:28
அரசியல்_சமூகம் / விருந்தினர்

இந்தநாட்டு ஜனாதிபதிக்கும், ஒட்டு மொத்த அமைச்சர்களுக்கும் ஏற்ப இன்று இந்நாட்டில் மக்கள் நல அரசாங்மொன்றுதான் இருக்கின்றது. தேசாபிமான அரசாங்கமொன்றதான் இருக்கின்றது.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 20:50 )


Tuesday, 28 May 2013

மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 28 May 2013 13:53
பி.இரயாகரன் - சமர் / 2013

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 20:51 )

குழப்பு குழப்பு நாட்டைக் குழப்பு! -'தம்பி" யை நாட்டிலிருந்து விரட்டு! இறைச்சிக் கடையை மூடு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 28 May 2013 12:27
அரசியல்_சமூகம் / விருந்தினர்


மாடுகளை கொலை செய்வதை  நிறுத்துமாறு கோரி தனது மேனியில் தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு இறந்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் உடலை பெற்றுத் தருமாறு கோரி அலரி மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய , இறைச்சிக் கடைகளை உடைத்ததாகக் கூறும் சிங்கள ராவய ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே மேற்கூறப்பட்ட கோஷங்கள் ஒலித்தன.

Read more...
Last Updated ( Tuesday, 11 June 2013 12:53 )


Sunday, 26 May 2013

இன்றைய இலங்கையும் புலம்பெயர் அரசியலும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 26 May 2013 18:22
பி.இரயாகரன் - சமர் / 2013

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுவிடக் கூடாது என்பது தான் அரசின் பொதுக் கொள்கை. அரசு மக்களை வர்க்கரீதியாக மட்டும் பிரிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனம் மதம் சார்ந்து நின்று மக்களை ஒடுக்குவதன் மூலமும் பிரிக்கின்றது. இதேபோல் எண்ணிக்கையில் சிறுபான்மையான மதத்திலும் இனத்திலும் உள்ள, உள்முரண்பாடுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அணிதிரண்டு விடாத வண்ணம் இனம், மதம், சாதி, பிரதேசம், பால், பண்பாடு ரீதியான வேறுபாடுகளை தூண்டி மக்களை  மோதவைக்கின்றனர். இப்படி இலங்கை மக்களைக் கூறுபோட்டு மோதவைக்கின்றது. இதுதான் அரசின் இன்றைய பொதுக்கொள்கை.

Read more...
Last Updated ( Tuesday, 11 June 2013 12:52 )


Saturday, 25 May 2013

பன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 May 2013 13:04
அரசியல்_சமூகம் / தேவன்

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ஒன்பது மாடிக்கட்டிட இடிபாட்டில் ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள், ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள்.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 20:56 )


Friday, 24 May 2013

காசி ஆனந்தன் அண்ணே, நீங்க பாவியா, அப்பாவியா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 24 May 2013 13:16
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

கம்யுனிஸ்ட்டு போராளியான Chris Hani

மட்டக்களப்பு தொகுதி ஒரு தமிழர், ஒரு முஸ்லீம் என இரட்டை அங்கத்துவர் தொகுதியாக கட்சிகளால் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி. எழுபத்தேழு தேர்தலில் கூட்டணி சார்பில் ராசதுரையும் மற்றொரு முஸ்லீம் வேட்பாளரும் போட்டியிடுவது என்ற முடிவை எதிர்த்து முஸ்லீம் வேட்பாளரின் இடத்தில் நான் தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்து போட்டியிட்டு தேர்தலில் தோற்றவர். அதன் மூலம் மட்டக்களப்பு முஸ்லீம் மக்களின் வாக்குகள் பேரினவாதக்கட்சிகளிற்கு போக காரணமாக இருந்தவர். இன்று சென்னையில் இருந்து கொண்டு “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று இந்திய அரசிற்கு அடிமை உணர்ச்சி பொங்க வாழ்த்துப்பா பாடுகிறார்.

Read more...
Last Updated ( Tuesday, 11 June 2013 12:51 )


Wednesday, 22 May 2013

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 May 2013 05:31
பி.இரயாகரன் - சமர் / 2013

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09

அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்

ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான். ”அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 21:05 )


Tuesday, 21 May 2013

முள்ளிவாய்க்காலின் தோல்வியும், படிப்பினையும் PDF Print Write e-mail
Written by ஆர்வலர்
Tuesday, 21 May 2013 11:45
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 01

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 21:08 )

Page 1 of 2