Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
November 2012

Friday, 30 November 2012

இலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 30 November 2012 12:02
அரசியல்_சமூகம் / சிவசேகரம்

மாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.

Read more...
Last Updated ( Friday, 30 November 2012 12:06 )


Thursday, 29 November 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்! (படங்கள்) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 29 November 2012 17:48
அரசியல்_சமூகம் / விருந்தினர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .

Read more...
Last Updated ( Thursday, 29 November 2012 17:50 )

யாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 29 November 2012 12:07
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.

Read more...
Last Updated ( Thursday, 29 November 2012 12:10 )


Wednesday, 28 November 2012

வடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட "மாவீரர் தின" தீபங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 28 November 2012 15:33
பி.இரயாகரன் - சமர் / 2012

புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 28 November 2012 15:35 )


Tuesday, 27 November 2012

ஏகாதிபத்தியமும் - அரச பாசிசமும் எதிரெதிராக, மக்களுக்கு எதிராக அணிதிரளுகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 27 November 2012 21:17
பி.இரயாகரன் - சமர் / 2012

மேற்கு ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசோ தேர்தல் "ஜனநாயக" வடிவங்கள் மூலமும், சட்ட வடிவங்கள் மூலமும், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகின்றது. மக்களுக்கு எதிரான இந்த இரண்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளும், உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களை அணிதிரட்டி வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்குள்ளான சர்வதேச முரண்பாட்டுக்குள், இலங்கை மக்கள் ஒடுக்கப்படுவதும், பிளவுபடுத்தப்படுவதும் தீவிரமாகி இருக்கின்றது. இதற்குள் முரண்பாடுகள் கையாளப்படுவதும்;, மக்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 28 November 2012 10:31 )

இனவொடுக்குமுறைக்கு எதிராக நாம் என்ன செய்ய முடியும்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 27 November 2012 07:33
பி.இரயாகரன் - சமர் / 2012

60 வருடத்துக்கு மேலாக தொடரும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் வாழ்ந்து இருகின்றோம், வாழ்ந்துகொண்டு இருகின்றோம். இந்த எல்லைக்குள்அரசுடன் பேச்சு வார்த்தைகளை, ஒப்பந்தங்களைசெய்திருகின்றோம், செய்ய முனைகின்றோம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படமல், இனவொடுக்குமுறை தொடருகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 27 November 2012 07:36 )


Saturday, 24 November 2012

உயிர் வெந்து சாகும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 24 November 2012 20:08
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

Read more...
Last Updated ( Saturday, 24 November 2012 20:10 )


Friday, 23 November 2012

பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்! அனுபவமும் – அரசியலும்!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 23 November 2012 19:49
புதிய கலாச்சாரம் / 2012

மச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.

இத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.

Read more...
Last Updated ( Friday, 23 November 2012 19:55 )

இனத் தேசியத்துக்கு எதிராக, முதலாளித்துவ தேசியத்தை அரசியலாக்கல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 16 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 23 November 2012 12:53
பி.இரயாகரன் - சமர் / 2012

தமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாமல் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.

Read more...
Last Updated ( Friday, 23 November 2012 13:03 )


Wednesday, 21 November 2012

ஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 21 November 2012 15:43
அரசியல்_சமூகம் / சிறி

என்னையும் நின்னையும்

பகைமூழவைத்து உயிர்

பறித்தவர் சரித்திரம்

இலங்கையில் உறங்கும்.

உழைக்கும் எம்கரங்கள்

இணைந்தே வீறுகொண்டோங்கும்.

Read more...
Last Updated ( Wednesday, 21 November 2012 16:40 )

Page 1 of 2