Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
October 2010

Sunday, 31 October 2010

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" அருள் எழிலன் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 31 October 2010 21:16
பி.இரயாகரன் - சமர் / 2010

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், மக்களைக் கொல்லக் கொடுத்தது நீதியான ஒரு அரசியல் செயல். யுத்தம் நடந்த காலத்தில் இதைக் கூறவில்லை. அண்மையில், அதுவும் புலிப் பணத்தைத் திருடி வைத்திருக்கும் பணக்காரப் புலிகள், பினாமி புலி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் கூட்டத்தில் தான் அருள் எழிலன் இதைக் கூறினார். அதேநேரம் தன் பேஸ் புக்கிலும் கூட,  இதைக் குறிப்பிடுகின்றார். "சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்" என்று சிபார்சு செய்யப்பட்டவர் தான் இதைக் கூறியிருக்கின்றார். அவரோ இனியொரு இணைய ஆசிரியரில் ஒருவர். அவரோ புலிப் பினாமி ஊடகவியல் கூட்டத்தில் தண்டரா போடுகின்றார். இதேபோல் இனியொருவின் மற்றொரு ஆசிரியரை உள்ளடக்கிய புதியதிசை, அண்மைக்காலமாக புலிகளுடன் கூடி கும்மியடிக்கின்றது. புலத்துப் புலி மாபியாக்களை பயன்படுத்தி, தாங்கள் வர்க்கப் புரட்சி செய்யப் போகின்றார்களாம். இப்படி திடீர் அரசியலுக்கு வந்தவர்களின் பற்பல அரசியல் கூத்துகள்.

 

Read more...
Last Updated ( Sunday, 31 October 2010 21:46 )

Personal Effects + இழப்பின் பின்னால்… PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 31 October 2010 06:27
அரசியல்_சமூகம் / பொறுக்கி

இறந்தவர்கள்/கொல்லப்பட்டவர்களே முக்கியத்துவப்படுத்தப்படுவது செய்திகளிலும், திரைப்படங்களிலும் வழமையானதாகும்.

மிகவும் நெருக்கமானவர் / குடும்ப அங்கத்தவர் திடீரென்று கொல்லப்பட்டுவிட்டால் அவருடன் தொடர்பானவர்கள் / குடும்ப அங்கத்தவர்கள் அந்த இழப்பை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தியுள்ள திரைப்படம்தான்  Personal Effects. தமது இழப்புக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி தேடுவதாக அல்லது கொலைகாரரைக் கொலை செய்து பழிக்குப்பழி வாங்குவதாக வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புகான பதிலைத் தேடுகிறார்கள். இப்படியான கடினமான கதையுடன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி குறித்து இத் திரைப்படம் பேசுகிறது.

Read more...
Last Updated ( Sunday, 31 October 2010 06:30 )

பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 31 October 2010 06:23
அரசியல்_சமூகம் / கலகம்

நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.

Read more...
Last Updated ( Sunday, 31 October 2010 06:26 )


Friday, 29 October 2010

ஒருபக்க கொடுமைகளைப் பேசுவதன் மூலம் மறுபக்க கொடுமைகளை மறுப்பது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 18) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 29 October 2010 06:03
பி.இரயாகரன் - சமர் / 2010

உண்மைகள் என்பது நேர்மையான மக்கள் சார்ந்த அரசியலில் இருக்கின்றது. எம் மக்களுக்கு எதிரி செய்த கொடுமைகளைப் பேசுவதன் மூலம், மறுபக்க உண்மைகளை மூடிமறைக்கவே வலதுசாரியம் எப்போதும் முனைகின்றது. இப்படி எதிரி செய்த கொடுமைகளை, தாங்கள் செய்த கொடுமைகளை மூடிமறைப்பதற்காக பயன்படுத்துகின்றது. இது திட்டமிட்ட மக்கள் விரோத சதி அரசியலாகும். இந்த அரசியலோ மனித நேயமற்ற இழிவரசியலாகும். இவை மக்கள் மேலான மறுபக்க கொடுமைகளை, நியாயப்படுத்துவதாகும்.

Read more...
Last Updated ( Friday, 29 October 2010 06:06 )


Thursday, 28 October 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 28 October 2010 19:02
அரசியல்_சமூகம் / அசுரன்

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும்என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

Read more...
Last Updated ( Thursday, 28 October 2010 19:05 )


Wednesday, 27 October 2010

நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:16
புதிய ஜனநாயகம் / 2010

உ.பி. மாநிலத்தின் காசியாபாத் மாவட்டக் கருவூல அதிகாரிகளும் நீதிபதிகளும் கூட்டுச் சேர்ந்து,  கடைநிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து  ரூ.34.56 கோடியைச் சட்டவிரோதமாக மோசடி செய்து சுருட்டி ஏப்பம் விட்டனர். கருவூல அதிகாரியான அஷுடோஷ் அஸ்தானா என்பவனுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து,  நீதிபதிகளும் கருவூல அதிகாரிகளும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்து பணத்தைப் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். 2001-இலிருந்து 2008-வரை நடந்துள்ள இந்த மோசடி மெதுவாகக் கசிந்து ஏப்ரல் 2008-இல் அஸ்தானா கைது செய்யப்பட்டான். அவனுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Read more...


இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:15
புதிய ஜனநாயகம் / 2010

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்படவில்லை. சிறையிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஊடகவியலாளர்களும் இன்னமும் விடுவிக்கப்படவுமில்லை.


Read more...


செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:13
புதிய ஜனநாயகம் / 2010

ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.


Read more...


தொடரும் அரசியல் கூத்துக்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:11
புதிய ஜனநாயகம் / 2010

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


Read more...


நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:10
புதிய ஜனநாயகம் / 2010

முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


Read more...


Page 1 of 5